Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
இ-இன்ஷூரன்ஸ்... ஏன்... என்ன... எப்படி..?
Page 1 of 1
இ-இன்ஷூரன்ஸ்... ஏன்... என்ன... எப்படி..?
இந்திய இன்ஷூரன்ஸ் சந்தையை நெறிமுறைப் படுத்தும் அமைப்பான இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (IRDAI) சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி வரும் அக்டோபர் 01, 2016 முதல் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பிரீமியம் செலுத்தும் அல்லது கவரேஜ் தொகை எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அனைத்தும் இ-இன்ஷூரன்ஸ் பாலிசிகளாக மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இந்த வழிகாட்டுதல்கள் தனிநபர் பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும்; குரூப் பாலிசிகள் இதுவரை இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
(எந்த வகையான இன்ஷு ரன்ஸ் பாலிசியை எவ்வளவு தொகைக்கு மேல் எடுத்தால் இ-இன்ஷூரன்ஸ் பாலிசியாக எடுக்க வேண்டும் என்பதை அட்டவணையைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.)
நாம் எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பாலிசி டாக்குமென்ட் இதுவரை சான்றிதழ்களாகவே வழங்கப்பட்டு வந்தது. இதனால் பாலிசிதாரர்களும் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களும் பல பிரச்னை களை எதிர்கொள்ள வேண்டி இருந்தன. இனி தனிநபர் இன்ஷுரன்ஸ் பாலிசிகளுக்கான பாலிசி டாக்குமென்ட்களை சான்றிதழ்களாகத் தராமல், இணையத்தில் பதிந்து, ஆன்லைனில் அளிப்பதன் மூலம் அதன் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியும்.
இது குறித்து இ-இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகிக்கும் நான்கு இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரிகளில் ஒன்றான கேம்ஸின் (CAMS) முதன்மை செயல் அதிகாரி எஸ்.வி.ரமணனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
“உலகிலேயே முதல் முறையாக இந்தியாதான், இ-இன்ஷூரன்ஸ் கணக்குச் சேவையை வழங்க இருக்கிறது. இப்படி ஒரு இ-இன்ஷூரன்ஸ் திட்டம் உலகில் வேறு எங்கும் இல்லை. இந்தியாவில் லைஃப், நான் லைஃப், ஹெல்த் என்று சுமாராக 37 கோடிக்கும் அதிகமான பாலிசிகள் இருக்கின்றன. அதில் வெறும் 5 லட்சம் பாலிசிகள்தான் இ-இன்ஷூரன்ஸாக மாற்றப்பட்டிருக்கின்றன.
தொடக்கத்தில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மட்டுமே இ-இன்ஷூரன்ஸாக எடுக்க முடியும் என்கிற நிலை மாறி, தற்போது எல்லா விதமான இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் இ-இன்ஷூரன்ஸ் முறையில் எடுக்க முடிகிற அளவுக்கு நிலைமை முன்னேறி இருக்கிறது. இந்தியாவில் என்.எஸ்.டி.எல், சி.டி.எஸ்.எல், கேம்ஸ் மற்றும் கார்வி ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்திய அரசினால் இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரி களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றன.
இ-இன்ஷூரன்ஸ்!
இந்த இ-இன்ஷூரன்ஸின் சிறப்பே எந்தவொரு சூழ்நிலை யிலும் பாலிசிதாரர் அல்லது நாமினி தன் இ-இன்ஷூரன்ஸ் எண்ணை வைத்துக் கொண்டு இழப்பீட்டைக் கோர முடியும். அதாவது, க்ளெய்ம் செய்யும் போது பாலிசி டாக்குமென்ட் சான்றிதழ் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உதாரணமாக, டிசம்பர் 2015-ல் சென்னையில் வந்த பெரு வெள்ளத்தினால் பலரும் சொத்துப் பத்திரங்கள், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள், இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் சான்றிதழ்கள் என பலவற்றைத் தொலைத்துவிட்டுத் தவித்தனர். தமிழகத்தில் மட்டுமல்ல, உத்தரகாண்டிலும், மும்பையிலும் மழை வெள்ளம், குஜராத்தில் பூகம்பம் என இந்தியா முழுக்க ஆங்காங்கே இயற்கை பேரிடர்கள் நடந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால்தான் மத்திய அரசு இந்த சம்பவங்களுக்குப்பிறகு இ-இன்ஷூரன்ஸை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர முனைப்போடு வேலை பார்த்து வருகிறது. இனி இ-இன்ஷுரன்ஸ் வந்துவிட்டால், எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனமும் பாலிசி சான்றிதழ்களைக் கேட்காது. பாலிசி டாக்குமென்ட் எண் இருந்தால் போதும் என்கிற நிலை இந்தியா முழுவதும் உருவாகும்.
அதிகாரப்பூர்வமான பிரதிநிதி!
நாம் எடுத்திருக்கும் பாலிசியைப் பார்க்க ஒரு நபரை நாம் நியமிக்கலாம். இ-இன்ஷூ ரன்ஸ் சேவை வழங்கும் இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரிகள் இவரை அதிகாரப்பூர்வமான பிரதிநிதி (Authorised Representative) என்று அழைக்கும்.
பொதுவாக, ஒருவர் தன் சொத்தை தனது வாரிசுகளுக்குப் பிரித்துத் தர நிர்வாகிகளை (Administrator) நியமிப்பது போல, இவர் செயல்படுவார். அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக ஒருவரையே நியமிக்க முடியும் என்றாலும் இவரை ஒரு பாலிசிதாரர் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். இவர் தவிர, ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் பாலிசிக்கும் ஒரு நாமினியைக் கட்டாயமாக நியமிக்க வேண்டும். இந்த நாமினியைக்கூட எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வமான பிரதிநிதியை மாற்ற பாலிசிதாரர் தன் இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரி களிடமே முறையிட்டு ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். நாமினிகளை மாற்ற வேண்டுமானால் இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரிகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி மாற்றிக் கொள்ள வேண்டும்.
பிரீமியம் குறையும்!
இன்றைக்கு ஒரு நபரின் பாலிசி தொடர்பான விவரங்களைப் பாதுகாக்க ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ.650 - 750 வரை செலவாகிறது. இனி இந்த விவரங்களை எல்லாம் கூடுமான வரை டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரிகள் செய்வதால், இதன் செலவு ஆண்டுக்கு ரூ.45-ல் முடியும். இதனால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தேவையில்லாத ஆட்கள் செலவு, ரியல் எஸ்டேட் செலவு, மின்சார மற்றும் மின் சாதனங்களுக்கான செலவு களைக் குறைத்துக் கொள்ள முடியும். ஒட்டுமொத்தத்தில், செலவு குறைவதால் பிரீமியமும் சற்று குறையும்.
செலவு எவ்வளவு?
தற்போது பழைய பாலிசி களுக்கு இ-இன்ஷூரன்ஸ் எண் கொடுக்க 40 ரூபாயும், புதிய பாலிசிகளுக்கு இ-இன்ஷூரன்ஸ் கொடுக்க 60 ரூபாயும் வசூலிக் கிறோம். இந்தக் கட்டணங்கள் எல்லாம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது. அதே போல், ஒரு பாலிசிதாரரின் விவரங் களைப் பாதுகாக்க ஆண்டுக்கு 45 ரூபாய் வசூலிக்கிறோம்.
பாலிசி அடமானக் கடன்!
வங்கியில் எண்டோவ்மென்ட் பாலிசிகளை அடமானம் வைப்பதற்குகூட இ.ஐ.ஏ கணக்கு மூலம் பாலிசி டாக்குமென்ட் எண்களை சொன்னால் போதும். அவர்கள் அந்த பாலிசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து வங்கியின் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்வார்கள். அதே நேரத்தில், ஒரு பாலிசி வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருக் கிறது என்றால் அந்த பாலிசி சான்றிதழில் கடன் விவரங்கள் காட்டப்படும். வங்கியிடமிருந்து பாலிசியை அடமானம் வைத்து வாங்கிய கடன்களை எல்லாம் முழுக்க திரும்பக் கட்டி முடித்த பிறகுதான் அந்த பாலிசியை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தந்து க்ளெய்ம் வாங்க முடியும்.
இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்!
குறிப்பிட்ட கவரேஜ் தொகைக்கு மேல் ஒரு பாலிசி எடுக்கும்போது, ஒரு ஏஜென்டோ, கார்ப்பரேட் ஏஜென்டோ, இன்ஷூரன்ஸ் புரோக்கரோ பாலிசி குறித்த விவரங்களை நேரடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பும். இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி வழங்கியபின், பாலிசி டாக்குமென்ட்டை நேரடியாக இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரி களுக்கு அனுப்பி அந்த விவரங்கள் எல்லாமே டீ-மெட்டீரியலைஸ் செய்து, ஒரு இ-இன்ஷூரன்ஸ் கணக்கு (e-Insurance Account) தொடங்கி, அதன் யூசர்நேம் மற்றும் இரண்டு பாஸ்வேர்டை பாலிசிதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும்.
பாஸ்வேர்டை மறந்தால்..?
பாலிசிதாரர் தனது இ-இன்ஷூரன்ஸ் எண்ணை ஒருவேளை மறந்துவிட்டால், அவரது ஆதார் எண்ணை அல்லது பான் எண்ணை வைத்து அவர் எடுத்திருக்கும் அத்தனை பாலிசிகளை பற்றியும் தெரிந்து கொண்டு, க்ளெய்ம் கோர முடியும். ஆதார் டாக்கு மென்ட்டும் இல்லை எனில், கைரேகையே போதும்; அதை வைத்து, அவரது ஆதார் எண்ணைக் கண்டுபிடித்து விடலாம். அதன்பிறகு ஆதார் எண்ணை வைத்து இன்ஷூரன்ஸ் விவரங்களைச் சொல்ல முடியும். இதற்கு இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரி களை அணுகினால் போதும்.
உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எந்த ரெபாசிட்டரி யிடம் இருக்கிறது என்பதை எளிதில் தெரிந்துகொள்ளும்படி ஒவ்வொரு ரெபாசிட்டரிக்கும் ஒவ்வொரு எண் அளிக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக, எண் 1 எனில் அது என்எஸ்டிஎல் நிறுவனத்தைக் குறிக்கும். எண் 2 சிடிஎஸ்எல் நிறுவனத்தையும், எண் 4 கார்வி நிறுவனத்தையும், எண் 5 கேம்ஸ் நிறுவனத்தையும் குறிக்கும்’’ என முடித்தார் அவர்.
இதுவரை நாம் எடுத்த பாலிசி களை இ-இன்ஷுரன்ஸுக்கு மாற்றிக் கொள்வதுடன், இனி நாம் எடுக்கப் போகும் பாலிசி களையும் இ-இன்ஷூரன்ஸ் முறையில் எடுப்பதன் மூலம் பாலிசிப் பத்திரம் தொலைந்து விடுமோ என்கிற கவலை இல்லாமல் இருக்கலாமே!
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி?
» கணவன்- மனைவி ஜாயின்ட் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்?
» சீன பங்குச் சந்தைகளின் சரிவு... ஏன்... எப்படி... என்ன..?
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளைம்: நிராகரிப்பிலிருந்து தப்புவது எப்படி?
» குறையும் குரூப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்: எப்படி சமாளிக்கலாம் ?
» கணவன்- மனைவி ஜாயின்ட் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்?
» சீன பங்குச் சந்தைகளின் சரிவு... ஏன்... எப்படி... என்ன..?
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளைம்: நிராகரிப்பிலிருந்து தப்புவது எப்படி?
» குறையும் குரூப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்: எப்படி சமாளிக்கலாம் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum