Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மியூச்சுவல் ஃபண்ட் - மூன்றெழுத்து மந்திரங்கள்
Page 1 of 1

எஸ்.ஐ.பி...
இன்றைக்கு இந்த மூன்றெழுத்தைப் பற்றித் தெரியாத முதலீட்டாளர்கள் இருக்க முடியாது. மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் மியூச் சுவல் ஃபண்ட் முறையான இந்த எஸ்.ஐ.பி-யைப் பற்றி அந்த அளவுக்கு பெரிய விழிப்பு உணர்வு ஏற்பட் டிருக்கிறது.
எஸ்.ஐ.பி. போலவே இன்னும் இரண்டு சூப்பர் திட்டங்கள் இருக்கின்றன. அவையும் ‘எஸ்’-ஸில் ஆரம்பிக்கும் மூன்றெழுத்துத் திட்டங்கள்தான்.
எஸ்.டி.பி: (சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான்- STP- Systematic Transfer Plan )
மியூச்சுவல் ஃபண்ட்டில் அதிக அளவில் முதலீடு செய்யும்போது நம்மால் பங்குச் சந்தை ரிஸ்க்கிலிருந்து தப்பிக்க முடியாது. அதற்காகக் கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்யாமல் வைத்திருக்கவும் முடியாது. இதுபோன்ற சூழலில் என்ன செய்வது? இந்நிலையில்தான் எஸ்.டி.பி. கைகொடுக்கிறது. இந்த முறையில் குறைவான ரிஸ்க், சுமாரான வருமானம் கொண்ட திட்டத்திலிருந்து 1 மாதம், 3 மாதம் என்ற குறிப்பிட்ட இடைவெளியில் அதிக ரிஸ்க், அதிக வருமானம் கொண்ட ஈக்விட்டி திட்டத்துக்கு தொகையை மாற்றமுடியும்.
இது யாருக்கு ஏற்றது?
மொத்தமாகப் பணத்தை வைத்திருக்கும் முதலீட் டாளர் குறைவான ரிஸ்க்கில் ஈக்விட்டி ஃபண்ட்டின் ரிட்டர்னைப் பெற இந்த முறை உதவும். எஸ்.ஐ.பி. முறையில் முதலீட்டாளரின் வங்கிக் கணக்கிலிருந்து மாதந்தோறும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு பணம் செல்லும். எஸ்.டி.பி. முறையில் லிக்விட் அல்லது ஃப்ளோட்டிங் ஷார்ட் டேர்ம் பிளானிலிருந்து குறிப் பிட்ட இடைவெளியில் பங்கு சார்ந்த திட்டத்துக்கு பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இதன்மூலம் அந்த லிக்விட் அல்லது ஃப்ளோட்டிங் ஷார்ட் டேர்ம் பிளான் ஈட்டித் தரும் ரிட்டர்னையும் பெறமுடியும்.
இந்தத் தொகை, நிறுவனம் மற்றும் திட்டத்தைப் பொறுத்து மாறுபடும். இந்த மாற்றத்தை ஒரே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்குள்தான் மேற்கொள்ள முடியும். சேமிப்புக் கணக்கில் இருந்தால் பணத்துக்கு 3.5% தான் ரிட்டர்ன் கிடைக்கும். அதே நேரத்தில், லிக்விட் ஃபண்ட் 5-7% ரிட்டர்னை அளிக்கும். லிக்விட் ஃபண்டில் இருக்கும் பணத்தை சிறிது சிறிதாக ஈக்விட்டி திட்டத்துக்கு மாற்றும்போது, குறைவான ரிஸ்க்கில் அதிக ரிட்டர்னைப் பெறமுடிகிறது.
எஸ்.டி.பி. முறையில் பணத்தை மாற்றுவது, லிக்விட் ஃபண்டின் யூனிட்களை விற்பது போல்தான் கருதப்படும். என்.ஏ.வி. அடிப்படையில்தான் இந்த மாற்றம் இருக்கும். மேலும், முதலீட்டு காலத்தைப் பொறுத்து வெளியேறும் கட்டணம் இருக்கலாம், அல்லது இல்லாமலும் போகும். பெரும் பாலும் ஆறு மாதம் அல்லது ஓராண் டுக்குப் பிறகு எஸ்.டி.பி. முறையைப் பயன்படுத்தினால் இந்தக் கட்டணத் திலிருந்து தப்பிக்கலாம்.
எஸ்.டி.பி. முறையில் சில வகைகள் இருக்கின்றன.பங்குச் சந்தை மிகவும் ஏற்ற- இறக்கத்தில் இருக்கும்போது மூல தனப் பாதுகாப்பை ( Principal Protection ) மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதாவது, மூலதனத்தை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு கிடைக்கும் ரிட்டர்னை மட்டும் மாதந்தோறும் ஈக்விட்டி திட்டத் துக்கு மாற்றும் வசதி எஸ்.டி.பி. முறையில் இருக் கிறது. இது குரோத் ஆப்ஷனில் மட்டுமே அனுமதிக்கப் படுகிறது.இன்னொரு வகையான டிவிடெண்ட் மாற்றும் திட்டத்தில், அறிவிக்கப்படும் அனைத்து டிவிடெண்ட் தொகையும் அப்படியே அந்த நிறுவனத்தின் ஈக்விட்டி அல்லது பேலன்ஸ்ட் திட்டத்தில் முதலீடாக மாற்றும் வசதி இருக்கிறது. ஈக்விட்டி திட்டங்களில் சிறிய தொகையை ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றதாகும்.
சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு திட்டத் தின் மூலம் கிடைக்கும் ரிட்டர்ன் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தாண்டியதும், அதிலிருந்து மற்றொரு திட்டத்துக்கு மாற்றிக்கொள்ளும் வசதியை அளிக்கிறது. உதாரணமாக, டெப்ட் ஃபண்டிலிருந்து ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்கான ஆரம்பத் தொகை 500 ரூபாயில் தொடங்கி, 25,000 ரூபாய் என நீள்கிறது.சென்னை அசோக்நகரைச் சேர்ந்த மாறன், ‘‘பங்குச் சந்தை அதிக ஏற்ற - இறக்கத்தில் இருந்தபோது, மியூச்சுவல் ஃபண்டில் மொத்தத் தொகையை முதலீடு செய்யும் சூழ்நிலை உருவானது. அப்போது ரிஸ்க் குறைவான லிக்விட் ஃபண்டில் பணத்தைப் போட்டேன். இதில் 5-6% ரிட்டர்ன் கிடைத்தது. பிறகு ஆறு மாதம் கழித்து ஈக்விட்டி திட்டத்துக்கு மாதந்தோறும் எஸ்.ஐ.பி. போல் எஸ்.டி.பி. முறையில் பணத்தை மாற்றினேன். இதனால், எனக்கு சராசரியாக அதிக யூனிட்கள் கிடைத்தன’’ என்றார்.
எஸ்.டபிள்யூ.டி: (சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் SWP-Systematic Withdrawal Plan )
முதலீட்டாளருக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை தேவைப்படுகிறது. அதைப் பெறுவது எப்படி? இதற்கு எஸ்.டபிள்யூ.டி. முறை உதவும். பொதுவாக குரோத் ஆப்ஷனில் மட்டும்தான் இந்த முறை பின்பற்றப் படுகிறது.
பணி ஓய்வுபெற்றவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இது. தன்னுடைய முதலீட்டில் இருந்து குறிப் பிட்ட தொகையை மாதாமாதம் பென்ஷன் போல அவரால் பெறமுடியும். எவ்வளவு தொகை என் பதற்கு ஏற்ப மாதாமாதம் அவர் கணக்கில் உள்ள யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு அவருக்கு பணம் அனுப்பப்படும்.
எஸ்.டபிள்யூ.டி. முறையில் மூன்று வழிகளில் பணத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
மேலே சொன்னதுபோல, குறிப்பிட்ட இடை வெளியில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை எடுப்பது முதல் வாய்ப்பு.
மூலதனத்தை அப்படியே வைத்துக்கொண்டு, அதன் மீதான வருமானத்தை மட்டும் குறிப்பிட்ட இடைவெளியில் பெறுவது இரண்டாவது வழி. சில திட்டங்களில் அந்த வருமானத்திலும் 90% வரைதான் எடுக்கமுடியும்.
மூன்றாவது வழி, யூனிட்டின் என்.ஏ.வி. மதிப்பு குறிப்பிட்ட தொகையைத் தாண்டியதும், இவ்வளவு தொகையை எடுப்பது என்று முன்கூட்டியே நிர்ணயித்து விடுவது. இம்முறையில் முதலீட்டாளருக்கும் என்.ஏ.வி. நன்கு அதிகரித்திருக்கும் நிலையில் விற்கும்போது அதிக லாபம் கிடைத்து விடுகிறது.
மற்றொரு வசதி, முதலீட்டாளர் தொடர்ந்து என்.ஏ.வி. அதிகரிப்பை கவனித்து வரத் தேவையில்லை. இதேபோல் என்.ஏ.வி. குறிப்பிட்ட தொகைக்குக் கீழே சென்றாலும், யூனிட்களை விற்று விடச் சொல்லும் வசதியும் இந்த முறையில் இருக்கிறது.
சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த விசாலம் ராம நாதன், எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 11,000 ரூபாயை மூன்று திட்டங்களில் கடந்த ஓராண்டு காலமாக முதலீடு செய்து வருகிறார். அவர், ‘‘இந்த எஸ்.ஐ.பி. முறையில் மொத்தம் மூன்றாண்டுக்கு முதலீடு செய்யத் திட்ட மிட்டுள்ளேன். அதன் பிறகு இதிலிருந்து ஆறு மாதத் துக்கு ஒரு முறை மகள் படிப்புச் செலவுக்காக எஸ்.டபிள்யூ.பி. முறையில் பணம் எடுக்கத் திட்டமிட்டுள் ளேன். மூன்று வருடம் கழித்து என்கிறபோது, எக்ஸிட் கட்டணம் இருக்காது என்பதால் இம்முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’’ என்றார்.
முதலீட்டாளர்கள் இந்த எஸ்,டி.பி., எஸ்.டபிள்யூ.பி. திட்டங்களில் சேரவோ, விலகவோ வேண்டுமானால் குறைந்தது ஐந்து தினங்களுக்கு முன் எழுத்து மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதிகளை அளிப் பதற்காக தனியாகக் கட்டணம் எதுவும் பெறப்படுவ தில்லை. அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் இந்த வசதிகளை வழங்குவதில்லை என்பதால், முதலீடு செய்யும்போதே கவனித்துக்கொள்ள வேண்டும்.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 30, 31-ம் தேதிகளில் இந்தப் பரிமாற்றம் நடக்கும். சில நிறுவனங்கள் வாரத் துக்கு ஒருமுறை மாற்றும் வசதியையும் அளித்து வருகின்றன.
புளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்ட்மென்ட் சென்டரின் தி.நகர் கிளை மேலாளர் ஜி.சுமன் இதுபற்றிப் பேசும் போது, ‘எஸ்.பி.ஐ. முறை அளவுக்கு எஸ்.டி.பி. மற்றும் எஸ்.டபிள்யூ.டி. முறைகள் இன்னும் பிரபலமாக வில்லை. மேல்தட்டு மக்கள்தான் தற்போது இதன் பயனைச் சுவைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இவ்விரு முறைகளையும் முதலீட்டைத் தொடங்கி ஓராண்டுக்கு மேல் பயன்படுத்தினால், வெளியேறும் கட்டணம் மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரியில் இருந்து தப்பிக்கலாம். அப்போது அவை அதிக ரிட்டர்னை தருபவையாக இருக்கும்’’ என்றார்.
ரிஸ்க்கை குறைக்க உதவுவதோடு, ரிட்டர்னை அதிகரிக்க உதவும் எஸ்.டி.பி. மற்றும் எஸ்.டபிள்யூ.டி. முறைகளுக்கு தாராளமாக ஒரு சல்யூட் வைக்கலாம்!

முகநூல் -நாணய விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன ?
» மியூச்சுவல் ஃபண்ட்: புதிய கட்டுபாடுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum