வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


இன்றைய பங்கு சந்தை நிலவரம்

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Thu Dec 19, 2013 3:50 pm

First topic message reminder :

வியாழக்கிழமை, நவம்பர் 18

மும்பை பங்கு சந்தை 65.50 புள்ளிகள் அதிகரித்து 19934.64 ஆக காணப்பட்டது. தேசிய பங்கு சந்தை நிப்டி 10.10 புள்ளிகள் அதிகரித்து 5998.80 ஆக காணப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:-

24 கேரட் தங்கத்தின் விலை 2010 ரூபாய், 22 கேரட் தங்கத்தின் விலை 1869 ரூபாய் வெள்ளி விலை கிராம் 1க்கு ரூ 43.20 பைசா வெள்ளி கிலோ ரூ 40360.00 ஆக காணப்பட்டது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down


இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Fri Jun 13, 2014 2:21 pm

சரிவான நிலையில் சென்செக்ஸ் நிறைவு

சென்செக்ஸ் 348 புள்ளிகள் சரிந்து 25,228 என்ற நிலையிலும், நிப்டி 107 புள்ளிகள் சரிந்து 7,542 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

எச்சிஎல் டெக், டெக் எம், எம் அன்ட் எம், தெர்மேக்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், டிஎல்எப், எச்பிசிஎல், யுகோ வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Tue Jun 17, 2014 6:13 pm

பங்குசந்தைகளில் காளையின் ஆதிக்கம்! - சென்செக்ஸ் 330 புள்ளிகள் ஏற்றம்!!

மும்பை : கடந்த இரு தினங்களாக கரடியின் பிடியில் சிக்கியிருந்த இந்திய பங்குசந்தைகளில் இன்று(ஜூன் 17ம் தேதி) காளையின் ஆதிக்கம் இருந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின் போது பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின. இருப்பினும் ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, இதனால் எண்ணெய்-எரிவாயு உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் எழுச்சி கண்டன. அதிலும் குறிப்பாக வர்த்தகம் முடிவதற்கு நான்கு மணிநேரத்திற்கு முன்பாக பங்குசந்தைகளில் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியதால் சென்செக்ஸ் 330 புள்ளிகள் ஏற்றமும், நிப்டி மீண்டும் 7600 புள்ளிகளையும் தொட்டது.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 330.71 புள்ளிகள் உயர்ந்து 25,521.19-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 98.15 புள்ளிகள் உயர்ந்து 7,631.70 புள்ளிகளிலும் முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான நிறுவன பங்குகள் 2.86 சதவீதம் உயர்ந்து இருந்தன. இதற்கு அடுத்தப்படியாக பொதுத்துறை நிறுவன பங்குகள் 2.74 சதவீதமும், வங்கி துறை பங்குகள் 2.28 சதவீதமும், முதலீட்டு தொடர்பான பங்குகள் 1.93 சதவீதமும் உயர்ந்து இருந்தன. அதேசமயம் எப்எம்சிஜி பங்குகள் சரிந்து காணப்பட்டன.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Tue Jun 17, 2014 6:14 pm

சரிவிலிருந்து பங்குசந்தைகள் மீண்டன!

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சற்றுநேரத்திலேயே மீண்டன. பணவீக்கம் உயர்வு, ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி போன்ற காரணங்களால், இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூன் 17ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 51.25 புள்ளிகள் சரிந்து 25,139.23-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 4.95 புள்ளிகள் சரிந்து 7,528.60-ஆகவும் இருந்தநிலையில் பார்தி ஏர்டெல், கெயில், கோல் இந்தியா உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் விலை ஏற்றம் கண்டதால் பங்குசந்‌தைகள் சரிவிலிருந்து மீண்டன. காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 38 புள்ளிகளும், நிப்டி 13 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Mon Jun 23, 2014 6:38 pm

மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குசந்தைகளில் சரிவு

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்த வேளையில், வாரத்தின் முதல்நாளும் சரிவிலேயே முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. ஆனால், ஈராக்கில் நிலவும் தொடர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது, ஐடிசி., நிறுவன பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தது போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. அதிலும் கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குசந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 74.19 புள்ளிகள் சரிந்து 25,031.32-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 18.10 புள்ளிகள் சரிந்து 7,493.35-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.

இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி., நிறுவன பங்குகள் விலை 6.5 சதவீதம் சரிந்தது. கடந்த 2013 செப்டம்பருக்கு பிறகு இந்நிறுவன பங்குகள் விலை இந்தளவு சரிவது இதுவே முதல்முறையாகும். இவை தவிர்த்து எப்எம்சிஜி., பங்குகள் விலை 4.06 சதவீதமும், ஐடி தொடர்பான பங்குகள் விலை 1.56 சதவீதமும் சரிந்தன. அதேசமயம் சர்க்கரை தொடர்பான பங்குகள் விலை 11 சதவீதம் அளவுக்கு உயர்ந்து இருந்தன. மேலும் ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பெல், போன்ற நிறுவன பங்குகளும் ஏற்றத்தில் காணப்பட்டன.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Sat Jun 28, 2014 11:14 am

அன்னிய முதலீட்டால்பங்கு சந்­தை எழுச்சி


மும்பை:இந்­திய பங்குச் சந்­தையில், அன்­னிய முத­லீடு அதி­க­ரித்­த­தை­ய­டுத்து, நேற்று, வர்த்­தகம் ஏற்­றத்­துடன் நிறை­வ­டைந்­தது.மும்பை பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், வர்த்­தகம் முடியும் போது, 37.25 புள்­ளிகள் உயர்ந்து, 25,099.92 புள்­ளி­களில் நிலை­ பெற்­றது.தேசிய பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், ‘நிப்டி’, 15.60 புள்­ளிகள் உயர்ந்து, 7,508.80 புள்­ளி­களில் நிலை­கொண்­டது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Jul 02, 2014 11:51 am

பங்குசந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் புதிய உச்சம்

மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. அதிலும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால், அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளதால் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (ஜூலை 2ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 216.52 புள்ளிகள் உயர்ந்து 25,732.87 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்தன. தேசிய பங்குசந்தையான நிப்டி 59.55 புள்ளிகள் உயர்ந்து 7,694.25 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட், பொருளாதார வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட்டாக இருக்கும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருப்பது, ஜூன் மாதத்தில் உற்பத்தி அதிகரித்தது மற்றும் ஆட்டோமொபைல் துறையில் காணப்படும் வளர்ச்சி போன்ற காரணங்களாலும் பங்குசந்தைகளில் எழுச்சி காணப்படுகின்றன.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Thu Jul 03, 2014 3:20 pm

3 மணிநேரம் வர்த்தகம் பாதிப்பு: சரிவுடன் முடிந்த இந்திய பங்குச் சந்தைகள்

மும்பை : மும்பை பங்குச் சந்தையான பி.எஸ்.இ.,யில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை சுமார் 3 மணி நேரம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கிய போதும், சரிவுடனேயே முடிவடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 17.76 புள்ளிகள் சரிந்து 25,823.45 புள்ளிகளாகவும், நிப்டி 9.25 புள்ளிகள் சரிந்து 7715.90 புள்ளிகளாகவும் இருந்தன.

1243 பங்குகள் ஏற்றத்துடனும், 1485 பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன. மேலும் 109 பங்குகள் மாற்றம் இன்றி காணப்பட்டன. டாடா மோட்டார்ஸ், விப்ரோ, மகேந்திரா அன் மகேந்திரா, டி.சி.எஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயம் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டல்கோ, டாடா பவர், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Tue Jul 08, 2014 10:08 am

பங்குச்சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 26,000 புள்ளிகளை எட்டியது

பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பால், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் முதன்முறையாக 26,000 புள்ளிகளை தொட்டது.

இன்று காலை மும்பை பங்குச்சந்தை தொடங்கியதும சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்து 26,000 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை 36.35 புள்ளிகள் உயர்ந்து 7,787.95 புள்ளிகளாகவும் இருந்தது.

பெரிய நிறுவனங்களான டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ, டாடா பவர், டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி.,எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்துடன் காணப்பட்டன.

பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் இருந்ததாக வல்லுனர்கள் கூறினர். இது வருவாய் ஈட்டும் காலகட்டம் என்பதால், பங்குச்சந்தையில் கடந்த வாரத்தில் மட்டும் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

ஆசிய மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தையின் நிலவரமும் ஏற்றத்தில் உள்ளன.

இருப்பினும், சர்வதேச சந்தையில் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளதால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் குறைந்து, ரூபாயின் மதிப்பு ரூ.59.85 ஆக உள்ளது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Jul 09, 2014 11:54 am

பங்குச் சந்தையை சரித்த ரயில்வே பட்ஜெட்

நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டுக்குப் பிறகு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 518 புள்ளிகள் சரிந்தது. கடந்த 10 மாதங்களில் இந்த அளவுக்கு பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டதில்லை.

நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதலாவது ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு சலுகைகள் இல்லாததே பங்குச் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 25582 புள்ளிகளாக இருந்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் குறியீட்டெண் 163 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 7808 புள்ளிகளாகக் குறைந்தது.

ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் காலையில் ஏறுமுகத்திலிருந்தன. ஆனால் பிற்பகலில் மளமளவென சரிந்தது. இந்நிறுவன பங்குகளின் விலைகள் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை சரிந்தது. டெக்ஸ்மேகோ ரெயில் டிடாகர் வேகன்ஸ், காளிந்தி ரயில் நிர்மாண், கண்டெய்னர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 28 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

பிஹெச்இஎல் நிறுவனம் அதிகபட்சமாக 8.16%, என்டிபிசி 5.36%, டாடா பவர் 5.04%, கோல் இந்தியா 4.96%, லார்சன் அண்ட் டியூப்ரோ 4.35%, டாடா ஸ்டீல் 4.25%, ஓஎன்ஜிசி 4.23% அளவுக்கு சரிவைச் சந்தித்தன. எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் சரிவிலிருந்து தப்பவில்லை.

கட்டுமானத் துறை பங்குகள் 7.16 சதவீதமும், எரிசக்தித்துறை பங்குகள் 6.37 சதவீதமும், கேபிடல் கூட்ஸ் 4.80 சதவீதமும் சரிந்தன. மொத்தம் 2,234 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 770 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 4,295.79 கோடியாகும்.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Tue Aug 19, 2014 4:17 pm

5- ஆவது நாளாக சென்செக்ஸ் உயர்வு: நிஃப்டி வரலாறு காணாத உயர்வு

சென்செக்ஸ் 287 புள்ளிகள் உயர்ந்து 26,390 என்ற நிலையிலும், நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 7,874 என்ற மிக உயர்வான நிலையிலும் இன்றைய வர்த்தகம் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் கடந்த 5 நாட்களாக ஏற்றம் கண்டுள்ளன.

உக்ரைன் உள்நாட்டுப் பிரச்சினை போன்ற உலக அளவிலான நெருக்கடிகளைத் தாண்டி, பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள நேர்மறை முயற்சிகளால் கடந்த ஜூன் மாதம் முதல், அயல்நாட்டு முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

சிப்லா, ஓஎன்ஜிசி, ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், பெல் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனப் பங்குகள் லாபத்தையும், ஐடிசி, இன்போசிஸ், எச்டிஎப்சி, டிசிஎஸ், ஹீரோ மெட்ரோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவையும் சந்தித்தன.

அதே போல, இன்றைய வர்த்தகத்தின் போது நிஃப்டி வரலாறு காணாத அளவுக்கு உயர்வு கண்டது. இன்று வர்த்தகத்தின்போது நிஃப்டி புள்ளிகள் 80 மேலாக உயர்ந்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே உச்சமாக கருதப்பட்ட 7,840 என்ற புள்ளிகளை கடந்து தற்போது 7,843 என்ற புதிய உச்சத்தை நிப்ஃடி தொட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் குறிப்பிடப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் முதலீட்டாலர்கள் ஈர்க்கப்பட வேண்டும் ஆகியவைகளில் ஈர்ப்பினார் சென்செக்ஸில் இந்த ஏற்றம் காணப்பட்டதாக சந்தை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Fri Aug 29, 2014 9:34 am

தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை: 8000 புள்ளிகளை நெருங்குகிறது நிப்டி

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் போக்கு இருப்பதால் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை கள் ஏறு முகத்தில் இருக்கின்றன. தொடர்ந்து ஏழாவது மாதமாக இந்திய பங்குச்சந்தைகள் உய ர்ந்து முடிவடைந்தன. மத்திய அரசில் மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை, புதிய நிலையான அரசு அமைந்திருப்பது ஆகிய கார ணங்களைத் தொடர்ந்து ஏழாவது மாதமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் பங்குச்சந்தைகள் உயர்ந்தே முடிவடைந்திருக்கின்றன. கடந்த பிப்ரவரியில் இருந்து இதுவரை இந்திய பங்குச்சந்தைகள் 27% உயர்ந்துள்ளன.

ஆகஸ்ட் மாத டெரிவேட்டிவ் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை வெளியாகும் ஜூன் காலாண்டு ஜிடிபி சாதகமாக வரும் என்பன உள்ளிட்ட நம்பிக் கைகள் காரணமாக பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் முடிவ டைந்தன.

சென்செக்ஸ் 78 புள்ளிகள் உயர்ந்து 26638 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 26674 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 7954 என்ற புள்ளியில் முடிவடைந்தது.

கேபிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ் துறைகளில் வாங்கும் போக்கு இருந்தது. ரியால்டி, ஐடி மற்றும் மெட்டல் துறை பங்குகளில் விற்கும் போக்கு இருந்தது. ஆனால் மிட்கேப் குறியீடு சிறிதளவு சரிந்தும், ஸ்மால்கேப் குறியீடு பெரிய ஏற்றம் இல்லாமலும் முடிந்தது.

கேபிடல் குட்ஸ் துறையில் சென் செக்ஸ் பட்டி யலில் இருக்கும் பி.ஹெச்.இ.எல். பங்கு 5 சதவீதம் உயர்ந்து முடிந்தது. மேலும், நால்கோ, ஜி.எம்.டி.சி., டாடா கம்யூனி கேஷன்ஸ், இந்தியன் ஓட்டல், என்.ஹெச்.பி.சி., இன்பிரா டெல், நெஸ்லே, ஐடியா ஆகிய பங்குகள் கணி சமாக உயர்ந்தன.

இந்தியன் வங்கி, புஷான் ஸ்டீல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜே.பி.பவர், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், ஹெவல்ஸ் இந்தியா, ஆந்திரா வங்கி, ஜே.பி.அசோசியேட்ஸ் ஆகிய பங்கு சரிந்து முடிவடைந்தன.

புதன்கிழமை 290 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்தார்கள். ஆகஸ்ட் 26ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 2,628 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரையில் 70,871 கோடி ரூபாய் முதலீடு வந்திருக்கிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை.

ஜிடிபி தகவல் இன்று வெளியீடு

ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) ஜூன் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியை வெளியிட இருக்கிறது. 2013-14ம் ஆண்டு க்கான ஆண்டு அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது.

மூடிஸ் நிறுவனம் 5.1 சதவீதமாக இருக்கும் என்றும், இக்ரா நிறுவனம் 5.5 சதவீதம் என்றும், கோடக் மஹிந்திரா 5.5 சதவீதம் முதல் 5.6 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்திருக் கின்றன.
தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Tue Sep 02, 2014 9:47 am

8000 புள்ளிகளைத் தாண்டியது நிப்டி: ஜிடிபி உயர்வு காரணமாக பங்குச்சந்தையில் ஏற்றம்


வெள்ளிக்கிழமை வெளியான முதல் காலாண்டின் ஜிடிபி புள்ளி விவரங்கள் சாதகமாக வந்ததால், திங்கள் கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி முதல் முறையாக 8000 புள்ளிகளைக் கடந்து முடிவடைந்தது. முதல் காலாண்டு இந்திய ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவீதமாகும். நிப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 8027 புள்ளிகளில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 8035 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

அதேபோல சென்செக்ஸ் 229 புள்ளிகள் உயர்ந்து 26867 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 26900 புள்ளியை தொட்டது சென்செக்ஸ். மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. சி.என்.எக்ஸ் மிட்கேப் குறியீடு 1.99 சதவீதமும், பிஎஸ்.இ. ஸ்மால்கேப் குறியீடு 133 புள்ளிகளும் உயர்ந்தன.

பேங்க் நிப்டியும் முதல் முறையாக 16000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடிந்தது.

நிப்டி 7000 புள்ளியில் இருந்து 8000 புள்ளிகளை தொடுவதற்கு 78 வர்த்தக தினங்களை மட்டுமே எடுத்துக்கொண்டது.

சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் ஆறு பங்குகள் புதிய உச்சத்தை தொட்டன. ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ், மாருதி சுசூகி இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலிவர், சிப்லா மற்றும் எம் அண்ட் எம் பங்குகள் இதுவரை இல்லாத அளவு உயர்ந்தன. மேலும் டெக் மஹிந்திரா, அர்விந்த், புளு டார்ட் கஜேரியா கெமிக்கல்ஸ் ஆகிய பங்குகள் தங்களுடைய உச்சபட்ச விலையை தொட்டன. மேலும் சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 135 பங்குகள் தங்களுடைய 52 வார உச்சபட்ச விலையை தொட்டன. தேசிய பங்குச்சந்தையில் இருக்கும் 65 பங்குகள் தன்னுடைய 52 வார உச்சபட்ச விலையை தொட்டன.

அதேபோல் ஆட்டோ மற்றும் கன்ஸ்யூமர் டியுரபிள் குறியீடும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து முடிந்தன. பிஎஸ்இ 100, பிஎஸ்இ 200, பிஎஸ்இ 500 ஆகிய குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. எம்.எம்.சி.ஜி. துறை குறியீட்டை தவிர அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தன.

மெட்டல் குறியீடு 2.79%, கேபிடல் குட்ஸ் 2.75%, ரியால்டி 2.72%, பவர் குறியீடு 2.6 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன. எப்.எம்.சி.ஜி. குறியீடு 0.67 சதவீதம் சரிந்தது.

சென்செக்ஸ் இருமடங்கு உயரும்

சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் குறியீடு சென்செக்ஸ். இந்த ஆண்டு நிறுவனங்களின் வருமானமும் நன்றாக இருப்பதால் அடுத்த நான்கு ஆண்டுகளில் சென்செக்ஸ் குறியீடு இரு மடங்காக உயரும் என்றும் பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ஞ் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை 5 சதவீதம்வரை சரியலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது சென்செக்ஸ் உயரும் என்றே அந்த நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது. நிறுவனங்களின் வளர்ச்சியை சந்தை பிரதிபலிக்கிறது.
-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Sep 03, 2014 10:17 am

27000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

திங்கட்கிழமை வர்த்தகத்தில் நிப்டி முதல் முறையாக 8000 புள்ளிகளை கடந்தது. அதை போலவே செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் முதல்முறையாக 27000 புள்ளிகளைக் கடந்தது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்தது, அந்நிய முதலீடு தொடர்ந்து அதிகரிப்பது, பிரதமர் மோடி ஜப்பானில் பேசியது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன.

சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயர்ந்து 27019 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 27082 புள்ளியைத் தொட்டது. அதேபோல நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 8083 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 8101 புள்ளியை தொட்டது.

தொடர்ந்து எட்டாவது நாளாக சென்செக்ஸ் உயர்ந்து முடிவடைந்தது. 26000 புள்ளியை கடந்த ஜூலை 7-ம் தேதி சென்செக்ஸ் தொட்டது. அதற்கடுத்து 40 வர்த்தக தினங்களில் 1000 புள்ளிகள் உயர்ந்து 27000 புள்ளியை சென்செக்ஸ் தொட்டது.

உலோகம், மின்சாரம் மற்றும் கேபிடல் குட்ஸ் துறை குறியீட்டை தவிர அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. நுகர்வோர் பயன்படுத்தும் பொருள்களின் குறியீடு 2.76 சதவீதமும், மருத்துவம் 1.84 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் 1.04 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன.

மிட்கேப் குறியீடு 0.55 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.91 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன. திங்கட்கிழமை வர்த்தகத்தில் 554.14 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது.

சென்செக்ஸ் பங்குகளில் சிப்லா, பார்தி ஏர்டெல், சன் பார்மா, ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்து முடிந்தன. மாறாக எஸ்.எஸ்.டி.எல், டாடா பவர், ஹிண்டால்கோ, விப்ரோ மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

ரூபாய் மதிப்பு சரிவு

அந்நிய முதலீடு அதிகரித்து வரும் அதே நேரத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. ஆசிய கரன்ஸிகளின் பலவீனமான நிலை, ஐரோப்பிய மத்திய வங்கியின் ஊக்க நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு, அமெரிக்காவின் வேலை இல்லாதவர்கள் குறித்த தகவல்கள் போன்றவை வர இருப்பதால் ரூபாயின் மதிப்பு ஸ்திரமில்லாமல் இருக்கிறது. 15 காசுகள் சரிந்து ஒரு டாலர் 60.68 ரூபாயாக இருக்கிறது.
-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty தொடர்ந்து ஏறுமுகத்தில் பங்குச் சந்தை: 9 நாளில் 825 புள்ளிகள் உயர்வு

Post by தருண் Thu Sep 04, 2014 11:47 am

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 8_2091267h


பங்குச் சந்தை தொடர்ந்து 9-வது நாளாக ஏறுமுகத்தைக் கண்டது. புதன்கிழமை 125 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 27139 புள்ளிகளாக உயர்ந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்ததே எழுச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

தேசிய பங்குச் சந்தையில் 31 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 8114 புள்ளிகளைத் தொட்டது. முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 15 நிறுவனங்களின் பங்குகள் லாபம் ஈட்டின.

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.45 சதவீதம் முதல் 3.40 சதவீதம் வரை உயர்ந்தன.

கடந்த 9 நாள் வர்த்தகத்தில் பங்குச் சந்தையில் மொத்தம் 825 புள்ளிகள் உயர்ந்துள்ளன.

பங்குச் சந்தை உயர்வுக்கு சர்வதேச நிலவரமும் முக்கியக் காரணமாகும். ரஷியா, உக்ரைன் இடையிலான பதற்றம் தணிந்தது மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது ஆகியனவும் காரணங்களாகும்.

பார்தி ஏர்டெல், கோல் இந்தியா நிறுவனப் பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாக இருந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ரூ. 672 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) அளவு குறைந்துள்ளது அந்நிய முதலீடுகள் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும். மேலும் பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மேலும் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

இன்ஃபோசிஸ் (3.41%), கோல் இந்தியா (3.40%), விப்ரோ (3%), பார்தி ஏர்டெல் (2.87%), டிசிஎஸ் (2.45%), லார்சன் அண்ட் டியூப்ரோ (1.36%), டாடா ஸ்டீல் (1.26%) அளவுக்கு ஏற்றம் பெற்றன.

மொத்தம் 1,529 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,494 நிறுவனப் பங்குகள் கணிசமான சரிவைச் சந்தித்தன. 112 நிறுவனப் பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ரூபாய் மதிப்பு உயர்வு:

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு புதன்கிழமை 19 காசு உயர்ந்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 60.49 தர வேண்டிய நிலை உருவானது. கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் மதிப்பு இந்த அளவுக்கு ஸ்திரமடைந்தது இதுவே முதல் முறையாகும்.
-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Sat Sep 06, 2014 11:34 am

2-வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவு

சர்வதேச சூழ்நிலைகள் மற்றும் லாபத்தை வெளியே எடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சரிந்து முடிந்தது. சென்செக்ஸ் 59 புள்ளிகள் சரிந்து 27026 புள்ளி களில் முடிந்தது. ஆனாலும் வர்த்தகத்தின் இடையே 27000 புள்ளிகளுக்கு கீழே சென்றது, 26920 என்ற புள்ளி வரைக்கும் சரிந்தது. அதிகபட்சமாக 27178 புள்ளிகள் வரை சென்றது. வியாழன் அன்றும் சென்செக்ஸ் 54 புள்ளிகள் சரிந்தது.

இதேபோல நிப்டியும் 9 புள்ளிகள் சரிந்து 8086 புள்ளிகளில் முடிவடைந்தது. ஆனால் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் உயர்ந்து முடிவடைந்தன. மிட்கேப் குறியீடு 0.28 சதவீதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு 1.25 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன.

புளுசிப் பங்குகள் சரிந்ததால் முக்கிய பங்குச்சந்தை குறியீடுகள் சரிந்து முடிவடைந்தன. ஹெச்.டி.எப்.சி., ஐசிஐசிஐ வங்கி, ஹிரோமோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகளின் சரிவு பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணங்களாகும். சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 பங்குகளில் 17 பங்குகள் சரிந்தும் 13 பங்குகள் உயர்ந்தும் முடிவடைந்தன.

துறை வாரியாக பார்க்கும் போது கேபிடல் குட்ஸ், மெட்டல் மற்றும் ரியால்டி ஆகிய துறை குறீயிடுகள் உயர்ந்தும், ஆட்டோ, வங்கி, எப்.எம்.சி.ஜி மற்றும் மின் துறை குறியீடுகள் சரிந்து முடிவடைந்தன.

சர்வதேச சந்தை நிலவரம்

ஐரோப்பிய மத்திய வங்கி (இசிபி) புதிய ஊக்க நடவடிக்கைகளை அறிவித்ததால் வெள்ளிக்கிழமை டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பு கடுமையாக சரிந்தது. இது மட்டுமல்லாமல் வட்டி விகிதங் களையும் ஐரோப்பிய மத்திய வங்கி குறைத்தது. மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் யூரோ அதிகமாக சரிந்தது. ஐரோப்பாவின் முக்கியமான பங்குச்சந்தைகள் அனைத்தும் சரிவுடன் தன்னுடைய வர்த்தகத்தை தொடங்கின. 18 நாடுகளை சேர்ந்த ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு தொடர்ந்து இரண்டாம் காலாண்டாக வளர்ச் சியை எட்டவில்லை.

ஒரு பக்கம் ஐரோப்பிய யூனியன் ஊக்க நடவடிக்கைகளை கொடுத்து வரும் சூழ்நிலையில் அமெரிக்கா ஊக்க நடவடிக்கைகளைக் குறைத்து வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்து வருவதினால் டாலர் மதிப்பு உயர்கிறது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையில் சரிவு இருக்கிறது. டாலர் மதிப்பு பலமடைந்து வந்தாலும் இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு தொடர்ந்து இருப்பதால் ரூபாயின் மதிப்பில் பெரிய சரிவு இல்லாமல் இருக்கிறது.

ஜேபி அசோசியேட்ஸ் கடும் சரிவு

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் ஜே.பி.அசோசியேட்ஸ் பங்கு 11 சதவீதம் சரிந்தது. வியாழன் வர்த்தகத்திலும் இந்த பங்கு 18 சதவீதம் சரிந்தது குறிப் பிடத்தக்கது. நிறுவனத்தின் புரமோட்டர் ஜேபி இன்பிரா வென்ச்சர்ஸ் 1.3 கோடி பங்குகளை விற்றதால் இந்த பங்கில் சரிவு இருந்தது. வெள்ளிக்கிழமை 33.85 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. ஜேபி குழும நிறுவனங்களின் பங்குகளும் சரிவில் இருந்து தப்பவில்லை.

ஜேபி இன்பிராடெக் 7.23 சதவீதம் சரிந்தது. கடந்த நான்கு நாட்களாக ஜேபி அசோசியேட்ஸ் பங்கு சுமார் 30 சதவீதம் சரிந்தது. இதனால் 2473 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இந்த பங்கு இழந்தது. பணத் தேவைகளுக்காக சிறிய அளவு பங்கினை புரமோட்டர் விற்றிருக்கிறார். ஆனால் புரமோட்டர் தன்வசம் இருக்கும் அனைத்து பங்குகளையும் விற்கப் போவதாக வதந்தி இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் புரமோட்டர்கள் வசம் 72.36 கோடி பங்குகள் இருக் கின்றன. இதில் 1.45 சதவீத பங்குகள் மட்டுமே விற்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
--தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Thu Sep 11, 2014 3:47 pm

இரண்டாம் நாளாக பங்குச்சந்தைகள் சரிவு: ரூபாய் மதிப்பும் சரிந்தது

முதலீட்டாளர்களிடையே லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகரித்தது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை முன் கூட்டியே அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகி இருக்கும் காரணங்களால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன.

சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 27057 புள்ளியிலும், நிப்டி 58 புள்ளிகள் சரிந்து 8094 புள்ளியிலும் முடிவடைந்தன. ஆனால் அதே சமயத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சிறிதளவு உயர்ந்து முடிவடைந்தன.

துறை வாரியாக பார்க்கும் போது ரியால்டி மற்றும் பவர் குறியீடுகளை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன. இதில் கன்ஸ்யூமர் டியுரபிள் குறியீடு 1.56 சதவீதம் சரிந்து முடிவடைந்தது. மேலும் எப்.எம்.சி.ஜி. 1.48%, ஐ.டி. 1.06 சதவீதம் சரிந்து முடிந்தன.

ரியால்டி குறியீடு 0.61 சதவீதமும் பவர் குறியீடு 0.11 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில் எஸ்.எஸ்.எல்.டி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. மாறாக கோல் இந்தியா, ஹீரோமோட்டோ கார்ப், ஐடிசி, ஹெச்.டி.எப்.சி. மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன. செவ்வாய்கிழமை இந்திய பங்குச்சந்தையில் 479 கோடி ரூபாய்க்கு அந்நிய முதலீடு இருந்தது.

சர்வதேச நிலவரம்

ஆசியாவில் ஜப்பான் நாட்டு பங்குச்சந்தையை தவிர மற்ற அனைத்து நாடுகளின் பங்குச்சந்தையும் சரிந்து முடிவடைந்தன. ஜப்பானின் நிக்கி 0.25 சதவீதம் உயர்ந்தது. ஷாங்காய் காம்போசிட் 0.4 சதவீதமும், ஹேங்செங் 2 சதவீதமும் சரிந்து முடிந்தது. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக சரிந்தன.

ரூபாய் சரிவு

தொடர்ந்து இரண்டாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே ஒரு டாலர் 61.04 ரூபாய்க்கு சென்றது. வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 60.96 ரூபாயில் முடிவடைந்தது.
-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Fri Sep 12, 2014 3:28 pm

27000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ் சரிந்தது

ஐரோப்பிய சூழ்நிலைகள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்தன. சென்செக்ஸ் 27000 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 61 புள்ளிகள் சரிந்து 26995 புள்ளியில் சென்செக்ஸ் முடிந்தது. நிப்டி 8 புள்ளிகள் சரிந்து 8085 புள்ளியில் முடிந்தது.

முக்கிய குறியீடுகள் சரிந்தாலும் மிட்கேப் குறியீடு 0.97 சதவீதம் உயர்ந்தும் ஸ்மால்கேப் குறியீடு 1.46 சதவீதம் உயர்ந்தும் முடிவடைந்தன. ஹெல்த்கேர் குறியீடு அதிகபட்சமாக 1.73 சதவீதம் சரிந்து முடிந்தது. இதற்கடுத்து மெட்டல் 1.08%, ரியால்டி 0.34% கன்ஸ்யூமர் டியுரபிள் 0.22 சதவீதம் சரிந்து முடிந்தன. மாறாக கேபிடல் குட்ஸ் 0.66%, பவர் 0.57% மற்றும் எப்.எம்.சி.ஜி 0.52 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில் எஸ்.பி.ஐ, பி.ஹெச்.இ.எல்., ஹீரோமோட்டோ கார்ப், டாடா பவர் மற்றும் ஹெச்.யூ.எல். ஆகிய பங்குகள் உயர்ந்தும் சன்பார்மா, ஓ.என்.ஜி.சி. கோல் இந்தியா, விப்ரோ மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

தங்கம் விலை குறைவு

மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை குறைந்திருக்கிறது. கடந்த ஜனவரியில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1245 டாலரை தொட்டது. இப்போது ஒரு அவுன்ஸ் 1240 டாலரை தொட்டது. டாலர் இண்டெக்ஸ் உயர்ந்தது.வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு ஆகிய காரணங்களால் டாலர் மதிப்பு உயர்ந்து தங்கத்தின் விலை குறைந்துவருகிறது.
தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Sep 17, 2014 9:13 am

2-வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவில் முடிந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் கூட்டத்தொடர் நடக்க இருக்கின்றது. இதில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சப்படுவதால் பங்குச்சந்தையில் லாபத்தை வெளியே எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மேலும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக-வுக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன. சென்செக்ஸ் 324 புள்ளிகள் சரிந்து 26492 புள்ளியில் முடிந்தது. நிப்டி சரிந்து 8000 புள்ளிகளுக்கு கீழே முடிந்தது. 109 புள்ளிகள் சரிந்து 7932 புள்ளியில் நிப்டி முடிவடைந்தது.

தொடர்ந்து 11 வர்த்தக தினங்களாக உயர்ந்து வந்த மிட்கேப் குறியீடு செவ்வாய்க் கிழமை 3.4 சதவீதம் சரிந்தது. அதேபோல கடந்த எட்டு வர்த்தக தினங்களாக உயர்ந்து வந்த ஸ்மால்கேப் குறியீடு 4 சதவீதம் சரிந்து முடிந்தது.

அனைத்து துறை குறியீடுகளும் சரிந்தே முடிவடைந்தன. இதில் ரியால்டி குறியீடு 3.42 சதவீதமும், பவர் குறியீடு 3.26%, பொதுத்துறை குறியீடு 3.12% மற்றும் இன்பிரா குறியீடு 3.05 சதவீதம் சரிந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில் டாக்டர் ரெட்டீஸ், ஹெச்.யூ.எல்., ஐடிசி, இன்போசிஸ் மற்றும் சன் பார்மா உயர்ந்தும், டாடா பவர், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, ஓ.என்.ஜி.சி மற்றும் எல் அண்ட் டி ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறிதளவு உயர்ந்து 61.08 ரூபாயாக இருக்கிறது. திங்கள்கிழமை வர்த்தகத்தின் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.74.59 கோடிக்கு பங்குகளை விற்றிருக்கிறார்கள்.

பி - நோட் முதலீடு அதிகரிப்பு

இந்திய சந்தையில் பி-நோட் மூலமாக முதலீடு செய்யும் தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்திருக்கிறது. செபி தகவல்கள்படி கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 2.11 லட்சம் கோடி (பங்குச்சந்தை, கடன் சந்தை மற்றும் டெரிவேட்டிவ்) முதலீடு வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் இந்த தொகை ரூ.2.08 லட்சம் கோடியாக இருந்தது. ஜூன் மாதம் இது ஆறு வருடங்களில் இல்லாத அளவான ரூ.2.24 லட்சம் கோடி முதலீடு வந்தது.
இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Stocks_2111689a

--தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Thu Sep 18, 2014 8:52 am

சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு; ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 26,513 ஆக இருந்தது.

அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 24 புள்ளிகள் சரிந்து 7,951 ஆக காணப்பட்டது.

சர்வதேச சந்தைகளின் நிலவி வரும் ஏற்ற, இறங்கங்கள் கொண்ட உறுதியற்ற சூழலின் எதிரொலியால், இந்தியப் பங்குச்சந்தைகளில் சற்றே சரிவு ஏற்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, இன்றைய வர்த்தக தொடக்கத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் வீழ்ச்சி கண்டு 61.17 ரூபாயாக இருந்தது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Fri Sep 19, 2014 9:34 am

பங்குச் சந்தையில் ஒரே நாளில் 481 புள்ளிகள் உயர்வு

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை வரலாறு காணாத ஏற்றம் காணப்பட்டது. ஒரே நாளில் 481 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 27112 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 139 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 8114 ஆக உயர்ந்தது.

சீன அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்தில் அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும், இரு நாடுகளிடையே சுமுகமான உறவு நீடிக்கும் என்ற நம்பிக்கையும் பங்குச் சந்தை எழுச்சிக்கு முக்கியக் காரணமாகும். அந்நிய முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்குகளை வாங்கியதில் 12 துறைகளின் பங்குகள் 0.58 சதவீதம் முதல் 4.65 சதவீதம் வரை உயர்ந்தன.

ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருள் தயாரிப்பு, முதன்மை பொருள் தயாரிப்பு, ஆட்டோ மொபைல், மின்சாரம், வங்கித்துறை பங்குகள் உயர்ந்தன. 27 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழாக சரிந்த பங்குச் சந்தை 10 நாள்களில் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மே மாதம் 12-ம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 556 புள்ளிகள் உயர்ந்தது குறிப் பிடத்தக்கது. இதே போல தேசிய பங்குச் சந்தையும் 8 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் ஜேனெட் யேலன் இப்போதைக்கு வட்டி உயர்வு இல்லை என்று அறிவித்துள்ளார். கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கை அக்டோபர் மாதத்தில் நிறைவடைய உள்ளது. இந்த அறிவிப்பு இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் எழுச்சி ஏற்பட காரணமாக அமைந்தது. இந்திய சந்தையிலிருந்து உடனடியாக பெருமளவு அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற மாட்டார்கள் என்ற நிலையும் உருவாகியுள்ளது.

வியாழக்கிழமை சீனாவுடன் 5 ஆண்டுகளுக்கான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இரு இரு நாடுகளிடையே வர்த்தக சமநிலையை எட்ட வழிவகுக்கும். அத்துடன் 20000 கோடி டாலர் முதலீடு செய்ய சீனா ஒப்புக் கொண்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் ஹீரோ மோட்டோகார்ப் பங்கு விலை 5.67 சதவீதமும், ஹெச்டிஎப்சி 3.73 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 3.70 சதவீதமும், லார்சன் அண்ட் டூப்ரோ 3.57 சதவீதமும், பிஹெச்இஎல் 3.51 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ பங்கு விலை 3.47 சதவீதமும் உயர்ந்தன.

முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 28 நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. டாக்டர் ரெட்டீஸ் லேப், டாடா பவர், மாருதி சுஸுகி, என்டிபிசி, விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்தன. இன்ஃபோசிஸ் பங்கு விலை 1.08 சதவீதமும், ஹெச்யுஎல் பங்கு விலை 0.58 சதவீதமும் சரிந்தன. பங்குச் சந்தையில் மொத்தம் 2,235 பங்குகள் லாபம் ஈட்டின. 827 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 94 நிறுவனப் பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இன்றி முன்தின விலையில் விற்பனையாயின.

3-வது நாளாக ரூபாய் ஏற்றம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து மூன்றாம் நாளாக ஏறுமுகம் கண்டது. 8 காசுகள் உயர்ந்ததில் ஒரு டாலருக்கு ரூ. 60.84 என்ற நிலையை எட்டியது. பிற சந்தையில் டாலரின் மதிப்பு சரிந்தது. இதனால் ரூபாயின் மதிப்பும் உயர்ந்தது. முந்தைய இரு நாள் வர்த்தகத்தில் மாற்று மதிப்பு 21 காசுகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Admin Wed Sep 24, 2014 9:25 am

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 431 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை வர்த்த கத்தில் கடுமையான சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்து வரும் மோசமான தகவல்கள், சீனாவின் வேலையில் லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, செப்டம்பர் மாத எப் அண்ட் ஓ முடிவு நெருங்கியது மற்றும் முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்தது ஆகிய காரணங்களால் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்து முடிந்தன.

ஜூலை 8ம் தேதிக்கு பிறகு பங்குச்சந்தைகள் ஒரே நாளில் சரிவது இப்போதுதான். சென்செக்ஸ் 431 புள்ளிகள் சரிந்து 26775 புள்ளியிலும், நிப்டி 128 புள்ளிகள் சரிந்து 8017 புள்ளியிலும் முடிவடைந்தன. தவிர மிட்கேப் குறியீடு 1.9 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 2.48 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன. அனைத்துத் துறை குறியீடு களும் சரிந்தே முடிவடைந்தன. குறிப்பாக ரியால்டி குறியீடு அதிகபட்சமாக 4.91 சரிந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 2.58%, பொதுத்துறை குறியீடு 2.4% மற்றும் கேபிடல் குட்ஸ் குறியீடு 2.4 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.

30 குறியீடுகள் அடங்கிய சென்செக்ஸ் பட்டியலில் ஐடிசி, என்.டி.பி.சி., மாருதி சுசூகி, மற்றும் ஹெச்.யூ.எல். ஆகிய பங்குகள் மட்டுமே உயர்ந்து முடிவடைந்தன. மற்ற அனைத்துப் பங்குகள் சரிந்தன. குறிப்பாக சிப்லா, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி. ஆகிய பங்குகள் கடுமையாக சரிந்து முடிவடைந்தன. திங்கள்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 186 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்றிருக்கிறார்கள். பங்குச்சந்தை சரிந்தாலும், வரும் காலத்தில் பல சாதக அம்சங்கள் இருப்பதாகவே வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

குறிப்பாக மோடியின் அமெரிக்க பயணம், மஹாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநில தேர்தல்கள் உள்ளிட்டவை சந்தைக்கு சாதகமாக இருக்கக் கூடும். அதே சமயத்தில் பணவீக்கமும், வட்டி விகிதமும் சந்தைக்கு சவால் என்பதையும் அவர்கள் மறுக்கவில்லை.
-இந்து
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Fri Sep 26, 2014 2:19 pm

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: 8000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது நிப்டி

எரிவாயு விலை நிர்ணயம் செய்வதைத் தள்ளிப்போட்டது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுக்க நினைத்தது மற்றும் செப்டம்பர் மாதம் எப் அண்ட் ஓ முடிவு ஆகிய காரணங்களால் வியாழன் அன்று பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன.

தேசிய பங்குச் சந்தை (நிப்டி) 8000 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 90 புள்ளிகள் சரிந்து 7911 புள்ளியில் முடிவடைந்தது. செப்டம்பர் 1-ம் தேதி நிப்டி முதல் முறையாக 8000 புள்ளிகளை தொட்டது. இப்போது 8000 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 7877 புள்ளிகளுக்கு சென்றது.

இதேபோல மும்பை பங்குச் சந்தையும் (சென்செக்ஸ்) 276 புள்ளிகள் சரிந்து 26468 புள்ளியில் முடிவடைந்தது. முக்கிய குறியீடுகள் மட்டுமல்லாமல் மிட்கேப் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன. மிட்கேப் குறியீடு 1.96 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 3.21 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஹெல்த்கேர் துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளும் சரிந்து முடிவடைந்தன. குறிப்பாக ரியால்டி குறியீடு அதிகபட்சமாக 3.21 சதவீதம் சரிந்தது. இதற்கடுத்து எண்ணெய் எரிவாயு மற்றும் உலோக குறியீடுகளும் சரிந்தன.

சென்செக்ஸ் பங்குகளில் டாக்டர் ரெட்டீஸ், டிசிஎஸ், கெயில், சிப்லா மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும், ஆக்ஸிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹிண்டால்கோ, பி.ஹெச்.இ.எல். மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன. புதன் கிழமையன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 793 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் இருந்து தங்களது முதலீட்டினை வெளியே எடுத்திருக்கிறார்கள்.

ஆந்திரா வங்கி பங்கு சரிவு

உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு காரணமாக, சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு கடன் கொடுத்திருந்த வங்கிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆந்திரா வங்கி 14 நிறுவனங்களுக்கு 4,346 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த வங்கியின் தலைவர் சிவிஆர் ராஜேந்திரன் தெரிவித்தார். இதனால் இந்த பங்கு 12.11 சரிந்து 63.15 ரூபாயில் முடிவடைந்தது.

மெட்டல் பங்குகள் இன்றும் சரிவு

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக மெட்டல் துறை பங்குகள் இன்றும் சரிந்து முடிவடைந்தன. உஷா மார்டீன் பங்கு 19.97 சதவீதமும், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் 17.94% மோனட் இஸ்பெட் 11.10% ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் 7.83 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Wed Oct 08, 2014 3:53 pm

7900 புள்ளிகளுக்கு கீழே நிப்டி சரிந்தது

சர்வதேச சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஒரு சதவீதத்துக்கு மேலே சரிந்தன. சென்செக்ஸ் 296 புள்ளிகள் சரிந்து 26271 புள்ளியிலும், நிப்டி 93 புள்ளிகள் சரிந்து 7852 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் குறியீடு 0.9 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.8 சதவீதமும் சரிந்தன.

இந்திய பங்குச்சந்தைகள் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தன. அந்நிய நிறுவன முதலீடு சரிந்ததும் பங்குச்சந்தை சரிவுக்குக் காரணமாகும். கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 2,583 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் இருந்து வெளியே எடுத்திருக்கிறார்கள். அக்டோபர் 1-ம் தேதி 63 கோடி ரூபாயை வெளியே எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் அதே சமயம் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள்.

உலோகம், நுகர்பொருள், மருத்துவம் மற்றும் முதன்மை பொருள் ஆகிய துறை பங்குகள் அதிகமாக சரிந்தன. உலோகக் குறியீடு அதிகபட்சமாக 2.65 சதவீதம் சரிந்தது. அடுத்து மருத்துவ குறியீடு 1.85 சதவீதமும், முதன்மை பொருள் 1.78 %, ரியல் எஸ்டேட் குறியீடு 1.27 சதவீதமும் சரிந்தன. சென்செக்ஸ் பங்குகளில் ஹிண்டால்கோ 4.35%, சேசா கோவா 4.32 சதவீதம், சிப்லா 3.67%, டாக்டர் ரெட்டீஸ் 3.18% மற்றும் ஹெச்.டி.எப்.சி. 3.11 சதவீதமும் சரிந்தன. அதேபோல என்.டி.பி.சி பங்கு 1.19%, கெயில் 1.09%, டாடா மோட்டார்ஸ் 0.43%, விப்ரோ 0.37% மற்றும் டாடா பவர் 0.25 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.

கடன் சந்தையில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு

மியூச்சுவல் பண்ட்கள் கடந்த செப்டம்பர் மாதம் கடன் சந்தையில் 23,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றன. நடப்பாண்டில் இதுவரையில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.4.89 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2013-ம் ஆண்டில் மொத்தம் 5.12 லட்சம் கோடி ரூபாயை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கடன் சந்தையில் முதலீடு செய்தன. அதே சமயத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1.19 லட்சம் கோடியை செப்டம்பரில் முதலீடு (கடன் சந்தையில்) செய்திருக்கிறார்கள். பங்குச் சந்தையில் 4,200 கோடி ரூபாயை அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Sun Oct 19, 2014 11:34 am

நான்காவது வாரமாக பங்குச்சந்தைகள் சரிவு

கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தாலும், தொடர்ந்து நான்காவது வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன. மேலும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியாணாவில் இன்று வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளை கவனமாக எதிர்பார்க் கிறார்கள்.

சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சமும், முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர இருப் பதாலும் பங்குச்சந்தையில் சரிவு காணப்படுகிறது. இந்த சூழலை முதலீட்டுக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அக்டோபர் 10-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் 17-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சென்செக்ஸ் 0.71 சதவீதம் சரிந்து முடிந்தது. அக்டோபர்10-ம் தேதி சென்செக்ஸ் 26297 என்ற புள்ளியில் இருந்தது. அக்டோபர் 17-ம் தேதி 26108 புள்ளியில் முடிவடைந்தது.

மேலும் கடந்த வாரத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து 2,968 கோடி ரூபாய் முதலீட்டை விற்றுவிட்டார்கள். கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகள் உயர்ந்தாலும், 1,097 கோடி ரூபாய் பங்குகளை விற்றார்கள்.
-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by தருண் Thu Oct 30, 2014 2:06 pm

மும்பை பங்குசந்தையில் புதிய உச்சம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் கடந்து 27, 358 என்ற புதிய உச்சத்தை அடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (வியாழக்கிழமை) 260.50 புள்ளிகள் உயர்ந்து 27, 358 புள்ளிகைகளை கடந்து புதிய உச்ச நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

இன்றைய பங்கு சந்தை நிலவரம் - Page 2 Empty Re: இன்றைய பங்கு சந்தை நிலவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum