Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மாதம்தோறும் வருமானம் தரும் எம்.ஐ.பி திட்டங்கள்!
Page 1 of 1
மாதம்தோறும் வருமானம் தரும் எம்.ஐ.பி திட்டங்கள்!
முதலீட்டாளர்களுக்கு மாத வருமானம் தரும் விதமாகச் செயல்பட்டு வரும் மியூச்சுவல் ஃபண்ட் வகை திட்டம், மன்த்லி இன்கம் பிளான் (எம்.ஐ.பி) ஆகும். அதிக அளவு கடன் பத்திரங்கள் (சொத்து மதிப்பில் சுமார் 80%), குறைந்த அளவு பங்குச் சந்தை (சொத்து மதிப்பில் சுமார் 20%) என இரண்டும் கலந்த திட்ட வகை இது.
முதலீட்டின் பயன்கள்!
நீண்ட கால அடிப்படையில் வங்கி எஃப்.டி-யைவிட அதிக வருமானம் பெற வாய்ப்புள்ள முதலீட்டுத் திட்டம் இதுவாகும். வரிச் சலுகை பெற்றுத் தரக்கூடிய திறன் வாய்ந்தது இது. இதில் முதலீடு செய்பவர்கள் பணம் தேவைப்படும்போது, தேவைப்படும் அளவுக்கு எடுக்கலாம்.
யார் முதலீடு செய்யலாம்?
பணி ஓய்வு பெற்றவர்கள், மாத வருவாய் தேவைப்படுவோர், மொத்தமாக பணத்தை முதலீடு செய்ய நினைப்பவர்கள், முதலீட்டு மதிப்பில் ஓரளவுக்கான ஏற்ற இறக்கங்களைப் பார்த்து மனம் வருத்தப்படாதவர்கள்.
எப்போது முதலீடு செய்யலாம்?
பங்குச் சந்தை போல், அரசுப் பத்திரங்களுக்கும் கவர்மென்ட் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் உள்ளது. இதில், அரசுப் பத்திரங்கள் வாங்கப்படும் / விற்கப்படும். 10 வருட அரசுப் பத்திரங்களின் வருமானம் அதிகமாக இருக்கும்போது, மன்த்லி இன்கம் பிளான் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. இப்போது 10 வருட அரசுப் பத்திரங்களின் வருமானம் 6.81% (வருமான வரம்பு சுமார் 9% முதல் 4% வரை) ஆக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவற்றின் வருமானம் குறைந்துகொண்டே வருகிறது. மேலும், நிஃப்டி பி.இ குறைவாக இருக்கும்போது, மன்த்லி இன்கம் பிளான் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. இப்போது நிஃப்டி பி.இ 23 (ரேஞ்ச் சுமார் 10 முதல் 28 வரை) உள்ளது.
குரோத் ஆப்ஷன் ஏன் நல்லது?
இதில் டிடிஎஸ் வரிப் பிடித்தம் இல்லை. வரி வரம்புக்்குள் வருமானம் உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது. வருமான வரி வரம்புக்கு மேல் உள்ளவர்கள், 3 வருடங்கள் முதலீடு செய்த பின்னர் பணத்தை எடுத்தால், லாங் டேர்ம் கேப்பிடல் லாபத்தை இன்டெக்சேஷன்படி குறைத்து, லாபத்துக்கு 20% வரி கட்டினால் போதும்.
டிவிடெண்ட் வரி ஆதாயம் உள்ளதா?
மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள், டிவிடெண்ட் வழங்கும் முன்னர் அரசுக்கு டிவிடெண்ட் மதிப்பில் 28.33% வரி கட்டும். அதாவது, முதலீட் டாளர்கள் கையில் கிடைக்கும் டிவிடெண்டுக்கு மீண்டும் வரி கட்ட தேவையில்லை. இருப்பினும், டிவிடெண்ட் ஆப்ஷனுக்குப் பதிலாக குரோத் ஆப்ஷன் நல்லது.
எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்யலாமா?
இதற்கான வாய்ப்பு உண்டு. எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்வதாக இருந்தால், போர்ட்ஃபோலியோ வில் அதிக ஈக்விட்டி முதலீடு உள்ள திட்டங்கள் சிறந்தவை.
எஸ்.டபிள்யூ.பி. (சிஸ்டெமடிக் வித்ட்ராவல் பிளான்) செய்யலாமா?
நீண்ட நாள் முதலீடு என்றால், மொத்தமாக முதலீடு செய்து, மாதம்தோறும் அல்லது காலாண் டுக்கு ஒருமுறை எஸ்.டபிள்யூ.பி. செய்யலாம்.
யார் முதலீடு செய்யக் கூடாது?
மாத சேமிப்பு நன்கு இருப்பவர்கள், இளைஞர்கள், அதிக ரிஸ்க் எடுக்க துணிந்தவர்கள், ரிஸ்க் எடுக்கவே கூடாது என்று நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யத் தேவை இல்லை.
குறைபாடுகள் என்ன?
முதலீட்டு மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். 2008-ம் ஆண்டில், ஒரு சில திட்டங்களின் நஷ்டம் 10 சதவிகித அளவுக்கு இருந்தது. மாத வருமானத் திட்டங்கள் என்ற பெயர் இருந்தாலும், திட்டத்தில் வருவாய் இல்லாதபோது, ஒரு சில மாதங்கள் டிவிடெண்ட் தர மாட்டார்கள்.
எப்போது முதலீடு செய்யக்கூடாது?
10 வருட அரசு பத்திரங்களின் வருமானம் குறைவாக (சுமார் 6-க்கும் குறைவாக) இருக்கும் போது. நிஃப்டி பி.இ அதிகமாக (நிஃப்டி பி.இ சுமார் 25-க்கும் அதிகமாக) இருக்கும்போது, மன்த்லி இன்கம் பிளான் திட்டங்களில் முதலீடு செய்வது அதிகப் பலன் தராது.
எப்போது பணத்தை திரும்ப எடுக்கலாம்?
10 வருட அரசுப் பத்திரங்களின் வருமானம் குறைவாக (வருமானம் சுமார் 5) இருக்கும்போது. நிஃப்டி பி.இ அதிகமாக (நிஃப்டி பி.இ சுமார் 26) இருக்கும்போது இந்தத் திட்டங்களில் இருந்து பணத்தை எடுக்கலாம். சிறு முதலீட்டாளர்கள் இந்த விஷயங்களைக் கவனித்துச் செயல்பட முடியாது. நீண்ட நாள் முதலீடாக இருந்தால் மட்டும், எம்.ஐ.பி. திட்டங்களில் முதலீடு செய்யவும்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மாதம்தோறும் டிவிடெண்ட் தரும் பேலன்ஸ்டு ஃபண்டுகள்!
» மியூச்சுவல் ஃபண்ட்: பெஞ்ச்மார்க்கைவிட குறைந்த வருமானம் தரும் திட்டங்களை என்ன செய்வது?
» வரி சலுகை அதிகம் தரும் சூப்பரான முதலீட்டு திட்டங்கள்!!
» பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு!
» அதிக லாபம் தரும் பன்னாட்டு பரஸ்பர நிதிகளைப் திட்டங்கள்!!!..
» மியூச்சுவல் ஃபண்ட்: பெஞ்ச்மார்க்கைவிட குறைந்த வருமானம் தரும் திட்டங்களை என்ன செய்வது?
» வரி சலுகை அதிகம் தரும் சூப்பரான முதலீட்டு திட்டங்கள்!!
» பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு!
» அதிக லாபம் தரும் பன்னாட்டு பரஸ்பர நிதிகளைப் திட்டங்கள்!!!..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum