வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கடன் இல்லா கம்பெனிகள்

Go down

கடன் இல்லா கம்பெனிகள் Empty கடன் இல்லா கம்பெனிகள்

Post by தருண் Wed Feb 25, 2015 3:07 pm

கடந்த சில ஆண்டுகளில் பங்குச் சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சியையும், உச்சத்தையும் கண்டிருப்பார்கள் முதலீட்டாளர்கள். இந்த ஏற்ற இறக்கத்தில் லாபம் சம்பாதித்தவர்களும் உண்டு; நஷ்டம் கண்டவர்களும் உண்டு. அதுவும் கடந்த ஐந்தாண்டு காலம் பங்குச் சந்தைக்கும் முதலீட்டாளர் களுக்கும் பெரிய சவாலான காலகட்டம். பொருளாதார வீழ்ச்சி, தொழில் துறை வீழ்ச்சி கட்டுக்கடங்காத பணவீக்கம், கடன் வட்டி ஏற்றம் போன்ற விஷயங்கள் பொருளாதாரத்தையும், பங்குச் சந்தைகளையும், முதலீட்டாளர்களையும் ஆட்டிப்படைத்தது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்குமுன் பல முக்கியமான அடிப்படை விஷயங்களைக் கவனத்தில் கொண்டு முதலீடு செய்தால் அது வெற்றிகரமான முதலீடாக அமையும். குறிப்பாக, நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யும்போதும், சவாலான பொருளாதாரக் காலகட்டத்தில் முதலீடு செய்யும்போதும் நிறுவனங் களின் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.

கடன் இல்லா கம்பெனிகள் P24a

வாரன் பஃபெட் போன்ற உலகின் மிகப் பெரிய சாமர்த்தியமான முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவது, அவர்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களின் அடிப்படை விஷயங்களைத்தான். அவர்களுக்கு குறுகிய காலச் சந்தைப்போக்கு ஒரு பொருட்டே கிடையாது. நிறுவனங் களின் அடிப்படை விஷயம்தான் தாரக மந்திரம்.

நிறுவனங்களின் அடிப்படை!

ஒரு நிறுவனத்தின் அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவும் பேலன்ஸ்ஷீட்டில் பல நுணுக் கமான விஷயங்கள் இருந்தாலும், பொதுவான நான்கு விஷயங்களைக் கட்டாயம் கவனிக்க வேண்டும்.

அந்த நான்கு விஷயங்கள், விற்பனை, லாபம், கடன் மற்றும் பணம். குறிப்பாக, ஒரு நிறுவனத்தின் கடன் நிலையை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஏனென்றால், கடந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களில் கடன் அறவே இல்லை அல்லது மிகச் சிறிய கடன் மட்டுமே இருந்திருக்கும். அதுவே, அந்த நிறுவனப் பங்குகளுக்குப் பெரிய பலமாக அமைந்தது. எனவே, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நிறுவனங்கள் கடன் வாங்கக் காரணங்கள்!

பொதுவாக, நிறுவனங்களின் வியாபார வளர்ச்சிக்காக கடன் வாங்குவது என்பது ஓர் இயல்பான போக்குதான். அதிலும் குறிப்பாக, முதலீடுகள் அதிகமாகத் தேவைப்படும் தொழில்களில் கடன் அதிகமாக வாங்கப்படும்.

1. உற்பத்திப் பெருக்கம் (கெப்பாசிட்டி எக்ஸ்பேன்ஷன்)

2. புதிய தொழில்நுட்பம்

3. பிற நிறுவனங்களைக் கையகப் படுத்துதல்

4. புதிய சந்தைகளில் கால்பதிக்க

இந்தக் காரணங்கள் எல்லாம் நிறுவனங்கள் தங்களின் தொழில், வியாபார, லாப வளர்ச்சியை மனதில் கொண்டு வாங்கப்படும் கடன்கள்.

கடன் இல்லா நிறுவனங்கள்!

கடன் இல்லா நிறுவனங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என நீங்கள் வியந்திருக்கலாம். அதற்கான பதிலைப் பார்ப்போம்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பல்வேறு ஏற்ற இறக்கங் களைச் சந்தித்தது. பத்தாண்டுகளுக்கு முன்னால் 78 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி படிப்படியாக விழுந்து 4% என்ற அளவை எட்டியது.

உலகப் பொருளாதார வீழ்ச்சியை அடுத்து நமது பொருளாதாரம் மேலும் சரிவை சந்தித்தது.

பொருளாதாரம் வலுவான நிலையில் இருந்தபோது, நிறுவனங்கள் தங்களின் வியாபார வளர்ச்சிக்காக கடன் வாங்குவது அதிகரித்தது.

கடன் வட்டி குறைவாக இருந்ததும் ஒரு முக்கியக் காரணம். வங்கிகளும் ஆர்வத்துடன் கடன் அளித்தன.

பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியதும் இந்தச் சூழல் தலைகீழாக மாறியது. வியாபார வீழ்ச்சி, விற்பனை வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு, கடன் வட்டி அதிகரிப்பு போன்ற காரணங்களால் நிறுவனங்கள் திணறியதை நாம் பார்த்தோம்.

ரிசர்வ் வங்கி கடன் வட்டியை உயர்த்திக்கொண்டே போனது, நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது. ஒருபக்கம் கடன், மறுபக்கம் வட்டிச் சுமை, இன்னொரு புறம் வியாபார வீழ்ச்சி என்று நிறுவனங்கள் சுமையால் தத்தளித்தன.

சரி, அடிப்படையான விஷயத்துக்கு வருவோம். முதலீட்டாளர்கள் கடன் இல்லா நிறுவனங்களில் முதலீடு செய்வது சரியா அல்லது கடனுள்ள நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாமா?

இந்தக் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லிவிட முடியாது. அதற்குமுன் அதிகக் கடன் வைத்துள்ள நிறுவனங் களைப் பார்ப்போம்.

கடன் இல்லா கம்பெனிகள் P26b

அதிக கடன் வைத்துள்ள நிறுவனங்கள்!

1. பவர் ஃபைனான்ஸ்

2. ஆர்இசி

3. ரிலையன்ஸ்

4. பவர் கிரிட் கார்ப்பரேஷன்

5. எல்ஐசி ஹவுஸிங்

6. என்டிபிசி

7. திவான் ஹவுஸிங்

8. சேச ஸ்டெர்லைட்

9. பூஷன் ஸ்டீல்

10. ஜேபி அசோசியேட்

இன்னும் பல நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் அடங்கும்.

கடந்த காலத்தில், குறிப்பாக 2009க்குப் பிறகு கடன் இல்லா மற்றும் குறைந்த அளவு கடன் உள்ள நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக, ஐ.டி, பார்மா, எஃப்எம்சிஜி நிறுவனங்கள்.

இனி, அதிக லாபம் தந்த கடன் இல்லாத அல்லது குறைந்த அளவு கடன் உள்ள நிறுவனங்களைப் பார்ப்போம்.

1. இன்ஃபோசிஸ்

2. பஜாஜ் கார்ப்

3. சீமென்ஸ்

4. கெடிலா ஹெல்த்கேர்

5. ஐஷர் மோட்டார்ஸ்

6 ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ்

7. சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ்

8. ப்ளூ டார்ட்

9. பாட்டா இந்தியா

10. போஸ்ச் (Bosch)

11. நெஸ்லே (Nestle)

12. கோல்கேட் பாமோலிவ்

13. விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ்

மேற்கண்ட நிறுவனங்களின் பங்குகள் 2009 மற்றும் 2013-க்கு உட்பட்ட காலகட்டத்தில் நல்ல லாபம் தந்தவையாகும். இந்தக் காலகட்டத்தில்தான் பொருளாதார வீழ்ச்சி, தொழில் வீழ்ச்சி, கடன் வட்டி அதிகரிப்பு போன்ற விஷயங்கள் இந்தியாவை நிலைகுலைய வைத்தன.

அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் இந்த ட்ரெண்டைப் புரிந்துகொண்டு கடன் இல்லா நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டினர். ஐ.டி, பார்மா, எஃப்எம்சிஜி போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்கள் இந்த வகையைச் சாரும்.

அதேகாலகட்டத்தில், கடனுள்ள நிறுவனங் களின் பங்குகள் இறங்குமுகமாக இருந்தன.

1. பவர் ஃபைனான்ஸ்

2. ஆர்இசி

3. ஐஓசி

4. பார்தி ஏர்டெல்

5. பவர் கிரிட்

6. ரிலையன்ஸ்

7. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

8. அதானி என்டர்பிரைசஸ்

9. என்டிபிசி

10. ஜேபி அசோசியேட்ஸ்

இவை மட்டும் அல்லாது பல ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு, உலோகம், சுரங்கம், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஏர்லைன்ஸ் துறை நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறுபவை.

2014-ம் ஆண்டில் சந்தையில் பாசிட்டிவ் சென்டிமென்ட் இருந்த தனால் பெருவாரியான பங்குகள் ஏறியதையும் பார்த்தோம்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு நிறுவனத்துக்கு கடன் சாதகமா அல்லது பாதகமா என்று கேட்டால், அப்போது இருக்கும் பொருளாதார மற்றும் தொழில்துறை சூழலைப் பொறுத்து அமையும்.

கடந்த 4 முதல் 5 ஆண்டுகள் கடனுள்ள நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்தன. கடனாளி நிறுவனங் களால் ஒட்டுமொத்த சந்தையும் பாதிக்கப்பட்டதைப் பார்த்தோம்.

குறிப்பாக, வங்கித் துறையில் என்பிஏ என்கிற வாராக்கடன் பிரச்னை பூதாகாரமாக மாறி வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது, பொதுத்துறை வங்கிகள்தான். மூடப்பட்ட கிங்ஃபிஷர் நிறுவனத் திடமிருந்து மட்டுமே ரூ.7,000 கோடி கடன் நிலுவையில் உள்ளது.

ஒரு நிறுவனம் கடன் வாங்குவது பாதகமான விஷயம் அல்ல. அந்தக் கடன் எதற்காக வாங்கப்பட்டிருக்கிறது, அந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறதா, கடன் வாங்கியபின் அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது, இன்னும் எத்தனை ஆண்டுகளில் அந்தக் கடனை திரும்பத் தரமுடியும் என்பதை ஆராய வேண்டியது முதலீட்டாளரின் கடமை. இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் தற்போது செல்லாவிட்டாலும், வீழ்ச்சி என்பது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ரிசர்வ் வங்கியும் கடன் வட்டியைக் குறைக்கத் துவங்கியிருக்கிறது.

கடன் இல்லா கம்பெனிகள் P26c

நிறுவனங்களின் டிவிடெண்ட் யுக்தி!

கடந்த காலங்களில் கடனுள்ள பல நிறுவனங்கள் பணக் கையிருப்பு இல்லாமலே பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கின. அதிகக் கடன் உள்ள நிறுவனங்களும் இதில் அடக்கம். அதனால், முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் தரக்கூடிய பங்கு என்று கருதி அதிகக் கடன் உள்ள நிறுவனங் களில் முதலீடுசெய்து மாட்டிக் கொண்டுவிடக் கூடாது.

முன்னே குறிப்பிட்ட பவர் கிரிட், ஜேபி அசோசியேட்ஸ், அதானி என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்கள் கடந்த காலங்களில் தாராளமாக டிவிடெண்ட் வழங்கின.

எனவே, முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனங் களின் கடன் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களை ஈர்க்க கடன் உள்ள நிறுவனங்கள் டிவிடெண்ட் யுக்தியை பயன்படுத்து கின்றன.

தற்போது உள்ள பங்குச் சந்தை சூழல் மிகவும் ஆதரவாக இருக்கிறது. பாசிட்டிவ் சென்டிமென்ட், அரசின் மீதுள்ள நம்பிக்கை போன்றவை முக்கியக் காரணங்களாகும். தற்போது கடன் வட்டி குறையத் தொடங்கினாலும், பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சி ஏற்பட சில காலம் காத்திருக்க வேண்டும்.

அறிவிக்கப்பட்ட காலாண்டு நிதி முடிவுகளும் பொதுவாக எதிர்பார்த்த அளவில் இல்லை. இன்னும் சொல்லப் போனால், வங்கிகளுக்கு வாராக்கடன் என்பது அதிகரித்திருக்கிறது.

இந்தச் சூழலில் கடன் அதிகம் உள்ள நிறுவனங்களைத் தவிர்த்து, இதர நிறுவனங்களை முதலீட்டுக்குத் தேர்ந்தெடுப்பது அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றததாக இருக்கும்.

கடன் வட்டி குறையத் தொடங்கியது ஓர் ஆறுதலாக இருந்தாலும், கடன் சுமை தீர்ப்பதற்குப் பல காலம் ஆகும் என்பதே யதார்த்தமான உண்மை. மேலும், சில நிறுவனங்கள் கடனை அடைப்பதற்காக அவர்களுடைய குழும நிறுவனங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

நீண்ட கால முதலீட்டாளர்கள் கடனில்லா நல்ல நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறுவதோடு, நீண்ட காலச் சொத்தாகப் பங்குகள் அமையும் என்பது நிச்சயம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கே சந்தைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் அனலிஸ்ட்டுகளின் சொந்தக் கருத்துகளே, அது நாணயம் விகடன் இதழைச் சாராது. இங்கே சொல்லப்பட்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்யும்முன் உங்களின் நிதி ஆலோசகரை கலந்து ஆலோசிக்க கேட்டுக்கொள்கிறோம்.

முக நூல் ....ந.விகடன்


தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum