Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
கிரிட்டிக்கல் இல்னஸ் இன்ஷூரன்ஸ்...
Page 1 of 1
கிரிட்டிக்கல் இல்னஸ் இன்ஷூரன்ஸ்...
இன்றைய வேகமான வாழ்க்கைமுறை, வேலையில் அதிக மனஅழுத்தம் போன்ற காரணங்களால் இயல்பாகவே மனிதனுக்கு பலவகை நோய்கள் வந்துவிடுகிறது. இதில் சில தீவிர நோய்களாகவே இருக்கின்றன. இப்படி தீவிர நோய் பாதிப்பு வரும்போது நோயினால் ஏற்படும் கஷ்டத்தைவிட, அதனால் ஏற்படும் செலவுகளினாலும், வருமான இழப்பினாலும் ஏற்படும் மனஅழுத்தம் அதிகம். இதுபோன்ற சூழ்நிலையில் ஏற்படும் வருமான இழப்பைச் சமாளிக்க கைதருவதுதான் கிரிட்டிக்கல் இல்னஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி என்று அழைக்கப்படும்
தீவிர நோய் பாதிப்பு இன்ஷூரன்ஸ் பாலிசி.
என்ன நோய்..?
தீவிர நோய் பாதிப்புக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியில் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மட்டும்தான் க்ளைம் பெறமுடியும். அதாவது, இருதய அறுவை சிகிச்சை, கேன்சர், இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிடுதல், முக்கியமான உடல் உறுப்புகள் மாற்றம், முதுகுத் தண்டுவடம், மூளையின் தசைகளில் ஏற்படும் பிரச்னை ஆகியவைகளுக்கு மட்டும்தான் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியில் கவரேஜ் கிடைக்கும். பிற நோய் பாதிப்புகளுக்கு இதில் க்ளைம் பெற முடியாது. இந்த பாலிசி எடுத்து 90 நாட்கள் காத்திருப்பு காலம். அதற்கு பிறகு தான் க்ளைம் செய்ய முடியும். இடையில் ஏதாவது நோய் வந்தால் க்ளைம் கிடைக்காது.
யார் எடுக்கலாம்?
நிரந்தர வருமானம் ஈட்டக்கூடியவர்கள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.
18 வயது முதல் 65 வயது வரை இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். பாலிசி எடுக்கும்போது மருத்துவப் பரிசோதனை சான்றிதழ், வருமானத்திற்கான ஆதாரம் தரவேண்டும். இதற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
ஒருவர் 1 - 25 லட்சம் ரூபாய் வரையில் கவரேஜ் கொண்ட பாலிசிகளை எடுக்கலாம். ஒருவரின் உழைப்பினால் கிடைக்கும் வருமானத்தைபோல் 5 மடங்கு கவரேஜுக்குத்தான் பாலிசி எடுத்துக்கொள்ள முடியும். வருமான சான்றிதழ் சமர்ப்பிக்காத நிலையில் அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய்தான் பாலிசி எடுக்க முடியும். தீவிர நோய் பாதிப்பு பாலிசி எடுப்பதாக இருந்தால், லைஃப் இன்ஷூரன்ஸ் அல்லது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தால்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
மறைக்கக் கூடாது..!
பாலிசி எடுக்கும்போது உங்களுக்கு சிகரெட், மதுப் பழக்கம் இருக்கிறதா? பரம்பரை வியாதி ஏதாவது உள்ளதா? என்பதை எல்லாம் முன்கூட்டியே தெரிவித்துவிடுவது அவசியம்.
தீவிர நோய் பாதிப்பு உங்களுக்கு இருப்பதை சான்று பெற்ற மருத்துவரால் உறுதி செய்தாலே முழு கவரேஜ் தொகையும் கிடைத்துவிடும். இப்படி உறுதிசெய்தபின் முப்பது நாட்கள் வரை பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் மட்டும்தான் க்ளைம் பெற முடியும்.
கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசியில், தீவிர நோய் பாதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை நீங்கள் சிகிச்சை எடுத்திருந்தால் மட்டும் ரசீதுகளின் நகல் தந்தால் போதும், க்ளைம் தந்துவிடுவார்கள். அத்துடன் தீவிர நோய் பாதிப்புக்கான பாலிசி ரத்தாகிவிடும். இருதய நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டால் 20% தொகை மட்டும்தான் க்ளைம் பெற முடியும்.
நீங்கள் மெடிக்ளைம் பாலிசி, தீவிர நோய் பாதிப்பு பாலிசி இரண்டும் வைத்திருந்தால் சிகிச்சைக்கு ஆன செலவை மெடிக்ளைம் பாலிசியிலும், தீவிர நோய் பாதிப்பு பாலிசியில் நோய்களுக்கு ஏற்றவாறு கவரேஜ் தொகை யிலும் க்ளைம் செய்துகொள்ள முடியும். அதாவது, நகல் ரசீதுகளை வைத்து தீவிர நோய் பாலிசியிலும், அசல் ரசீதுகளை வைத்து மெடிக்ளைம் பாலிசியிலும் க்ளைம் பெறலாம்.
பாலிசி எடுக்கும்போது உங்களுக்கு உண்மையாக என்ன பிரச்னைகள் இருக்கிறதோ, அதை மறைக்காமல் குறிப்பிடுவது அவசியம். உங்கள் குடும்பத்தில் பரம்பரையாக ஏதேனும் நோய் இருந்தால் அதைத் தெரிவித்துவிடுவது நல்லது. இல்லாவிடில் க்ளைம் சமயத்தில் பிரச்னை வரக்கூடும்.
எவ்வளவு கவரேஜ்..?
பிரீமியம் என்பது ஆயிரம் ரூபாய் கவரேஜுக்கு 1.5%-த்திலிருந்து 8% வரை இருக்கும். இது வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். ரத்த அழுத்த பாதிப்பு மட்டும் உள்ளவர்களுக்கு 10 சதவிகிதமும், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு 20 சதவிகிதமும் பிரீமியம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
பக்கவாதம், பார்வை குறைபாடு நோய்களுக்கு கவரேஜ் ரைடராக கிடைக்கின்றன. இதற்கு கூடுதலாக 25% பிரீமியம் செலுத்த வேண்டும்.
கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசியில் நோ க்ளைம் போனஸ் என்பது இல்லை. வயது உயர உயர பிரீமியமும் அதிகரிக்கும். அதேபோல உங்களின் வருமானம் உயருவதற்கு ஏற்ப உங்களின் கவரேஜ் தொகையை உயர்த்திக் கொள்ளலாம். அப்போது அதற்கான சான்றுகளைத் தரவேண்டும்.
தீவிர நோய் பாதிப்பு பாலிசி என்பது கூடுதல் பலன் தரும் பாலிசி. தீவிர நோய் பாதிப்புக்கு உள்ளாகிற வாய்ப்புள்ளவர்கள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது!
தொகுப்பு: இரா.ரூபாவதி.
நாணயம் விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தீவிர நோய்களுக்கான காப்பீடு: ஏன் வேண்டும் க்ரிட்டிக்கல் இல்னஸ்? (Critical illness Policy)
» இல்லத்தரசிகளுக்கு இன்ஷூரன்ஸ் அவசியமா?
» இளமையில் இன்ஷூரன்ஸ்!
» இ-இன்ஷூரன்ஸ்... ஏன்... என்ன... எப்படி..?
» இ-இன்ஷூரன்ஸ்... இனி எல்லாம் சுகமே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum