Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
நம்பிக்கை தரும் நகர்ப்புறங்கள்....
Page 1 of 1
நம்பிக்கை தரும் நகர்ப்புறங்கள்....
பெரும்பாலானோருக்கு நம்பிக்கையான முதலீடு என்றால் ரியல் எஸ்டேட்தான். கையில் கொஞ்சம் பணம் இருந்தால், ஒரு இடத்தை வாங்கிப்போட்டால் என்ன என்றுதான் பலரும் யோசிக்கின்றனர். சில வருடங்களுக்குமுன், சொத்து வாங்குவது மற்றும் பத்திரப்பதிவு துறையில் கொண்டுவரப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகளுக்குப்பின் தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் சற்று டல்லாக இருந்தாலும், அடுத்தடுத்த வருடங்களில் வளரும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்கவே செய்கிறது. மத்தியில் புதிய ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்த வேகம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள்.
இதன் அடிப்படையில் நாணயம் விகடன் (18-5-2014) இதழில் 'ரியல் எஸ்டேட் ஹாட் ஸ்பாட்’ என்கிற தலைப்பில் முதலீட்டுக்கு ஏற்ற இடங்கள் என முக்கியமான சில நகரப் பகுதிகளை எடுத்துச் சொன்னோம். (இந்தக் கட்டுரையை ஆன்லைனில் படிக்க விரும்பும் வாசகர்கள் பின்வரும் லிங்கினை க்ளிக் செய்க: http://nanayam.vikatan.com/index.php?aid=7804) தற்போது, இன்னும் சில முக்கிய நகரங்களை ஒட்டியுள்ள பகுதியில் ரியல் எஸ்டேட் விலை நிலவரம் பற்றி இந்த இதழில் தருகிறோம்.
சென்னை புறநகர்!
பூந்தமல்லி, குன்றத்தூர், மீஞ்சூர் பகுதிகள் சென்னை நகர விரிவாக்கத்துக்குள் வந்துவிட்டன. குறிப்பாக, குன்றத்தூர், பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சி கிடுகிடுவென உள்ளது. குன்றத்தூர் பகுதிகளில் புதிய மனைகள் இல்லை என்றாலும் மறுவிற்பனை என்கிற அளவில் உள்ளன. பூந்தமல்லி, வேலப்பன்சாவடி பகுதிகளில் புதிய மனைகள், மறுவிற்பனை மனைகள் கிடைக்கின்றன. முதலீடு செய்வதாக இருந்தாலும், வீடு கட்ட என்றாலும் மனைகளின் விலை அதிகரித்து வருவதால், இப்போது வாங்கிவிடுவது நல்லது. நடுத்தர மக்கள் வாங்குவதுபோல, அடுக்கு மாடி வீடுகளும் வளர்ந்து வருகிறது.
சென்னையின் வடக்குப் பகுதி நிலவரம் எப்போதும் ஆவரேஜ்தான். நந்தியம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் வளருகின்றன. கிராமப்புறப் பகுதிகள் என்பதால் சராசரியான விலை நிலவரம்தான். முதலீடு அல்லது உடனடி வீடு கட்ட என்றாலும் நந்தியம்பாக்கம் ஒட்டிய பகுதிகளைத் தேர்வு செய்யலாம்.
விலை நிலவரம் (சதுர அடி ரூபாயில்)
மூன்றாம்கட்டளை : 1,000 - 1,500
கொல்லச்சேரி : 1,000 - 1,500
குன்றத்தூர் : 1,000 - 1,500
பூந்தமல்லி புறநகர் : 800 - 1,000
வெள்ளவேடு : 400 - 600
வேலப்பன்சாவடி : 400 - 800
திருமழிசை : 400 - 600
நந்தியம்பாக்கம் : 300 - 400
நெய்த வயல் : 200 - 300
வாயனூர் : 200 - 300
கவரப்பேட்டை : 200 - 300
பொன்னேரி : 150 - 200
விழுப்புரம்!
இங்கு வழுதிரெட்டி, தோகப்பாடி பகுதிகளில் வீட்டு தேவைக்கு இடம் அமைந்தாலும், பெரியார் நகர் தாண்டி திருச்சி வழியிலும், ரயில்வே கேட் தாண்டி சென்னை வழியிலும் முதலீட்டு நோக்கத்தில்தான் இடங்கள் வாங்கப்படுகின்றன. முத்தாம்பாளையம், அயனம்பாளையம் பகுதிகளில் முதலீட்டு நோக்கில் இடம் வாங்கலாம். குறிப்பிட்ட காரணங்கள் இல்லை என்றாலும், முக்கியச் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள ஊர் என்பதால் விழுப்புரம் எப்போதும் கவனம் பெறுகிறது.
விலை நிலவரம் (சதுர அடி ரூபாயில்)
பெரும்பாக்கம் : 200 - 300
தோகப்பாடி : 200 - 300
வழுதிரெட்டி : 200 - 300
பெரியார் நகர் : 400 - 500
முத்தாம்பாளையம் : 400 - 500
அயனம்பாளையம் : 600 - 700
திருவண்ணாமலை!
வெளியூர்க்காரர்கள் இங்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வதால், இங்கு தேவை இருந்துகொண்டே இருப்பதாகச் சொல்கின்றனர். செங்கம் சாலை, வேங்கிகால் பகுதிகள் எப்போதும் பீக் பகுதிகள்.
முதலீட்டு நோக்கம், உடனடி குடியிருப்புத் தேவைகள் இரண்டுக்கும் இந்தப் பகுதிகள் பொருத்தமானது. தவிர, செஞ்சி சாலை வழியில் முதலீட்டு நோக்கில் இடம் வாங்கலாம்.
விலை நிலவரம் (சதுர அடி ரூபாயில்)
செங்கம் சாலை : 500 - 600
வேங்கிகால் : 1,000 - 2,000
துர்க்கை நம்பியேந்தல் : 1,000 - 2,000
சோமாசிபாடி : 400 - 500
நாமக்கல்!
நாமக்கல்லை தேவையை ஒட்டி வளரும் நகரம் என்று குறிப்பிடலாம். ரியல் எஸ்டேட் துறை வளர நகரத்தின் இதர வசதிகளும் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், இங்கு அப்படியான போக்கு இல்லை என்கின்றனர் நகரவாசிகள்.
குறிப்பாக, லாரி தொழில் நலிவடைந்துள்ளது. புறவழிச்சாலை வந்தபிறகு முதலைப்பட்டி பகுதிகள் வளர்ந்துள்ளது. முதலீடு அல்லது உடனடி வீடு தேவை இரண்டுக்கும் எஸ்.கே.நகர் பகுதிகளைத் தேர்வு செய்யலாம்
விலை நிலவரம் (சதுர அடி ரூபாயில்)
முருகன் கோயில் : 500 - 1000
மோகனூர் சாலை : 600 - 800
துறையூர் சாலை : 600 - 800
எருமைப்பட்டி : 500 - 1000
எஸ்.கே.நகர் : 500 - 1000
வள்ளிபுரம் : 400 - 500
பதி சாலை : 300 - 400
தஞ்சாவூர்!
மாநகராட்சி அறிவிப்பு வந்தபோதே இங்கு விலையை உச்சத்துக்கு ஏற்றிவிட்டார்கள். அதனால் இப்போது இதற்குமேல் விலை ஏற்ற முடியாது என்கிற நிலைமை. குறிப்பாக, திருச்சி வழியில் சாலை மார்க்கமாக முதலீட்டு நோக்கில் வாங்கலாம். உடனடி தேவை என்கிறபோது திருவையாறு அல்லது கும்பகோணம் வழியைத் தேர்வு செய்யலாம். தஞ்சையை ஒட்டியுள்ள அம்மன்பேட்டை, கீழவஸ்தாசாவடி பகுதிகளைக் குடியிருப்பு நோக்கில் தேர்வு செய்யலாம். இது முதலீடாகவும் இருக்கும்.
விலை நிலவரம் (சதுர அடி ரூபாயில்)
மாதாகோட்டை சாலை : 300 - 600
மேலவஸ்தா சாவடி : 300 - 600
கீழவஸ்தா சாவடி : 300 - 400
வல்லம் : 300 - 600
நாஞ்சிக்கோட்டை சாலை : 300 - 500
நாஞ்சிக்கோட்டை பை-பாஸ் : 600 - 800
அம்மன் பேட்டை : 200 - 300
பள்ளியக்ரஹாரம் : 200 - 400
கிருஷ்ணகிரி!
இங்கு மனை விற்பனை தற்போது மந்தமாக இருப்பதால் எல்லா பக்கமும் வாங்கலாம் என்கின்றனர். முதலீட்டு நோக்கம் எனில், ஆர்ட்ஸ் காலேஜ், குப்பம் சாலை பகுதிகளில் இடம் வாங்கலாம். உடனடி வீடு கட்டும் நோக்கம் இருந்தால் தின்னக்காலனி பக்கம் பார்க்கலாம். ராயக்கோட்டை சாலை பகுதிகளிலும் விலை நன்றாக உள்ளது. அதேசமயம், கலெக்டர் ஆபீஸ் பக்கம் வளரும் என்கிற எதிர்பார்ப்பில் விலை ஏற்றம் இருந்தது. ஆனால், இப்போதுவரை எந்த மாற்றமும் இல்லை. பொதுவாகவே அந்தப் பகுதிகளில் இடம் வாங்குவதில் விருப்பம் இல்லாமல் இருப்பதால் அந்த இடங்களைத் தவிர்க்கலாம்.
விலை நிலவரம் (சதுர அடி ரூபாயில்)
தின்னக்காலனி : 400 - 500
சுபேதர் மேடு : 200 - 400
தானபள்ளி : 300 - 500
சத்யசாய் நகர் : 400 - 700
கலெக்டர் ஆபீஸ் : 200 - 400
திருவாரூர்!
இங்கு மத்திய பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே விலையை கிடுகிடுவென ஏற்றிவிட்டனர். இப்போது விலை சராசரியாக இருக்கிறது. தற்போது கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியில் நல்ல வளர்ச்சி உள்ளது. தவிர, மன்னார்குடி வழியில் விளமல் பகுதிகள் எப்போதும் ஹாட் ஸ்பாட்-ஆக இருந்து வருகிறது. கங்களாஞ்சேரி, வண்டாம்பாளையம், காட்டூர் பகுதிகளில் உடனடி வீடு கட்ட அல்லது முதலீட்டு நோக்கில் வாங்கலாம். புலிவலம் மற்றும் நாகை வழியில் ஆவரேஜ் விலைதான். மீத்தேன் திட்டத்தின் காரணமாக நிலங்கள் கைமாறுவதில் தேக்கம் உள்ளது. நகரத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் மாற்றங்கள் இல்லை.
விலை நிலவரம் (சதுர அடி ரூபாயில்)
விளமல் : 400 - 500
தண்டலம் : 400 - 600
புலிவலம் : 200 - 400
வண்டாம்பாளையம் : 300 - 400
கங்களாஞ்சேரி : 200 - 300
நீலகுடி : 200 - 300
காட்டூர் : 200 - 300
நாகை சாலை : 200 - 400
புதுக்கோட்டை!
காரைக்குடி வழியில் முதலீட்டு நோக்கில் வாங்கலாம். குறிப்பாக, இந்த வழியில்தான் பள்ளிகள், கல்லூரிகள் காரணமாக எதிர்காலத்தில் முதலீடும் பிக்-அப் ஆக வாய்ப்புள்ளது.
விலை நிலவரம் (சதுர அடி ரூபாயில்)
அன்னவாசல் : 500 - 1,000
கட்டியாவயல் : 300 - 500
எல்லம்பட்டி விலக்கு : 200 - 300
கருவப்புலம் கேட் : 300 - 500
திருகோகர்ணம் : 500 - 1,000
மேட்டுபட்டி : 400 - 500
கேப்பறை : 300 - 400
மாலையீடு : 400 - 500
திண்டுக்கல்!
முதலீட்டு நோக்கில் என்றால் குள்ளணம்பட்டி, தாடிக்கொம்பு, செட்டிநாயக்கன் பட்டி பகுதிகளில் இடம் வாங்கிப்போடலாம். நத்தம் வழியில் சீலப்பாடி பிரிவு வரை யோசிக்கலாம். ஆனால், புறநகரப் பகுதிகளில் சில இடங்களில் நிலத்தடி நீர் பிரச்னை உள்ளது.
விலை நிலவரம் (சதுர அடி ரூபாயில்)
குள்ளணம்பட்டி : 500 - 600
செட்டிநாயக்கன்பட்டி : 500 - 600
பொன்னகரம் : 200 - 300
ரெட்டியபட்டி : 100 - 300
முருகபவனம் : 500 - 700
பாலராஜாக்கா பட்டி : 400 - 600
தாடிக்கொம்பு : 400 - 600
சீலப்பாடி : 200 - 400
ஜிடிஎன் கல்லூரி : 200 - 400
பொள்ளாச்சி!
முன்பு இடம் வாங்கிய பலரும் இப்போது விற்க தயார் என்பதால், பேரம் பேசி வாங்கும் போக்கையே இங்கு பார்க்க முடிகிறது. புளியம்பட்டி பகுதிகளில் முதலீட்டு நோக்கில் வாங்கலாம். இந்தப் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளில் வளர்ச்சி உள்ளதால் இதன் அடிப்படையில் முதலீடும் வளரும். தவிர, இப்போதே நல்ல விலையில்தான் விற்பனை ஆகிறது. தூரம் கொஞ்சம் அதிகம் என்றாலும் விலை குறைவு என்பதால், சமத்தூர் பகுதியை வீடு கட்ட தேர்ந்தெடுக்கலாம்.
விலை நிலவரம் (ரூபாய் சென்ட் கணக்கில்)
புளியம்பட்டி : 2 - 2.5 லட்சம்
சின்னாம்பாளையம் : 3 - 3.5 லட்சம்
ஆச்சிபட்டி : 3 - 3.5 லட்சம்
சமத்தூர் : 1 - 2 லட்சம்
முக்கிய குறிப்பு:
இங்கே தரப்பட்டிருக்கும் மனை விலை என்பது தோராயமானதே. மனை அமைந்திருக்கும் இடம், அடிப்படை வசதிகளைப் பொறுத்து விலை மாறுபடும். ஆரம்ப விலை உள்பகுதியையும், முடிவு விலை பிரதான பகுதியையும் குறிக்கும்.
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» நம்பிக்கை தரும் மிட் கேப் ஃபண்டுகள்
» லாபம் தரும் பரஸ்பர நிதி முதலீடுகள் - சொக்கலிங்கம் பழனியப்பன்
» ஜன் தன்: காப்பீடு + கடன் தரும் திட்டம்!
» மாதம்தோறும் வருமானம் தரும் எம்.ஐ.பி திட்டங்கள்!
» அள்ளித் தரும் ஆப்ஸ் வருமானம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum