Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
A - Z வரை... என்ஆர்ஐ டேர்ம் இன்ஷூரன்ஸ்!
Page 1 of 1
A - Z வரை... என்ஆர்ஐ டேர்ம் இன்ஷூரன்ஸ்!
அண்மை காலமாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் சம்பாத்தியம் அதிகரித்திருப்பதாலும் ஆயுள் இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளதாலும் அவர்கள் ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க விரும்பு கிறார்கள். அவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியே சரியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதுபற்றி விளக்கமாகப் பார்க்கும்முன் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பற்றி சில அடிப்படையான விஷயங்களைப் பார்க்கலாம்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் - (NRI)
இந்திய வம்சாவழியினர் (PIO)
வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign national)
இந்த மூன்று வகையினரைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.
என்ஆர்ஐ!
இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் பாஸ்போர்ட் எடுத்து, வேலை நிமித்த மாகவோ, சொந்த வேலை காரண மாகவோ வெளிநாட்டில் வாழ்பவர்களை என்ஆர்ஐ என்கிறோம்.
பிஐஓ!
இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் 5 வருடங்களுக்குமேல் வாழ்ந்து, அந்த நாட்டின் வாழ்வுரிமை பெற்று இரண்டு நாட்டிலும் வாழும் உரிமை பெற்றவர் களை பிஐஓ என்கிறோம்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்!
வெளிநாட்டில் பிறந்து வெளிநாட்டு வாழ்வுரிமை பெற்று, வேலை நிமித்த மாகவோ அல்லது சொந்த வேலை காரணமாகவோ இந்தியாவில் வாழ்பவரை வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்கிறோம்.
இனி இவர்களுக்கு ஏற்ற இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றி பார்ப்போம்.
டேர்ம் இன்ஷூரன்ஸ்தான் பெஸ்ட்!
டேர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியத்து வமும் அதன் தேவை பற்றியும் பலருக்குத் தெரிவதில்லை. காரணம், நம்மவர்கள் இன்ஷூரன்ஸை ஒரு முதலீட்டுக் கருவி யாகப் பார்க்கிறார்கள். ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி முற்றிலும் பாதுகாப்பு பாலிசி (Pure Insurance Coverage policy) ஆகும். இந்த பாலிசியில் குறைந்த பிரீமியத்தில் அதிகத் தொகைக்கு கவரேஜ் அளிக்கும் பாலிசியை எடுத்துக்கொள்ள முடியும்.
டேர்ம் இன்ஷூரன்ஸில் பாலிசி தாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே அவரது குடும்பத்துக்கு இழப்பீடு கிடைக்கும். மற்றபடி பாலிசி முதிர்வில் எதுவும் கிடைக்காது. அதாவது, உயிரோடு இருக்கும்போது இந்த பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தின் மூலம் வருமானம் எதுவும் கிடைக்காது.
இந்தியாவில் மொத்தம் 24 லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இன்ஷூரன்ஸ் தரும் விதிமுறைகளை முறைப்படுத்தி இருப்பவை ஒரு சில நிறுவனங்களே.
அடுத்து, என்ஆர்ஐகளுக்கான இன்ஷூரன்ஸ் விதிமுறைகளைப் பார்ப்போம்.
1. இந்திய குடியுரிமையுடன் வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது.
2. இந்திய மற்றும் வெளிநாடு குடியுரிமை உள்ளவர்களுக்கு ஒருசில நிறுவனங்கள் மட்டுமே இன்ஷூரன்ஸ் வழங்குகின்றன.
3. வெளிநாட்டுக் குடியுரிமை வைத்து இந்தியாவில் வாழும் வெளிநாட்ட வருக்கு, இந்தியாவில் உள்ள வேலை அனுமதியின் தன்மையைப் பொறுத்து ஒருசில நிறுவனங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்குகின்றன. இதுவும் ஒரு குறிப்பிட்ட குறைந்த காலஅளவுக்கு மட்டுமே (3-5 ஆண்டுகள்) தரப்படும்.
4. பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்த்து மொத்தம் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்படுவதில்லை. இந்த விதிமுறை இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கும் பொருந்தும்.
5. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்திய பாஸ்போர்ட் மற்றும் இந்திய முகவரிச் சான்று வைத்திருந்தால் மட்டுமே பாலிசி வழங்கப்படும்.
என்ஆர்ஐ, பிஐஓ என யாராக இருந்தாலும் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் எந்தவிதமான வித்தியாசமும் இருக்காது.
அடுத்து, இந்தியாவில் இன்ஷூரன்ஸ் எடுக்கும் செயல்முறை பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.
என்ஆர்ஐகள் இரண்டு வழிகளில் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க முடியும். இந்தியாவுக்கு வரும்போது அவர்கள் காப்பீட்டுக்குண்டான அனைத்து ஆவணங்களையும் முடித்து, மருத்துவப் பரிசோதனையும் முடித்து முறைப்படி காப்பீடு எடுக்கலாம்.
வெளிநாட்டில் இருந்து வரமுடியாத நிலையில் இருப்பவர்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தேவையான ஆவணங்களை அனுப்பி, மருத்துவப் பரிசோதனையை அவர்கள் இருக்கும் நாட்டில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் செய்தபிறகு பாலிசியைப் பெற முடியும். ஆனால், மருத்துவச் சோதனை செலவு களை இன்ஷூரன்ஸ் எடுப்பவரே கட்டவேண்டி இருக்கும். மேலும், ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே இந்த முறையை அங்கீகரித்து உள்ளன.
வயது வரம்பு!
6 மாதம் முதல் 25 வருடம் வரை பாலிசிகள் வழங்கப்படும். (இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கு இது பொருந்தாது.) குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும், அதிகபட்சமாக
45 - 60 வயது வரை உள்ளவர்களுக்கு பாலிசி தரப்படும்.
காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமியம்!
பொதுவாக, குறைந்தபட்ச காப்பீடு ரூ.5 லட்சமாகவும், அதிகபட்சமாக ரூ.1 கோடியாகவும் கிடைக்கும். ரூ.1 கோடிக்கு மேல் வேண்டுபவர்களுக்கு பாலிசி தரலாமா என்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனமே முடிவு எடுக்க முடியும். இந்திய குடிமகனுக்கு இணையான பிரீமியமே வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் இருக்கும்.
தேவையான ஆவணங்கள்!
1. இந்திய பாஸ்போர்ட்,
2. இந்திய முகவரிச் சான்று,
3. வெளிநாட்டு முகவரிச் சான்று,
4. வருமான சான்று, 5. வயது சான்று
6. என்ஆர்ஐ என்பதற்கான ஆதாரம்,
7. உடல் ஆரோக்கிய நிலை, 8. பிரீமியத் தொகை, 9. பிரத்யேக குறிப்பு (ஏதும் இருந்தால்). இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ்
பாலிசியை எப்படி தேர்வு செய்வது?
நிர்வாகத் திறன்!
இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு முன்பாக அந்த நிறுவனத்தின் பின்னணி பற்றியும், நிறுவனத்தின் தலைமை பற்றியும், அவர்கள் இந்தத் தொழிலில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை அறிந்து கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல பாலிசியைத் தேர்வு செய்வது அவசியம். மேலும், பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வெளிநாட்டில் உள்ள பல பிரபலமான இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்துகொண்டு அங்கே இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. அதுபோன்ற நிறுவனங்களில் பாலிசி எடுப்பது லாபகரமாக இருக்கும்.
க்ளைம் தரும் விகிதம்!
ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யும்முன், அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் க்ளைம் செட்டில் செய்யும் விகிதத்தைக் கவனிக்க வேண்டும். டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது ஒருவர் இறக்கும் தருவாயில் அவரது குடும்ப நலன் கருதி எடுப்பதால், அவர் இல்லாதபோது இந்த பாலிசி மூலம் கிடைக்கும் தொகை முக்கியமானதாகும். எனவே, ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மூன்று வருட க்ளைம் செட்டில்மென்ட் விகிதத்தின் அடிப்படையில் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்வது மிகவும் உத்தமமாகும்.
வாடிக்கையாளரின் சேவையும் பிரீமியத் தொகையும்!
இன்ஷூரன்ஸ் எடுக்கும்முன் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையின் தரம் அறிந்து அந்த நிறுவனத்தின் பாலிசியை எடுப்பது அவசியம். ஒவ்வொரு நிறுவனத்தின் பிரீமியத் தொகையும் அந்த நிறுவனத்தின் பலவித காரணங் களால் மாறுபடும். பிரீமியத்தை மட்டுமே வைத்து இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நல்லதல்ல.
ந.விகடன் இதுபற்றி விளக்கமாகப் பார்க்கும்முன் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பற்றி சில அடிப்படையான விஷயங்களைப் பார்க்கலாம்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» டேர்ம் இன்ஷூரன்ஸ்: இது இருந்தால் போதும்!
» டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஆன்லைனில் எடுப்பது லாபமா?
» டேர்ம் இன்ஷூரன்ஸ்: தவறான புரிதல்கள்... சரியான தீர்வுகள்!
» டேர்ம் இன்ஷூரன்ஸ் - உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் ஸ்மார்ட் வழி!
» டேர்ம் இன்ஷூரன்ஸ்...ஏன், எதற்கு எப்போது அதிகரிக்க வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum