Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பழசுக்கும் உண்டு பாலிசி!
Page 1 of 1
பழசுக்கும் உண்டு பாலிசி!
‘கா ந்தி மதுரைக்கு வந்திருந்தபோது, எங்க தாத்தாவுக்கு பரிசாகக் கொடுத்த கைக்கடிகாரம் இது. அன்னிக்கு விலைனு பார்த்தால் சொற்ப தொகைதான். ஆனால், நூற்றாண்டுகளுக்கு மேல் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் இந்தப் பொருளுக்கு விலைமதிப்பே கிடையாது’’ என்று வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் பெருமை பொங்கச் சொல்லும் ஒருவருக்கு, அந்தக் கடிகாரம் கீழே விழுந்து உடைந்து போனால் எப்படி இருக்கும்?
அவருடைய சென்டிமென்டை ஈடு செய்ய முடியாவிட்டாலும் அந்தப் பழங்கால பொக்கிஷத்துக்கு இன்ஷூரன்ஸ் செய்திருந்தால் பணமாகவாவது ஈடு செய்திருக்க முடியும்! நிஜம்தான்... பழங்காலப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கும்போது, கூடவே அதற்கு இன்ஷூரன்ஸும் செய்து வைத்திருந்தால் இழப்பீடு பெறமுடியும். அதற்காக தனி பாலிசிகளை வைத்திருக்கின்றன சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்.
‘ஆன்டிக் இன்ஷூரன்ஸ்’ என்ற பெயரில் இருக்கும் இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் பழைமைப் பொருட்களின் காதலர்களுக்காகவே சில நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. பாரம்பரியம் மிக்க நமது நாட்டின் புராதனப் பொருட்களைப் பாதுகாக்கிற மியூஸியம் போன்ற இடங்கள் தவிர, மற்ற பலரும் பெருமைமிகு பொருட்கள் சிலவற்றைத் தங்கள் வீடுகளில் வைத்திருப்பார்கள். சிலருக்கு இது விருப்பமான பொழுதுபோக்காககூட இருக்கும்!
இதுபோன்ற புராதன பொருட்களைப் பற்றி ஆராய்ந்து இந்தத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் உங்களிடம் இருக்கும் பொருள் எந்த அளவுக்கு பழைமையும் பாரம்பரியமும் கொண்டது என்பதைத் தீர்மானிப்பார்கள். அதன் அடிப்படையில்தான் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான தொகையைத் தீர்மானிப்பார்கள். (கார்களை நீங்கள் பல்லாண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தால் ‘விண்டேஜ்’ போன்ற பழைய கார்களைப் பற்றி நன்கு அறிந்த அமைப்புதான் அந்த காரின் மதிப்பைத் தீர்மானிக்கும்).
பொதுவாக, 100 ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் புராதனப் பொருட் கள்தான் ஆன்டிக் பொருட்கள் வகையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. எனினும் மரத்தாலான பொருட்கள் என்றால், 50 ஆண்டுகளைத் தாண்டியதும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவதுண்டு. எனவே, இவற்றின் வயது, பின்னணி, முக்கியத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயிக் கப்படும் அதன் மதிப்புக்கு இந்தவகை காப்பீடு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து இந்தக் காப்பீடு பெற, பொருளின் மதிப்பை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுமதிப்பீடு செய்ய வேண்டி இருக்கும். காரணம், சில நேரங்களில் இவற்றின் பராமரிப்பு குறைவால் பொருள் பாதிக்கப்பட்டு அதன் மொத்த சந்தைமதிப்பு குறைந்து போகலாம். இந்த மதிப்பீடுகளைச் சரிபார்க்க அறிவியல் பூர்வமான வழிமுறைகள் எதுவும் இல்லாததால், ஒருவர் சற்றே அதிக தொகைக்கு காப்பீடு கோரும்போது, அந்த காப்பீடு நிறுவனங்கள் இது குறித்து தங்களது ரீ இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டு விசாரித்த பின்னரே, அதற்கான அனுமதியை வழங்குகிறார்கள்.
பழங்கால பெயின்டிங், வாகனங்கள் போன்றவை வெளியிடங்களில் விலைக்கு வாங்கப்பட்டிருந்தால் அதற்கு முறையான ரசீது கொடுத்து அந்த விலைக்கு இன்ஷூரன்ஸ் வசதி பெற வாய்ப்புண்டு. மியூஸியம், அலுவலகம் போன்ற இடங்களிலும், வீடுகளிலும் அலங்காரமாக காட்சிக்கு வைக்கப்படும் ஆன்டிக் பொருட்களையும் காப்பீடு செய்யலாம். இந்த வகைப் பொருட்கள் தீவிபத்து, திருட்டு, புயல், வெள்ளம் போன்றவற்றால் பாதிப்புகளைச் சந்திக்காமல் இருக்க இன்ஷூரன்ஸ் வசதி இருக்கிறது. இவ்வகை காப்பீடுகளில் குறிப்பிட்ட ஏதாவது ஒரு வகையிலான பாதிப்புக்கு மட்டும் காப்பீடு தேவை என்றால், பொதுவாக அந்தப் பொருளின் மதிப்பில் 0.06 சதவிகிதமும், அதிகபட்சமாக 1.5 சதவிகிதமும் ஆண்டு பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது. இது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தும் மாறுபடலாம்.
பழம்பெருமைகளைப் பறைசாற்றும் விஷயங்களை வீட்டிலோ அலுவலகத்திலோ வைத்து உயிரைப் போல பாதுகாக்கும் பழக்கமுள்ளவரா... அப்படியானால் உயிருக்கு இன்ஷூரன்ஸ் தேடுவது போல இதற்கும் பாதுகாப்பைத் தேடுங்கள்... பாலிசியைப் போடுங்கள்!
கீ-மென் பாலிசி!
க ம்பெனிகளின் தேவைகளை ஈடுசெய்ய சில ஸ்பெஷல் பாலிசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சில கம்பெனிகளில் பணியாற்றும் தலைமைப் பொறுப்பாளர்களின் முக்கியத்துவம் கருதி அவர்களுக்கு காப்பீடு தரும் பாலிசிகள் வந்துள்ளன. கம்பெனியின் வளர்ச்சியில், நிர்வாகத்தில் ஒருவரது பணி, அறிவு போன்றவை முக்கியமானதாக இருந்தால் நிறுவனம் ஒருவேளை அவரை இழக்க நேர்ந்தால் ஏற்படும் இழப்புகளுக்கு இந்தக் காப்பீடு பாதுகாப்பு தரும். இவ்வகை காப்பீடு ‘கீ-மென் இன்ஷூரன்ஸ்’ எனப்படுகிறது.
இந்தவகை பாலிசிகளை வாங்கும் நிறுவனங்கள், பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறுவதோடு, தாங்கள் கட்டும் பிரீமியத் தொகையை செலவுக் கணக்கில் காட்டி வரி செலுத்துவதிலிருந்தும் சலுகை பெறலாம். இவ்வகை பாலிசிகளை பல தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் வழங்குகின்றன. இவற்றுக்கான பிரீமியம், காப்பீடு கோரும் தொகையைப் பொறுத்து மாறுபடும்.
காசு கொட்டும் கலைப் பொருள்!
ஆ ன்டிக் பொருட்கள், பணம் கொழிக்கும் வியாபாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. கலைப் பொருட்கள் எனப்படும் சிற்பங்கள் பழங்காலத்தைச் சேர்ந்தது என்றால் ‘ஆன்டிக் பொருள்’ பிரிவிலும், அண்மைகாலத் தயாரிப்பு என்றால் ‘ஆர்ட் ப்ராடக்ட்’ எனப்படும் கலைத் தயாரிப்பு என்றும் விசேஷமாக தனிச்சந்தையே உருவாகியுள்ளது. பிரபலமான மன்னன், இந்திய சுதந்திர போராட்ட முன்னணி வீரர் பயன்படுத்திய பொருள் போன்ற பல புராதன பொருட்கள் ஆண்டுக்கு சராசரியாக 10% விலை உயர்வைச் சந்திக்கின்றனவாம். அதனால் வரும்காலத்தில் நல்லவிலைக்கு விற்று காசு பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே இந்தப் பொருட்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்து பாதுகாப்பது அவசியமானது.
-விகடன் அவருடைய சென்டிமென்டை ஈடு செய்ய முடியாவிட்டாலும் அந்தப் பழங்கால பொக்கிஷத்துக்கு இன்ஷூரன்ஸ் செய்திருந்தால் பணமாகவாவது ஈடு செய்திருக்க முடியும்! நிஜம்தான்... பழங்காலப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கும்போது, கூடவே அதற்கு இன்ஷூரன்ஸும் செய்து வைத்திருந்தால் இழப்பீடு பெறமுடியும். அதற்காக தனி பாலிசிகளை வைத்திருக்கின்றன சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» குரூப் பாலிசி To தனிநபர் பாலிசி...
» யாருக்கு எந்த பாலிசி..?
» அவுட் பேஷன்ட் பாலிசி...
» லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது?
» காலாவதியான பாலிசி... எப்படி புதுப்பிக்கலாம்..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum