வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஷேர் டிரேடிங்கில் லாபம் பார்க்க மூன்று விதிமுறைகள்!

Go down

ஷேர் டிரேடிங்கில் லாபம் பார்க்க மூன்று விதிமுறைகள்! Empty ஷேர் டிரேடிங்கில் லாபம் பார்க்க மூன்று விதிமுறைகள்!

Post by தருண் Mon Oct 17, 2016 2:54 pm

ஷேர் டிரேடிங்கில் லாபம் பார்க்க மூன்று விதிமுறைகள்! 44p1

சம்பாதிப்பது போதவில்லை. தேவை, இன்னும் தேவை’. இப்படி நினைப்பதுதான் மனிதர்களின் நார்மலான மனோபாவம். இந்த அதிகப்படியான சம்பாத்திய ஆசைக்கு தூபம் போட்டு நம்மை தவறாக வழிகாட்ட அலைபவர்கள் பலர். ‘கைல கொஞ்சம் பணம் இருந்தா போதும். தினம் ரூ.500, ரூ.1,000 சம்பாதிக்கலாம்’ என்று சில  குறுக்குவழி குருமார்கள் வந்து, நம்மை மாய வலையில் சிக்க வைக்கிறார்கள்.

ஷேர் டிரேடிங் என்பது லாபம் சம்பாதிக்க முடியாத இடமல்ல. ஆனால், அது ஒரு மினி போருக்குப் போகிற மாதிரி. கையில் எந்த ஆயுங்களும் இல்லாமல் நாம் சண்டைக்குப் போனால், வெற்றியோடு அல்ல, கடும் காயங் களுடன்தான் நாம் திரும்ப வேண்டி இருக்கும்.

ஷேர் டிரேடிங்கும் அது மாதிரிதான். அதில் நுழைவதற்கு முன்பு அது பற்றி நாம் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

டிரேடிங் என்பது குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ள இடம்தான். குறுகிய காலத்தில் பணம் பண்ண நுழையும் போது, இரண்டு வகையில் ஈடுபடலாம்.

1. ஸ்விங் டிரேடிங்-

அதாவது, பங்குகளை வாங்கி சில நாட்கள் வைத்திருந்து விற்க நினைப்பது.

2. டே டிரேடிங் - பங்குகளை வாங்கிய அன்றே விற்பது இது.

‘நான் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். என்னால் காலை முதல் மாலை வரை சந்தையில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது.   அலுவலக நேரத்தில் டிரேடிங் செய்வதை என் அலுவலகம் அனுமதிக்காது. அதனால்தான் நான்   ஸ்விங் டிரேடிங் செய்கிறேன்’ என்கிறார்கள்.

இன்னும் சிலர், ‘என்னால் நேரடியாகச் சந்தையில் ஈடுபடும் அளவுக்கு நேரம் இருக்கிறது. எனவே, நான் டே டிரேடிங் செய்கிறேன்’ என்கிறார்கள்.

ஆக, நமக்குச் சூழல் எதை அனுமதிக்கிறதோ, அதைச் செய்ய முற்படுகிறோம். இது முற்றிலும் தவறான அணுகுமுறை ஆகும். எப்படிபட்ட வியாபார விதிமுறையை நம் உடலும் மனமும் பொருளாதார நிலையும் அனுமதிக்கிறதோ, அப்படிபட்ட வியாபாரத்தில் மட்டுமே நாம் ஈடுபடவேண்டும். பங்கு வர்த்தகம் என்பது ஒரு கலை. நாம் அந்த கலையைக் கற்று, அதைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும். அப்படி செயல் படுத்தும்போது, முதலில் சிறிய அளவில் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது, நீங்கள் நினைத்தபடி லாபம் கிடைக்க ஆரம்பித்தால், பின் அதன் அளவைக் கூட்டலாம்.

பங்கு வர்த்தகத்துக்கு எப்படி நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்?

முதல் விஷயம், கற்றல். நாம் வர்த்தகம் செய்யப் போகும் சந்தை எப்படிப்பட்டது; இந்தச் சந்தை எப்படி இயங்குகிறது? இதில் உள்ள வாய்ப்புகள் என்ன? இந்த வாய்ப்புகளை நாம் எடுத்து கையாளும்போது, நாம் சந்திக்கக்கூடிய இடர்பாடு கள் என்ன?  இந்த இடர்பாடுகளை எப்படித் தவிர்ப்பது அல்லது பாதிப்பைக் குறைப்பது எப்படி? என் மனநிலை என்ன? நான் சந்தையில் ஈடுபடும் செயல்பாடுகள் என் மனநிலையோடு ஒத்துப்போகிறதா? அல்லது என் இதயத்தின் லப்டப் கூடுகிறதா?

இப்படி சந்தையின் பல பரிமாணங்களை சொல்லிக் கொடுக்கக்கூடிய கல்வியைப் பயிலவேண்டும். கல்வியைப் பயின்றபிறகு, டிரேடிங் செய்வதற்கான விதிமுறைகளை வகுக்கவேண்டும். இப்படி விதிமுறைகளை வகுப்பதற்கான அடிப்படை விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

விதிமுறை 1 : சக்திக்கு மீறிய பொசிஷனை எடுக்கக்கூடாது!

பங்கு வியாபாரத்துக்குள் நுழையும் முன்பு, ஒவ்வொரு வியாபாரத்துக்கும் நாம் எடுக்க நினைக்கும் ரிஸ்க்கை நிர்ணயம் செய்யவேண்டும். ரிஸ்க்கா..?  அது வேண்டாமப்பா என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இந்த  விளையாட்டுக்கு வரவேக் கூடாது. எனவே, ஒவ்வொரு வியாபாரம் செய்வதற்கான ரிஸ்க்கை முடிவு செய்தபின்பே  டிரேடிங்கில் இறங்கவேண்டும்.

ஏன் இந்த ரிஸ்க்கைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்? பெரும்பான்மையான டிரேடர்கள் இந்த ரிஸ்க் என்னவென்றே அறியாமல் டிரேடிங் செய்ய இறங்கிவிடுகிறார்கள். அதாவது, டிரேடிங் செய்ய வரும்போது, லாபம் மட்டுமே கண்ணுக்குத்  தெரிகிறது. ஆனால்,
நஷ்டம் என்ற ஒன்றும் இருக்கவே செய்கிறது. நஷ்டம் வரும்போது  எப்படிக் கையாளவேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் என்ன நடக்கிறது?

நஷ்டம் என்று வரும்போது, அதை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை. அப்போது நஷ்டம் சிறியதாகத்தான் இருக்கும். அந்த நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத நாம், எப்படியாவது அது லாபத்தில் முடிந்துவிடாதா என்ற ஏக்கத்துடன் காத்திருக்க முடிவு செய்கிறோம். சிலசமயம் ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தின் காரணமாக அது நடக்கக்கூட செய்யலாம்.

ஆனால், பல சமயம் நாம் அமைதியாகக் காத்திருக்கும்போது நஷ்டம் பெரிதாகிறது.  இன்னும் காத்திருக்கிறோம். பின் நஷ்டம் நம் சக்திக்கு மீறிய நிலையை எட்டுகிறது. இதுதான், நாம் பாதை மாறும் முதல் கட்டம். இதற்குமுன் டிரேடிங்கில் இறங்கி ரூ.500, ரூ.1,000 தினம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் உடையும் நேரம் இது. நாம் அடையும் நஷ்டத்தின் அளவைப் பொறுத்து, நாம் பெரிய லாபத்துக்கு இலக்கு வைத்து வியாபாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சூதாட்டமாக மாற்றுகிறோம். பெரிய நஷ்டங்கள் நம்மை உண்மையிலேயே முழுமையான சூதாட்டக்காரராக மாற்றிவிடுகிறது.  

பெரும் நஷ்டம் அடைந்த நிலையில், நமக்கு குறுகிய காலத்தில் யாராவது பல லட்சங்களை சம்பாதிக்க வழி சொல்வார்களா என்று நாம் ஏங்கும்போதுதான், இந்த குறுக்குவழி குருமார் களிடம் சிக்கிவிடுகிறோம். அவர்களின் கைகளின் சிக்கியபின் நாம் நம் கட்டுப்பாட்டில் இருந்து, ஒரு மூன்றாவது நபரின் கட்டுப்பாட்டுக்குள் மாறி விடுகிறோம். பிறகு நமக்கு என்ன நடக்கிறது என்பதை ஒரு மூன்றாம் நபர் போல பார்க்க ஆரம்பிக்கிறோம், நம்முடைய எல்லாப் பணத்தையும் இழக்கும்வரை.

இந்த குறுக்குவழி குருமார்களை விட்டு நாம் போனால், இன்னொரு ஆள் கிடைப்பார்.  ஆனால், நம் பணம் போனது போனதுதானே? இது தவறான அணுகுமுறை. ஆகவே, டிரேடிங்கில் இறங்கும்போது, ரிஸ்க் எடுப்பதைப் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

விதிமுறை 2:  வாய்ப்பு வரும் போது மட்டுமே வியாபாரத்தில் ஈடுபடவேண்டும்!

நாம் டிரேடிங்கில் இறங்குவதாக முடிவு செய்த பிறகு, எப்போது வாங்கி, விற்க வேண்டும், அதுபோல் எப்போது விற்று, வாங்க வேண்டும் என்பதற்கான தெளிவான திட்டம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் திட்டங்களை வகுக்க, சரியான சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ட் லெவலை நாம் கண்டுபிடிக்கத் தெரிந்து இருக்கவேண்டும். இதற்கு வரைபடம் படிக்கும் முறையான டெக்னிக்கல் அனாலிசிஸ் வழிமுறையைத் தெளிவாக படிக்கவேண்டும். கேன்டில் ஸ்டிக் பேன்டன்கள் எப்படி உருவாகிறது என்பதையும், அவை நமக்குச் சொல்லும் சந்தைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ளவேண்டும். பல ஆயிரங்கள் மற்றும் லட்சங்களை சந்தையில் போடும் நாம், சில ஆயிரம் செலவு செய்து இந்த வாழ்நாள் கல்வியை கற்கத் தயங்குவது வேடிக்கை!

நாம் படித்த டெக்னிக்கல் அனாலிசிஸ் படிப்பின் அடிப்படையில்,  என்டிரி பாயின்ட்களை தீர்மானிக்கவேண்டும். அதைவிட முக்கியமான விஷயம், அந்த எல்லைகளுக்குள் விலை வரும்போது மட்டுமே வியாபாரத்தில் ஈடுபடவேண்டும்; மற்ற நேரத்தில் வியாபாரத்தில் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்.

இதில் நாம் செய்யக்கூடிய தவறு, காத்திருந்து சரியான இடத்தில் என்ட்ரி ஆகி, லாபம் சம்பாதித்தால், லாபம் கண்ட தைரியத்தில் அடுத்து சில டிரேட்களை யோசிக்காமல் செய்து, அந்த லாபத்தை இழக்கிறோம். சிலசமயம், அந்த லாபத்தைத் தாண்டி நஷ்டத்தில் முடிக்கிறோம்.

விதிமுறை 3 : கண்ணில் பார்த்த லாபம் கணக்கில் வரவேண்டும்!

இந்த விதிமுறைதான் நம் லாபத்தைக் காப்பாற்றி நம்மை வாழவைக்கும் விதிமுறை. இதைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே டிரேடிங் வாழ்க்கையில் நிலைத்து நிற்க முடியும்.

டிரேடிங்கில் லாபத்தை எடுப்பதற்கான முதல் திட்டம், வியாபாரத்தில் இறங்கியவுடன், இவ்வளவு லாபம் கிடைத்தவுடன், வியாபாரத்தை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று முடிவடுப்பது. அடுத்த முக்கியமான விஷயம், விலை நாம் நிர்ணயித்த லாபத்துக்கு அருகாமையில் வரும்போது, உஷாராக இருக்கவேண்டும். அந்த எல்லையைத் தொடவில்லை என்றால், சில புள்ளிகள் குறைவாக இருந்தாலும் லாபத்தை எடுக்கவேண்டும். நாம் ஒரு வியாபாரத்தில் லாபத்தைப் பார்த்த பிறகு, அதை எடுக்காமல், நஷ்டத்தில் வெளியே வந்தால், அது நம்மை கொஞ்சம் கொஞ்சமாக சூதாடியாக மாற்றிவிடும்.

மேற்கூறிய மூன்று விதிமுறைகளுக்கு உட்பட்டு நாம் வியாபாரம் செய்தால் மட்டுமே நாம் வியாபாரிகள். ஒரு வியாபாரி மட்டுமே இந்த டிரேடிங்கில் வெற்றி பெறமுடியும். ஒரு நூல் தவறினாலும், நாம் சூதாடியாக மாற வாய்ப்புண்டு. எனவே, ஜாக்கிரதை!
--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum