Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
குரூப் பாலிசி To தனிநபர் பாலிசி...
Page 1 of 1
குரூப் பாலிசி To தனிநபர் பாலிசி...
குரூப் பாலிசி To தனிநபர் பாலிசி...
வேலை மாறும்போது இதை கவனியுங்கள்!
இன்றைய நிலையில் ஒரு சாராருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்கிற நிலை இருந்தாலும், இன்னொரு பிரிவினர் ஏற்கெனவே வேலை செய்த அலுவலகங்களில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு, அதிக சம்பளம், பதவி உயர்வு காரணமாக வேறு நிறுவனங் களுக்குத் தாவிவிடுகிறார்கள். இப்படி அடிக்கடி வேலை மாறுகிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருந்தாலும், மிக முக்கியமாக குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி தொடர்பான விஷயங்களை கட்டாயம் கவனித்தே ஆகவேண்டும்.
இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார் ராம். பதவி உயர்வு காரணமாக இவர் மற்றொரு நிறுவனத்துக்கு வேலை மாறியபோது, ஒரே ஒரு விஷயத்தை கவனிக்கத் தவறிவிட்டார். அவர் ஏற்கெனவே வேலை பார்த்த நிறுவனத்தில் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தது. இந்த குரூப் பாலிசியை வேலை மாறும்போது ஃப்ளோட்டர் பாலிசியாக மாற்றிக் கொள்ளத் தவறிவிட்டார். விளைவு, வேலை மாறிய அடுத்த ஓரிரு வாரங்களிலேயே, ராமின் மனைவிக்கு அவசர மருத்துவச் செலவு ஏற்பட, மெடிக்கல் பாலிசி இல்லாததால், லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி மருத்துவச் செலவு செய்தார்.
ராம் மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸை வேலை மாறும்போது கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பின்பு சிக்கலில் சிக்கிக் கொள்கிறோம். வேலையில் இருக்கும்போது சேமித்துவந்த பிஎஃப் தொகையை வேலை மாற்றலின்போது வேறு நிறுவனத்தின் கணக்குக்கு மாற்றிக் கொள்கிற மாதிரி, குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸையும் மாற்றிக்கொள்ள முடியுமா, அதற்கான நடைமுறை விஷயங்கள் என்ன என்பது போன்ற பல கேள்விகளுடன் நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் (அகமதாபாத் கிளை) டெக்னோ மார்க்கெட்டிங் பிரிவின் துணை மேலாளர் மனோகரனிடம் பேசினோம். அவர் கொடுத்த விவரங்கள் இங்கே உங்களுக்காக...
ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி!
'ஒருவர் தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்துக்கு மாற்றலாகி போகும்போது, அந்த நிறுவனத்தில் ஏற்கெனவே வைத்திருந்த குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸை ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ள முடியும். நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றிவந்த நபர் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார் என்றால், அவருக்கு அதுவரை இருந்த குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியை (Portability of Health Insurance) அப்படியே ஃப்ளோட்டர் பாலிசியாக அதே இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலோ அல்லது வேறொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலோ ஏற்கெனவே இருந்த பாலிசி பலன்களுடன் மாற்றிக் கொள்ள முடியும். இந்த உண்மை தெரியாததால் பலரும் ஏற்கெனவே உள்ள பாலிசி பலன்களை அனுபவிக்க முடியாமல் இழக்கிறார்கள். புதிய பாலிசி எடுக்க தாமதித்து எதிர்பாராத மருத்துவ செலவுகளிலும் சிக்கிக் கொள்கிறார்கள்.
விவரங்களுடன் கடிதம் அவசியம்!
இதற்கு பாலிசிதாரர் செய்ய வேண்டிய ஒரே விஷயம், தான் இதுவரை வேலை செய்த அலுவலகத்தின் நிர்வாகத்திடமிருந்தும், ஏற்கெனவே குரூப் பாலிசி வைத்திருந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்தும் கடிதம் மூலமாக, இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த விவரங்களை (குரூப் இன்ஷூரன்ஸில் இருந்த குடும்ப உறுப்பினர்களின் விவரம், எத்தனை வருடம் கவரேஜ் இருந்தது, பாலிசி கவரேஜ் தொகை எவ்வளவு) புதிதாக பாலிசி எடுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தரவேண்டியது அவசியம். இந்தக் கடிதத்தை வைத்துதான் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியாக மாற்ற முடியும்.
இதில் முக்கியமான விஷயம், ஒருநாள்கூட இடைவெளி இல்லாமல் குரூப் பாலிசியிலிருந்து ஃப்ளோட்டர் பாலிசியாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பாலிசி நடைமுறையில் இருப்பதாகக் கருதப்படும். எனவே, பாலிசியை மாற்றுவதற்கான அனைத்து நடைமுறைகளையும், வேலையிலிருந்து மாற்றலாவதற்கு 45 நாட்களுக்கு முன்பே செய்துமுடித்துக் கொள்ள வேண்டும். என்றாலும் பாலிசியை மாற்றும்போது அது பரிசீலனைக் காலத்தில் இருந்தால், 30 நாட்கள் சலுகைக் காலம் தரப்படும்.
தற்போதுள்ள நடைமுறையின்படி, வேலை ராஜினாமா செய்ய வேண்டும் எனில், 30 நாட்களுக்கு முன்பே அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். எனவே, ஒரு மாத காலத்துக்குள் மேற்சொன்ன இரண்டு கடிதங்களை வாங்கித் தந்துவிடலாம்.
பிரீமியம் அதிகரிக்கும்!
நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸாக இருக்கும்போது பிரீமியம் குறைவாகவும், சலுகைகள் அதிகமாகவும் இருக்கும். ஆனால், நிறுவனத்தை விட்டு விலகி, தனியாக ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்ளும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அதே சலுகைகள் கிடைத்தாலும், பிரீமியம் அதிகரிக்கும். இந்த பிரீமியமானது ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் மாறுபடும்' என்றார் அவர்.
ஆக, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸை மாற்றிக்கொள்வதிலும் அவசியம் கவனம் செலுத்துங்கள்!
ந.விகடன் வேலை மாறும்போது இதை கவனியுங்கள்!

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி... இது மட்டும் போதுமா?
» குறையும் குரூப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்: எப்படி சமாளிக்கலாம் ?
» பழசுக்கும் உண்டு பாலிசி!
» யாருக்கு எந்த பாலிசி..?
» போலீஸுக்காகப் பயந்து பாலிசி எடுக்காதீர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum