Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
கோரப்படாத டிவிடெண்ட், எஃப்டி, பிஎஃப் தொகை... திரும்பப் பெறும் வழிகள்!
Page 1 of 1

வங்கிக் கணக்கு, ஆர்டி, ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு, பிஎஃப் என பல வழிகளில் முதலீடு செய்கிறோம். இப்படி முதலீடு செய்த பணத்தை ஏதோ ஒரு காரணத்தினால் திரும்பப் பெறாமலே இருக்கிறார்கள் சிலர். திரும்பப் பெறாத தொகை மட்டுமே சுமார் ரூ.64 ஆயிரம் கோடி. இந்தத் தொகையை முதலீட்டாளர் அல்லது அவரது வாரிசுகள் திரும்பப் பெறுவதற்கான வழிகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களிடம் கேட்டோம்.
வங்கி டெபாசிட்!
முதலில் வங்கி சேமிப்புத் திட்டங்களில் கோரப்படாமல் இருக்கும் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என எஸ்பிஐ வங்கியின் தனிநபர் சேவைப் பிரிவின் உதவி பொது மேலாளர் ஜி.கந்த சுப்ரமணியத்திடம் கேட்டோம்.
“சேமிப்புக் கணக்கு, ஆர்டி, ஃபிக்ஸட் டெபாசிட் என பல திட்டங்களின் கீழ் வங்கியில் சேமிப்பை பல்வேறு சூழ்நிலைகளில் முதலீட்டாளர்கள் துவங்கி இருப்பார்கள். அதன்பிறகு அதை மறந்திருப் பார்கள் அல்லது முதலீடு செய்தவர்
இறந்திருக்கலாம். முதலீடு குறித்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாததாலும் இப்படி நடக்க வாய்ப்புண்டு.
இந்தப் பணத்தைத் திரும்பப் பெற தேவையான ஆதாரம்!
முதலீட்டாளர் மற்றும் வாரிசு:
1. ஃபிக்ஸட் டெபாசிட் பத்திரம் அல்லது எண்,
2. வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் அல்லது கணக்கு எண், 3. ஆர்டி பாஸ்புக் அல்லது ஆர்டி எண். எந்த வருடத்தில் முதலீடு செய்திருக்கிறார் என்ற விவரம் தெரிந்திருந்தால் அதையும் குறிப்பிடலாம்.
மேற்கூறிய எந்த ஆதாரமும் இல்லை. முதலீடு செய்திருக்கும் தகவல் மட்டும் தெரியும் எனில், எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாரோ, அந்த வங்கியின் இணையதளத்தில் கோரப்படாத முதலீட்டாளரின் விவரம் இருக்கும். இதில் முதலீட்டாளரின் பெயரை மட்டும் கொடுத்து தகவலை பெற முடியும்
எங்கு க்ளைம் செய்ய வேண்டும்?
கணக்கு வைத்திருக்கும் கிளையில் மட்டும்தான் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார், அதன் இன்றைய நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இதை நேரில், கடிதம், மெயில் மூலமாக க்ளைம் செய்ய முடியும்.
முதலீட்டை திரும்பப் பெற சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்!
முதலீட்டாளர்:
1. தற்போதைய முகவரிச் சான்று,
2. புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, 3. இதுநாள்வரை க்ளைம் செய்யாமல் இருந்ததற்கான காரணத்தை விளக்கும் கடிதம், 4. முதலீடு செய்த ஆதாரத்தின் நகல் அல்லது ஒரிஜினல். இவை இல்லை எனில், அதற்கான காரணத்தைக் கடிதமாக எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.
முதலீட்டாளர் இறந்துவிட்டால் அந்தத் தொகையை வாரிசுகள் பெற முடியும். இதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.
1. வாரிசுச் சான்றிதழ், 2. ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது, அதில் யார் முதலீட்டை திரும்பப் பெறலாம் என்பதற்கான கடிதத்தில் மற்ற வாரிசுகள் கையொப்பம் ஈடுவது அவசியம்.
3. பணத்தைப் பெறுபவரின் தற்போதைய முகவரி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
4. முதலீட்டுக்கான ஆதாரம்.''
இன்ஷூரன்ஸ் க்ளைம்!
இன்ஷூரன்ஸ் பாலிசிகள் முதிர்வடைந்தபிறகு க்ளைம் செய்யாமல் இருப்பது அல்லது இடையிலே பாலிசியைத் தொடராமல் இருப்பது அல்லது பாலிசி எடுத்த விவரத்தை பாலிசிதாரர் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமலே இறந்து விடும்போது அந்தத் தொகையை எப்படி திரும்பப் பெறுவது என்பது குறித்து எல்ஐசியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் மண்டல மேலாளர் வி.விஜயராகவனிடம் கேட்டோம்.
பாலிசியின் தன்மையின் அடிப்படையில் பாலிசி முதிர்வு குறித்த தகவல்களை 3 அல்லது 6 மாதத்துக்கு முன்பே பாலிசிதாரருக்குத் தெரிவித்துவிடுவோம். இதைக் கடிதம், பதிவுத் தபால், மெயில் மூலமாகத் தெரிவிப்போம். அந்தசமயத்தில் அதை க்ளைம் செய்யவில்லை எனில், அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் பாலிசிப் பத்திரத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் கொடுத்து பாலிசிதாரர் அல்லது அவரின் வாரிசுகள் க்ளைம் செய்யலாம். பாலிசிப் பத்திரத்தை பாலிசி எடுத்த கிளையில் சமர்ப்பித்து முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
மூன்று ஆண்டுகள் வரை க்ளைம் செய்யாமல் இருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எல்ஐசியின் மத்திய அலுவலகத்துக்கு அனுப்பப்படும். இந்த பாலிசி தொகைகள் அனைத்தும் தனியாக ஒரு வங்கிக் கணக்கில் பராமரிக்கப்படும். இந்தக் கணக்கிலிருந்தும் பணத்தை பாலிசிதாரர் அல்லது வாரிசுதாரர் பெற முடியும்.
சிலர் பாலிசி பத்திரத்தைத் தொலைத்து விட்டதாலும், பணத்தைத் திரும்பப் பெறாமல் இருக்கிறார்கள். இவர்கள் பாலிசி எண், பிறந்த தேதி ஆகியவற்றின் அடிப்படையில் பாலிசியின் விவரத்தை பாலிசி எடுத்த இன்ஷூரன்ஸ் அலுவலகத்தில் பெற முடியும். இதன்பின் பாலிசியின் கவரேஜ் தொகையின் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, பாலிசியின் கவரேஜ் தொகை மிகவும் குறைவாக இருக்கும்போது முகவரி, புகைப்பட அடையாளச் சான்று, பாலிசி பத்திரம் தொலைந்த விவரம் கொடுத்து க்ளைம் பெற முடியும். பாலிசியின் கவரேஜ் தொகை அதிகமாக இருந்தால், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, யாராவது ஒருவரிடம் சூரிட்டி வாங்கித் தருமாறு கூறுவார்கள். இதில், ‘பாலிசி என்னுடையதுதான். அதன் ஒரிஜினல் பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்கிறேன்' என்று கடிதம் அல்லது பாண்ட் பத்திரத்தில் எழுதிவாங்கிக் கொள்வார்கள்.
கோரப்படாத இன்ஷூரன்ஸ் தொகையைத் திரும்பப் பெற சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்!
1. வாரிசுதாரர் மற்றும் பாலிசிதாரரின் தற்போதைய முகவரிச் சான்று, 2. புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, 3. பாலிசி பத்திரம் ஒரிஜினல், 4. பாலிசிப் பத்திரம் தொலைந்துவிட்டால் பாலிசியின் எண், பிறந்த தேதி, பாலிசிதாரர் பெயர், பாலிசி எடுத்த கிளையின் முகவரி கொடுத்து பாலிசி விவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்,
5.பணத்தைப் பெறுபவரின் வங்கிக் கணக்கு விவரம். ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால் அவர்களில் யார் பணத்தைப் பெற வேண்டும் என்பதை மற்ற வாரிசுகள் நியமனம் செய்து கையெழுத்திட்ட கடிதம்.''
மியூச்சுவல் ஃபண்ட், பங்குகளில் முதலீடு!
பங்குகளில் முதலீடு மற்றும் டிவிடெண்ட் தொகையை பல முதலீட்டாளர்கள் திரும்பப் பெறாமலே இருப்பார்கள். இந்தப் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என்பது குறித்து தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் கம்பெனி செக்ரட்டரி சிவக்குமாரிடம் கேட்டோம்.
“ஒவ்வொரு நிறுவனமும் முதலீட்டாளர் களுக்கான டிவிடெண்ட் தொகையை டிடியாக அனுப்பும். முதலீட்டாளர்கள் முகவரி மாற்றத்தினால் இந்த டிடி வாங்கத் தவறியிருப்பார் கள். சில முதலீட்டாளர்கள் வாங்கிய டிடி-யைப் பணமாக மாற்றாமல் வைத்திருப்பார்கள்.
இப்போது பெரும்பாலான வங்கிகள் டிவிடெண்ட் தொகையை வங்கிக் கணக்கிலே வரவு வைக்கின்றன. ஆனால், இதிலும் சில முதலீட்டாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தவறாக தந்துவிடுகிறார்கள். மேலும், சில நேரங்களில் வங்கிக் கணக்கை செயல்படுத்தாமல் வைத்திருப்பார்கள். இதனால் கோரப்படாத டிவிடெண்ட் இருக்கும்.
இப்படி கோரப்படாமல் இருக்கும் டிவிடெண்ட்கள் அனைத்தும் ஏழு வருடம் வரை நிறுவனங்களின் கோரப்படாத டிவிடெண்ட் கணக்கில் இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு நிதியாண்டுக்கும் தனித்தனியாக கோரப்படாத டிவிடெண்ட் கணக்கைப் பராமரித்து வரும். அதன்பிறகு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்பு உணர்வு நிதியகத்தில் (Investor Education and Protection Fund -IEPF) சேர்க்கப்படும். இதில் சேர்க்கப்படும் பணத்தை புதிய கம்பெனி சட்டத்தின்படி, திரும்பப் பெற முடியும். ஆனால், அதற்கான வழிமுறை என்ன என்பதை அரசு தெளிவாக வரையறை செய்யவில்லை.
கோரப்படாத டிவிடெண்ட் தொகையை அந்தந்த நிறுவனத்திலிருந்து திரும்பப் பெற என்னென்ன ஆவணங் களை சமர்ப்பிக்க வேண்டும்?
முதலீட்டாளர் மற்றும் வாரிசுதாரர்:
1. டிவிடெண்ட் க்ளைம் செய்யப் படாதற்கான காரணத்தைக் கடிதமாக எழுத வேண்டும்,
2. இதனுடன் பிசிக்கலாக பங்குகளை வைத்திருப்பவர் கள் அதற்கான போலியோ எண், டீமேட்டில் வைத்திருப்பவர்கள் டி.பி. ஐடி, வாடிக்கையாளர் ஐடி ஆகியவற்றைக் குறிப்பிடுவது முக்கியம்,
3. வங்கிக் கணக்கு விவரம்,
4. பாண்ட் பத்திரத்தில் ‘இந்த டிவிடெண்ட் தொகை என் பங்குகளுக்கானதுதான். இந்தப் பணத்தை நான் இதுவரைக் கோரவில்லை. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன்' என எழுதி அந்த நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கென தனிப் படிவம் அந்தந்த நிறுவனத்தின் இணையதளத்திலே உள்ளது,
5.முதலீட்டாளர் இறந்திருந்தால் வாரிசுதாரர்கள் பங்குகளை அவர்களின் பெயருக்கு மாற்றிக்கொண்டு அதன்பிறகு டிவிடெண்ட் தொகையை க்ளைம் செய்யலாம். இதற்கு வாரிசுச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.''
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் டிவிடெண்ட்!
மியூச்சுவல் ஃபண்டிலும் இதுபோன்ற கோரப்படாதத் தொகை உள்ளது. இந்தத் தொகையை எப்படி திரும்பப் பெறுவது என்பது குறித்து முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.
“முதலீட்டாளர் எனில், முதலீடு செய்த விவரத்தை பான் கார்டு, போலியோ எண், பிறந்த தேதி, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றைக் கொடுத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அல்லது டெபாசிட்டரி ஏஜென்ட் மூலமாக முதலீட்டு விவரத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அதன்பிறகு முதலீட்டாளர் வழக்கமாக மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை விற்பனை செய்வதுபோலவே விற்பனை செய்துவிடலாம். முதலீட்டாளரின் முகவரி, வங்கிக் கணக்கு விவரம், செல்போன் ஆகியவற்றில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு தெரிவித்து முதலீட்டை திரும்பப் பெறலாம்.
க்ளைம் செய்யப்படாத டிவிடெண்ட் தொகையையும் இதேமுறையில் பெற முடியும்.
அதாவது, டிவிடெண்ட் க்ளைம் செய்யப்படாததற்கான காரணத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்குத் தெரிவித்து மேற்கூறிய சான்றுகளையும் சமர்ப்பித்து டிவிடெண்ட் தொகையை க்ளைம் செய்ய முடியும். வாரிசுதாரர் எனில், முதலீட்டாளர் இறந்த விவரத்தையும் அதற்கான ஆதாரம் (இறப்புச் சான்றிதழ்), வாரிசுச் சான்றிதழ், முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று ஆகியவற்றை கொடுத்து க்ளைம் செய்ய முடியும். இதற்கான படிவம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், டெபாசிட்டரி ஆகியவற்றின் இணையதளத்தில் உள்ளது. இதை டவுன்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் டிவிடெண்ட் தொகையை க்ளைம் செய்துகொள்ளலாம்.”
பிராவிடன்ட் ஃபண்ட்!
பிராவிடன்ட் ஃபண்டில் உள்ள தொகையை எப்படி திரும்பப் பெறுவது என்பது குறித்து சொல்கிறார், சென்னை மண்டல பிஎஃப் ஆணையர் எஸ்.டி.பிரசாத்.
“ஒருவர் ஒரு நிறுவனத்தில் ஒருநாள் வேலை பார்த்தால்கூட பிஎஃப் தொகை பிடித்தம் செய்ய வேண்டும் என்பது சட்டம். ஆனால், சிலர் காலம் பூராவும் கஷ்டப்பட்டு கட்டிய பணத்தைத் திரும்பப் பெறுவதே இல்லை.
பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஊழியர் தவிர, வேறு யாரும் எடுக்க முடியாது. மேலும், இப்போது பிஎஃப் அமைப்பு ஓர் ஊழியருக்கு ஒரு எண் என்ற ரீதியில் யுனிவர்சல் எண் உருவாக்கி உள்ளது. இதனால் ஒரு ஊழியருக்கு ஓய்வுபெறும்வரை ஒரே கணக்கு எண் மட்டும்தான் இருக்கும். வேறு நிறுவனத்துக்கு வேலை மாறி போனாலும் இதே கணக்கு எண்தான் இருக்கும். எனவே, ஏற்கெனவே உள்ள பிஎஃப் கணக்கு எண், நிறுவனத்தின் பிஎஃப் எண் ஆகியவற்றைக் கொடுத்து, தற்போது உள்ள கணக்கு எண்ணுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்கு அந்தந்த பிஎஃப் மண்டல அலுவலகத்துக்கு சென்று படிவம் 13-றைப் பூர்த்தி செய்து தரவேண்டும். இந்தப் படிவம் ஆன்லைனிலும் கிடைக்கிறது. இந்தப் படிவம் கொடுத்து 30 நாட்களில் பணம் உங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும், இனிமேல் வேலைக்குப் போகமாட்டேன் என்பவர்கள், அந்தந்த பிஎஃப் மண்டல அலுவலகத்தில் பிஎஃப் எண், நிறுவனத்தின் பிஎஃப் எண் ஆகியவற்றைக் கொடுத்து படிவம் 19 பூர்த்தி செய்து தரவேண்டும். இந்தப் படிவத்தில் வேலை பார்த்த நிறுவனத்தில் கையெழுத்து வாங்கித் தருவது அவசியம்.
தற்போது அந்த நிறுவனம் செயல்பாட்டில் இல்லையெனில், அதற்கான ஆதாரம் இருந்தால் அதையும், நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மேலாளரிடம் படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொடுத்தாலே போதும். இதற்கு வங்கிக் கணக்கு விவரத்தை (ஜாயின்ட் அக்கவுன்ட்டைத் தவிர்ப்பது நல்லது) கொடுக்க வேண்டும். உங்களின் வங்கி கணக்கில் பிஎஃப் பணம் வரவு வைக்கப்படும்.
ஊழியர் இறந்துவிட்டால், அவருடைய வாரிசுகள் அவரது இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், வங்கிக் கணக்கு விவரம், முகவரி மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றைத் தந்து பணத்தைப் பெற முடியும்” என்றார்.
கோரப்படாத பணத்தைத் திரும்பப் பெறும் வழிமுறை களைச் சொல்லிவிட்டோம். இதனை பின்பற்றி உங்களுக்குச் சேரவேன்டிய பணத்தைத் திரும்பப் பெறலாமே!
--ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பிபிஎஃப் முதிர்வு தொகை... திரும்பப் பெற கட்டணமா?
» பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!
» ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?
» இன்ஷூரன்ஸ் பாலிசிகள்... க்ளைம் பெறும் சூட்சுமங்கள் !
» அதிகாரம் இழக்கும் டிபிஏ... பலன் பெறும் பாலிசிதாரர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum