Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
இளமையில் இன்ஷூரன்ஸ்!
Page 1 of 1
இளமையில் இன்ஷூரன்ஸ்!
அந்த இருபத்தைந்து வயது நபர் சொன்ன பதிலைக் கேட்டு ஆடித்தான் போய்விட்டார் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஒருவர். நண்பர் சொன்னாரே என்று அந்த இளைஞரைப் பார்க்கப் போயிருந்தார் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்.
ஒரு பாலிசி எடுத்துக் கொள்ளலாமே என்று அவர் கேட்கவும் அந்த இளைஞர், ''எனக்கு என்ன வயசாகிவிட்டது பாலிசி எடுக்க! இவ்வளவு சின்ன வயசில் எதற்கு இன்ஷூரன்ஸ்? வருஷா வருஷம் தேவையில்லாம சில ஆயிரம் ரூபாயை எதுக்கு வீணா கட்டணும்? கொஞ்சம்
வயசான பிறகு பாலிசி எடுத்துக் கிடறேன்'' என்றிருக்கிறார். இப்படி ஒரு பதிலைக் கேட்டுதான் ஆடிப்போனார் அந்த ஏஜென்ட்!
இது அந்த ஒரு இளைஞரின் எண்ணம் மட்டும் அல்ல; இந்தியாவிலுள்ள பெரும்பாலான இளைஞர்களின் சிந்தனையே இப்படித்தான் இருக்கிறது. தவறான இந்த சிந்தனையை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். ஏன் தெரியுமா?
முதல் விஷயம், சிறு வயதில் இன்ஷூரன்ஸ் எடுத்தால் அந்த பாலிசிக்கான பிரீமியம் மிக மிகக் குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு 25 வயதுள்ள ஒருவர், பத்து லட்ச ரூபாய் கவரேஜ் கொண்ட டேர்ம் பிளானை 25 ஆண்டுகளுக்கு எடுக்கிறார் என்றால், அவர் ஆண்டு ஒன்றுக்கு கட்ட வேண்டிய பிரீமியம் வெறும் 2,544 ரூபாய்தான். இதுவே அவர் 35 வயதில் இதே அளவு கவரேஜ் உள்ள பாலிசியை எடுத்தால் அதற்கு ஆண்டு பிரீமியமாக 5,534 ரூபாய் கட்டவேண்டியதிருக்கும். அதாவது கிட்டத்தட்ட 2,990 ரூபாய் அதிகம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் 118% பிரீமியம் அதிகமாகக் கட்ட வேண்டும்!
இரண்டாவது விஷயம், 35 - 45 வயதில் இருக்கும் ஒரு மனிதன் நிறைய தீய பழக்கங்களைக் கொண்டிருக்கக்கூடும். குறிப்பாக சிகரெட், மது போன்ற பழக்கங்கள் தொற்றிக் கொண்டிருக்கும். அடுத்து லைஃப் ஸ்டைல் நோய்களான உடல் பருமன், நீரிழிவு போன்றவையும் வந்திருக்கக்கூடும். இவை எல்லாம் சேர்ந்து பிரீமியத்தை அதிகரித்து விடும். இளம் பருவத்திலேயே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து விட்டால் இத்தகைய பிரச்னைகள் அதிகமிருக்காது.
இளைஞர்கள் பாலிசி விவகாரத் தில் இரண்டு விஷயங்களில் குழம்பிவிடுகிறார்கள். ஒன்று பாலிசி எடுக்க வேண்டுமா என்பதில். அடுத்தது எவ்வளவு கவரேஜ் கிடைக்கிற மாதிரி பாலிசி எடுக்க வேண்டும் என்பதில். பொதுவாக, ஒருவரின் ஆண்டுச் சம்பளத்தைப் போல சுமார் 12 மடங்குக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நல்லது. இந்த அளவுக்கு ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்றால், பிரீமியம் அதிகமாகக் கட்ட வேண்டி யிருக்கும். ஆனால், சொற்பத் தொகையில் இதே அளவு கவரேஜ் கிடைக்க வேண்டும் என்றால் டேர்ம் பிளான்தான் பெஸ்ட். அதனால் வருஷத்துக்கு 2,500 ரூபாயை டேர்ம் பிளானுக்கு என ஒதுக்கிடுங்க, தம்பிகளா!
- சி.சரவணன்
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் அவசியமா?
» ஏன் வேண்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
» இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு எது பெஸ்ட்?
» இ-இன்ஷூரன்ஸ்... ஏன்... என்ன... எப்படி..?
» இ-இன்ஷூரன்ஸ்... இனி எல்லாம் சுகமே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum