Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி... இது மட்டும் போதுமா?
Page 1 of 1

மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதிலிருந்து தப்பிக்க எல்லாருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் தேவை. ஆனால், பலரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு பதிலாக குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியையே எடுத்திருக்கிறார்கள். வேலை பார்க்கும் அலுவலகம் மூலமே இந்த குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி பலருக்குக் கிடைத்துவிடுகிறது. ஒருவரிடம் இந்த குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டும் இருந்தால் போதுமா, அதில் அனைத்து மருத்துவச் செலவுகளுக்கும் கவரேஜ் கிடைக்குமா, குரூப் இன்ஷூரன்ஸில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்கிற முக்கியமான கேள்விகளுக்கான பதிலை பார்ப்போம்.
சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு எதிர்பாராத மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துத் தரும். இந்த பாலிசிகளுக்கான பிரீமியத்தை சில நிறுவனங்கள், ஊழியர்களிடமிருந்து வசூலித்துக் கட்டும். இன்னும் சில நிறுவனங்களில் அந்த நிறுவனத்தின் நிர்வாகமே பிரீமியம் செலுத்துவதுடன், இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலம் ஊழியர்களுக்கு எந்தவகையான கவரேஜ் தேவை என்பதற்கான முடிவையும் செய்துகொள்ளும். எனவே, இந்த பாலிசிகள் ஊழியர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப இருக்குமா என்பது சந்தேகமே.
குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஃபர்ஸ்ட் இன்ஷூரன்ஸ் வேர்ல்டு புரோக்கிங் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர் பி.மேத்யூஸ் பிரபாகரன் விளக்குகிறார்.
''குரூப் இன்ஷூரன்ஸில் பல விதமான பாலிசிகள் உள்ளன. அதாவது, குரூப் லைஃப் இன்ஷூரன்ஸ், குரூப் ஆக்சிடென்ட் இன்ஷூரன்ஸ், குரூப் விபத்து செலவு பாலிசி, குரூப் மெடிக்ளைம் பாலிசி எனப் பலவகையில் பாலிசிகள் உள்ளன. இதில் குரூப் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இயற்கை மரணம் அல்லது விபத்தினால் மரணம் ஏற்படும்போது க்ளைம் கிடைக்கும்.
ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் குரூப் ஆக்சிடென்ட் பாலிசிதான் எடுக்கும். இதில், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் மட்டுமே க்ளைம் கிடைக்கும். இந்தவகை பாலிசியில் பிரீமியம் குறைவாக இருக்கும். நிறுவனங்கள் தங்களின் செலவை குறைப்பதற்காக சில குறைவான கவரேஜ் இருக்கும் பாலிசிகளை எடுக்கவும் வாய்ப்புள்ளது. தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு எந்தவகையான க்ளைமும் கிடைக்காது. எனவே, உங்கள் நிறுவனம் எந்த வகையான பாலிசியை எடுத்திருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
விபத்தில் சிக்கி சிகிச்சை எடுக்கும் போது ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு மருத்துவக் கட்டணத்தை நிர்ணயம் செய்து வைத்திருப்பார்கள். எனவே, எந்த சிகிச்சைக்கு எவ்வளவு க்ளைம் செய்யலாம் என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம்.
குரூப் மெடிக்ளைம் பாலிசி:
குரூப் மெடிக்ளைம் பாலிசியில் வியாதி மற்றும் விபத்தினால் ஏற்படும் சிகிச்சைகளுக்கு க்ளைம் செய்ய முடியும். இதில் சில நோய்களுக்கு மற்றும் சிகிச்சைகளுக்கு கவரேஜ் கிடைக்காது. அதாவது, காஸ்மெட்டிக்ஸ் அறுவை சிகிச்சை, பல் சிகிச்சைகள் போன்றவைகளுக்கு க்ளைம் செய்ய முடியாது. அதேநேரத்தில், விபத்து காரணமாக இந்தச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டால் க்ளைம் கிடைக்கும். சர்க்கரை, ரத்த கொதிப்பு, கண்புரை போன்ற நோய்களுக்கு பொதுவாக க்ளைம் கிடைக்காது. இந்த நோய்களுக்கு அதிக பிரீமியம் செலுத்தி குரூப் பாலிசியில் சேர்த்துக்கொள்ளலாம்.
சிலருக்கு பிறக்கும்போதே சில நோய்கள் இருக்கும். அதாவது, இதயத்தில் துளை இருப்பது, சில உறுப்புகள் செயலிழந்திருப்பது என வெளியில் தெரியாமல் இருக்கும் வியாதிகளுக்கு க்ளைம் கிடைக்கும். ஆனால், உடலுக்கு வெளியே தெரியக்கூடிய குறைகளுக்கும், பிரச்னைகளுக்கும் சிகிச்சை மேற்கொள்ளும்போது க்ளைம் கிடைக்காது.
அதேபோல, ஒரு வியாதி கண்டுபிடிக்கப்பட்டு, அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டும்தான் க்ளைம் செய்ய முடியும். மருத்துவமனையில் குறைந்தபட்சம் 24 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டும்தான் எந்தவிதமான சிகிச்சைக்கும் க்ளைம் கிடைக்கும்.
குரூப் இன்ஷூரன்ஸில் அதிக அளவு க்ளைம் வருவதால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஊழியர்களின் பெற்றோர்களுக்கு கவரேஜ் தருவதைத் தவிர்த்து விடுகின்றன. அல்லது கோ-பேமன்ட் விதிமுறையை வைத்திருக்கும். சிகிச்சைக்கு செலவாகும் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஊழியர் செலுத்த வேண்டியிருக்கும். இது அதிகபட்சம் 50% வரை இருக்கும். அதேபோல, மூத்த குடிமக்களுக்கு சில நோய்களுக்கு கவரேஜ் இல்லை எனக் கட்டுப்பாடு வைத்திருக்கும்.
பிரசவ செலவுகளுக்கு பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கவரேஜ் தருவதில்லை. இந்த கவரேஜ் தேவைப்படும் எனில், அதிக பிரீமியம் செலுத்தி கவரேஜ் எடுத்துக்கொள்ளலாம். அலோபதி அல்லாத மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்திருந்தால் பொதுவாக க்ளைம் கிடைக்காது. ஆனால், பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி எடுத்திருந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருந்தால் க்ளைம் கிடைக்கும்.
குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் எந்தெந்த வியாதிகளுக்கு கவரேஜ் கிடைக்கும் என்பது பாலிசி பத்திரத்தில் இருக்கும். பாலிசி பத்திரத்தை ஊழியர்கள் அனைவருக்கும் கொடுப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயம். எனவே, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் சாஃப்ட் காப்பி கேட்டு பெறலாம். பாலிசி பத்திரத்தில் எல்லா விவரங்களும் தெளிவாக இருக்கும். அதாவது, எதற்கு க்ளைம் கிடைக்கும், எதற்கு கிடைக்காது என்பது இருக்கும். இந்த விதிமுறை குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியின் தன்மைக்கு ஏற்ப இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மாற்றும். அந்த மாற்றங்கள் வாய் வார்த்தையாக இருந்தால் மட்டும் போதாது. பாலிசி பத்திரத்திலும் இருக்க வேண்டும். அதாவது, திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்ற பகுதியில் அந்த மாற்றங்கள் இருக்க வேண்டும்.
குரூப் இன்ஷூரன்ஸ் தவிர, கூடுதலாக ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வத்தைப் பற்றியும் அவர் தொடர்ந்து விளக்கினார்.
''குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் உங்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கவரேஜ் இல்லை எனில், அவர்களுக்கு தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்வது முக்கியம். மேலும், தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை என்பது நிரந்தரம் இல்லை. வேலை மாறும்போது, புதிய நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் வசதி இருந்தாலும் அவர்கள் பாலிசியைப் புதுப்பிக்கும்போதுதான் உங்களின் பெயரை அதில் சேர்ப்பார்கள். அந்த இடைப்பட்ட சமயத்தில் ஏதாவது மருத்துவச் செலவு ஏற்பட்டால், அந்தத் தொகையை உங்களது சொந்தப் பணத்திலிருந்துதான் செலவு செய்யவேண்டியிருக்கும். மேலும், குரூப் இன்ஷூரன்ஸில் குறிப்பிட்ட தொகைக்குதான் கவரேஜ் இருக்கும். குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் 'டாப்-அப்’ செய்ய முடியாது.
இத்தனை பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு, ஏற்கெனவே குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து இருந்தாலும், உங்களுக்கென தனியாக ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது அவசியம்'' என்றார்.
சில ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவானாலும் தனியே ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருப்பதே புத்திசாலித்தனம்.

--இரா.ரூபாவதி
ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» குரூப் பாலிசி To தனிநபர் பாலிசி...
» மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய பாலிசி
» லைஃப் இன்ஷூரன்ஸ்..! எத்தனை பாலிசி எடுக்கலாம்?
» குறையும் குரூப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்: எப்படி சமாளிக்கலாம் ?
» கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum