Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
இன்ஷூரன்ஸ் பாலிசிகள்... க்ளைம் பெறும் சூட்சுமங்கள் !
Page 1 of 1

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே குடும்பத்தின் பாதுகாப்பிற்கு என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், சில காரணங்களால் க்ளைம் நிராகரிக்கப்படும்போது பாலிசி எடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என பலரும் புலம்புவதைப் பார்த்திருப்பீர்கள். இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்தவரை, எது மாதிரியான சூழ்நிலையில் ஒரு க்ளைம் மறுக்கப்படும்? பொதுவாக, க்ளைம் நடைமுறைகள் என்ன? என்பதை நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடம் கேட்டோம். அவர் சொன்ன விஷயங்கள் இதோ உங்களுக்காக...
லைஃப் இன்ஷூரன்ஸ்!
காப்பீடு பாலிசியின் காலத்தில் ஒருவர் இறந்துபோனால், கவரேஜ் தொகையை நாமினியிடம் தருவார்கள். பாலிசி எடுத்தவர் விபத்து காரணமாக இறந்தால், விபத்துக்கான பெனிஃபிட் ரைடரை அவர் எடுத்திருந்தால், இருமடங்கு க்ளைம் தொகை கிடைக்கும்.
க்ளைம் படிவத்துடன் இறப்புச் சான்றிதழ், ஆட்சேபம் இல்லாத சான்றிதழ் (என்.ஓ.சி.), நாமினி விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ், குறுக்கு கோடிட்ட வங்கி காசோலை முதலியவற்றைத் தரவேண்டும்.
ஒருவர் தன் பெயரில் ஒன்றுக்குமேற்பட்ட லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தால் அத்தனை பாலிசிகளிலும் இழப்பீடு கிடைக்கும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், க்ளைம் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். குறைந்தபட்சம் 30 நாட்களுக்குள் இழப்பீடு தொகை கிடைத்துவிடும். தேவையான மற்றும் சரியான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றால் காலதாமதம் ஏற்படும்.
மருத்துவக் காப்பீடு!
காப்பீட்டு நிறுவனம் தந்திருக்கும் பட்டியலில் உள்ள மருத்துவமனையில் வாடிக்கையாளர் சிகிச்சை மேற்கொண்டால் காப்பீட்டு நிறுவனம் 'தேர்டு பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர்’ (ஜிறிகி) வாயிலாக மருத்துவமனையுடன் தொடர்புகொண்டு மருத்துவத்திற்கு ஆகும் பணத்தைச் செலுத்தும். அவர்களின் பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனையில் வாடிக்கையாளர் சிகிச்சை மேற்கொள்ளும்போது முதலில் வாடிக்கையாளர் பணத்தைக் கட்டிவிட்டி பிறகு அதை காப்பீட்டு நிறுவனத்தில் க்ளைம் செய்துகொள்ளலாம்.
மருத்துவக் காப்பீடு எடுத்திருந்து க்ளைம் செய்யப்படாமல் இருந்தால் ஒவ்வொரு ஆண்டுக்கும் குமுலேட்டிவ் போனஸ் கிடைக்கும். அதாவது, காப்பீட்டு அளவு குறிப்பிட்ட அளவு அதிகரிக்கும். மருத்துவக் காப்பீட்டுப் பாலிசி படிவத்தில் உடல் பரிசோதனைக்கும் க்ளைம் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருக்கும்பட்சத்தில் க்ளைம் தொகையை நிறுவனம் கொடுக்க தவறாது.
இதற்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை யில் குறைந்தபட்சம் 24 மணிநேரம் சிகிச்சை பெறவேண்டும். சில பாலிசிகளில், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பும் பின்பும் ஆகும் மருத்துவச் செலவுகளுக்கு க்ளைம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.
க்ளைம் கிடைக்க பாலிசி எடுத்து 30 நாட்கள் காத்திருக்கவேண்டும். இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு க்ளைம் செய்ய முடியாது.
மருத்துவக் காப்பீட்டை எடுக்கும்போது உடல் சம்பந்தப்பட்ட குறைகளை மறைத்தோ அல்லது கட்டவேண்டிய பிரீமியத்தைக் குறைப்பதற்காக புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை மறைத்துவிட்டு, பின்னர் அந்த விஷயம் காப்பீட்டு நிறுவனத்தினருக்கு தெரியவரும்பட்சத்தில் க்ளைம் தொகை பெறுவதில் பிரச்னை வரலாம். தவறான தகவல் தரப்பட்டிருக்கிறது என்று நிரூபணமானால் க்ளைம் தொகை கிடைக்காமல் போவதோடு, பாலிசியும் ரத்தாகும் ஆபத்தும் உண்டு.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவ பாலிசிகள் எடுத்திருக்கும்பட்சத்தில் அதை எப்படி க்ளைம் செய்வது என்பதை ஓர் உதாரணத்துடன் பார்க்கலாம். ஒருவர் 2 லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட இரண்டு பாலிசிகளை எடுத்திருக்கிறார். க்ளைம் 3 லட்சம் ரூபாய் என்றால் ஒரு பாலிசியில் 2 லட்சம், இன்னொரு பாலிசியில் 1 லட்சம் என பிரித்து க்ளைம் செய்துகொள்ளலாம். அதேநேரத்தில், ஒருவர் எடுத்த இரு பாலிசிகளில் ஒன்று குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியாக இருந்தால், முதலில் குரூப் இன்ஷூரன்ஸில் க்ளைம் செய்துவிடுவது நல்லது.
வாகன இன்ஷூரன்ஸ்!
ஒருவருடைய வாகனம் தீ விபத்தில் எரிந்துபோனாலோ, சாலை விபத்தில் சேதம் அடைந்தாலோ, திருடு போனாலோ, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலோ உண்டாகும் இழப்பிற்கு க்ளைம் செய்துகொள்ள முடியும். ஆனால், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல், சாலை விதிகளை மீறுவதன் மூலம் ஏற்படும் சேதம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டி வண்டியை சேதப்படுத்துதல், இயந்திரக் கோளாறுகளால் உண்டாகும் விபத்துகளுக்கு க்ளைம் செய்ய முடியாது.
நிரப்பப்பட்ட க்ளைம் படிவம், வாகனத்தின் ஆர்.சி. நகல், இழப்பு பற்றிய மதிப்பீட்டின் ஒரிஜினல், பழுதுபார்த்த பில்லின் ஒரிஜினல் மற்றும் பணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை அவசியம் தரவேண்டும். விபத்தினால் வாகனம் பாதிக்கப்பட்டிருந்தால் காவல்துறை ரிப்போர்ட்டும் அவசியம். வாகனத்தின் சில பகுதிகள் மட்டும் பாதிக்கப்பட்டிருந்து மற்ற பாகங்கள் நல்ல முறையில் இருக்கும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட பாகங்களுக்கு மட்டும் க்ளைம் கிடைக்கும்.
வாகனம் திருடு போயிருந்து அதை க்ளைம் செய்யும்போது, காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்து எஃப்.ஐ.ஆர். நகலை வாங்கி க்ளைம் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வாகனம் காணாமல் போனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றையும் காவல் நிலையத்திலிருந்து வாங்கி சமர்ப்பித்த பின்தான் க்ளைம் கிடைக்கும்.
தொடர்ந்து க்ளைம் செய்யப் படாமலேயே இருந்தால் நோ க்ளைம் போனஸ் கிடைக்கும். இந்த போனஸ் பாலிசி எடுத்தவருக்குத்தானே ஒழிய வாகனத்திற்கு அல்ல. அதனால் வண்டி கைமாறும்போது அந்த வண்டியை வாங்குபவருக்கு இந்த நோ க்ளைம் போனஸ் கிடைக்காது.
ஹவுஸ் ஹோல்டர் பாலிசி!
இந்த பாலிசிமூலம் இயற்கை சீற்றம், மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்து போன்ற பாதிப்புகளுக்கு க்ளைம் செய்யலாம். அதற்கான முதல் அத்தாட்சியாக ஏதேனும் பத்திரிகையில், மீடியாக்களில் வந்த செய்தியை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கவேண்டும். தீ விபத்து குறித்து அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடமிருந்து அறிக்கை பெறவேண்டும். க்ளைம் செய்யப்படும் படிவம், வாடிக்கையாளரிடம் இருக்கும் இன்ஷூரன்ஸ் எடுத்ததற்காக சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனே இன்ஷூரன்ஸ் அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவது அவசியம்.
அதேசமயம், வாடிக்கையாளர்களின் கவனக்குறைவால் ஏற்படும் இழப்புகளுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தாரால் வீட்டிற்கு, வீட்டில் உள்ள உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் நிறுவனம் எந்த க்ளைமையும் தராது.
வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ்!
வீட்டுக் கடன் வாங்கியவருக்கு வங்கியே இந்த பாலிசிக்கு ஏற்பாடு செய்து தந்தபிறகு, பாலிசிதாரர் உயிரிழந்தால், அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் வங்கிக் கடனுக்கு போக, மீதமுள்ள பணத்தை பாலிசிதாரரின் குடும்பத்தினருக்குத் தரும். தனியாக பாலிசி எடுத்திருந்தால் வீட்டுக் கடன் பெற்றதற்கான சான்றிதழ் நகல், இறப்பு சான்றிதழ் மற்றும் நாமினி விவரங்கள் அடங்கிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும். கடன் தந்த வங்கிக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் தொகையைத் தந்துவிடும்'' என்றார் பத்மநாபன்.
இத்தனை விஷயங்களையும் மனதில்வைத்து செயல்பட்டால், க்ளைம் கிடைக்கவில்லை என்கிற பேச்சே எழாது!
- செ.கார்த்திகேயன்.
நாணயம் விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» இன்ஷூரன்ஸ் க்ளைம் பிரச்னைகள்... தீர்வு தரும் ஆம்புட்ஸ்மேன்கள்!
» இன்ஷூரன்ஸ் க்ளைம்: தீர்வு சொல்லும் தீர்ப்பாயம்!
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளைம் : அறை வாடகையை கவனிங்க..!
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளைம்: நிராகரிப்பிலிருந்து தப்புவது எப்படி?
» சிலிண்டர் விபத்து இன்ஷூரன்ஸ்... க்ளைம் பெறுவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum