வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஜன் தன்: காப்பீடு + கடன் தரும் திட்டம்!

Go down

ஜன் தன்: காப்பீடு + கடன் தரும் திட்டம்! Empty ஜன் தன்: காப்பீடு + கடன் தரும் திட்டம்!

Post by தருண் Thu Sep 25, 2014 9:57 am

அரசு   மானியம்  பெறுகிறவர்களில் பலருக்கு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இல்லை. இதனால்  அந்த மானியம் மக்களுக்குப் போய்ச் சேராமலே இருக்கிறது. எனவே, 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துத் தரும் ஜன் தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் திட்டத்தால் என்ன  பயன் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதன்மை பொது மேலாளர் பி.எஸ்.பிரகாஷ் ராவிடம் கேட்டோம்.

“பிரதமர் துவக்கி வைத்த அனைவருக் கும் நிதிச் சேவை திட்டத்தின் கீழ் இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத வர்கள் வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முடியும். இதில் ரூபே டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். இதனுடன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடும் இலவசமாகக் கிடைக்கும். மேலும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வழங்கப்படுகிறது. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தால் இந்தத் தொகை கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் கிடையாது. அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதற்குமேல் இருப்பு வைத்தால், அந்த நபரின் வங்கிக் கணக்கு வழக்கமான வங்கிக் கணக்காக மாறிவிடும்.

ஜன் தன்: காப்பீடு + கடன் தரும் திட்டம்! Nav50a

அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர் களுக்கு கேஒய்சி (உங்கள் வாடிக்கை யாளர்களை புரிந்து கொள்ளுங்கள்) விதிமுறைகள் எளிமைப்படுத்தப் பட்டுள்ளன. அதாவது, ஆதார் அட்டை மட்டும் இருந்தாலே கணக்கு துவங்க முடியும். அதேபோல வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கிராம நிர்வாக அதிகாரி யிடம் வாங்கிய சான்று என எதாவது ஒரு சான்று தந்து  வங்கிக் கணக்கு துவங்க முடியும்.

இந்தக் கணக்கில் ஃபிளெக்ஸி ஆர்டி துவங்கலாம். வைப்பு நிதி, பண பரிமாற்றம் ஆகியவற்றை செய்துகொள்ள முடியும். ஆனால், ஒரு நாளைக்கு அதிக பட்சம் ரூ.10 ஆயிரத்துக்கு மட்டும்தான் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வங்கிக் கணக்கில் அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் ரூ.5 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட்-ஆக (ஓ.டி) கடன் பெற முடியும். இந்தப் பணத்துக்கு குறைந்த சதவிகிதத்தில் வட்டி வசூலிக்கப்படும்” என்றார்.

இந்த ஓ.டி கடன் வாங்கியவர்கள் சரியாக பணத்தைத் திரும்பச் செலுத்த வில்லை எனில், என்ன ஆகும் என்று வங்கி வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘இந்தத் திட்டத்தின் கீழ் பெரும்பாலும் கிராமப்புற மக்கள்தான் வங்கிக் கணக்கு துவங்குகிறார்கள். இவர்கள் வாங்கிய பணத்தை சரியாக கட்டிவிடுவார்கள். தொழிலில் நஷ்டம் அல்லது வேறு ஏதாவது காரணத்தால் பணத்தைச் செலுத்த முடியவில்லை எனில், கடன் உத்தரவாத நிதித் திட்டத்தின் கீழ் (Credit Guarantee Fund) வங்கிகள் பெற்றுக் கொள்ளும்’’ என்றார்கள்.

ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க முடியாது. ஆனால், வேலை காரணமாக இடம் மாறும்போது, அங்குள்ள சேமிப்புக் கணக்கு இருந்தால், அதை இந்த ஊருக்கு மாற்றிக்கொள்ள லாம். அது முடியவில்லையெனில், தற்போது வசிக்கும் முகவரியை அடிப்படையாக வைத்து, இந்தக் கணக்கைத் துவங்கலாம். ஆனால், இப்போது இருக்கும் ஊரில் சேமிப்புக் கணக்கு இருக்கக்கூடாது என்றார்கள் வங்கி அதிகாரிகள். இந்தத் திட்டத்தினால் மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்!
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்டெப்-அப் வீட்டுக் கடன்!! முற்றிலும் மாறுப்பட்ட கடன் திட்டம்..
» வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கூடுதல் கடன் வசதி: சென்ட்ரல் வங்கியில் புதிய திட்டங்கள்
» அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!
» பிர்லா சன் லைப் இன்சூரன்ஸின் புதிய ஆயுள் காப்பீடு திட்டம்!!! சூப்பர் ஆஃப்ர்
» ஆயிரங்களில் லட்சங்களை காக்கலாம்! வீட்டுக் கடன் காப்பீடு...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum