வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


அதிகாரம் இழக்கும் டிபிஏ... பலன் பெறும் பாலிசிதாரர்கள்!

Go down

அதிகாரம் இழக்கும் டிபிஏ... பலன் பெறும் பாலிசிதாரர்கள்! Empty அதிகாரம் இழக்கும் டிபிஏ... பலன் பெறும் பாலிசிதாரர்கள்!

Post by தருண் Mon Jul 27, 2015 10:01 am

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களின் பெரும் பிரச்னையே, க்ளெய்ம் சரியாகக் கிடைக்கவில்லை என்பதே. அதாவது, பில் தொகையைவிட மிகக் குறைவான க்ளெய்ம் தொகை கிடைப்பது, க்ளெய்ம் நிராகரிக்கப் படுவது, க்ளெய்ம் காலம் தாழ்த்தி வழங்குவது போன்றவை. இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் முக்கியக் காரணமாக இருப்பது டிபிஏ.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் விதமாக ஐஆர்டிஏ அமைத்துள்ள நிபுணர் குழு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது. அது என்னென்ன பரிந்துரைகள், அதனால் யாருக்கு என்ன பயன் என்பது குறித்து நிதி ஆலோசகர் வி.கிருஷ்ணதாசனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

அதிகாரம் இழக்கும் டிபிஏ... பலன் பெறும் பாலிசிதாரர்கள்! P19a

குறைக்கப்படும் அதிகாரம்!

“இதுவரை, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பாலிசிதாரர்கள் க்ளெய்ம் செய்யும்போது அதற்கான முழு வேலையையும் டிபிஏ செய்துவிடும். அதாவது, பாலிசிதாரர் எடுத்துக் கொண்ட சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம், அதில் எவ்வளவு தொகை க்ளெய்ம் வழங்க வேண்டும், பாலிசிதாரர் சமர்ப்பிக்கும் பில்லில் எந்தெந்த செலவுகளுக்கு க்ளெய்ம் கிடையாது என்பதையெல்லாம் டிபிஏ முடிவு செய்துவிடும்.

ஆனால், இனிமேல் அப்படிச் செய்யக்கூடாது என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. அதாவது, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் வேலையைக் குறைப்பதற்காக ஏற்பாடு செய்யும் டிபிஏகளுக்கு இனி முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்காது. டிபிஏகள் க்ளெய்ம் வழங்குவது குறித்த பரிந்துரை மற்றும் ஆலோசனைகளை மட்டுமே இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க முடியும்.

அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவ மனையில் பாலிசிதாரர் அனுமதிக்கப்படும் விவரத்தை 24 மணி நேரத்துக்குள் டிபிஏ அல்லது இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கால அளவை நீட்டிக்குமாறும் நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்ஷூரன்ஸ் நிறுவனம் மற்றும் டிபிஏ இணைந்து க்ளெய்ம் வழங்கும் சதவிகிதத்தைக் குறைப்பதற்காக சில வேலைகளைச் செய்வதாக புகார் அதிகம் உள்ளது. க்ளெய்ம் தொகையைக் குறைப்பதற்காகவே சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் டிபிஏ-களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது.

இதற்காக டிபிஏ பாலிசிதாரர்களிடம் கேட்கும் ஆவணங்களை ஒருமுறைக்குப் பலமுறை கேட்டு க்ளெய்ம் வழங்குவதில் காலதாமதம் செய்யும். டிபிஏ பாலிசிதாரர்களிடம் இருந்து ஒருமுறை வாங்கும் ஆவணத்தை மீண்டும் கேட்கக்கூடாது எனப் பரிந்துரை வழங்கியுள்ளது.

அதிகாரம் இழக்கும் டிபிஏ... பலன் பெறும் பாலிசிதாரர்கள்! P20a

காலதாமதமாக வழங்கும் க்ளெய்ம்!

டிபிஏ நிறுவனங்கள் பாலிசிதாரர்கள் சிகிச்சைக்கான பில்லை கொடுத்து க்ளெய்ம் வாங்கும்போது சில காரணங்களைக் கூறி காலதாமதம் ஆக்கும். இதனால் பாலிசிதாரர் வெளியில் கடன் வாங்கவேண்டிய சூழல் உருவாகும். இதைத் தவிர்க்கும் விதமாக பாலிசிதாரர் க்ளெய்ம் செய்து 30 நாட்களுக்குள் க்ளெய்ம் தொகையை வழங்கிவிட வேண்டும். அது முடியவில்லையெனில், காலதாமதமாகும் நாட்களின் அடிப்படையில் அந்தத் தொகைக்கு உரிய வட்டியை இன்ஷூரன்ஸ் நிறுவனம், பாலிசிதாரருக்கு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

தள்ளுபடி சலுகைகள்!

பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கேஷ்லெஸ் வசதியை வைத்துள் ளது. இதில் மருத்துவமனைகளுடன் பேசி சிகிச்சைக்கான கட்டணத்தைப் பெரும்பாலான டிபிஏகள் குறைத்துவிடும். இப்படிக் குறைக்கப்படும் தொகையின் பயன், பாலிசி தாரருக்குதான் கிடைக்க வேண்டும் எனவும் நிபுணர் குழு கூறியுள்ளது.

அதாவது, ரூ.1,10,000-த்துக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆனால், பாலிசிதாரரின் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகை ஒரு லட்சமாக இருக்கும். இப்படி கவரேஜ் தொகையைவிட சிகிச்சை செலவு அதிகமாகும் போது பாலிசிதாரர்தான் கூடுதல் தொகையைச் செலுத்த வேண் டும். அதன்பிறகு மருத்துவமனை யுடன் பேசி பில் தொகையில் ரூ.10,000-த்தைக் குறைத்து ரூ.90 ஆயிரத்தைத்தான் மருத்துவ மனைக்கு டிபிஏ வழங்கும்.

இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கும் பில்லில் மட்டும் தள்ளுபடி ரூ.10,000 எனக் குறிப்பிடுமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறிவிடுவார்கள். இந்தத் தொகை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் லாபமாக மாறும். ஆனால், உண்மையில் பாதிக்கப் படுவது பாலிசிதாரர்தான். அதனால் மருத்துவமனையில் வழங்கப்படும் அல்லது வாங்கப் படும் தள்ளுபடி பாலிசிதாரருக்கு தான் சேர வேண்டும் என நிபுணர் குழு கூறியுள்ளது.

டிபிஏ பாலிசிகளை விற்கக் கூடாது!

ஒரு குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் டிபிஏவாக இருக்கும் நிறுவனம், அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் சார்ந்த எந்த வகையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் யாருக்கும் பரிந்துரை செய்யக் கூடாது. அதேசமயத்தில் அந்த பாலிசிகளை விற்பனையும் செய்யக்கூடாது.

பாலிசிதாரர் உரிமைகள்!

இன்ஷூரன்ஸ் நிறுவனம் மற்றும் டிபிஏ பாலிசி ஆவணத்தை பாலிசிதாரருக்கு வழங்கும். அந்த ஆவணத்துடன் கூடுதலாக பாலிசிதாரரின் உரிமை என்ன என்பது குறித்த ஒருபக்க அளவிலான ஆவணத்தையும் வழங்க வேண்டுமென நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது’’ என்றார்.

இந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், இன்ஷூரன்ஸ் பாலிசியின் உண்மையான பலனை பாலிசி தாரர்கள் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை
--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum