Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
Page 1 of 1
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்ட், தமிழில் பரஸ்பர நிதி!
சிம்பிளாச் சொல்லணும்னா பலபேர்கிட்ட பணத்தை வசூலிச்சு, அதை எதில் முதலீடு செஞ்சா நிறைய லாபம் கிடைக்குமோ... அதுல பணத்தைப் போட்டு சம்பாதித்துக் கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட்!
வங்கிகள், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்-கள்னு பலர் இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை நடத்துறாங்க.
இருதரப்புக்கும் லாபம்ங்கிற அர்த்தத்தில்-தான் ‘மியூச்சுவல் ஃபண்ட்’னு பெயரே வந்திருக்கு.
நாம கொடுக்கிற பணத்தைப் பல திட்டங்கள்ல பிரிச்சு அவங்க முதலீடு செய்றாங்க. ஒண்ணுல லாபம் குறைஞ்சாலும் இன்னொண்ணு லிஃப்ட் பண்ணி விட்டுரும். அதனால, முதலுக்கே மோசமாயிடுமோங்கிற கவலையும் நமக்கு இருக்காது.
இதிலும் இடைஇடையே போட்ட பணம் எப்படிப் பெருகியிருக்குதுனு பார்த்துட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடலாம்.
ஷேர் மார்க்கெட்டுல நேரடியாக நுழைஞ்சு நம்மோட திறமையின்மையால கையைச் சுட்டுக்கிடற நிலைமை எல்லாம் இதுல கிடையாது. ஆரம்பத்துல நமக்குப் பிடிச்ச திட்டத்தை செலக்ட் பண்றப்போ மட்டும் கொஞ்சம் அலெர்ட்டா இருந்துட்டா, மார்க்கெட்டுக்குச் சமமா லாபம் பார்க்கலாம்.
நம்ம ரேஞ்ச் என்ன... எதுவரைக்கும் ரிஸ்க் எடுக்கலாம்ங்கிறதையும் முன்கூட்டியே தீர்மானிச்சுக்கலாம். ஒருவேளை நம்ம முதலீடு சரியான டைரக்ஷன்ல போகலையோன்னு சந்தேகம் வந்தா, ஈஸியா எஸ்கேப் ஆகி வெளிய வந்துடலாம்.
ரியல் எஸ்டேட் மாதிரி மொத்தமா முதலீடு செய்யணும்ங்கிற அவசியம் இல்லை. மாசா மாசம் ஒரு தொகையை முதலீடு செய்ய-லாம். சில திட்டங்கள்ல (இ.எல்.எஸ்.எஸ்.) நாம பண்ற முதலீட்டுக்கு வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் விலக்கும் கிடைக்கும்.
மாசாமாசம் ஆயிரம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துலப் போடலாமானு நீங்க யோசிச்சாலே போதும், ‘சார்... ஏதோ முதலீடு பத்தி யோசிச்சீங்க போலிருக்கு’னு எதிரே ஒரு ஆள் வந்து நின்னுடுவார். அந்த அளவுக்குத் துடிப்பா இருக்கிறாங்க மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டுங்க. ஒரு வார்த்தைச் சொன்னால் நம் வீட்டுக்கே ஓடிவரத் தயாராக இருக்கிறார்கள் ஏஜென்டுகள்.
தமிழ்நாட்டுல இருக்கிற பெரும்பாலான சிட்டிகள்ல இவங்களோட சர்வீஸ் இருக்குது. ஷேர் புரோக்கிங் ஆபீஸ்கள்லயும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைச் செய்யமுடியும். வங்கிகள் நடத்தும் மியூச்சுவல் ஃபண்டுகளை, அந்தந்த வங்கி-யிலேயே வாங்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிக்கே நேரடியாப் போயும் முதலீடு செய்யலாம். அல்லது அவங்களோட வெப்சைட்டுக்குப் போயும் முதலீடு செய்யலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முக்கியமா இரண்டு விதம் இருக்கு.
ஒண்ணு, ஓப்பன் எண்டட். இதுல எப்போ வேணும்னாலும் பணத்தைப் போடலாம், எடுக்கலாம்.
இன்னொண்ணு குளோஸ்டு எண்டட். இதுல பணத்தைப் போட்டா அதனோட முதிர்வின்போதுதான் எடுக்கமுடியும். (குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்தை எடுக்க நிறுவனங்களே வாய்ப்புக் கொடுக்கும் திட்டங்களும் உண்டு) அதேபோல திட்டம் ஆரம்பிக்கப்படும்போதுதான் முதலீடு செய்யமுடியும். பொதுவாக குளோஸ்டு எண்டட் திட்டத்துல மூணு வருஷத்துக்குப் போட்டதை எடுக்கமுடியாது.
டிவிடெண்ட், குரோத் ஆப்ஷன்கள்..!
மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு செஞ்சாச்சு. நாம முதலீடு செஞ்ச தொகை வளரும்போது, லாபத்தை நமக்குப் பிரிச்சுக் கொடுப்பாங்க. அப்படி கொடுக்கிறதுல டிவிடெண்ட், குரோத் அப்படினு இரண்டு முறைகள் இருக்கு.
இடையில பணம் தேவைன்னு நினைக்கிறவங்க டிவிடெண்ட் ஆப்ஷனை செலக்ட் செஞ்சுக்கிடணும். உங்களின் முதலீடு வேகமாக வளர்ந்தாதான் டிவிடெண்ட் கிடைக்கும். இந்த டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி எதுவும் கிடையாது.
கடைசியில மொத்தமாக் கிடைச்சா போதும்னு நினைச்சா குரோத் ஆப்ஷனை எடுத்துக்கிடலாம்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக் காலம் எவ்வளவு?
எல்லாத்துக்குமே ‘முடிவு’னு ஒண்ணு வேணுமில்லையா..? மியூச்சுவல் ஃபண்டை பொறுத்தவரைக்கும் பணத்தை எவ்வளவு காலத்துக்கு விட்டு வைக்கலாம் அப்படிங்கிற முடிவும், ‘எனக்கு இத்தனை சதவிகிதம் (உதாரணத்துக்கு 15 சதவிகிதம் அல்லது 20%) லாபம் கிடைச்சா போதும்’ங்கிற இலக்கும் ரொம்ப முக்கியமானது.
பஸ்ல போறோம்... அது பாட்டுக்குப் போய்க்கிட்டுதான் இருக்கும். நாம, நம்மோட நிறுத்தம் வந்ததும் இறங்கிடுறோம் இல்லையா..? அதேதான். நாம போட்ட பணம், நாம நினைச்ச அளவுக்குப் பெருகிடுச்சுனா ‘டாடா பை... பை...’ சொல்லிட்டு வெளியேறிட வேண்டியதுதான். இல்லை என்றால், பங்குச் சார்ந்த திட்டங்களில் சந்தை இறங்கிவிட்டால் கூடிய வருமானம் குறைந்துவிடும்.
(நாணயம் விகடன் எல்.கே.ஜி. இணைப்பு புத்தகத்தில் இருந்து)

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன ?
» மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் என்ஏவி என்றால் என்ன?
» மியூச்சுவல் ஃபண்ட்: முதலீட்டைத் தொடங்க என்ன செய்ய வேண்டும்?
» மியூச்சுவல் ஃபண்ட்: பெஞ்ச்மார்க்கைவிட குறைந்த வருமானம் தரும் திட்டங்களை என்ன செய்வது?
» பேரன், பேத்திகளுக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. தாத்தா, பாட்டிகள் என்ன செய்ய வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum