Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மாதம்தோறும் டிவிடெண்ட் தரும் பேலன்ஸ்டு ஃபண்டுகள்!
Page 1 of 1

சாதகம் Vs பாதகம்...
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
மியூச்சுவல் ஃபண்ட் உலகில் புதிதாக அறிமுகமாகியுள்ளது பேலன்ஸ்டு அல்லது டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதாந்திர மற்றும் காலாண்டு டிவிடெண்ட் ஆப்ஷன் ஆகும். இந்த ஆப்ஷனை ஏன் மியூச்சுவல் ஃபண்டுகள் அறிமுகப்படுத்தின?
நம் நாட்டில் வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் சந்தை மிகப் பெரியது. அந்தச் சந்தையிலிருந்து ஒரு பகுதியையாவது, மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு கொண்டு வரவேண்டும் என்பது ஃபண்ட் நிறுவனங்களின் நீண்ட நாள் ஆசை. மேலும், சில ஆண்டுகள் முன்பு வரை கடன் சார்ந்த திட்டங்களுக்கு ஒரு ஆண்டு வைத்திருந்தாலே போதும்; நீண்ட கால முதலீட்டு லாப வரி (Long Term Capital Gains Tax) உரித்தாகும். வங்கிகள் நமது மத்திய நிதி அமைச்சகத்துடன் லாபி (lobby) செய்து, அந்தச் சலுகையைக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆக்கிவிட்டன.
முதலீட்டில் வரியில்லாத ரெகுலரான வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள் நம்மில் ஏராளமானோர். இந்த முதலீட்டாளர் சமூகத்தைக் கவர்வதற்காக நம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கண்டுபிடித்த புதிய உத்திதான் பங்கு மற்றும் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள மாதாந்திர மற்றும் காலாண்டு டிவிடெண்ட் ஆப்ஷன்.
பங்கு சார்ந்த திட்டங்களில் இருந்து தரப்படும் டிவிடெண்டுக்கு வருமான வரி ஏதும் கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியின் விதிமுறைகளின்படி, ஈட்டப்பட்ட வருமானத்திலிருந்துதான் டிவிடெண்ட் தரப்பட வேண்டும். பணத்தை பலரிடம்/ சிலரிடம் இருந்து வாங்கி, சிலருக்கோ/பலருக்கோ டிவிடெண்ட் தரக் கூடாது. மேலும், டிவிடெண்டையோ அல்லது ஃபண்ட் தரப்போகும் வருமானத்தையோ யாரும் கேரன்டி செய்யக்கூடாது. இவை அனைத்தையும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு இஞ்ச்கூட பிசகாமல் கடைப்பிடித்து வருகின்றன. யாரேனும் உங்களிடம் இந்த பேலன்ஸ்டு ஃபண்ட் அல்லது இந்த ஈக்விட்டி ஃபண்ட் மாதந்தோறும் கட்டாயமாக டிவிடெண்ட் தரும் என்று சொன்னால், தயவுசெய்து அதை நம்பி முதலீடு செய்யாதீர்கள். எந்த ஃபண்டும் நாங்கள் மாதம் தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் டிவிடெண்ட் தருவோம் என்று உறுதி கூறுவதில்லை. காரணம், யாராலும் சந்தை எப்படி இருக்கும் என்பதை உறுதியாகக் கணிக்க முடியாது.
டாடா பேலன்ஸ்டு, ஐசிஐசிஐ புரூ. பேலன்ஸ்டு, ஐசிஐசிஐ புரூ. பேலன்ஸ்டு அட்வான்டேஜ், எல் அண்ட் டி புரூடன்ஸ், ஹெச்டிஎஃப்சி புரூடன்ஸ், கனரா ரேபிகோ பேலன்ஸ்டு, டி.எஸ்.பி-பி.ஆர் பேலன்ஸ்டு போன்ற பேலன்ஸ்டு ஃபண்டுகளும், இன்வெஸ்கோ இந்தியா டைனமிக் ஈக்விட்டி மற்றும் பி.என்.பி பரிபாஸ் டிவிடெண்ட் யீல்டு போன்ற டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளும் மாதாந்திர டிவிடெண்டுகளை தற்போது வழங்கி வருகின்றன.
ஹெச்.டி.எஃப்.சி. பேலன்ஸ்டு, எஸ்.பி.ஐ. மேக்னம் பேலன்ஸ்டு, எடெல்வைஸ் அப்சலியூட் ரிட்டர்ன் போன்ற ஃபண்டுகள் காலாண்டு டிவிடெண்டை வழங்கி வருகின்றன. ஆண்டுக்கு ஒரு தடவை டிவிடெண்டை, கிட்டத்தட்ட அனைத்து ஃபண்டுகளுமே ஒரு ஆப்ஷனாக வெகு காலமாக வழங்கி வருகின்றன. யாருக்கு எது உகந்தது என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் இளம் வயதினர், ரெகுலராக சம்பாத்தியம் உள்ளவர் என்றால், எந்த விதமான டிவிடெண்ட் ஆப்ஷனுக்கும் பேலன்ஸ்டு மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் செல்லாதீர்கள். உங்கள் வங்கிக் கணக்குக்கு அந்தத் தொகை வந்தால், அது எங்கு, எப்படிப் போகிறது என்று கண்டுபிடிக்க முடியாதபடி மாயமாக மறைந்துவிடும். ஆகவே, நீங்கள் குரோத் ஆப்ஷனுக்கே சென்றுவிடுங்கள். மேலும், டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்வதின் மூலம், செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்பினை நீங்கள் இழக்கிறீர்கள் என்பதே உண்மை!
மாதாமாதம் கட்டாயமாக உங்கள் தினசரித் தேவைகளுக்கு, நீங்கள் செய்யும் முதலீட்டிலிருந்து பணம் தேவை என்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்-ல் (பேலன்ஸ்டு ஃபண்ட் உட்பட) முதலீடு செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக வங்கி, அஞ்சலக மற்றும் தரமான கம்பெனி டெபாசிட்டுகளுக்குச் சென்றுவிடுங்கள். அங்கு வருமானம் குறைவாக இருந்தாலும், வரிச் சுமை அதிகமாக இருந்தாலும், நிச்சயமான வருமானம் கிடைக்கும். மாதாந்திர டிவிடெண்ட் வழங்கும் மியூச்சுவல் ஃபண்டுகள், நிச்சயமான வருமானத்தை உங்களுக்குத் தர முடியாது.
நான் ஓய்வு பெற்றவர் அல்லது இளம் வாலிபர்; எனது மாதாந்திரத் தேவைகளுக்கு எனக்கு உறுதியாக வேறு வகையிலிருந்து பணம் வந்துகொண்டு இருக்கிறது; இரண்டாவது வருமானமாக, மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யும் முதலீட்டில் ரெகுலராக வருமானம் வந்தால் நல்லது. அதே சமயத்தில் அதை நம்பி என் வாழ்க்கை இல்லை; மாதாமாதம் வரும் தொகை சற்று அதிகமாகவோ, குறைவாகவோ, கொஞ்சம் இடைவெளி விட்டு வந்தாலோ பரவாயில்லை. அந்த வருமானம் வரியில்லாத வருமானமாக இருந்தால் நல்லது என நினைப்பவர்கள் மாதாந்திர அல்லது காலாண்டு அல்லது ஆண்டு டிவிடெண்ட் ஆஃப்ஷன்களைத் தேர்வு செய்யலாம். இன்று வசதியாக இருக்கும் பலர், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தரும் மாதாந்திர டிவிடெண்ட் ஆப்ஷனை விரும்பக் காரணம், வரியில்லா வருமானம்தான்.
அதுபோல, அதிக டிவிடெண்டை ஒரு ஃபண்ட் தருகிறது என்பதற்காக அந்த ஃபண்டில் முதலீடு செய்யாதீர்கள். அந்த ஃபண்ட் டிவிடெண்டை தரும்போது, அது உங்களின் அசலில் இருந்துதான் எடுத்துக் கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்படும் டிவிடெண்டுக்கேற்ப உங்கள் முதலீட்டின் மதிப்பும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மறக்காதீர்கள்!
இன்று பல ஃபண்டுகள் மணிபேக் ஆப்ஷனையும் அறிமுகப்படுத்தி உள்ளன. பங்கு சார்ந்த அல்லது பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, ஓராண்டு கழித்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் வாங்கிக்கொள்ளும் ஆப்ஷனும் உள்ளது. இந்த முறையில், நீண்ட காலத்தில் நமது அசல் குறையாத படிக்கு நமது பேஅவுட்டை நாம் நிர்ணயம் செய்துகொள்ளலாம். இன்றைய நிலையில், உலகளவில் இந்தியா பிரகாசமான பொருளாதார வளர்ச்சி கண்டு வருகிறது. ஆகையால் தேவையில்லாதபட்சத்தில், ஈக்விட்டி அல்லது பேலன்ஸ்டு ஃபண்டுகளில் டிவிடெண்ட் ஆப்ஷனுக்குச் சென்று நீண்ட காலத்தில் செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்பை அநாவசியமாக இழக்காதீர்கள்! இது மாதிரியான புது முதலீட்டு வகையறாக்கள் சந்தையில் வந்தபடிதான் இருக்கும். நமக்கு எது தேவை அல்லது தேவையில்லை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈக்விட்டி ஃபண்டுகளில் எந்த அளவு டிவிடெண்டை எதிர்பார்க்கலாம்?
மாதாந்திரமாகக் கொடுத்தாலும் சரி, காலாண்டுக்கு ஒருமுறை கொடுத்தாலும் சரி அல்லது ஆண்டுக்கு ஒருமுறை கொடுத்தாலும் சரி, நீங்கள் ஆண்டுக்கு 7.50% - 9.00% டாக்ஸ் ஃப்ரீ டிவிடெண்டை பங்கு சார்ந்த அல்லது பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து எதிர்பார்க்கலாம். அதே ஃபண்டை 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வைத்திருக்கையில், ஆண்டுக்கு 2% – 3% டிவிடெண்ட் வாங்கியது போக(போனஸ்) வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஆகமொத்தத்தில், ஒரு ஆண்டுக்கு 9.50% - 12% வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

டிவிடெண்ட் ஆப்ஷன் Vs மணிபேக் ஆப்ஷன் : எது பெஸ்ட்?
மியூச்சுவல் ஃபண்ட் டிவிடெண்ட் ஆப்ஷனில் ஃபண்ட் நிறுவனம் உங்களுக்கு எவ்வளவு டிவிடெண்ட் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது. இந்த ஆப்ஷனில் நீங்கள் போட்ட அடுத்த மாதத்திலிருந்துகூட உங்களுக்கு டிவிடெண்ட் கிடைக்கலாம். மணிபேக் ஆப்ஷன் கிட்டத்தட்ட சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) போல வேலை செய்யும். நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலீடு செய்த ஒராண்டு கழித்து (அதாவது 13-வது மாதத்திலிருந்து) மாதத்துக்கு நீங்கள் முதலீடு செய்த தொகையிலிருந்து 0.75 சதவிகிதத்தை (அதாவது ரூ. 7,500-ஐ) மனிபேக்காக பெற்றுக்கொள்ளலாம். இது ஆண்டுக்கு 9% ஆகும். அதாவது, ஆண்டுக்கு ரூ.90,000 உங்களுக்கு மணிபேக்காகக் கிடைக்கும். நீங்கள் போட்ட முதலீட்டுத் தொகை சற்றுக் கூடலாம் அல்லது குறையலாம். ஆனால் ஐந்து ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது, மணிபேக் கிடைத்தது போக, உங்களின் முதலீடு சற்று கூடித்தான் இருக்கும். மேலும், நீங்கள் முதலீடு செய்து 12 மாதத்துக்கு மேல் எடுப்பதால், வருமான வரியும் ஏதும் செலுத்த வேண்டாம்.
எது சிறந்தது என்பதைவிட, உங்களின் தேவையை அறிந்து முடிவு செய்துகொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட தொகை உங்களுக்கு மாதாமாதம் கட்டாயம் வேண்டுமென்றால், மணிபேக் ஆப்ஷனே சிறந்தது. எனக்குக் கட்டாயம் கேஷ் ஃப்ளோ தேவையில்லை. ஆனால் வந்தால் நல்லது என்றால் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள்.
--ந.விகடன் சாதகம் Vs பாதகம்...

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» லாபம் தரும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்!
» டிவிடெண்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்... லாபம் தரும் கற்பக விருட்சங்கள்
» லார்ஜ்கேப் ஃபண்டுகள் Vs பேலன்ஸ்டு ஃபண்டுகள் - எது பெஸ்ட்?
» மாதம்தோறும் வருமானம் தரும் எம்.ஐ.பி திட்டங்கள்!
» மியூச்சுவல் ஃபண்ட்:: டிவிடெண்ட் கணக்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum