Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்... யாருக்கு லாபம்? (Gold Monetization Scheme)
Page 1 of 1

இந்தியா முழுக்க உள்ள வீடுகளில் மட்டும் 20 ஆயிரம் டன் தங்கம் உள்ளது. ஆனாலும் மக்கள் இன்னும் அதிகமான தங்கத்தை வாங்கிக் குவிக்கவே விரும்புகிறார்கள். இதனால் தங்கம் இறக்குமதி செய்வது அதிகரித்து அந்நிய செலாவணியும் அதிகரிக்கிறது. இதைக் குறைப்பதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான், தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் (Gold Monetization Scheme).
இந்தத் திட்டத்தை 2015-16-ம் நிதி ஆண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும், தங்கத்தை வங்கிகளில் டெபாசிட்டாக வைக்கலாம். அந்த டெபாசிட்டுக்கு வட்டியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் குறித்த வரைவை மத்திய நிதியமைச்சகம் வங்கிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் என்ன இருக்கிறது, திட்டம் எப்படிச் செயல்படுகிறது, இதனால் யாருக்கு என்ன பயன் என்பது குறித்துப் பார்ப்போம்.
திட்டம் எப்படிச் செயல்படும்?
இந்தத் திட்டத்தின் மூலம் தேவைக்கு அதிகமாக இருக்கும் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்ய முடியும். வங்கிகள் ஆபரணத் தங்கத்தை ஏற்காது. இந்தத் திட்டத்தில் தங்கத்தை டெபாசிட் செய்ய விரும்பினால், அதை முதலில் வங்கிக்கு நேரில் சென்று தெரியப்படுத்த வேண்டும். அதன்பின் வங்கி தங்கத்தைப் பரிசோதனை செய்வதற்கு ஒப்புதல் வழங்கும். ஹால்மார்க் சென்டரில் அந்த தங்கத்தை உருக்கி பரிசோதனை செய்து, அதை அதன் எடை மற்றும் தரத்தை வாடிக்கை யாளரிடம் கூறும்.
அதை வாடிக்கையாளர் ஒப்புக்கொண்டால், ஹால்மார்க் சென்டர் தங்கத்தின் எடை மற்றும் மதிப்புக்கு சான்றிதழ் வழங்கும். இந்த வேலை முடிவதற்கு 3-4 மணி நேரம் ஆகும். அதன்பிறகு அந்தச் சான்றிதழை வங்கியில் கொடுத்து, வங்கி கேட்கும் கேஒய்சி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
ஹால்மார்க் சென்டர் கூறும் தங்கத்தின் எடை மற்றும் தரத்துக்கு வாடிக்கையாளர் ஒப்புக்கொள்ளவில்லை எனில் உருக்கிய தங்கத்தை வாடிக்கையாளர் திரும்பப் பெற முடியும். ஆனால், தங்கத்தை உருக்குவதற்கு மற்றும் தரத்தை அறிவதற்கு ஆகும் செலவை வாடிக்கையாளர்தான் தரவேண்டும். ஆனால், தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டால், அந்தச் செலவை வங்கியே ஏற்றுக் கொள்ளும்.
ஹால்மார்க் சென்டர்!
இதைச் செய்வதற்கு அரசு 350 ஹால்மார்க் சென்டர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் 57 ஹால்மார்க் சென்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில்தான் மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்குகிறார்கள். அதனால் இந்த மாநிலங்களில் அதிகமான ஹால்மார்க் சென்டர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சென்டரில் தங்கம் உருக்கும் செயல்முறையை வாடிக்கையாளர் நேரடியாகப் பார்க்க முடியும். ஆனால், அரசு அனுமதி அளித்த ஹால்மார்க் சென்டர்கள் எந்தெந்த இடத்தில் இருக்கிறது என்பது இன்னும் தெரியவில்லை.
கணக்கு துவக்கமும், வட்டி விகிதமும்!
வாடிக்கையாளரின் பெயரில் தங்கத்தை வரவு வைப்பதற்காக தனியாக தங்க சேமிப்பு கணக்கு துவங்கப்படும். இதில் தங்கத்தை கிராம் அடிப்படையில் டெபாசிட்டாக வைக்கும். இதற்கு 0.75-1% வரை வட்டி வழங்கப்படலாம். இந்த வட்டி விகிதம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. வங்கிக்கு வங்கி இந்த வட்டி விகிதம் வித்தியாசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தை டெபாசிட் செய்த 30-60 நாட்களுக்குப்பிறகு வட்டி வழங்கப்படும். 100 கிராம் தங்கம் முதலீடு செய்தால், ஒரு வருடம் கழித்து சுமார் 101 கிராம் தங்கமாகக் கிடைக்கும்.
திரும்ப எடுப்பது..?
பணம் அல்லது தங்கமாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதாவது, டெபாசிட்டை எடுப்பதற்கு ஒரு வாரத்துக்குமுன் பணமாக வேண்டுமா அல்லது தங்கமாக வேண்டுமா என்பதைத் தெரிவிக்க வேண்டும். பணமாக வேண்டும் என்றால், அன்றைய தினத்தில் தங்கத்தின் விலையை அடிப்படையாக வைத்து பணம் வழங்கப்படும்.
டெபாசிட் காலம்!
குறைந்தபட்சம் ஒரு ஆண்டு டெபாசிட் வைக்கலாம். ஓராண்டின் மடங்கில் 2, 3 என எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வைக்கலாம். இடையில் தேவைப்பட்டால் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும். அந்தக் காலத்துக்கு மட்டும் வட்டி கணக்கிடப்படும்.
வரிச் சலுகை!
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தங்க டெபாசிட்டுக்கும் அதன் மூலமாகக் கிடைக்கும் வட்டிக்கும் மூலதன ஆதாய வரி, செல்வ வரி, வருமான வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
யாருக்கு பயன்?
வங்கிகள் டெபாசிட்டாக வாங்கும் தங்கத்தை, சிஆர்ஆர், எஸ்எல்ஆர் (வங்கிகள் கட்டாயமாக ரொக்கமாகவும் அரசு பத்திரங்களிலும் வைத்திருக்க வேண்டிய தொகை- இது தற்போதைய நிலைபடி மொத்த டெபாசிட்டுகளில் 25.5 சதவிகிதமாகும்) ஆகியவற்றுக்கு தங்க இருப்பைக் கணக்கு காண்பிக்க முடியுமா என்பது பரிசீலனையில் உள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தங்கம் அந்நிய செலாவணி ஈட்டுவதற்காக விற்கப்படும். மேலும், நகை வியாபாரிகளுக்கு கடனாகவும் வழங்கப்படும். தங்க காசுகள் மற்றும் பிஸ்கட்டுகளாகப் பொது மக்களுக்கும் விற்பனை செய்யப்படும்.
சிக்கல் என்ன?
தங்க டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தங்கத்துக்கு வட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது, தங்க டெபாசிட்டுக்கு 0.75-1% வட்டி கிடைக்கும். அதே சமயத்தில் தங்கத்தை நாமே நேரடியாக நகை கடைகளில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டாக முதலீடு செய்தால்கூட 8-9% வரை வட்டி கிடைக்கும். இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் தங்கம் என்பது சென்டிமென்ட் சார்ந்த விஷயமாகும். இங்கு பெரும்பாலானவர்கள் தங்கத்தை சொத்தாகப் பார்ப்பதில்லை. கெளரவம் சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள். மேலும், அவசரத் தேவைக்கு கையிலிருக்கும் தங்கத்தை எளிதாகப் பணமாக்கி கொள்வார்கள். அதாவது, அடமானம் வைத்தோ அல்லது நகையை விற்றோ பணமாக்க முடியும்.
குறைந்தபட்சம் 30 கிராம் வரைக்கும் டெபாசிட் வைக்கும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது இந்தத் திட்டம். 30 கிராம் தங்கம் என்பது 4 சவரனுக்குக் குறைவானது. இந்த அளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்கவே பொதுமக்கள் விரும்புவார்கள்.
தவிர, இந்தியாவில் கறுப்புப் பணம் பெரும்பாலான இடங்களில் தங்கமாக உள்ளது. தங்கத்தை டெபாசிட்டாகக் கொண்டு வரும்போது கணக்கில் வந்துவிடும் என்பதால், இதில் முதலீடு செய்யத் தயங்குவார்கள். தங்க அடமான கடனுக்குக் கிடைக்கும் வரவேற்பு இந்தத் தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்துக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவே!
மேலும், இந்தத் திட்டத்தின் நடைமுறை மிகவும் சிக்கலானதாக உள்ளது. தங்கத்தை உருக்கும் சென்டருக்கு வாடிக்கையாளர்களே கொண்டு செல்லவேண்டும். அங்கு சில மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்பதெல்லாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. மேலும் நகைகளை டெபாசிட் செய்யும்போது அவை உருக்கப்படும் என்பதால் எத்தனை குடும்பங்கள் இதற்கு தயாராக இருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.
தங்கத்தைப் பாராக அல்லது காயினாக வாங்கி வைத்திருப்பவர்களுக்கு இந்தத் திட்டம் பயன் தரலாம். மற்றவர்களை சுண்டி இழுக்கிற கவர்ச்சி இந்தத் திட்டத்தில் இல்லை.
--ந.விகடன் இந்தத் திட்டத்தை 2015-16-ம் நிதி ஆண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும், தங்கத்தை வங்கிகளில் டெபாசிட்டாக வைக்கலாம். அந்த டெபாசிட்டுக்கு வட்டியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் குறித்த வரைவை மத்திய நிதியமைச்சகம் வங்கிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் என்ன இருக்கிறது, திட்டம் எப்படிச் செயல்படுகிறது, இதனால் யாருக்கு என்ன பயன் என்பது குறித்துப் பார்ப்போம்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தங்கத்தை பணமாக்கும் திட்டம்..!
» நிலம் கையகப்படுத்தல் சட்டம்: யாருக்கு லாபம்
» நேரடி முதலீட்டுத் திட்டம்... முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் லாபம்.
» இன்போசிஸ் நிகர லாபம் 13.4% உயர்வு: ஊழியர்களை தக்க வைக்க பங்குகள் வழங்க திட்டம்- இன்போசிஸ் பங்கு 9 சதவீதம் சரிவு
» யாருக்கு எந்த பாலிசி..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum