Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மியூச்சுவல் ஃபண்ட்: முதலீட்டை எளிதாக்கும் ஒரே ஃபோலியோ எண்!(Common Account Number)
Page 1 of 1

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பல வசதிகள் இருந்தாலும் சில நடைமுறை சிக்கல்களும் உண்டு. அதாவது ஒருவர் 5, 6 மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், ஒவ்வொரு ஃபண்டுக்கும் தனித்தனிப் படிவம், காசோலை, கே.ஒய்.சி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஃபண்டுக்கும் தனித்தனி ஃபோலியோ எண் இருக்கும்.
இந்த ஃபோலியோ எண் மூலம் எந்த நிறுவனத்தில் எவ்வளவு பணம் முதலீடு உள்ளது, முதலீட்டின் மதிப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சில நேரங்களில் ஏதாவது ஒரு காரணத்துக்காக முதலீடு செய்து, அதைக் கவனிக்காமல் விட்டு இருப்போம். அதனுடைய ஃபோலியோ எண் அல்லது முதலீடு செய்திருந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பெயரையேகூட மறந்திருப்போம். இந்த முதலீட்டை வாரிசுகள் தெரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இந்தப் பிரச்னைகளுக் கெல்லாம் தீர்வுகாணும் விதமாக ஏற்படுத்தப்பட்டதுதான் மியூச்சுவல் ஃபண்ட் யுட்டிலிட்டி அமைப்பு. ஆம்ஃபியைப் போன்றதொரு அமைப்பு இது. மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடுகள் அனைத்தும் ஒரே எண்ணின் கீழ் வந்துவிடுகிற கேன் நம்பர் (Common Account Number) என்கிற புதிய நடை முறையை இந்த அமைப்பு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கேன் எண் பெற என்ன செய்ய வேண்டும், இதில் உள்ள கூடுதல் வசதிகள் குறித்து மியூச்சுவல் ஃபண்ட் யுட்டிலிட்டி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் சிஇஓ வி.ரமேஷ் விரிவாக எடுத்துக் கூறினார்.
கேன் எண் பெற..!
“மியூச்சுவல் ஃபண்ட் யுட்டிலிட்டி http://www.mfuindia.com/ இணையதளத்தில் இதற்கான படிவத்தை டவுண்லோடு செய்துகொள்ளலாம். இதில் முதலீட்டாளரின் பெயர், பிறந்த தேதி முகவரி, பான் எண், வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றைக் கொடுத்து கேன் எண்ணை பெறலாம். ஒருவருக்கு ஒரு கேன் எண்தான் இருக்கும். அதன்பிறகு முதலீடு செய்வதற்கான படிவத்தில் எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து அதனுடய பெயர், முதலீடு செய்யும் தொகை ஆகியவற்றை எழுதி அனைத்து ஃபண்டுக்கும் சேர்த்து ஒரு காசோலையை இணைத்து எங்களின் சேவை மைய(கேம்ஸ், கார்வி) அலுவலகத்தில் கொடுக்கலாம். இந்த சேவை மைய வசதி இல்லாதவர்கள் ஏஜென்ட் மூலமாக பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
மேலும் நேரடி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் கொடுக்கலாம். ஒவ்வொரு ஃபண்டுக்கும் தனித்தனி காசோலை கொடுக்கத் தேவையில்லை. அனைத்துக்கும் சேர்த்து “MFU ESCROW ACCOUNT” என்ற பெயரில் காசோலை கொடுத்தால் போதும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் மியூச்சுவல் ஃபண்டுகளில் யூனிட்டுகள் ஒதுக்கப்படும்.
ஒரே எண்..!
ஏற்கெனவே செய்திருக்கும் முதலீடுகளும் இந்த எண்ணின் கீழ் கொண்டு வரப்படும். எனவே, இந்த கேன் எண் மட்டும் தெரிந்திருந்தால், எந்த ஃபண்டுகளில் எவ்வளவு முதலீடு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதை அடுத்த 2, 3 மாதங்களில் ஆன்லைனில் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். மேலும், பணம் முதலீடு செய்ய, திரும்ப எடுக்க, இசிஎஸ், எஸ்டபிள்யூபி என ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாகப் படிவங்கள் உள்ளது. இதை எங்களின் இணைய தளத்தில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
கேன் எண்ணுக்காகப் பதிவு செய்யும்போதே முதலீட்டாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு எண் வைத்திருந்தால், அந்த விவரத்தையும் இதில் தெரிவிக்கலாம். முதலீட்டைத் திரும்பப் பெறும்போது எந்த வங்கிக் கணக்கில் அந்த வரவு வைக்கப்பட வேண்டும் என்பதை மட்டும் தெரிவித்தால் போதும். முதலீடு செய்வதற்கு ஒரு வங்கிக் கணக்கை கொடுத்து அதைத் திரும்பப் பெறுவதற்கு வேறு வங்கிக் கணக்கையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி.
பூர்த்திச் செய்யப்படும் படிவங்களை எந்தச் சேவை மையங்களில் வேண்டுமானாலும் கொடுக்கலாம். இப்படிச் செய்யும்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் செலவு குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஒவ்வொரு நிறுவனமும் முதலீட்டு ஆவணங்களைத் தனித்தனியாகப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எதிர்காலத்தில் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வாகக் கட்டணத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
இனி ஃபண்ட் முதலீடு எளிதாகும் என்பதில் சந்தேகமில்லை.
--விகடன்இந்த ஃபோலியோ எண் மூலம் எந்த நிறுவனத்தில் எவ்வளவு பணம் முதலீடு உள்ளது, முதலீட்டின் மதிப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சில நேரங்களில் ஏதாவது ஒரு காரணத்துக்காக முதலீடு செய்து, அதைக் கவனிக்காமல் விட்டு இருப்போம். அதனுடைய ஃபோலியோ எண் அல்லது முதலீடு செய்திருந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பெயரையேகூட மறந்திருப்போம். இந்த முதலீட்டை வாரிசுகள் தெரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இந்தப் பிரச்னைகளுக் கெல்லாம் தீர்வுகாணும் விதமாக ஏற்படுத்தப்பட்டதுதான் மியூச்சுவல் ஃபண்ட் யுட்டிலிட்டி அமைப்பு. ஆம்ஃபியைப் போன்றதொரு அமைப்பு இது. மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடுகள் அனைத்தும் ஒரே எண்ணின் கீழ் வந்துவிடுகிற கேன் நம்பர் (Common Account Number) என்கிற புதிய நடை முறையை இந்த அமைப்பு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கேன் எண் பெற என்ன செய்ய வேண்டும், இதில் உள்ள கூடுதல் வசதிகள் குறித்து மியூச்சுவல் ஃபண்ட் யுட்டிலிட்டி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் சிஇஓ வி.ரமேஷ் விரிவாக எடுத்துக் கூறினார்.
கேன் எண் பெற..!
“மியூச்சுவல் ஃபண்ட் யுட்டிலிட்டி http://www.mfuindia.com/ இணையதளத்தில் இதற்கான படிவத்தை டவுண்லோடு செய்துகொள்ளலாம். இதில் முதலீட்டாளரின் பெயர், பிறந்த தேதி முகவரி, பான் எண், வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றைக் கொடுத்து கேன் எண்ணை பெறலாம். ஒருவருக்கு ஒரு கேன் எண்தான் இருக்கும். அதன்பிறகு முதலீடு செய்வதற்கான படிவத்தில் எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து அதனுடய பெயர், முதலீடு செய்யும் தொகை ஆகியவற்றை எழுதி அனைத்து ஃபண்டுக்கும் சேர்த்து ஒரு காசோலையை இணைத்து எங்களின் சேவை மைய(கேம்ஸ், கார்வி) அலுவலகத்தில் கொடுக்கலாம். இந்த சேவை மைய வசதி இல்லாதவர்கள் ஏஜென்ட் மூலமாக பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
மேலும் நேரடி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் கொடுக்கலாம். ஒவ்வொரு ஃபண்டுக்கும் தனித்தனி காசோலை கொடுக்கத் தேவையில்லை. அனைத்துக்கும் சேர்த்து “MFU ESCROW ACCOUNT” என்ற பெயரில் காசோலை கொடுத்தால் போதும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் மியூச்சுவல் ஃபண்டுகளில் யூனிட்டுகள் ஒதுக்கப்படும்.
ஒரே எண்..!
ஏற்கெனவே செய்திருக்கும் முதலீடுகளும் இந்த எண்ணின் கீழ் கொண்டு வரப்படும். எனவே, இந்த கேன் எண் மட்டும் தெரிந்திருந்தால், எந்த ஃபண்டுகளில் எவ்வளவு முதலீடு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதை அடுத்த 2, 3 மாதங்களில் ஆன்லைனில் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். மேலும், பணம் முதலீடு செய்ய, திரும்ப எடுக்க, இசிஎஸ், எஸ்டபிள்யூபி என ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாகப் படிவங்கள் உள்ளது. இதை எங்களின் இணைய தளத்தில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
கேன் எண்ணுக்காகப் பதிவு செய்யும்போதே முதலீட்டாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு எண் வைத்திருந்தால், அந்த விவரத்தையும் இதில் தெரிவிக்கலாம். முதலீட்டைத் திரும்பப் பெறும்போது எந்த வங்கிக் கணக்கில் அந்த வரவு வைக்கப்பட வேண்டும் என்பதை மட்டும் தெரிவித்தால் போதும். முதலீடு செய்வதற்கு ஒரு வங்கிக் கணக்கை கொடுத்து அதைத் திரும்பப் பெறுவதற்கு வேறு வங்கிக் கணக்கையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி.
பூர்த்திச் செய்யப்படும் படிவங்களை எந்தச் சேவை மையங்களில் வேண்டுமானாலும் கொடுக்கலாம். இப்படிச் செய்யும்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் செலவு குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஒவ்வொரு நிறுவனமும் முதலீட்டு ஆவணங்களைத் தனித்தனியாகப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எதிர்காலத்தில் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வாகக் கட்டணத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
இனி ஃபண்ட் முதலீடு எளிதாகும் என்பதில் சந்தேகமில்லை.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்படி ஆரம்பிப்பது?
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...
» மியூச்சுவல் ஃபண்ட் - மூன்றெழுத்து மந்திரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum