Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
டிவிடெண்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்... லாபம் தரும் கற்பக விருட்சங்கள்
Page 1 of 1

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் இருவகை உள்ளன. ஒன்று, கடன் சார்ந்தவை; மற்றொன்று, பங்கு சார்ந்தவை. இந்த இரு வகை மியூச்சுவல் ஃபண்டுகளும் டிவிடெண்டை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன. ஆனால், இந்த இரு வகையான ஃபண்டுகள் தரும் டிவிடெண்டுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கடன் சார்ந்த ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டை வழங்குவதற்குமுன், டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் டாக்ஸை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். ஆனால், பங்கு சார்ந்த ஃபண்டுகள் அந்த வரியைச் செலுத்த தேவையில்லை. ஆகவே, கையில் கிடைக்கும் தொகை கணிசமாகக் கிடைக்கும்.
பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் டிவிடெண்ட் தருவோம் என்று எந்த கேரன்டியும் தரக்கூடாது. ஆனால், கடந்தகாலச் செயல்பாட்டை வைத்துப் பார்க்கும்போது, எந்தத் திட்டங்கள் நல்ல டிவிடெண்டைத் தரவல்லது என்பது நமக்குப் புரியும். அவ்வாறு நல்ல டிவிடெண்டைத் தந்துவருகிற திட்டங்களை இப்போது அலசிக் கண்டுபிடிப்போம்!
அதிக வருமான வரம்பில் இருப்பவர்களுக்கு, பங்கு சார்ந்த திட்டங்களின் டிவிடெண்ட் ஆப்ஷன் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏனென்றால், ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நிகரான வருமானம், வரிச் சலுகை, தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு மேல் உள்ள பணத்தை முதலீடு செய்வது, ரெகுலர் கேஷ் ஃப்ளோ தேவைப்படுபவர்கள் எனப் பல காரணங்களுக்கு யார் வேண்டுமா னாலும் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
டிவிடெண்ட் ஃபண்டு தேர்வு!
முதல்கட்டமாக, அனைத்து லார்ஜ் கேப், மிட் மற்றும் ஸ்மால் கேப், லார்ஜ் மற்றும் மிட் கேப் மற்றும் பேலன்ஸ்டு திட்டங்கள் அனைத்தையும் பரிசீலனைக்காக எடுத்துக்கொண்டோம். அந்தத் திட்டங்களில் கீழ்க்கண்ட வடிகட்டிகளை (ஃபில்ட்டர்) போட்டு வடிகட்டினோம்.
1. குறைந்தது 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் ஃபண்டுகள்!
2. திட்டம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு குறைந்தது ரூ.1,000 கோடியாக இருக்கும் ஃபண்டுகள்!
3. கடந்த 5 ஆண்டுகளில் திட்டம் நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிகமாக வருமானத்தை தந்திருக்கும் ஃபண்டுகள்!
மேற்கண்ட ஃபில்ட்டர்களில் நமக்குக் கிடைத்த 28 ஃபண்டுகளையும் கடந்த 5 வருடங்களில் தொடர்ச்சியாக டிவிடெண்ட் தந்துள்ளனவா என்று அலசினோம். ஏனென்றால், கடந்த 5 ஆண்டுகள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மிகவும் கஷ்டமான காலக்கட்டம் என்றே கூற வேண்டும். இந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக டிவிடெண்ட் தந்த ஃபண்டுகள், வரும் காலங்களிலும் நன்றாக டிவிடெண்டை தரும் என்று கருதலாம்.
மேலும், இந்த ஃபண்டுகளின் செயல்பாட்டையும் கூர்ந்து கவனித்தோம். அதற்கும்மேல் கடந்த 5 ஆண்டுகளில் குறைவான வங்கி வட்டியான 8% அளவையட்டி சராசரியாக டிவிடெண்ட் யீல்டு மக்களுக்குக் கிடைத்துள்ளதா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.
இந்த வடிகட்டியையெல்லாம் தாண்டி நமக்குக் கடைசியாகக் கிடைத்த ஃபண்டுகள் 8 மட்டுமே. இந்த 8 ஃபண்டுகளில், இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டு வகையைச் சார்ந்தவையாகும். 2 ஃபண்டுகள் லார்ஜ் கேப் வகையையும், தலா 2 ஃபண்டுகள் லார்ஜ் மற்றும் மிட் கேப் மற்றும் மிட் அண்டு ஸ்மால் கேப் வகையையும் சார்ந்தவையாகும்.
மேலும் வாசிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!
--விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» லாபம் தரும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்!
» மாதம்தோறும் டிவிடெண்ட் தரும் பேலன்ஸ்டு ஃபண்டுகள்!
» அதிக லாபம் தரும் ஆல்பா ஃபண்டுகள்!
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்... 10 ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு டிவிடெண்ட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum