Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மியூச்சுவல் ஃபண்ட்:: டிவிடெண்ட் கணக்கு!
Page 1 of 1
மியூச்சுவல் ஃபண்ட்:: டிவிடெண்ட் கணக்கு!
மார்ச் மாதம் நெருங்கிடுச்சுன்னா அதிக டிவிடெண்ட் தர்றதா ஆசைகாட்டியே புது முதலீட்டாளர்களை ஃபண்ட் பக்கம் இழுக்கறது பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களோட வழக்கம். 'எங்க ஃபண்டுல முதலீடு செஞ்சா, வரிச் சலுகையும் கிடைக்கும். பணத்தைப் போட்ட கொஞ்ச நாட்கள்லயே 40% டிவிடெண்டும் கிடைக்கும்' அப்படினு எக்கச்சக்க விளம்பரம் பண்ணுவாங்க. உண்மையா என்ன நடக்குது..? அதைத் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி எப்படி டிவிடெண்ட் கணக்குப் பண்றாங்கன்னு பார்த்துடுவோம்.
எங்கப்பா நம்ம முருகன்... வந்துட்டாரா..? ரைட். இவர் என்ன பண்றாருன்னா, என்.ஏ.வி. 30 ரூபாயா இருக்கிற ஃபண்ட் ஒண்ணுல பத்தாயிரம் ரூபாய் போடுறார். அவருக்கு 333.33 யூனிட்டு-கள் கிடைக்குது. யூனிட்டுகள் ஒதுக்கப்பட்ட அன்னைக்கே, அந்த ஃபண்-டுல முதலீடு செஞ்ச எல்லாருக்கும் 50% டிவிடெண்ட் தர்றதா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிவிக்குது. அதுபடி முருகனுக்கு 1,666.65 ரூபாய் டிவிடெண்ட் கிடைக்கும். (டிவிடெண்ட் முக மதிப்புக்குத்தான் வழங்கப்படும்)
பொதுவா எந்த மியூச்சுவல் ஃபண்டுல டிவிடெண்ட் கொடுத்தாலும், கொடுக்கப்பட்ட டிவிடெண்ட் விகிதத்துக்கு தகுந்தமாதிரி அந்த ஃபண்டோட என்.ஏ.வி. குறைஞ்சிடும். அதுபடி, முருகனோட ஃபண்ட் என்.ஏ.வி. மதிப்பு 25 ரூபாயா குறையுதுன்னு வைச்சுக்கிட்டா, இப்போ கைவசம் இருக்குற 333.33 யூனிட்டுகளோட மொத்த மதிப்பு (333.33 ஜ் 25) 8,333.25 ரூபாய். இப்ப சொல்லுங்க... முருகனுக்கு டிவிடெண்ட் கிடைச்சதால லாபமா, நஷ்டமா..? ரெண்டும் இல்லை. சமநிலையிலதான் இருக்கார். டிவிடெண்டுங்கிறது, வளர்ந்திருக்கிற நம்ம முதலீட்டுலேர்ந்து ஒரு பகுதியை எடுத்து நம்மகிட்டயே கொடுக்கிற ஏற்பாடுதான். அதனால கம்பெனிகள் உடனே டிவிடெண்ட் தர்றேன்னு சொல்றதை நம்பி, முதலீட்டு முடிவை எடுக்கிறது புத்திசாலித்தனம் இல்லை. ஆனா நீண்டகால அடிப்படையில டிவிடெண்ட் லாபகரமானதுதான்.
இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும். நீங்க ஒரு ஃபண்டை, அதோட என்.ஏ.வி. மதிப்புப்படி வாங்கியிருப்பீங்க. ஆனால், டிவிடெண்டுங்கிறது, அந்த யூனிட்டோட முக மதிப்பான 10 ரூபாய்க்குத்தான் வழங்கப்படுது. அதனால என்.ஏ.வி. மதிப்புக்கு டிவிடெண்டை கணக்குப் பார்த்துட்டு, பிறகு 'என்னை ஏமாத்திட்டாங்க'ன்னு புலம்புறதுல அர்த்தம் இல்லை.
ஒரு பேப்பர் காத்துல பறக்கிறதை வேணும்னா அதிர்ஷ்டம்னு சொல்லலாம். ஆனா பறவை பறக்கிறதை..? நிச்சயமா அப்படிச் சொல்ல முடியாது. அதுக்கு ஒரு திறமை வேணும்.
பறவை பறக்கிறதும், பணத்தைப் பெருக்குறதும் ஒண்ணுதான். பறவைக்கு சிறகு மாதிரி, பணத்துக்கு சிறகுங்கிறது அறிவு, தெளிவு. அதுவும் இந்தப் போட்டியான உலகத்துல கைநிறைய சம்பாதிக்கிறதை விட, அதை பை நிறைய மாத்துகிறவன்தான் கெட்டிக்காரன். மியூச்சுவல் ஃபண்டுங்குறது கெட்டிக்காரரா மாறுவதற்கான ஒரு வழி.

நாணயம் விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பங்கு Vs மியூச்சுவல் ஃபண்ட்... டிவிடெண்ட் டிப்ஸ்!
» சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்... 10 ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு டிவிடெண்ட்!
» மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான் எதற்கு?
» மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட், குரோத் ஆப்ஷன்! யாருக்கு எது சிறந்தது?
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum