Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
லார்ஜ்கேப் ஃபண்டுகள் Vs பேலன்ஸ்டு ஃபண்டுகள் - எது பெஸ்ட்?
Page 1 of 1
லார்ஜ்கேப் ஃபண்டுகள் Vs பேலன்ஸ்டு ஃபண்டுகள் - எது பெஸ்ட்?
எது சரி அல்லது எது பெஸ்ட் என அலசுவது மனித இயல்பு. அந்த வகையில் இப்போது லார்ஜ்கேப் ஃபண்டுகள் பெஸ்ட்டா அல்லது பேலன்ஸ்டு ஃபண்டுகள் பெஸ்ட்டா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலைத் துல்லியமாக பார்த்துவிடுவோம்.
லார்ஜ்கேப் ஃபண்டுகள் பெரும்பாலும் பெரிய நிறுவனப் பங்குகளில் தனது முதலீட்டை செய்கின்றன. பொதுவாக, இந்தியாவில் உள்ள டாப் 100 அல்லது 200 நிறுவனப் பங்குகளில் இந்த வகை ஃபண்டுகள் முதலீடு செய்யும். இந்த ஃபண்டுகள் பெரும்பாலும் தாங்கள் நிர்வகிக்கும் தொகையை முழுக்க முழுக்க பங்குகளிலேயே முதலீடு செய்யும். ஒரு சில சதவிகிதங்கள் மட்டும் பாண்டுகள்/ டெபாசிட்டுகள்/ டிபஞ்சர்கள் போன்றவற்றில் முதலீடு செய்யும் – அதுவும் உடனடியாக பணம் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம் என்கிற நோக்கத்துக் காக. ஆகவே, இந்த வகை ஃபண்டு களின் செயல்பாடு முழுக்க முழுக்க சந்தையைப் பொறுத்து இருக்கும்.
சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது இந்த வகை ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தரும். சந்தை வீழ்ச்சி அடையும்போது, இந்த வகை ஃபண்டுகளின் வருமானமும் வீழ்ச்சியைக் காணும்.
ஆனால், பேலன்ஸ்டு ஃபண்டுகள், கடன் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் இரண்டிலும் கலந்து முதலீடு செய்யும். வரிச் சலுகை பெறவேண்டும் என்கிற நோக்கில் பங்கு சார்ந்த முதலீடுகள் இதில் குறைந்தது 65 சதவிகிதமாக இருக்கும். எஞ்சியது கடன் சார்ந்த முதலீடுகளில் இருக்கும். இந்த 65% அல்லது அதற்கு அதிகமான முதலீடு லார்ஜ்கேப் அல்லது மிட்கேப் பங்குகள் அல்லது இரண்டும் கலந்த முதலீட்டில் இருக்கும். இது ஒவ்வொரு ஃபண்டின் முதலீட்டு ஸ்டைலை பொறுத்தது.
லார்ஜ்கேப் ஃபண்டுகளைப் போல, பேலன்ஸ்டு ஃபண்டு களுக்கும் (65%-க்கு மேல் பங்குகளில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில்) ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருக்கையில், வரும் லாபத்துக்கு எவ்விதமான வரியும் செலுத்த வேண்டாம். அதேபோல் இந்த இரு வகை ஃபண்டுகளில் இருந்துவரும் டிவிடெண்ட்டுக்கும் எவ்விதமான வரியும் இல்லை.
பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 35% வரை கடன் சார்ந்த முதலீடுகள் இருப்பதால், சந்தை உச்சத்தில் இருக்கும்போது பங்குகளை விற்றுவிட்டு, பாண்டுகளில் ஃபண்ட் மேனேஜர் முதலீடு செய்துகொள்வார். அதேபோல், சந்தை சரியும்போது பாண்டு களை விற்றுவிட்டு, பங்குகளில் முதலீடு செய்து கொள்வார். இந்த உத்தியை சரியாகக் கையாண் டால், நல்ல வருமானத்தை ஈட்டலாம்.
பொதுவாக, நாம் பங்கு சார்ந்த ஃபண்ட், கடன் சார்ந்த ஃபண்ட் என தனித்தனியாக வைத்துக் கொள்வதற்கு பதிலாக, ஒரே ஃபண்டில் (பேலன்ஸ்டு) வைத்துக் கொள்ளலாம். மேலும், பேலன்ஸ்டு ஃபண்டில் உள்ள கடன் சார்ந்த முதலீட்டுக்கு எந்த விதமான வரியும் கிடையாது. இதுவே நாம் தனியாக கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும்போது வரும் வருமானத்துக்கு வரி உண்டு.
மார்ச் 2016 முடிவில், இந்தியா வில் பங்கு சார்ந்த திட்டங்கள் மொத்தமாக ரூ.3,86,403 கோடி தொகையை நிர்வகித்து வந்தன. அதே சமயத்தில் பேலன்ஸ்டு ஃபண்டுகள் ரூ.39,146 கோடியை நிர்வகித்தன. இது கிட்டத்தட்ட 1:10 விகிதம் எனக் கூறலாம்.
தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வரும் பேலன்ஸ்டு ஃபண்டுகள் மற்றும் லார்ஜ்கேப் ஃபண்டுகளின் செயல்பாட்டை ஃபண்ட் வருமான ஒப்பீடு என்கிற அட்டவணையில் தொகுத்துத் தந்துள்ளோம். கிட்டத்தட்ட இரு வகை ஃபண்டு களும் ஒரே மாதிரியாக செயல் பட்டுள்ளன. குறிப்பாக, பேலன்ஸ்டு ஃபண்டு கள் சற்று சிறப்பாகச் செயல்பட்டு உள்ளன.
அதேபோல், ஃபண்டு வகைகளின் வருமானம் என்கிற அட்டவணையில் இரு வகை ஃபண்டுகளின் சராசரி (category average) வருமானத்தையும், பிற வகை ஃபண்டுகளின் சராசரி வருமானத்தையும் தந்துள்ளோம். சராசரியாகப் பார்த்தால், பேலன்ஸ்டு ஃபண்டுகள் லார்ஜ்கேப் ஃபண்டுகளைவிட நன்றாக செயல்பட்டு வருகிறது.
லார்ஜ்கேப் ஃபண்டுகள் 100% பங்குகளில் முதலீடு செய்து உள்ளதால், அவை பேலன்ஸ்டு ஃபண்டுகளைவிட அதிக வருமானத்தைத் தரவேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்க் கிறோம். நம் எதிர்பார்ப்பு நியாயம்தான். ஆனால், அது நீண்ட கால காளைச் சந்தையில் தான் நடக்கும். கடந்த இரண்டரை வருடங்களைத் தவிர நமது சந்தை கடந்த 10 ஆண்டில் ஏறுவதும் இறங்குவதுமாகத்தான் இருந்தது. அந்த ஏற்ற இறக்கம் பேலன்ஸ்டு ஃபண்டுகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. அதாவது, வாங்கி விற்பதற்கு தோதாக அமைந்தது.
மேலும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் வட்டி விகிதம் இறங்குமுகமாக இருந்தது. இதனால் பேலன்ஸ்டு ஃபண்டுகள் வைத்திருக்கும் பாண்டுகளின் மதிப்பு உயர்ந்து, வருமானத்தை உயர்த்தியது. இந்த இரண்டு காரணங்களும் கடந்த 10 வருட காலத்தில் பேலன்ஸ்டு ஃபண்டு களின் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவியுள்ளது.
இதுவே எப்போதும் நடக்கும் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது. வட்டி விகிதங்கள் உயரும் காலங்களில் பேலன்ஸ்டு ஃபண்டு களின் செயல்பாடு சற்றே குறைய வாய்ப்பிருக்கிறது. அதேபோல, தொடர்ச்சியான காளைச் சந்தை யிலும், பேலன்ஸ்டு ஃபண்டுகளின் செயல்பாடு லார்ஜ்கேப் ஃபண்டு களுடன் ஒப்பிடும்போது குறைய வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் இளம் வயதினர். உங்களால் நீண்ட நாட்கள் காத்திருக்க முடியும் எனில், லார்ஜ்கேப் ஃபண்டுகளே சிறந்தது. சற்று குறைவான ரிஸ்க்குடன் நடுத்தர காலத்துக்கு முதலீடு செய்ய விரும்பினால் பேலன்ஸ்டு ஃபண்டுகள் சிறந்தது. வரியில்லாத மாதாந்திர அல்லது காலாண்டு டிவிடெண்ட் பெற விரும்பினால், பல பேலன்ஸ்டு ஃபண்டுகள் அந்த விதமான ஆப்ஷனைத் தருகின்றன!
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மாதம்தோறும் டிவிடெண்ட் தரும் பேலன்ஸ்டு ஃபண்டுகள்!
» லாபம் தரும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்!
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» ஃபண்ட் பரிந்துரை :
» லாபம் தரும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்!
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» ஃபண்ட் பரிந்துரை :
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum