Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
Page 1 of 1
மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
மியூச்சுவல் ஃபண்ட் வகை : பேலன்ஸ்ட் ஃபண்ட்
பெரும்பாலான தொகையை பாண்டுகள்ல முதலீடு செய்யற ஃபண்ட் வகை இது. ரிஸ்க் கிட்டத்தட்ட இல்லைன்னே சொல்லிடலாம். அதேசமயம் வருமானமும் சுமாராத்தான் இருக்கும்.
கில்ட் ஃபண்டு..!
அரசின் கடன் பத்திரங்கள்ல மட்டுமே முதலீடு செய்யற திட்டம் இது! ரிஸ்க் குறைவுங்கிறதால, வருமானமும் குறைவுதான்.
இன்கம் ஃபண்டு..!
இதுவும் கடன் பத்திரங்கள்ல முதலீடு செய்யற திட்டம்தான். கில்ட் ஃபண்டுக்கும், இதுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், அதுல பணத்தை அரசாங்க கடன் பத்திரங்கள்ல மட்டும் போடுவாங்க... இன்கம் ஃபண்டுல தனியார் கடன் பத்திரங்கள்லயும் முதலீடு பண்ணுவாங்க.
சிறப்பு வகை ஃபண்ட்கள்..!
சிறப்புத் தன்மைகளைக் கொண்ட பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கு. அதுல எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட், பிக்ஸட் மெச்சூரிட்டி பிளான், மன்த்லி இன்கம் பிளான், ரியல் எஸ்டேட் ஃபண்டுகள், ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகள் இதெல்லாம் முக்கியமான ஃபண்டுகள்தான். அதை ஒவ்வொண்ணாப் பார்க்கலாம்.
எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்
இதுக்கு முன்னாடி பார்த்தோமே, இண்டெக்ஸ் ஃபண்ட்... அதே மாதிரிதான் இந்த ஃபண்டும். ஆனா இந்த ஃபண்டோட யூனிட்டுகள், வர்த்தகமாகற முறையிலதான் வித்தியாசப்படுது. வழக்கமா மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்ல யூனிட்களை விற்கிறதா இருந்தாலும், வாங்கறதா இருந்தாலும் அந்தத் திட்டத்தை நடத்துற நிறுவனங்களைத்தான் தேடிப்போகணும்.
ஆனா, இந்தத் திட்டத்தோட யூனிட்டுகளை என்.எஃப்.ஓ-வுக்குப் பிறகு பங்குச் சந்தையிலேயே நேரடியாக வாங்கலாம் அல்லது விற்கலாம்! ஒரே ஒரு யூனிட் கூட வாங்கலாம்ங்கிறது இதனோட ஸ்பெஷாலிட்டி. பங்குச் சந்தையோட செயல்பாட்டுக்கு ஏத்த மாதிரி இதோட வருமானம் இருக்கும்.
மத்த சில ஃபண்டுகளை விட இதைப் பணமாக்குறது சுலபம். ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஸ்பைஸ் திட்டம் இ.டி.எஃப். வகையைச் சேர்ந்தது. இது சென்செக்ஸ் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்டின் 'சுந்தர் திட்டம்', நிஃப்டி குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது.
யாருக்கு ஏற்றது?:
புதிய முதலீட்டாளர்களுக்கு.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
மியூச்சுவல் ஃபண்ட் வகை : கடன் ஃபண்ட்கள்..!
இது கடன் பத்திரங்கள்ல மட்டுமே முதலீடு செய்யற திட்டம். இதுல கிடைக்குற வட்டி வருமானத்துக்கு வரி கிடையாது. இந்தத் திட்டத்துல குறிப்பிட்டுச் சொல்றதே எத்தனை நாட்களுக்கு இந்த ஃபண்ட்டை வச்சிருக்கோமோ அத்தனை நாட்களுக்கு வருமானம் கிடைக்கும்ங்கிறதுதான்.
வங்கி டெபாசிட் மாதிரி, இவ்வளவு நாட்களுக்கு வச்சிருந்தால்தான் முழுமையான வட்டி கிடைக்கும்ங்கிற கட்டுப்பாடும் இதுல கிடையாது. பங்கு சார்ந்த திட்டங்கள் மாதிரி இதோட என்.ஏ.வி-யில அதிக மாற்றங்களும் ஏற்படாது.
இந்த ஃபண்டுகள்ல முதலீடு செய்யற காலத்தை வச்சு, 'ஷார்ட் டேர்ம், மீடியம் டேர்ம், லாங்க் டேர்ம்'னு பிரிச்சிருக்காங்க. 'இவ்வளவு காலத்துக்கு அப்புறமா எனக்குப் பணம் கிடைச்சாப் போதும்'னு முடிவு பண்ணிக்கிட்டு அதுக்குத் தகுந்தமாதிரி திட்டத்துல பணத்தைப் போடணும். ஒரு சொத்தை வித்துட்டு அடுத்த சொத்து வாங்குறவரைக்கும் அந்தப் பணத்தை என்ன செய்யறதுனு நினைக்கிறவங்க, கல்யாணத்துக்காக ஏற்பாடு செஞ்சு வச்சிருக்கிற தொகையை வேற எதுக்கும் செலவு செஞ்சிடக்கூடாதேனு நினைக்கிறவங்க... அவங்க எல்லாம் அந்தப் பணத்தைப் போட்டு வைக்கிறதுக்கு ஏத்த திட்டம் இது! காரணம் அந்தத் தொகையை எல்லாம் ஃபிக்ஸட் டெபாசிட், ஃபாண்டுகள், அரசு கடன் பத்திரங்கள் இதுமாதிரியான விஷயங்கள்லதான் முதலீடு செய்வாங்க.
யாருக்கு ஏற்றது?:
புதியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு.

--விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
மியூச்சுவல் ஃபண்ட் வகை : பேலன்ஸ்ட் ஃபண்ட்
கல்யாண வீடுகள்ல செருப்பு காணாமப் போகக்கூடாதுன்னு இந்தப் பக்கம் ஒரு செருப்பையும், அந்தப் பக்கம் ஒரு செருப்பையும் மாத்திப் போட்டுட்டுப் போவாங்க சில விவரமானவங்க...
அந்த ஸ்டைல்தான் இந்த ஃபண்டுலயும். நம்மகிட்ட வாங்குற பணத்தை பங்குகள், கடன் பத்திரங்கள்ல பிரிச்சு முதலீடு செய்யறதுதான் பேலன்ஸ்ட் ஃபண்ட். இதுல ரிட்டர்ன் சுமாரா இருந்தாலும், ஓரளவுக்கு உத்தரவாதமான வருமானம் இருக்கும். இதை, 'ஹைபிரிட் ஃபண்டுகள்'னும் சொல்றதுண்டு. இதுல பங்கு சார்ந்தது, கடன் சார்ந்ததுனு ரெண்டு பிரிவு இருக்கு.
பங்கு சார்ந்தது..!
அதிகபட்ச பணத்தை பங்குகள்லயும், மீதியைக் கடன் பத்திரங்கள்லயும் முதலீடு செய்யறதுதான் இந்த ஃபண்டோட பாணி. ரிஸ்க்கும், வருமானமும் மிதமா இருக்கும்.
யாருக்கு ஏற்றது?:
புதியவர்களுக்கு.
கடன் சார்ந்தது..!
பெரும்பகுதி நிதியைக் கடன் பத்திரங்கள்லயும், மீதியைப் பங்குகள்லயும் போட்டு லாபம் பார்க்குற இந்த ஃபண்டுல ரிஸ்க் கம்மி... லாபமும் கம்மி.
யாருக்கு ஏற்றது?:
வயதானவர்களுக்கு.
விகடன்

மியூச்சுவல் ஃபண்ட் வகை : ஸ்மால் கேப் ஃபண்டுகள், மைக்ரோ கேப் ஃபண்டுகள்..
மூர்த்தி சிறுசு, கீர்த்தி பெருசு'னு சொல்வாங்களே... அந்த மாதிரி 1,500 கோடி ரூபாய்க்குக் குறைவா மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உள்ள சின்ன நிறுவனங்களோட பங்குகள்ல முதலீடு செய்யறதுதான் ஸ்மால் கேப் ஃபண்டுகள். 'சின்ன கம்பெனி... எதிர்காலத்துல வளருமா, வளராதான்னு உறுதியா தெரியாது'ங்கிற ரிஸ்க் இதுல இருக்கத்தான் செய்யுது.
அதேசமயம் அந்த கம்பெனி விறுவிறுனு வளர்ந்து, நல்ல லாபத்தை அள்ளிக் கொடுக்கிறதுக்கான வாய்ப்பும் இருக்கு!
யாருக்கு ஏற்றது?:
சவால் விரும்பிகளுக்கு.
மியூச்சுவல் ஃபண்ட் வகை : மைக்ரோ கேப் ஃபண்டுகள்..!
ரொம்ப சின்ன நிறுவனப் பங்குகள்ல முதலீடு செய்யறதுதான் மைக்ரோ கேப் ஃபண்டுகள். இதுல ரிஸ்க் கொஞ்சம் இல்ல, நிறையவே இருக்கு. எதுக்கும் துணிஞ்சவங்க இதுல இறங்கிப் பார்க்கலாம்.
யாருக்கு ஏற்றது?:
சந்தையைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு.

மியூச்சுவல் ஃபண்ட் வகை : மிட் கேப் ஃபண்டுகள்:
ஒரு நிறுவனத்தோட மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு 1,500 கோடி முதல் 10,000 கோடி ரூபாய் வரை இருந்தால் அதுக்கு மிட் கேப் ஃபண்டுகள்னு பேர். பங்குச் சந்தையில ஏற்ற-இறக்கங்கள் அதிகமாக இருந்த காலத்தில் கூட, மிட் கேப் ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்திருக்கு. அதனால இந்த ஃபண்டை நிறையப் பேர் விரும்புறாங்க.
இதுக்கு ரிஸ்க் குறைவா இருப்பதும் ஒரு காரணம். மிட் கேப் பட்டியல்ல இருக்கிற நிறுவனங்கள் எதிர்காலத்துல பெரிய நிறுவனங்-களா வளரக்கூடிய வாய்ப்பு இருக்-கிறதால, இந்த ஃபண்ட் மீதான வரு-மானமும் நீண்டகால அடிப்படையில அதிக-மாவே இருக்கும்.
யாருக்கு ஏற்றது?:
ஓரளவுக்கு ரிஸ்க் எடுப்பவர்களுக்கு.
இதுக்கு ரிஸ்க் குறைவா இருப்பதும் ஒரு காரணம். மிட் கேப் பட்டியல்ல இருக்கிற நிறுவனங்கள் எதிர்காலத்துல பெரிய நிறுவனங்-களா வளரக்கூடிய வாய்ப்பு இருக்-கிறதால, இந்த ஃபண்ட் மீதான வரு-மானமும் நீண்டகால அடிப்படையில அதிக-மாவே இருக்கும்.
யாருக்கு ஏற்றது?:
ஓரளவுக்கு ரிஸ்க் எடுப்பவர்களுக்கு.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
மியூச்சுவல் ஃபண்ட் வகை: லார்ஜ் கேப் ஃபண்டுகள்
ஒரு நிறுவனத்தோட மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) 10,000 கோடி ரூபாய்க்கு மேல (என்.எஸ்.இ. வரையறைப்படி) இருந்தால், அதுக்கு லார்ஜ் கேப் நிறுவனம்னு பேர்.
இந்த மாதிரியான நிறுவனங்-களோட பங்குகள்ல முதலீடு செய்-யறது-தான், லார்ஜ் கேப் ஃபண்டுகள்.
பொதுவா லார்ஜ் கேப் நிறுவனங்களோட பங்குகள் நீண்டகால அடிப்படையில நல்ல வருமானத்தைத் தருது. அது அப்படியே இந்த நிறுவனங்கள்ல முதலீடு செஞ்சிருக்குற லார்ஜ் கேப் ஃபண்டுகள்லயும் எதிரொலிக்குது. அதனால இது நீண்டகால அடிப்-படையில லாபம் தர்ற ஃபண்டுன்னும் சொல்ல-லாம்.
யாருக்கு ஏற்றது?:
நீண்டகால முதலீட்டாளர்களுக்கு.

மியூச்சுவல் ஃபண்ட் வகை : குளோபல் ஃபண்ட்..!
உள்ளூர் மைதானத்தில் மட்டுமில்லை. உலக மைதானத்திலும் அடித்து விளையாட நினைக்கும் கில்லி ஃபண்ட் இது! இந்தியச் சந்தையில் மட்டுமில்லாம உலகப் பங்குச் சந்தைகள்லயும் கலந்து முதலீடு செய்யறதுதான் குளோபல் ஃபண்ட்.
ரிஸ்க்கைக் குறைக்கிறதும், உலகின் சிறந்த பங்குச் சந்தைகள்ல அறுவடை நடத்தி லாபம் பார்க்கிறதும்தான் இந்த ஃபண்ட்டோட நோக்கம். இந்தியச் சந்தைகள்ல 65%, மற்ற நாட்டு சந்தைகள்ல 35%, அல்லது பாதிக்குப் பாதி, அல்லது 100% முதலீடும் வெளிநாடுகளுக்கு... என்பது மாதிரி, பல டைப்புகள்ல முதலீடு செய்யறாங்க.
குளோபல் ஃபண்டுகளைப் பொறுத்த-வரைக்கும் முதலீட்டுக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. ஆனா, வருமானத்துக்கு வரிச் சலுகை (விதிமுறைக்கு உட்பட்டு) இருக்கும். பொதுவாக, இந்த ஃபண்டுகள்ல போட்ட முதலீட்டை ஓராண்டுக்குள்ள திரும்ப எடுத்தால், குறுகியகால மூலதன ஆதாய வரி கட்டி-யாகணும்.
ஒரு வருஷத்துக்கு மேற்பட்ட முதலீடுன்னா, நீண்டகால ஆதாய வரி 10% விதிக்கப்-படும்.
நாம ஏற்கெனவே பார்த்த மாதிரி சில குளோபல் ஃபண்டுகள்ல அவங்க திரட்டின நிதியில 65% இந்தியச் சந்தையிலயும், மீதியை சர்வதேச சந்தையிலயும் முதலீடு செய்ய-றாங்க. இந்த மாதிரி ஃபண்டுகளை ஈக்-விட்டி ஃபண்டுகளாக எடுத்துக்-கிட்டு அதுக்-கேத்தபடி வரி விதிக்கறாங்க. (ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு குறுகியகால மூலதன ஆதாய வரி 15%, நீண்டகால மூலதன ஆதாய வரி 0%). அதனால் இந்த வகை குளோபல் ஃபண்டுகளில் துணிந்து முதலீடு செய்தால் ரிஸ்க்கை குறைத்து, வரியையும் மிச்சப்-படுத்-தலாம். ஒரு கல்.. இரண்டு மாங்காய்.
யாருக்கு ஏற்றது?:
பங்குச் சந்தை அபாயங்களைக் குறைக்க நினைப்பவர்களுக்கு.

மியூச்சுவல் ஃபண்ட் வகை : செக்டோரல் ஃபண்டுகள்..
இந்த ஃபண்டோட முதலீட்டு ஸ்டைல் என்ன தெரியுமா? குறிப்பிட்ட ஒரு துறையில இருக்குற நிறுவனங்களோட பங்குகள்ல மட்டுமே முதலீடு செய்யறதுதான்!
ஆனா, ரிஸ்க் அதிகம்.. வருமானமும் அதிகம்! மருந்துப் பொருட்கள் தயாரிக்கிற நிறுவனப் பங்குகள்ல முதலீடு செய்யற 'ஃபார்மா ஃபண்ட்', பெட்ரோலியத் துறை நிறுவனங்களா பார்த்துத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யற 'பெட்ரோ ஃபண்ட்', கம்ப்-யூட்டர் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் மாதிரி-யான ஐ.டி. நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யும் 'டெக்னாலஜி ஃபண்ட்', வங்கிப் பங்குகள்ல மட்டுமே முதலீடு செய்யக்-கூடிய 'பேங்க்கிங் ஃபண்ட்', ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்-யூமர் குட்ஸ்'னு சொல்லப்படுற 'நுகர்வோர் பொருட்கள்' நிறுவனப் பங்குகள்ல முதலீடு செய்யற 'எஃப்.எம்.சி.ஜி. ஃபண்ட்...' இப்படி நிறைய இருக்கு.
எல்லாத்துக்கும் பெயர் செக்டோரல் ஃபண்டு-தான்.
ஒரு குறிப்பிட்ட துறை நல்ல வளர்ச்சிப் பாதையில இருக்கும்போது இந்த வகை ஃபண்டுகளைக் கொண்டு வருவாங்க.
அதே துறை டல்லடிக்க ஆரம்பிச்சிடுச்சுன்னா போட்ட பணத்தை எடுக்கவேண்டிய நேரம் வந்தாச்சுனு அர்த்தம். இந்த செக்டோரல் ஃபண்டுகள்ல முதலீடு செய்யறவங்க, சம்பந்தப்பட்ட துறையைத் தொடர்ந்து நல்லா கவனிச்சுக்கிட்டே வரணும். மியூச்சுவல் ஃபண்டுல நல்ல ஞானம் கிடைக்கிற வரைக்கும் இந்த ஃபண்டுல இருந்து ஒதுங்கியிருக்கறது நல்லது.
யாருக்கு ஏற்றது?:
ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு.

மியூச்சுவல் ஃபண்ட் வகை : இண்டெக்ஸ் ஃபண்ட்!
மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்), தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) மாதிரியான சந்தைகள்ல, ஏதாவது ஒரு சந்தையோட குறியீட்டை அடிப்படையா வச்சு முதலீடு செய்யறதுதான் இண்டெக்ஸ் ஃபண்ட்! அதாவது, குறியீடு எண்ணைக் கணக்கிடறதுக்கு உதவுற நிறுவனங்களோட பங்குகள்ல முதலீடு செய்வாங்க. அதுவும் அந்த நிறுவனங்களோட விகிதாசார அடிப்படையில பிரிச்சு முதலீடு செய்யறதுதான் இதோட தனி ஸ்டைல்!
இந்த ஃபண்டின் செயல்பாடு பங்குச் சந்தை போக்குக்கு ஏத்த மாதிரி இருக்கும். இன்னும் எளிமையாச் சொல்லணும்னா, சந்தையோட ஏற்ற- இறக்கம் இந்த வகை ஃபண்டுகளின் என்.ஏ.வி-யில அப்படியே பிரதிபலிக்கும்! நல்ல செயல்பாட்டைக் கொண்டிருக்கிற நிறுவனங்கள்தான் இண்டெக்ஸ் பட்டியல்ல இருக்கும்ங்கிறதால புது ஆளுங்களுக்கும், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத மூத்த குடிமக்களுக்கும் ஏற்றது இந்த ஃபண்ட்.
யாருக்கு ஏற்றது?:
புதியவர்கள், வயதானவர்களுக்கு.

மியூச்சுவல் ஃபண்ட் வகை : இ.எல்.எஸ்.எஸ்..
இந்தத் திட்டம், வருமான வரி கட்டுற நிலையில இருக்குற மாதச் சம்பளக்காரர்கள் மத்தியில ரொம்ப பிரபலம்! இ.எல்.எஸ்.எஸ். (Equity Linked Savings Scheme) அப்படின்னு சுருக்கமா சொல்லப்படுற இதுவும், அடிப்படையில ஒரு ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுதான். இதுல முதலீடு செஞ்சா வரிச்சலுகை உண்டு. 80-சி பிரிவின் கீழ ஒரு நிதி ஆண்டுல, ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் முதலீடு செஞ்சு வருமான வரி கட்டுறதிலிருந்து தப்பிக்கலாம்.
நியாயமான கேள்வி.
இந்த வகை திட்டங்கள்ல, அதுமட்டுமில்ல, இப்படி வரிச்சலுகை கொடுக்கிறதுக்கு இன்னொரு நோக்கமும் இருக்கு... பங்குச் சந்தை முதலீட்டை அதிகரிக்கிறது மூலமா, நிறுவனங்களோட செயல்பாட்டை மேம்படுத்தி, நாட்டோட பொருளாதார வளர்ச்சியை உயர்த்தலாம்ங்கிறதுதான்.
இந்த இடத்துல, 'மூணு வருஷத்துக்குப் போட்ட பணத்தை எடுக்கமுடியாதுன்னு சொன்னா, இது குளோஸ்ட் எண்டட் ஃபண்டா..?'னு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். நிறையப்பேர் அப்படித்தான் நினைச்சுக்குறாங்க. ஆனா அப்படிக் கிடையாது. குளோஸ்ட் எண்டட் ஃபண்டுகள்ல புதிய வெளியீட்டின்போது மட்டும்தான் முதலீடு செய்யமுடியும். இந்த இ.எல்.எஸ்.எஸ். திட்டத்துல எப்போ வேணும்னாலும் முதலீடு செய்யலாம். வரிச்சலுகை தேவைப்படுறவங்க மட்டும்தான் மூணு வருஷத்-துக்கு முன்னாடி பணத்தை எடுக்க-முடியாது. மத்தவங்க எப்போ வேணும்னாலும் யூனிட்களை விற்றுப் பணமாக்கிக்கிட முடியும்.
இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள்ல முதலீடு செய்யும்போதே, அவங்கவங்க வருமான வரி விதிப்புக்கு ஏத்தபடி 10-30% வரி சேமிக்கப்படுது. அதாவது, முதலீடு செய்யும்போதே 10 முதல் -30% வருமானம் கிடைச்சிடுது. அதுக்குப்பிறகு கிடைக்கிறது எல்லாம் கூடுதல் வருமானம்தானே? அதுவும்போக, இந்தத் திட்டத்துல வழங்கப்படற டிவிடெண்டுக்கு வரி எதுவும் கிடையாது. முதிர்வுக்கு அப்புறம் கிடைக்கிற லாபத்துக்கும் கூட எந்த வரியும் கிடையாது.
மற்ற திட்டங்கள்ல இல்லாத இன்னொரு சிறப்பு, புதிய வெளியீடா இருந்தாலும், ஏற்கெனவே மார்க்கெட்டுல இருக்குற திட்டமா இருந்தாலும் 500 ரூபாய் இருந்தா போதும்... இ.எல்.எஸ்.எஸ். திட்டத்துல முதலீட்டை ஆரம்பிச்சுடலாம். அதையும் மாதாமாதம் குறிப்பிட்ட தொகை போடுற மாதிரி, எஸ்.ஐ.பி. முறையிலேயே போடலாம்!
இந்தத் திட்டத்துல நல்லா கவனிக்க-வேண்டிய விஷயம் ஒண்ணும் இருக்கு... இ.எல்.எஸ்.எஸ். திட்டத்துல முதலீட்டுக்கு தர்ற டிவிடெண்டை மறுபடியும் அதே ஃபண்டுல முதலீடு செய்யற, 'டிவிடெண்ட் மறுமுதலீட்டு ஆப்ஷன்' உண்டு. இதைத் தேர்ந்தெடுத்திருந்தா, டிவிடெண்ட் கொடுக்கும்போது பணமா தர்ற-துக்குப் பதிலா, அந்தத் தொகைக்கு சமமா யூனிட்களை ஒதுக்கு-வாங்க. இந்த புது யூனிட்களை, அது ஒதுக்கீடு செய்யப்பட்டதுலேர்ந்து மூணு வருஷம் கழிச்சுதான் விற்கமுடியும்.
அதனால, பணம் முன்னதாகவே வேணும்னு நினைக்கிறவங்களுக்கு, இந்த ஆப்ஷன் உபயோகப்படாது, கவனம்! கடந்த மூணு வருஷ காலத்துல, பங்குச் சந்தையோட ஏற்ற - இறக்கத்தையெல்லாம் மீறி, இந்த வகை ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்துக்கிட்டிருக்கு. அதனால இது புதிய முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமானதா இருக்கும்.
யாருக்கு ஏற்றது?:
மாதச் சம்பளக்காரர்கள், வரியைச் சேமிக்க நினைப்பவர்களுக்கு.

மியூச்சுவல் ஃபண்ட் வகை: ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட்கள்...!.
மியூச்சுவல் ஃபண்ட்களில் பல வகைகள் இருக்கின்றன, அவற்றில் மிக முக்கியமானது. ஈக்விட்டி ஃபண்ட்கள்.
ஈக்விட்டி ஃபண்ட்கள்..!
இந்த வகை ஃபண்டுகள்ல திரட்டற நிதி முழுவதையுமே பங்குச் சந்தையிலதான் போடுவாங்க. முதலீட்டை ஜெட் வேகத்தில் பெருக்-கணும்ங்கிறதுதான் இந்த வகை ஃபண்டுகளோட நோக்கம். இதுல லாபமோ, நஷ்டமோ... எது வந்தாலும், அதிகமா-தான் இருக்கும்! இந்த ஃபண்டை அதன் பெயரை வைத்து அடையாளம் காண்-பது கடினம். அதன் முதலீட்டுக் கலவையைக் கவனித்தால்தான் தெரியும்.
அதிக ரிஸ்க் எடுக்கத் தயாரா இருக்கிற இளம் வயசுக்காரங்க இதுல முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டுக்கு நீங்க புதுசுன்னா, ஆழம் தெரியாம காலைவிட்டு அவஸ்தைப்படுறதை விட, போதுமான அனுபவம் கிடைக்குற வரைக்கும் வேற வகையான ஃபண்டுகள்ல பணத்தைப் போடலாம். அதுவரைக்கும் இந்த ஃபண்ட் பக்கம் வராம இருக்கிறது நல்லது.
யாருக்கு ஏற்றது?:
ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள இளம்வயதினர்.
ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட்..!
இதுவும் முழுக்க முழுக்க பங்குச் சந்தை சார்ந்த திட்டம்தான். ஆனா, திரட்டுற பணத்தை, பல துறைகள், பல நிறுவனப் பங்குகள்ல பிரிச்சு முதலீடு பண்ணுற போர்ட்ஃபோலியோ இந்த ஃபண்டுல இருக்கு. அதனால ரிஸ்க் ஓரளவுக்கு குறைக்கப்படுது. வருமானமும் நல்ல விதமாக கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டுக்கு புது ஆளுங்க, துணிச்சலா இந்த வகை ஃபண்டுல பணத்தைப் போடலாம்.

-விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» மியூச்சுவல் ஃபண்ட்:: டிவிடெண்ட் கணக்கு!
» மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
» மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum