வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்!

Go down

பி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்! Empty பி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்!

Post by தருண் Thu Mar 17, 2016 2:58 pm

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்கு வாங்குவதற்கு அடிப்படை ஆராய்ச்சி யுக்திகளை தெரிந்திருத்தல் அவசியம். அப்படி தெரிந்து அறிந்து பங்குகளை வாங்கும்போது முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதுபோன்ற அடிப்படை ஆராய்ச்சி யுக்திகள் பல இருந்தாலும் வெற்றிகரமான முதலீட்டாளர்கள் பி/இ விகிதம் (P/E ratio) என்ற யுக்தியை அதிகம் கவனித்து அதனடிப்படையில் நிறுவனங்களுடைய பங்குகளை வாங்குவார்கள். அந்த யுக்தி தான் பல முதலீட்டாளர்களின் தாரக மந்திராமாக விளங்குகிறது. பார்ப்பதற்கு ஒரு எளிமையான சாதரணமான யுக்தியாகக் அறியப்பட்டாலும் பங்குகளின் மதிப்பை அறிய ஒரு வலுவான யுக்திதான் இந்த பி/இ விகிதம் என்ற யுக்தி.

பி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்! Shutterstock_176944316(2)

பி/இ விகிதங்கள் பல்வேறு இருக்கின்றன இருந்தாலும் , அடிப்படையான விளக்கம் இதோ...

பி/இ ரேஷியோ = ஒரு பங்கின் விலை / பங்கின் ஆண்டு வருமானம்

உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தின் பங்கின் தற்போதைய சந்தை விலை 100 ருபாய் என்று எடுத்துகொள்வோம். அதனுடைய ஒரு பங்கு ஆதாயம் (Earnings per share - EPS) மிகச் சமீபத்திய 12 மாதங்களுக்கு 10 ருபாய் என்றும் வைத்துக்கொள்வோம். அந்தப் பங்கின் பி/இ விகிதமானது 100/10=10 என்று வழங்கப்படும்.

பி/இ விகிதங்கள் பல்வேறு கோணங்களில் ஆராயப்படும். உதாரணத்துக்கு. பின்பற்றும் பி/இ (Trailing P/E) என்றால், ஒரு பங்கு ஆதாயம் (EPS) என்பது நிலுவையில் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கையால் வகுக்கப்படுகின்ற நிறுவனத்தின் மிகச் சமீபத்திய 12 மாத காலத்திற்கான மொத்த வருமானமாகும். வேறு எந்த தகுதிப்படுத்தியும் குறிப்பிடப்படாவிட்டால் இதுவே மிகவும் பொதுவான "பி/இ" விகிதமாக வழங்கப்படுகிறது . தனிப்பட்ட நிறுவனங்களுக்கான மாதாந்திர ஆதாயக் கணக்கு கிடைப்பதில்லை, எனவே அதற்கு முந்தைய நான்கு காலாண்டு ஆதாயங்களின் அறிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதோடு ஒரு பங்கு ஆதாயம் காலாண்டிற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது.

"முன்னோக்கு பி/இ" (Forward P/E) என்பது அடுத்த வகை. மொத்த வருமானத்திற்கு பதிலாக அடுத்த 12 மாதங்களுக்கும் மேற்பட்ட மொத்த மதிப்பிடப்பட்ட மொத்த ஆதாயங்களைப் (Forward earnings growth) பயன்படுத்துகிறது. பொருளாதார மாற்றங்கள் அதிகமாக இருக்கும் காலங்களில் இதுபோன்ற மதிப்பீடுகள் சூழ்நிலை மாறுவதற்கு ஏற்ப ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய முன்னூகிப்புகளை (projections) சரிசெய்துகொள்ளும் சூழலும் ஏற்படுகிறது.

நிறுவனத்தின் பங்கு விலை மற்றும் ஆதாயங்களைக் கணக்கிடுவதன் மூலம் முதலீட்டாளர்களால் ஒரு நிறுவனத்தின் சந்தையின் பங்கு மதிப்பீட்டையும், அந்த நிறுவனம் உண்மையில் உருவாக்கிக்கொள்கின்ற வருமானத்திற்கு தொடர்புடைய அதனுடைய பங்குகளையும் ஆராய முடியும். வரும் காலத்தில் ஆதாயங்கள் வளர்ச்சி அதிகமாகவோ ஸ்திரமாகவோ இருக்கும் என்று ஊகிகக்கப்படும் நிறுவனப் பங்குகள் வழக்கமாக அதிகப் பி/இயைக் கொண்டிருக்கிறது. குறைவான மற்றும் ஸ்திரமற்ற ஆதாயங்கள் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகள் என்று எதிர்பார்க்கப்படுபவை பெரும்பாலான நிகழ்வுகளில் குறைவான பி/இயைக் கொண்டிருக்கின்றன. பங்குகளின் மதிப்பையும் வருங்கால வளர்ச்சியையும் ஒப்பிடுவதற்கு முதலீட்டாளர்களே பி/இ விகிதத்தைப் பயன்படுத்த முடியும். எல்லா விஷயங்களிலும் சமமாக இருக்கும் இரண்டு நிறுவனப் பங்குகள் ABC & Co மற்றும் XYZ & Co. ABC & Co பங்கின் பி /இ XYZ & Co யை காட்டிலும் அதிகப் பி/இயைக் கொண்டிருந்தால் பொதுவாக ABC&Co முதலீடு செய்வது என்பது உகந்தது அல்ல. அதைக் காட்டிலும் XYZ & Co. வின் பங்கில் முதலீடு செய்வது தான் உகந்தது என்று கொள்ளவேண்டும். இருப்பினும், நிஜத்தில் நிறுவனங்கள் அரிதாகவே ஒரேபோல் சமமானவையாக இருக்கின்றன என்று கடந்த கால வரலாறு தெரிவிக்கின்றது. தொழில்துறைகள், நிறுவனங்கள் மற்றும் கால கட்டங்கள் என்ற அடிப்படையில் பார்க்கும் போது பல்வேறு வேறுபாடுகள் இந்த பி/இ விகிதங்களில் பார்க்கலாம். சுருக்ககமாகச் சொன்னால் நிறுவனங்களின் பி/இ குறைவாக இருந்தால் முதலீடுக்கு ஏற்றது. பி/இ அதிகமாக இருந்தால் தவிர்க்கவேண்டிய பங்கு என்று பொதுவாகக் கொள்ளலாம். ஆனால் அதை மட்டுமே வைத்து இரண்டு நிறுவனங்களை மதீப்பீடு ஏன் செய்யக்கூடாது என்று பின்னால் காண்போம்.

பி/இ விகிதம் சார்ந்த முதலீடு மதிப்புமுறை முதலீட்டின் முக்கிய தூணாகக் கருதப்படுகிறது. இதைப் பெரிய அளவில் பிரபலப் படுத்தியவர் உலகின் தலை சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரான பெஞ்சமின் கிரஹாம். இவர் தான் மதிப்பு முறை முதலீட்டின் (value investing) முன்னோடி. உலகத்தின் மிகப் பெரிய முதலீட்டளரான வாரன் பப்பெட் அவரைத் தான் தனது வழிகாட்டியாகக் கருதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய காலத்தில் ஒரு பங்கின் பி/இ விகிதம் 16க்குக் கீழ் இருந்தால் தான் அந்தப் பங்கு ஒரு சரியான முதலீடு என்று அவர் வலியுறுத்தினார். 16க்கு மேல் இருந்தால் அந்தப் பங்குகளை தவிர்க்கவேண்டும் என்றும் கருதினார். ஆனால் தற்போதைய சூழலில் அந்தக் கணக்கீடு பல மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றது. இந்தியாவிலும் மதிப்பு முறை முதலீட்டாளர்கள் அதிகம் கவனிப்பது இந்தப் பி/இ விகிதம் முறையைத் தான். முக்கியமாக நீண்ட கால முதலீட்டு வழிமுறைகளான ம்யூச்சுவல் பண்ட் போன்ற அமைப்புகளும் இந்த முறையை அதிகம் பின்பற்றி முதலீடுகள் செய்கிறார்கள்.

பொதுவாகவே ஒவ்வொவொரு காலகட்டத்திற்கு ஏற்ப சந்தைகளில் உள்ள பங்குகளின் பி/இ விகிதம் மாற்றம் அடைந்து கொண்டிருக்கும். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த பி/இ விகிதப் போக்கு இப்பொழுது காணப்படாது. பொதுவாக சந்தைகள் மற்றும் பங்குகள் கரடிகளின் பிடியில் இருக்கும்போது பி/இ விகிதம் குறைவாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் பங்குகள் காளையின் பிடியில் இருக்கும் போது பி/இ விகிதம் அதிகரித்துக் காணப்படும். பங்குகளின் விலை மாறுவதால் தான் இந்த மாற்றங்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.அந்தப் போக்கை வைத்து தான் சந்தை மற்றும் பங்குகளின் மதிப்பீடு இருக்கும். மதிப்பீட்டை (valuations) வைத்து தான் மதிப்புமுறை முதலீட்டளர்கள் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்களின் பங்கு முதலீட்டை முடிவு செய்வார்கள். அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது பி/இ விகித ஆய்வு முறை தான்.

ஒரு பங்கின் பி/இ விகிதை ஆராயும் போது அந்த பங்கை மட்டும் கணக்கில் கொண்டு ஆராய்ந்தால் அதன் உண்மையான மதிப்பீடு காணப்படாது. உதாரணத்துக்கு, நாம் சந்தைக்கு சென்று ஆப்பிள் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு கடையில் ஒரு ஆப்பிளின் விலை ரூபாய் 25. அதே ஆப்பிள் சில கடைகள் தள்ளி வாங்கினால் ஒரு ஆப்பிளின் விலை ரூபாய் 22 என்று இருந்தால், நாம் இரண்டாவது கடையில் வாங்கினால் தான் நமக்கு லாபம் ஏற்படும். இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இரண்டு ஆப்பிள்களும் ஒரே தரம் ஒரு அளவு என்றால் தான் அந்த விலை ஒப்பீடு என்பது சரியாக இருக்கும். அதே முறை தான் பங்குகளை வாங்கும் போதும் பி/இ விகிதம் ஒப்பீட்டு முறையும். ஆனால் ஒரு துறையில் உள்ள எல்லா நிறுவனங்களும் ஒரே அளவிலோ ஒரே தரத்திலோ இருக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் பங்குகளை ஆராயும்போது நிறுவனங்கள் கிட்டதிட்ட ஒரே அளவில் இருந்தால் தான் அதன் உண்மையான மதிப்பீடு பி/இ விகிதம் மூலம் கண்டறியலாம்.

இந்தியச் சந்தைகளில் பி/இ விகிதம்

கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தைகள் கடுமையான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்துள்ளது. அதனூடாக இந்தியச் சந்தையில் பி/இ விகிதமும் அதையொட்டியே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தற்போழுது தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டின் பி/இ விகிதம் 21 என்ற அளவில் இருக்கிறது. இது 2008ல் 11 என்ற அளவில் இருந்தது. பிறகு ஏற்றம் பெற்ற பி/இ விகிதம் 2013ல் சந்தைகள் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது 15 என்ற அளவை எட்டியது. இந்த ஆண்டு துவக்கத்தில் 23 என்ற அளவை தொட்ட பி/இ விகிதம் தற்பொழுது 21 என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குகளின் விலை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும் போது பி/இ விகிதமும் அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டதை கடந்த காலங்களின் மூலம் தெளிவாக நாம் அறியலாம்.

2013ல் கடுமையான வீழ்ச்சியை சந்தித்த இந்தியச் சந்தை அதற்குபிறகு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. முன்னேற்றமான பொருளாதார சூழல் மற்றும் கவர்ச்சிகரமான பங்கு மதிப்பீடுகள் அந்நிய முதலீட்டாளர்களை நமது சந்தைக்கு இழுத்துவந்தது. உள்நாட்டு பெரு முதலீட்டு நிறுவனங்களான ம்யுசுவல் பண்ட்களும் தொடர்ந்து இந்தியப் பங்குகளில் முதலீடு செய்து வந்தார்கள். அதன் காரணமாக இந்த ஆண்டு துவக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது இந்தியப் பங்குச் சந்தை. அதன் காரணமாக பி/இ விகிதமும் அதிகரித்தது. இப்பொழுது ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக பி/இ விகிதமும் சற்று தணிந்திருக்கிறது. ஆனாலும் வளரும் நாடுகளை ஒப்பிடும்போது இந்தியச் சந்தையின் முன்னோக்கு பி/இ விகிதம் (Forward P/E) சற்று கூடுதலாகத் தான் உள்ளது என்று ஒப்பீட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை கருத்தில் கொள்ளும்போது நமது நாட்டின் பங்கு மதிப்பீடுகள் கவர்சிகரமாகத்தான் உள்ளது என்று சொல்லவேண்டும். சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்போதும் வெளிநாட்டவர்களுக்கு நம்மீது உள்ள நம்பிக்கை ஆதரவாகத்தான் உள்ளது. இந்தியச் சந்தையின் பி/இ விகிதம் உயர்ந்து காணப்படுவதற்கு மூன்று துறைகளின் பி/இ விகிதம் அதிகரித்தது தான் முக்கிய காரணம். அவை தொழில்நுட்பம், மருந்து மற்றும் எப் எம் சி ஜி ஆகிய துறைகள் தான். அவற்றை நீக்கி விட்டுப் பார்த்தல் இந்தியச் சந்தையின் மதிப்பீடு அளவுக்கதிகமாக நிச்சயம் இல்லை என்று கூறலாம்.

முதலீட்டாளர்கள் பி/இ விகிதத்தை எவ்வாறு அணுகவேண்டும்?

முதலீட்டாளர்கள் பங்கின் சந்தை விலையை மட்டும் பார்த்து முதலீடு செய்யாமல் சற்று முயற்சி செய்து நிறுவனங்களின் பி/இ விகிதத்தை ஆராய்ந்து பார்த்து முதலீடு செய்வது தான் சரியான முதலீட்டு யுக்தியாக இருக்கும். அதுமட்டுமல்லாது, ஒரு பங்கின் பி/இ விகிதம் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் மட்டும் அது முதலீட்டுக்கு உகந்ததாகவோ அல்லது உகந்தல்லாததாகவோ கருத முடியாது. தேர்ந்த முதலீட்டாளர்கள் பங்குகளை மதிப்பீடு செய்ய இந்த பி/இ விகிதத்தை மட்டுமே பார்த்து முடிவெடுக்காமல் வேறு பல யுக்திகளையும் சேர்த்து ஆராயும்போது ஒரு தெளிவான முதலீட்டு முடிவு கிடைக்கும். உதாரணத்துக்கு, ஒரு நிறுவனத்தின் பி /இ விகிதம் அதிகமாகக் காணப்பட்டாலோ அல்லது வீழ்ச்சி அடைந்து காணப்பட்டலோ வேறு சில விஷயங்களை, குறிப்பாக ஆதாயங்கள் வளர்ச்சி (earnings growth) புத்தக மதிப்பு (book value) பங்கு ஆதாயம் (EPS) கடன் நிலவரம் (debts) பணப் புழக்கம் (cash flows) போன்ற வேறு பல விஷயங்களை ஆராய்ந்தால் அது முதலீட்டுக்கு உகந்த பங்கா இல்லையா என்ற ஒரு முடிவுக்கு வரமுடியம். ஆகவே முதலீட்டாளர்கள் பி/இ விகிதத்தை பற்றியும் அறிந்து கொண்டு வேறு பல விஷயங்களையும் சேர்த்து ஒரு பங்கின் முதலீட்டு மதிப்பை கணக்கிட்டால் நிச்சயம் நீண்ட காலத்தில் அந்த யுக்தி வெற்றியைக் கொடுக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.


ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum