Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஏஜென்ட் கமிஷன் குறைப்பு... மியூச்சுவல் ஃபண்ட் துறை பாதிக்குமா?
Page 1 of 1

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது இன்றும் ஒற்றை இலக்க சதவிகிதத்துக்குள்தான் இருக்கிறது!
மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளுக்கு போதாத காலம் போல! காரணம், 2015 ஏப்ரல் 1-ம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டு கள் மற்றும் விநியோகஸ்தரர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் இனி 2% மட்டுமே என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி. சமீபத்தில் புதிதாக வந்த பல குளோஸ்டு எண்டட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில்கூட 6 முதல் 8% வரை கமிஷனாகத் தரப்பட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு போய்ச் சேரவேண்டிய லாபம் குறையும்; தவிர, அதிக கமிஷன் கிடைக்கும் என சில மியூச்சுவல் ஃபண்டுகளை மட்டுமே ஏஜென்ட்டுகள் பரிந்துரை செய்வதால் மிஸ் செல்லிங் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி, முதல் ஆண்டில் ‘அப்ஃப்ரன்ட்' (Upfront) கமிஷனை 1 சதவிகிதத்துக்கும் குறைவாகத் தரவேண்டும் என்று சொல்லி இருக்கிறது ஆம்ஃபி.
பொதுவாக, ஒரு முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது ஃபண்ட் ஏஜென்ட்டுகளுக்கு ‘அப்ஃப்ரன்ட் கமிஷன்’ என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷனாக வழங்கப்படும். ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டை ஓராண்டுக்கு மேல் தொடரும் பட்சத்திலும் ஏஜென்டுக்கு ‘ட்ரைல் கமிஷன்’ (Trail commission) என்கிற பெயரில் குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷனைத் தருவது வழக்கம்.
ஆனால், இப்போது வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறையில், இரண்டாவது மற்றும் அதன் பிறகான ஆண்டுகளுக்கான ‘ட்ரைல் கமிஷன்’ முதல் ஆண்டு அப்ஃப்ரன்ட் கமிஷனான 1 சதவிகிதத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது ஆம்ஃபி. 15 பெரிய நகரங்களில் இயங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் ஏஜென்ட்டுகளுக்கு அதிகபட்சம் ‘அப்ஃப்ரன்ட் கமிஷன்’ 1% தரவேண்டும். இதுவே, இரண்டாம் நிலை நகரங்களில் இயங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் ஏஜென்ட்டுகளுக்கு ‘அப்ஃப்ரன்ட் கமிஷன்’ 1 சதவிகிதத்துடன் சுமார் 2% ஊக்கத் தொகை சேர்த்து 3% கமிஷன் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது. ஆம்ஃபியின் இந்த அறிவிப்பை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியும் அமைதியாக ஆமோதித்திருக்கிறது.
ஆம்ஃபியின் இந்த அறிவிப்பால் சிறிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், சிறிய மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் கலங்கி போய் இருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளுக்கான கமிஷன் குறையும்போது பலர் அந்த வேலையை செய்யாமல் விட்டுவிடுவார்கள். அல்லது தங்களை ஏஜென்ட் என்கிற நிலையிலிருந்து அட்வைஸர் என்கிற நிலைக்கு உயர்த்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி மாறும்போது, வழங்கும் ஆலோசனைக்கு கட்டணம் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
ஆம்ஃபியின் இந்த அறிவிப்பால் ஏஜென்டு களுக்கு எப்படி பாதிப்பு உருவாகும் என மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் களுக்கான இண்டிபெண்டன்ட் ஃபைனான்ஷியல் புரஃபஷனல்ஸ் அசோசியேஷன் (Independent Financial Professionals Association) தலைவர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.
‘‘மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் களின் அப்ஃப்ரன்ட் கமிஷன் 1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 1.2 லட்சம் ஏஜென்ட்டுகள் உரிமம் பெற்று இருக்கிறார்கள். இவர்களில் மாதம் ஒரு பிசினஸ் செய்பவர்கள் வெறும் 6000 பேர்தான். இந்த நிலையில், கமிஷனைக் குறைத்தால் இந்த எண்ணிகையும் கணிசமாகக் குறையும். இதனால் சாதாரண மக்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சென்றடைவதில் தாமதம் ஏற்படும்’’ என்று எச்சரித்தார் அவர்.
இது குறித்து சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட்-ன் நிர்வாக இயக்குநர் ஹர்ஷா விஜியிடம்கேட்டோம். அவர், ‘‘செபியின் சேர்மன் யூ.கே. சின்ஹா ‘அப்ஃபிரன்ட் கமிஷன்’ ஃபண்டுகளில் 10 சதவிகிதமாக இருப்பது தவறு என்று சொல்லி இருப்பது சரியான கருத்துதான். அதற்காக ‘அப்ஃப்ரன்ட் கமிஷனை’ வெறும் 1% என்று குறைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. மேலும் டிரைல் கமிஷன், அப்ஃப்ரன்ட் கமிஷனைவிடக் குறைவாக இருக்க வேண்டும் என்பது நல்ல விஷயமல்ல. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அப்ஃபிரன்ட் கமிஷன் முறையே 5% மற்றும் 3% -ஆக உள்ளது. இந்தியாவில்கூட லைஃப் இன்ஷூரன்ஸ், ஜெனரல் இன்ஷூரன்ஸ் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான ஏஜென்ட் கமிஷன் முறையே 3 - 15%, 10 - 15%, மற்றும் 1.5 - 3 சதவிகிதமாக உள்ளது.
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது இன்றும் ஒற்றை இலக்க சதவிகிதத்துக்குள் தான் இருக்கிறது. தனிப்பட்ட நிதி ஆலோசகர்கள் (ஐஎஃப்ஏக்கள்) மூலம்தான் அதிக முதலீடுகள் மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு வந்துகொண்டிருக் கிறது. கமிஷன் குறைக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் புதிதாக எந்த ஐஎஃப்ஏவும் இந்தத் துறைக்கு வரமாட்டார்.
மேலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அண்மைக் காலத்தில் கணிசமாக அதிகரித்ததை அடுத்து, பல விநியோகஸ்தர்களின் கடந்த ஆறு மாத காலத்தில் வணிக விரிவாக்கத்துக்காக அதிகம் பேரை புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். அப்ஃபிரன்ட் கமிஷன் அதிகமானால் விநியோகஸ்தர்களின் செலவு கணிசமாகக் குறையும்” என்றவர், இதற்கு மாற்று என்ன என்பது குறித்தும், இந்த விஷயத்தில் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிலை என்ன என்பதையும் குறிப்பிட்டார்.
‘‘மியூச்சுவல் ஃபண்ட் விநியோக கமிஷன் விஷயத்தில் இப்போது வெயிட் அண்ட் வாட்ச் என்கிற நிலையைக் கடைப்பிடித்து வருகிறோம். நாங்கள் எங்களின் விநியோகஸ்தர்களுக்கான அப்ஃப்ரன்ட் கமிஷனை 4 சதவிகிதத்துக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இந்த 4% என்பது உச்சவரம்புதான். எங்களின் தற்போதைய அப்ஃப்ரன்ட் கமிஷன் சுமார் 1.6 சதவிகிதமாக உள்ளது. கடந்த ஆண்டு அதிக குளோஸ்டு எண்டட் ஃபண்டுகளை வெளியிட்டோம்.
செபியின் விருப்பத்துக்கு ஏற்ப குளோஸ்டு எண்டட் ஃபண்டுகள் வெளியீடுகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கத் திட்ட மிட்டுள்ளோம். அந்த வகையில் அப்ஃப்ரன்ட் கமிஷன் 4 சதவிகிதத்துக்குள்தான் இருக்கும். மேலும், மிஸ் செல்லிங்கை தவிர்க்க அதிக ரிஸ்க் உள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு ‘வெல்கம் காலிங்’ என்கிற முறையில் போனில் அவர்களிடம் பேசி, ஃபண்டின் ரிஸ்க் குறித்து விநியோகஸ்தர் விளக்கினாரா என்பதைச் சோதிப்போம். ரிஸ்க் குறித்து விளக்கவில்லை எனில், அவர் எச்சரிக்கப்படுவர். மிஸ் செல்லிங்கை குறைக்க முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை அதிக எண்ணிக்கையில் நடத்த உள்ளோம்” என்றார்.
முதலீட்டாளர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஆம்ஃபி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஏஜென்ட்டு களுக்கும் நல்லது செய்தால்தானே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வளரும்!
உயர்த்திவிட்டார்கள்!
அப்ஃப்ரன்ட் கமிஷன் குறைக்கப் பட்டிருப்பதுடன், கமிஷன் மீது சேவை வரியும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ‘‘ஒரு ஏஜென்ட்டுக்கு கமிஷனாக ரூ.1,000 கிடைத்தால், சேவை வரியாக ரூ.140 பிடிக்கப்படும். பொதுவாக, சேவை அளிப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் தாண்டும்போதுதான் அவரிடமிருந்து வரி பிடிக்கப்படும். மேலும், இந்தச் சேவை வரியை அவர் ஏற்கெனவே வாடிக்கையாளரி டமிருந்து பெற்றிருப்பார். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளின் கமிஷனில் இது பிடிக்கப்படுவதால் அவர்கள் மிகவும் பாதிப்படைவார்கள். 30% வருமான வரி வரம்பில் ஒரு ஏஜென்ட் இருந்தால், அவர் கட்டும் மொத்த வரி சுமார் 40 சதவிகிதமாக இருக்கும். இதனால் ஏஜென்ட்டுகளின் செயல்பாடுகள் தொய்வடையும்’’ என்றார் சுரேஷ் பார்த்தசாரதி.
---விகடன்மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளுக்கு போதாத காலம் போல! காரணம், 2015 ஏப்ரல் 1-ம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டு கள் மற்றும் விநியோகஸ்தரர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் இனி 2% மட்டுமே என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி. சமீபத்தில் புதிதாக வந்த பல குளோஸ்டு எண்டட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில்கூட 6 முதல் 8% வரை கமிஷனாகத் தரப்பட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு போய்ச் சேரவேண்டிய லாபம் குறையும்; தவிர, அதிக கமிஷன் கிடைக்கும் என சில மியூச்சுவல் ஃபண்டுகளை மட்டுமே ஏஜென்ட்டுகள் பரிந்துரை செய்வதால் மிஸ் செல்லிங் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி, முதல் ஆண்டில் ‘அப்ஃப்ரன்ட்' (Upfront) கமிஷனை 1 சதவிகிதத்துக்கும் குறைவாகத் தரவேண்டும் என்று சொல்லி இருக்கிறது ஆம்ஃபி.
பொதுவாக, ஒரு முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது ஃபண்ட் ஏஜென்ட்டுகளுக்கு ‘அப்ஃப்ரன்ட் கமிஷன்’ என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷனாக வழங்கப்படும். ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டை ஓராண்டுக்கு மேல் தொடரும் பட்சத்திலும் ஏஜென்டுக்கு ‘ட்ரைல் கமிஷன்’ (Trail commission) என்கிற பெயரில் குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷனைத் தருவது வழக்கம்.
ஆனால், இப்போது வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறையில், இரண்டாவது மற்றும் அதன் பிறகான ஆண்டுகளுக்கான ‘ட்ரைல் கமிஷன்’ முதல் ஆண்டு அப்ஃப்ரன்ட் கமிஷனான 1 சதவிகிதத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது ஆம்ஃபி. 15 பெரிய நகரங்களில் இயங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் ஏஜென்ட்டுகளுக்கு அதிகபட்சம் ‘அப்ஃப்ரன்ட் கமிஷன்’ 1% தரவேண்டும். இதுவே, இரண்டாம் நிலை நகரங்களில் இயங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் ஏஜென்ட்டுகளுக்கு ‘அப்ஃப்ரன்ட் கமிஷன்’ 1 சதவிகிதத்துடன் சுமார் 2% ஊக்கத் தொகை சேர்த்து 3% கமிஷன் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது. ஆம்ஃபியின் இந்த அறிவிப்பை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியும் அமைதியாக ஆமோதித்திருக்கிறது.
ஆம்ஃபியின் இந்த அறிவிப்பால் சிறிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், சிறிய மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் கலங்கி போய் இருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளுக்கான கமிஷன் குறையும்போது பலர் அந்த வேலையை செய்யாமல் விட்டுவிடுவார்கள். அல்லது தங்களை ஏஜென்ட் என்கிற நிலையிலிருந்து அட்வைஸர் என்கிற நிலைக்கு உயர்த்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி மாறும்போது, வழங்கும் ஆலோசனைக்கு கட்டணம் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
ஆம்ஃபியின் இந்த அறிவிப்பால் ஏஜென்டு களுக்கு எப்படி பாதிப்பு உருவாகும் என மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் களுக்கான இண்டிபெண்டன்ட் ஃபைனான்ஷியல் புரஃபஷனல்ஸ் அசோசியேஷன் (Independent Financial Professionals Association) தலைவர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.
‘‘மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் களின் அப்ஃப்ரன்ட் கமிஷன் 1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 1.2 லட்சம் ஏஜென்ட்டுகள் உரிமம் பெற்று இருக்கிறார்கள். இவர்களில் மாதம் ஒரு பிசினஸ் செய்பவர்கள் வெறும் 6000 பேர்தான். இந்த நிலையில், கமிஷனைக் குறைத்தால் இந்த எண்ணிகையும் கணிசமாகக் குறையும். இதனால் சாதாரண மக்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சென்றடைவதில் தாமதம் ஏற்படும்’’ என்று எச்சரித்தார் அவர்.
இது குறித்து சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட்-ன் நிர்வாக இயக்குநர் ஹர்ஷா விஜியிடம்கேட்டோம். அவர், ‘‘செபியின் சேர்மன் யூ.கே. சின்ஹா ‘அப்ஃபிரன்ட் கமிஷன்’ ஃபண்டுகளில் 10 சதவிகிதமாக இருப்பது தவறு என்று சொல்லி இருப்பது சரியான கருத்துதான். அதற்காக ‘அப்ஃப்ரன்ட் கமிஷனை’ வெறும் 1% என்று குறைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. மேலும் டிரைல் கமிஷன், அப்ஃப்ரன்ட் கமிஷனைவிடக் குறைவாக இருக்க வேண்டும் என்பது நல்ல விஷயமல்ல. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அப்ஃபிரன்ட் கமிஷன் முறையே 5% மற்றும் 3% -ஆக உள்ளது. இந்தியாவில்கூட லைஃப் இன்ஷூரன்ஸ், ஜெனரல் இன்ஷூரன்ஸ் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான ஏஜென்ட் கமிஷன் முறையே 3 - 15%, 10 - 15%, மற்றும் 1.5 - 3 சதவிகிதமாக உள்ளது.
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது இன்றும் ஒற்றை இலக்க சதவிகிதத்துக்குள் தான் இருக்கிறது. தனிப்பட்ட நிதி ஆலோசகர்கள் (ஐஎஃப்ஏக்கள்) மூலம்தான் அதிக முதலீடுகள் மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு வந்துகொண்டிருக் கிறது. கமிஷன் குறைக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் புதிதாக எந்த ஐஎஃப்ஏவும் இந்தத் துறைக்கு வரமாட்டார்.
மேலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அண்மைக் காலத்தில் கணிசமாக அதிகரித்ததை அடுத்து, பல விநியோகஸ்தர்களின் கடந்த ஆறு மாத காலத்தில் வணிக விரிவாக்கத்துக்காக அதிகம் பேரை புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். அப்ஃபிரன்ட் கமிஷன் அதிகமானால் விநியோகஸ்தர்களின் செலவு கணிசமாகக் குறையும்” என்றவர், இதற்கு மாற்று என்ன என்பது குறித்தும், இந்த விஷயத்தில் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிலை என்ன என்பதையும் குறிப்பிட்டார்.
‘‘மியூச்சுவல் ஃபண்ட் விநியோக கமிஷன் விஷயத்தில் இப்போது வெயிட் அண்ட் வாட்ச் என்கிற நிலையைக் கடைப்பிடித்து வருகிறோம். நாங்கள் எங்களின் விநியோகஸ்தர்களுக்கான அப்ஃப்ரன்ட் கமிஷனை 4 சதவிகிதத்துக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இந்த 4% என்பது உச்சவரம்புதான். எங்களின் தற்போதைய அப்ஃப்ரன்ட் கமிஷன் சுமார் 1.6 சதவிகிதமாக உள்ளது. கடந்த ஆண்டு அதிக குளோஸ்டு எண்டட் ஃபண்டுகளை வெளியிட்டோம்.
செபியின் விருப்பத்துக்கு ஏற்ப குளோஸ்டு எண்டட் ஃபண்டுகள் வெளியீடுகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கத் திட்ட மிட்டுள்ளோம். அந்த வகையில் அப்ஃப்ரன்ட் கமிஷன் 4 சதவிகிதத்துக்குள்தான் இருக்கும். மேலும், மிஸ் செல்லிங்கை தவிர்க்க அதிக ரிஸ்க் உள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு ‘வெல்கம் காலிங்’ என்கிற முறையில் போனில் அவர்களிடம் பேசி, ஃபண்டின் ரிஸ்க் குறித்து விநியோகஸ்தர் விளக்கினாரா என்பதைச் சோதிப்போம். ரிஸ்க் குறித்து விளக்கவில்லை எனில், அவர் எச்சரிக்கப்படுவர். மிஸ் செல்லிங்கை குறைக்க முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை அதிக எண்ணிக்கையில் நடத்த உள்ளோம்” என்றார்.
முதலீட்டாளர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஆம்ஃபி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஏஜென்ட்டு களுக்கும் நல்லது செய்தால்தானே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வளரும்!
உயர்த்திவிட்டார்கள்!
அப்ஃப்ரன்ட் கமிஷன் குறைக்கப் பட்டிருப்பதுடன், கமிஷன் மீது சேவை வரியும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ‘‘ஒரு ஏஜென்ட்டுக்கு கமிஷனாக ரூ.1,000 கிடைத்தால், சேவை வரியாக ரூ.140 பிடிக்கப்படும். பொதுவாக, சேவை அளிப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் தாண்டும்போதுதான் அவரிடமிருந்து வரி பிடிக்கப்படும். மேலும், இந்தச் சேவை வரியை அவர் ஏற்கெனவே வாடிக்கையாளரி டமிருந்து பெற்றிருப்பார். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளின் கமிஷனில் இது பிடிக்கப்படுவதால் அவர்கள் மிகவும் பாதிப்படைவார்கள். 30% வருமான வரி வரம்பில் ஒரு ஏஜென்ட் இருந்தால், அவர் கட்டும் மொத்த வரி சுமார் 40 சதவிகிதமாக இருக்கும். இதனால் ஏஜென்ட்டுகளின் செயல்பாடுகள் தொய்வடையும்’’ என்றார் சுரேஷ் பார்த்தசாரதி.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» மியூச்சுவல் ஃபண்ட்:: டிவிடெண்ட் கணக்கு!
» மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum