Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
இ-இன்ஷூரன்ஸ்... இனி எல்லாம் சுகமே!
Page 1 of 1
இ-இன்ஷூரன்ஸ்... இனி எல்லாம் சுகமே!
இந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் அனைத்து இன்ஷூரன்ஸ் பாலிசித் திட்டங்களும் ஆன்லைன் வடிவத்தில் வழங்கப்படவிருக்கின்றன. புதிய பாலிசிகள் மட்டுமின்றி, ஏற்கெனவே எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் இனி ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
சில ஆண்டுகளுக்குமுன், இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியமான ஐஆர்டிஏஐ (IRDAI) 13 இலக்க டிஜிட்டல் இ-இன்ஷூரன்ஸ் கணக்கைக் கொண்டுவந்தது. அப்போது அது கட்டாயம் ஆக்கப்படவில்லை. இப்போது அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இ-இன்ஷூரன்ஸ் கணக்கு!
இதன்படி இப்போது, ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் அனைத்துவகையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் ஆன்லைன் வடிவத்தில் வழங்கவேண்டும். ஆயுள், ஆரோக்கியம், மோட்டார், ஓய்வூதிய பாலிசி மற்றும் அனைத்து வகையான பொது இன்ஷூரன்ஸ் பாலிசிகள் உள்பட எந்தவொரு பாலிசியை எடுப்பதாக இருந்தாலும் இ-இன்ஷூரன்ஸ் கணக்கு அவசியம் இருக்கவேண்டும். புதிதாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே எடுத்த இந்த பாலிசியை புதுப்பிக்கும்போதுகூட இ-இன்ஷூரன்ஸ் கணக்கு இருப்பது அவசியம்.
எதற்கெல்லாம் இ-இன்ஷூரன்ஸ் கணக்கு?
டேர்ம் பிளான் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்ற ரூ.10,000-க்கும் அதிகமான ஆண்டு பிரீமியம் அல்லது ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை கொண்ட பாலிசிகளுக்கு இந்த இ-இன்ஷூரன்ஸ் கணக்கு இனி கட்டாயம்.
எப்படித் தொடங்குவது?
ஸ்டெப் 1: முதலில் இ-இன்ஷூரன்ஸ் நிர்வகிக்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்!
சிஏஎம்எஸ் ரெபாஸிட்டரி சர்வீசஸ், எஸ்ஹெச்சிஐஎல் புராஜெக்ட் லிமிடெட், சென்ட்ரல் இன்ஷூரன்ஸ் ரெபாஸிட்டரி, கார்வி இன்ஷூரன்ஸ் ரெபாஸிட்டரி மற்றும் என்எஸ்டிஎல் டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் என ஐந்து பதிவு செய்யப் பட்ட இன்ஷூரன்ஸ் ரெபாஸிட்டரி நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏஐ, உரிமம் வழங்கியுள்ளது. இதில் நீங்கள் எந்த நிறுவனத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொண்டு உங்களுடைய இ-இன்ஷூரன்ஸ் கணக்கைத் துவக்கலாம். சேவை நிலையைத் தவிர, இந்த நிறுவனங்களுக்கிடையே எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. உங்கள் இன்ஷூரன்ஸ் ரெபாஸிட்டரி வழங்குநர் சேவை திருப்தி இல்லை என்றால், நீங்கள் பின்னர் மற்றொரு ரெபாஸிட்டரி நிறுவனத்தில் உங்கள் இ-இன்ஷூரன்ஸ் கணக்கை மாற்றிக் கொள்ளலாம்.
ஸ்டெப் 2 : படிவத்தைப் பூர்த்தி செய்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தில் ஏதாவது ஒரு ரெபாஸிட்டரி நிறுவனத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் உங்களுடைய இ-இன்ஷூரன்ஸ் படிவத்தை நிரப்பி, உங்கள் கேஒய்சி சார்ந்த ஆவணங்களை இணைத்தபிறகு நீங்கள் வசிக்கும் ஊரில் உள்ள அலுவலகத்தில் சமர்ப்பித்தால் போதும். இதில் சிஏஎம்எஸ் ரெபாஸிட்டரி நிறுவனத்துக்கு மட்டும் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதன்பின் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்!
இ-இன்ஷூரன்ஸ் கணக்குப் படிவம் (கையினால் பூர்த்தி செய்யப்பட்டது அல்லது ஆன்லைனில் நிரப்பப்பட்டது), பிறப்பு சான்று ஆவணம் (பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை), அடையாளச் சான்று நகல் (பான் கார்டு அல்லது ஆதார் அட்டை), முகவரிச் சான்று நகல் (ஆதார், பாஸ்போர்ட், மின்சாரம் அல்லது டெலிபோன் பில்), ரத்து செய்யப்பட்ட காசோலை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்தால் ஒரு சில நாட்களில் இ-இன்ஷூரன்ஸ் கணக்குத் தொடங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி!
இந்த இ-இன்ஷூரன்ஸ் கணக்கில் புதியதாக ‘அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி’ என்ற ஒரு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் ஒருவரை அங்கீகரிக்கப் பட்ட பிரதிநிதியாக ஆவணத்தில் குறிப்பிட்டுக் கொள்ளலாம். இவர் நாமினியாக கருதப்பட மாட்டார். ஒருவேளை இன்ஷூரன்ஸ் எடுத்தவர் இறந்துபோனால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி கணக்கு விவரங்களை அணுகி இறந்தவரின் குடும்பத்துக்கு உதவ முடியும்.
இ-இன்ஷூரன்ஸ் நன்மைகள்!
* முதலீட்டாளர்களுக்கு இந்தக் கணக்கு 100% இலவசமாக வழங்கப்படுகிறது. பராமரிப்புக் கட்டணம் என எந்தவிதக் கட்டணமும் இல்லை. பான் கார்டு வைத்திருக்கும் நபர் ஒருவருக்கு ஒரே ஒரு கணக்கு மட்டுமே வழங்கப்படும்.
* இ-இன்ஷூரன்ஸ் கணக்கு மூலம் முதலீட்டாளர்கள் ஆயுள், ஆரோக்கியம், மோட்டார் அல்லது டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி என தங்களுடைய இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஒரே இடத்தில் பார்க்கலாம்; பதிவிறக்கம் செய்வதோடு நிர்வகித்துக் கொள்ளலாம்.
* இ-இன்ஷூரன்ஸ் கணக்கில் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே கேஒய்சி சார்ந்த ஆவணங்களை வழங்கி இருப்பார்கள். இந்த நிலையில், புதிதாக பாலிசி எடுக்கும்போது கேஒய்சி சார்ந்த ஆவணங்கள் எதுவும் வழங்கவேண்டியதில்லை. மாறாக, உங்களுடைய இ-இன்ஷூரன்ஸ் கணக்கு எண்ணைத் தெரிவித்தாலே போதுமானது.
* உங்கள் பாலிசி முதிர்ச்சி, பணம் செலுத்த வேண்டிய தருணம் உட்பட வேறு எந்த முக்கியமான விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு நினைவூட்டப்படும்.
* ஒரே இடத்தில் உங்கள் கேஒய்சி சார்ந்த விவரங்களைப் புதுப்பிக்கலாம். உங்கள் மொபைல் எண், முகவரி அல்லது பிற விவரங்களை மாற்றவேண்டும் எனில், நீங்கள் உங்களுடைய இ-இன்ஷூரன்ஸ் கணக்கில் மாற்றினாலே போதுமானது. மாறாக, ஒவ்வொரு பாலிசியிலும் உங்கள் விவரங்களை மாற்ற வேண்டியது அவசியமில்லை.
பழைய பாலிசி..!
ஏற்கெனவே பாலிசி எடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் இ-இன்ஷூரன்ஸ் கணக்கைத் தொடங்கியபின், உங்கள் பழைய பாலிசியை ஆன்லைன் வடிவத்தில் மாற்ற விண்ணப்பிக்க முடியும். உங்கள் பாலிசி எண்ணை குறிப்பிட்டாலே போதும், எளிதாக ஆன்லைன் வடிவத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» A - Z வரை... என்ஆர்ஐ டேர்ம் இன்ஷூரன்ஸ்!
» இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் அவசியமா?
» இளமையில் இன்ஷூரன்ஸ்!
» இ-இன்ஷூரன்ஸ்... ஏன்... என்ன... எப்படி..?
» கிரிட்டிக்கல் இல்னஸ் இன்ஷூரன்ஸ்...
» இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் அவசியமா?
» இளமையில் இன்ஷூரன்ஸ்!
» இ-இன்ஷூரன்ஸ்... ஏன்... என்ன... எப்படி..?
» கிரிட்டிக்கல் இல்னஸ் இன்ஷூரன்ஸ்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum