Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?
Page 1 of 1

பங்குச் சந்தை முதலீடு என்பது நாம் முழுமையாக கார் ஓட்டக் கற்றுகொள்ளும் முன்பே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஓட்ட முயற்சிப்பதைப் போன்றது. அந்த சமயத்தில் விபத்து ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விபத்தில் சிக்கி கஷ்டப்படுவதைவிட, காரை நன்கு ஓட்ட கற்றுக்கொள்ளும்முன் ஒரு டிரைவரை நியமித்து, பயணம் மேற்கொள்வதே புத்திசாலித்தனம். இந்த உதாரணம், பங்கு சந்தை முதலீட்டுக்கு அப்படியே பொருந்தும். முதல் முறையாக முதலீடு செய்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே பெஸ்ட்!
இன்றைய நிலையில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை வேலை பார்ப்பது பலருக்கும் தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில், நம்மால் நேரடியாக பங்குச் சந்தை முதலீட்டில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த முடியாது.
மேலும், ஒரு பங்கின் விலை உயர்வதற்கு அந்த நிறுவனத்தின் செயல்பாடு மட்டும் காரணமாகி விடாது. அந்த பங்குச் சார்ந்த செக்டார் நன்கு செயல்பட வேண்டும். கரன்சி ஏற்ற இறக்கம் சரியாக இருக்கவேண்டும். இதையெல்லாம் முழு நேரமாக முதலீட்டினை கவனிப்பவர் களால் மட்டுமே செய்ய முடியும். அரசு மற்றும் தனியார் நிறுவனங் களில் வேலை பார்ப்பவர்களால் சந்தையின் போக்கை சரிவர கவனிப்பது முடியாத காரியம்.
ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது அப்படிப் பட்டதல்ல. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஒரு போர்ட் ஃபோலியோவை நிர்வகிப்பது போன்றது. அதில் 25-க்கும் மேற்பட்ட பங்குகள் இருக்கும். ஒரு பங்கின் விலை குறைந்தாலும் இன்னொரு பங்கின் விலை உயர்ந்து சராசரி அளவில் அதிக வருமானம் கிடைக்கும். ஆனால், நேரடியாக பங்குகளில் முதலீடு செய்யும்போது, ஒரு பங்கின் விலை குறைந்தால், அதன் விலை மீண்டும் உயரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். காத்திருக்க பொறுமை இல்லை எனில், நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
தவிர, எந்தவொரு பங்கை வாங்கும்போதும் அந்த நிறுவனம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு வாங்குவது பல சமயங்களில் முடியாத காரிய மாகவே இருக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் என்பது தகுதி வாய்ந்த ஃபண்ட் மேனேஜர் களால் நிர்வகிக்கப்படுவதால், மிகச் சில பங்குகள் மட்டுமே எதிர்பாராத காரணங்களால் நஷ்டம் தர வாய்ப்புண்டு.
மேலும், நன்கு லாபம் தரக்கூடிய பங்குகளை நாம் குறுகிய காலத்தில் விற்றுவிட்டு, லாபம் தராத பங்குகளை நீண்ட காலத்துக்கு வைத்திருக்கும் தவறை செய்வோம்.
உதாரணமாக, நாம் 5 பங்கில் தலா ரூ20,000 முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்தின் முடிவில் 3 பங்குகளின் விலை ரூ.30,000-மாக உயர்ந்துள்ளது. இரண்டு பங்குகளின் விலை ரூ.15,000-மாக குறைந்துள்ளது. மொத்தமாக பார்த்தால், நமக்கு ரூ.20,000 லாபம். அதாவது, 20% லாபம். நமக்கு ரூ.20,000 தேவைப் பட்டால், உடனே லாபம் தந்த மூன்று பங்குகளை விற்றுவிடு வோம். அடுத்த வருடம் 33% சந்தை உயர்ந்தால்தான், ரூ15,000-க்கு சென்ற பங்குகள் ரூ.20,000 என்கிற நிலையை அடைய முடியும்.
இந்த மாதிரியான பிரச்னை எல்லாம் மியூச்சுவல் ஃபண்டில் இல்லை என்பதால் முதல் முறையாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதைவிட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது. ஆங்கிலத்தில் 10 கமாண்ட்மென்ட்ஸ் என்று சொல்கிற மாதிரி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 10 காரணங்களை சொல்லலாம். இந்த 10 காரணங்களும் முதல்முறையாக முதலீடு செய்யவரும் ஒருவர் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை விட, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதே சிறந்தது என்பதை எடுத்துச் சொல்லும்.
1. குறைந்த பணத்தில் நீங்கள் பல பங்குகளை வாங்க முடியும். எய்ச்சர் மோட்டார் பங்கின் விலை ஒன்று ரூ.20,000. நாம் முதலீடு செய்யும் 10,000 ரூபாயில் ஒரு எய்ச்சர் பங்கைக்கூட நம்மால் வாங்க முடியாது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டின் மூலம் கூட்டாக முதலீடு செய்வதினால், பல நூறு பங்குகளை வாங்க முடியும்.
2. தனியாக டீமேட் கணக்கு மற்றும் அதனுடைய வருட பராமரிப்பு செலவு கிடையாது. சிலர் டீமேட் கணக்கைத் தொடங்கி சில நூறு பங்குகளை மட்டுமே வைத்திருப்பார்கள். இந்த பங்குகளின் மதிப்பு சில ஆயிரங்களே இருக்கும். இதற்காக ஆண்டுதோறும் சில நூறு ரூபாய்களை டீமேட் கட்டண மாக கட்ட வேண்டியிருக்கும். அந்த செலவெல்லாம் மியூச்சுவல் ஃபண்டில் இல்லை.
3. ஃபண்ட் மேனேஜர் ஒரே வருடத்தில் பங்கை வாங்கி விற்றாலும் அதற்கு மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டாக்ஸ்) கிடையாது. காரணம், அது ஒரு போர்ட்ஃபோலியோவாக கருதப்படுவதால் அதற்கு அந்த சலுகை உண்டு.
மேலும், பங்குகளை வாங்கி, விற்பது நம்மைப் பொருத்தவரை ஒரு எமோஷனல் முடிவாக இருக் கும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் எந்த முடிவையும் எமோஷனல் முடிவாக எடுப்பதில்லை.
4. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது நாம் தனியாக நேரம் ஒதுக்கி கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் நமக்கு எந்த டென்ஷனும் இல்லை; எந்த நிறுவனத்தை பற்றியும் நாம் அதிகம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
5. குறைந்தது ரூ.500 முதல் சேமிக்கலாம். மைக்ரோ எஸ்ஐபி திட்டங்களில் ரூ.100-கூட முதலீடு செய்யலாம் என்பதால் எல்லோருக்கும் ஏற்ற முதலீடு.
6. வருமான வரி Sec 80C சட்டத்தின் கீழ் டாக்ஸ் பிளானிங் ஃபண்டுகளில் செய்யப்பட்ட முதலீட்டுக்கு ரூ. 1,50,000 வரை வருமான வரி விலக்கு கிடைக்கும்.
7. டெரிவேட்டிவ் புராடக்டுகள் போல, எந்தவொரு முதலீட்டாளரையும் குறைந்த பணத்தில் அதிகம் வர்த்தகம் செய்யும் ஆசையைக் காட்டுவதில்லை.
8. மிகக் குறைந்த பராமரிப்பு செலவு, திறமையான ஃபண்ட் மேனேஜர், இலக்குகளை நோக்கமாக வைத்துக்கொண்டு செயல்படும் முதலீடு போன்ற நல்ல அம்சங்கள் இதில் உண்டு.
9. சிறந்த முறையில் நிதி நிர்வாகம் செய்கிறவர்கள் நீண்ட காலத்தில் ஆராய்ந்தறிந்து சந்தையில் முதலீடு செய்வதால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீண்ட காலத்தில் முதலீடு செய்வதவர்களில் நஷ்டம் கண்டவர்கள் குறைவே.
10.எஸ்.ஐ.பி. முறையில் ஒரு குறிப்பிட்ட சில பங்குகளை வாங்குவது கடினம். மேலும், அதன் விலைக்கேற்ப ஒவ்வொரு மாதமும் தொகை வேறுபடும். இப்படி பல நன்மைகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருப்பதால், முதல் முறை முதலீட்டாளர்களுக்கு அதுவே பெஸ்ட் முதலீடு!
-ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்?
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: குரோத் ஆப்ஷன் ஏன் நல்லது?
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: இனி எஸ்.எம்.எஸ். போதும்!
» வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum