வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு

Go down

மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு Empty மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு

Post by தருண் Fri Jul 18, 2014 10:47 am

உலகின் முதல் மியூச்சுவல் ஃபண்ட், 1924-ல் மாஸாசூசெட்ஸ் இன்வெஸ்ட்டார்ஸ் டிரஸ்ட் நிறுவனத்தால் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்றாலும், அந்த ஆண்-டின் முடிவில் மொத்தம் 200 பேர், 63 ஆயிரம் டாலர் முதலீடு செய்திருந்தார்கள். அந்தக் காலத்தில் இது மிகப்பெரிய தொகை.

அமெரிக்க மக்கள் தொகையில் 50% பேர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவில் இது வெறும் 5 சதவிகிதமாக இருக்கிறது.

ஹைலைட்ஸ்:

1963: நாடாளுமன்ற சட்டப்படி, இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யூ.டி.ஐ. உருவானது.

1964: யூ.டி.ஐ. நிறுவனம், யூ.எஸ்.64 என்ற முதல் திட்டத்தை அறிவித்தது.

1987: பொதுத்துறை வங்கிகள் மியூச்சுவல் ஃபண்டில் நுழைய அனுமதிக்கப்பட்டது. இது இந்தத் துறையின் பிரமாண்ட வளர்ச்சிக்கு அடித்தளமானது.

1993: தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறைக்குள் நுழைந்தன. இது இத்துறையின் வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்தியது. நாட்டின் முதல் தனியார் துறை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான 'கோத்தாரி பயனீர்ஸ்' உருவானது. மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் 'செபி' அமைப்பு உருவானதும் இவ்வாண்டில்தான்.

1994: வெளிநாட்டு நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி முதன் முதலாக இந்தியாவில் தனது ஃபண்டை வெளியிட்டது.

1996: செபியின் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

2000: இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்த தொகை 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது.

2003: மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டுகளுக்கு 'ஆம்ஃபி'யின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. இது துறை மீதான நம்பிக்கையைக் கூட்டியது.

2007: மிகக்குறைந்த தொகையாக, வெறும் 50-100 ரூபாய் இருந்தாலே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்ற நிலையை ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஏற்படுத்தின.

2008: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் நேரடியாகச் செய்யப்படும் (ஏஜென்ட் மூலம் அல்லாமல்) முதலீடுகளுக்கு நுழைவுக் கட்டணத்தை செபி, ரத்து செய்தது.

2012 : இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை 7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்தது.




தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum