Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
நம்பிக்கை தரும் மிட் கேப் ஃபண்டுகள்
Page 1 of 1
நம்பிக்கை தரும் மிட் கேப் ஃபண்டுகள்
இந்திய பங்குச் சந்தையில் பெரிய நிறுவனங்கள் (15,000 கோடி ரூபாய்க்கு மேல் நிறுவன மதிப்பு கொண்டிருப்பவை) என்று சொல்லக்கூடியவை சுமார் 100 முதல் 120 நிறுவனங்களே. மற்றவை எல்லாம் நடுத்தரமான நிறுவனங்கள் (ரூ.3,000 முதல் ரூ.15,000 கோடி வரை நிறுவன மதிப்பு கொண்டிருப்பவை) அல்லது சிறிய அளவு நிறுவனங்கள் (ரூ. 3,000 கோடிக்குக் கீழ் உள்ளவை).
மொத்தமாக, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் சுமார் 2,000-க்கும் மேலே இருக்கின்றன. இத்தகைய நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் பிரத்யேகமாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மிட் கேப் அல்லது மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள் என்று அழைக்கிறோம்.
இந்த மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டங்கள் ஒவ்வொரு முதலீட்டாளரின் நீண்ட கால நிதித் தொகுப்பிலும் கண்டிப்பாக இருக்க வேண்டியவை. ஏனெனில், இத்தகைய நிறுவனங்களுக்கு பெரிய நிறுவனங்களைவிட வளர்ச்சிக் கான சாத்தியங்கள் அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில் மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் பிரிவு வருடத்துக்கு 17% என்ற அளவில் லாபம் தந்திருக்கிறது. ஆனால், பெரிய நிறுவன நிதித் திட்டங்கள் (லார்ஜ் கேப் ஃபண்டுகள்) 11 சதவிகிதம்தான் லாபம் தந்திருக்கின்றன.
இருப்பினும், மிட் கேப் ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் என்பதை மறந்துவிடக் கூடாது. அவற்றின் ஏற்ற இறக்கங்கள் பெரிதாக இருக்கும். அவற்றைத் தாங்கும் மனப்பக்குவம் முதலீட்டாளர் களுக்கு வேண்டும். இத்தகைய ரிஸ்குகளால், இந்தத் திட்டங் களில் ஓரளவுக்கு மட்டுமே (போர்ட்ஃபோலியோவில் சுமார் 30-40%) முதலீடு செய்ய வேண்டும்.
நீண்ட கால நிதித் திட்டத்துக்கு மிட் கேப் பங்குகளை ஃபண்ட் மேனேஜர்கள் தேர்வு செய்யும் போது இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள். இதில் முதலாவது வழி, மேலிருந்து கீழ் நோக்கி வருவது. அதாவது, நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பரவலாகக் கணித்து, எந்தத் துறைகள் சிறப்பாகச் செயல்படும் என்று ஆராய்ந்து, அந்தத் துறை களில் இருக்கும் சில நிறுவனங் களை முதலீட்டுக்கு ஃபண்ட் மேனேஜர்கள் தேர்வு செய்வார் கள். இந்த வழி பெரும்பாலும் பெரும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க உதவும். பொது வாக, லார்ஜ் கேப் ஃபண்டுகள் இந்த முறையில் செயல்படும்.
இரண்டாவது வழி, கீழிலிருந்து மேல் நோக்கிச் செல்வது. இந்த வழிமுறையில் பெரும்பாலும் பொருளாதாரம், துறை பற்றி அதிகம் கவலைப்படாமல், பங்குச் சந்தையில் எந்த நிறுவனம் நன்றாகச் செயல்படுகிறது என்பதை மட்டுமே ஆராய்ந்து, அந்தப் பங்குகளை தேர்வு செய்வது. இந்த முறையைத்தான் மிட் கேப் ஃபண்ட் மேனேஜர்கள் அதிகம் பின்பற்றுகிறார்கள். இந்த முறையில் ஃபண்ட் மேனேஜருக்கு இருக்கும் சுதந்திரமும் அதிகம், பொறுப்பும் அதிகம்.
ஒவ்வொரு ஃபண்ட் மேனேஜரும் பிரத்யேகமாக ஆராய்ச்சி மற்றும் தேர்வு முறையைக் கையாண்டு நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்ப தால் ஒவ்வொரு ஃபண்டும் வெவ்வேறு விதமாக நிர்வகிக்கப் படுகிறது. லார்ஜ் கேப் ஃபண்டு களைவிட அதிக மதிநுட்பமும் தேர்ச்சியும் மிட் கேப் ஃபண்டினை நிர்வாகம் செய்யத் தேவைப்படும். இதனாலேயே இரண்டு அல்லது மூன்று மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிறப்பாகச் செயல்படும் சில மிட் கேப் ஃபண்டுகளைப் பற்றிப் பார்ப்போம்:
ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட்!
இந்த வகை ஃபண்ட் திட்டங்களில் மிக நீண்ட காலமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டம் இது. இந்தத் திட்டத்தின் நிர்வாகிகள் திறமையாகச் செயல்பட்டு, சந்தை சரிவு நிலை களிலும்கூட மற்ற ஃபண்டுகளை விட குறைவாகச் சரியும்படி நிர்வகிக்கிறார்கள். மிகச் சிறிய பங்குகளைத் தவிர்ப்பதும் இந்தத் திட்டத்தின் ரிஸ்க் குறைவாக இருப்பதற்குக் காரணம்.
மிரே அஸெட் எமெர்ஜிங் ப்ளூசிப் ஃபண்ட்!
இந்தத் திட்டத்தின் பெயரே இதன் குறிக்கோளுக்குச் சான்று எனலாம். ‘நாளைய பெரும் நிறுவனங்கள்’ என்றுதான் இந்தத் திட்டத்தை விவரிக்கிறார்கள்.
இவர்களது முதலீட்டு அணுகுமுறையானது, ஒவ்வொரு துறையிலும் நல்ல வளர்ச்சி கண்ட, ஆனால் பெரிய நிறுவனத் தின் அளவை அடையாத பங்கு களை அடையாளம் கண்டு முதலீடு செய்வதாக இருக்கிறது. இந்த அணுகுமுறை நன்கு செயல்பட்டு முதலீட்டாளர் களுக்கு லாபம் பெற்றுத் தந்திருக்கிறது.
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட்!
இது ஒரு வேல்யூ ஃபண்ட். அதாவது, ஏதேனும் ஒரு காரணத் தினால் தற்காலிகமாக விலை குறைந்திருக்கும் பங்குகளில் முதலீடு செய்து, அந்த விலை மேலே போகும்போது லாபம் பெறும் முறையைக் கையாளும் திட்டம் இது.
தன்னை ஒரு மிட் கேப் ஃபண்ட் என்று கூறிக்கொள்ளா விடினும், அத்தகைய வழியி லேயே பல ஆண்டுகளாகச் செயல்படும் திட்டம் இது. மிகவும் விலை உயர்ந்திருக்கும் சந்தை நிலவரங்களில் கொஞ்சம் மந்தகதியில் செல்லும்.
பிஎன்பி பரிபாஸ் மிட் கேப் ஃபண்ட்!
‘மாத்தியோசி’ என்ற சித்தாந்தத்தின்படி செயல்படும் திட்டம் இது. அதாவது, பலர் முதலீடு செய்யும் துறை சார்ந்த பங்குகளிலிருந்து விலகி, அதிகம் கவனம் பெறாத நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டம் இது. கொந்தளிப்பாய் இருக்கும் சந்தைச் சூழல்களில் கொள்ளை லாபம் பெற்றுத் தரும் திட்டம் இது எனலாம்.
ரெலிகேர் இன்வெஸ்கோ மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்!
சிறிய நிறுவனங்களின் பங்குகளைச் சரியாகத் தேர்ந் தெடுத்தால் மட்டும் போதாது. அவற்றில் எப்போது நுழைய வேண்டும், எப்போது வெளியேற வேண்டும் என்பவற்றையும் சரியாகக் கணிக்க வேண்டும். அப்படிச் செய்வதில் சிறந்ததாக இருப்பது ரெலிகேரின் இந்தத் திட்டம். பலவகைச் சந்தை நிலவரங்களிலும் நல்ல நிர்வாகத் தில் நல்ல லாபம் பெற்றுத் தந்திருக்கும் திட்டம் இது.
இந்த ஐந்து திட்டங்களும் சராசரிக்கு மேலாக முதலீட் டாளர்களுக்கு நல்ல லாபம் பெற்றுத் தந்திருக்கின்றன. (பார்க்க மேலுள்ள அட்டவணை) இவற்றில் சிலவற்றை உங்கள் நிதித் தொகுப்பில் சேர்த்துக் கொள்வதன் மூலம், வளரும் நிறுவனங்களோடு சேர்ந்து உங்கள் நிதி வளமும் வளரட்டும்!
--ந.விகடன் மொத்தமாக, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் சுமார் 2,000-க்கும் மேலே இருக்கின்றன. இத்தகைய நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் பிரத்யேகமாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மிட் கேப் அல்லது மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள் என்று அழைக்கிறோம்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
» அதிக லாபம் தரும் ஆல்பா ஃபண்டுகள்!
» லாபம் தரும் பரஸ்பர நிதி முதலீடுகள் - சொக்கலிங்கம் பழனியப்பன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum