Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
குழந்தைகளுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசிகள்... சென்டிமென்ட்டில் சிக்காதீர்கள்!
Page 1 of 1

‘‘சார், உங்களுக்கு குழந்தை பிறந்திருக்காமே! வாழ்த்துகள். முதல் காரியமா குழந்தையின் பேர்ல ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தி டுங்க. உங்க குழந்தை எதிர்காலத்துல கஷ்டப்படாம இருக்கிறதுக்கு இந்த பாலிசி நிச்சயம் உதவும்!’’
‘‘என்ன சார், உங்களுக்கு ரெண்டு குழந்தையா? அதுகளோட எதிர்காலத்துக்கு ஏதாவது சேர்த்து வச்சிருக்கீங்களா? நாளைக்கு உங்களுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா, அவங்களோட படிப்புக்கும் கல்யாணத்துக்கும் நீங்க என்ன செய்வீங்க? பேசாம, உங்க குழந்தைங்க பேர்ல இன்ஷூரன்ஸ் பாலிசி எடுங்க! உங்களுக்கு வரிச் சலுகையும் கிடைக்கும். உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் குழந்தைகளோட படிப்புக்கும் கல்யாணத்துக்குமான செலவுக்குப் பணமும் கிடைச்சுடும்! ’’
- இதுமாதிரியான ஓர் ஆலோசனையை உங்களுக்கு ஒருவர் எடுத்துச் சொன்னால், நீங்கள் மறுக்காமல் ஏற்றுக் கொள்வீர்கள் அல்லவா! நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்கள்.
காரணம், நம் குழந்தைகள் மீது நமக்கிருக்கும் அக்கறை அளவிடக்கரியது. நம் குழந்தைகளுக்காக நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்றுதான் எல்லா மிடில் கிளாஸ் பெற்றோர் களும் நினைக்கிறார்கள். இதை நன்றாகப் புரிந்துகொண்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் குழந்தைகளின் பெயரைச் சொல்லி, இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்க முயற்சிக்கின்றன. அதாவது, குழந்தை சென்டிமென்ட்டை பயன்படுத்தி, சைல்டு இன்ஷூரன்ஸ் பாலிசியை நம் தலைமீது எளிதாகக் கட்டிவிடுகின்றன.
தவறான அபிப்ராயங்கள்!
குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், அதற்காக சைல்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பது தவறா என்று நீங்கள் கேட்கலாம். குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்கு தன்னால் முடிந்ததைச் செய்தே ஆகவேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், வெறும் சென்டிமென்ட்டின் அடிப்படையில், வேறு எந்த விஷயங்களையும் கவனிக்காமல், பாரம்பரிய (Traditional) இன்ஷூரன்ஸ் பாலிசிகளே நம் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்கு வழி அமைத்துத் தரும் என்று நினைப்பது நிச்சயம் தவறு.
குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சைல்டு இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும்போதும் சரி, தனது குடும்ப நலனுக்காக லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போதும் சரி, நாம் கவனிக்கத் தவறுகிற அல்லது நம்மை அறியாமல் நாம் செய்கிற தவறுகளை நமக்கு யாரும் எடுத்துச் சொல்வதும் இல்லை; நாமும் அதைச் சரியாகப் புரிந்துக்கொள்வதும் இல்லை.
உதாரணமாக, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதை எதிர்காலத்துக் கான சேமிப்பு அல்லது முதலீடு என்று நினைக்கிறோம். நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட தவறான அபிப்ராயம் இது. இன்ஷூரன்ஸ் என்பது ஒரு குடும்பத்தின் வருமானத் துக்கு ஆதாரமாக இருக்கும் குடும்பத் தலைவர்/தலைவி திடீரென இறந்தால், அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான ஒரு முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடுதான். இதை முதலீடு என்கிற நோக்கில் கருதினால், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவாகவே இருக்கும். எனவே, சென்டிமென்ட்டைப் பார்த்து, இன்ஷூரன்ஸில் போய்ச் சிக்கத் தேவையில்லை.
பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்!
அடுத்து முக்கியமான விஷயம், இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை எப்போதும் தராது. உங்கள் குழந்தையை உயர்கல்வி படிக்க வைக்க, குறைந்தபட்சமாக ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இன்றைய மதிப்பில் தேவைப்படும். ஆனால், கல்விச் செலவு களின் பணவீக்கம் குறைந்தபட்சம் 10% ஆகும். உங்கள் குழந்தைக்கு இப்போது 3 வயது எனில், 15 வருடம் கழித்து கல்லூரிச் செலவுக்கு ரூ. 33 முதல் 40 லட்சம் வரை தேவைப்படும்.
ஆனால், நாம் எப்போதும் பணவீக்கத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் தேவைப்படும் தொகையை நிர்ணயம் செய்யாமல், தற்போதைய நிலையில் தேவைப்படும் பணத்தின் அளவுக்கு மட்டுமே பாலிசி கவரேஜை எடுத்துக் கொள்கி றோம். பாலிசி முடியும் காலத்தில் இந்த கவரேஜ் தொகை, 20 வருடங்களில்தான் இரு மடங்காகக் கிடைக்கக்கூடும் என்றாலும், மீதமுள்ள பணத்துக்கு நாம் மீண்டும் அல்லாட வேண்டிய நிலையே ஏற்படும்.
சிக்க வைக்கும் டெக்னிக்!
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது இந்த அடிப்படை விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக இருக்கும் நம் நண்பர் அல்லது சொந்தக்காரர் சொல்வதை எப்படி மறுத்துச் சொல்வது என்கிற சங்கடத்தில் அவர் சொல்லும் பாலிசிகளை எடுத்துக்கொண்டுவிடுகிறோம். இதுமாதிரியான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை நம்மிடம் பரிந்துரைப் பவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் அருதப் பழைய டெக்னிக், முதல் மாத பிரீமியத்தை நான் கட்டிவிடுகிறேன் என்பதுதான்.
அட, முதல் மாத பிரீமியத்தை அவர் கட்டுகிறேன் என்கிறாரே என்று நினைத்து பலரும் பாலிசி பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிடுகிறார்கள். ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 15 அல்லது 20 ஆண்டுக்கு தொடர்ந்து பிரீமியம் கட்டி வரவேண்டும். அதாவது, 180 முதல் 240 மாதங்கள் நீளும் ஒரு கட்டாயச் செலவு இது. இதில் ஒரே ஒருமாத பிரீமியத்தை யாரோ கட்டுகிறார் என்பதற்காக மீதமுள்ள 239 மாதங் களுக்கு ஒருவர் பிரீமியம் கட்டத் தயாராவது புத்திசாலித்தனமாக இருக்குமா?
மேலும், இத்தனை ஆண்டுகள் இந்த பாலிசியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டால், கட்டிய பிரீமியம்கூடத் திரும்பக் கிடைக்காது. சைல்டு பிளான்களில் வருமானம் குறைவாகக் கிடைக்கும் .அதேநேரத்தில், இடையில் பாலிசியை நிறுத்தினால், கட்டிய பிரீமியம்கூடக் கிடைக்காது. உதாரணத்துக்கு, மூன்று ஆண்டு கழித்து பாலிசியை சரண்டர் செய்தால், அதுவரைக்கும் கட்டிய பீரிமியத்தில் சுமார் 30 சதவிகிதம்தான் திரும்பக் கிடைக்கும். 5 வருடம் கழித்தால் சுமார் 75 சதவிகித பிரீமியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தை எல்லாம் கருத்தில்கொள்ளாமல் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள் பலர்.
சிறப்பான சில வழிகள்!
சரி, குழந்தையின் சிறப்பான எதிர்காலத்துக்கு சைல்டு இன்ஷூரன்ஸ் பாலிசி சரியான தேர்வாக இருக்காது என்றால், பிறகு எந்தவகை முதலீடு குழந்தையின் சிறப்பான எதிர்காலத்துக்கான வழி என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு எளிய பதில் இன்ஷூரன்ஸ் + முதலீடு கலந்த கலவைதான். இப்படிச் சொன்னவுடன் பங்குச் சந்தை சார்ந்த இன்ஷூரன்ஸ் திட்டமான யூலிப் பாலிசிகளை சிபாரிசு செய்வதாக யாரும் அவசரப்பட்டு நினைத்துவிடக் கூடாது. இங்கு இன்ஷூரன்ஸ் என்று நாம் குறிப்பிடுவது, டேர்ம் இன்ஷூரன்ஸைத்தான்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீடு தொகை கிடைக்கக்கூடிய 100% இன்ஷூரன்ஸ் பாலிசி. இதில் பாலிசிக் காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடைக்கும். அதாவது, இந்த பாலிசியில் ரிஸ்க் கவர் மட்டுமே உண்டு. பாலிசி முடிவில் முதிர்வுத் தொகை எதுவும் கிடையாது. மேலும், சரண்டர் மதிப்பும் கிடையாது.
இந்த டேர்ம் பிளான் என்பது ஏறக்குறைய நம் இருசக்கர வாகனத்துக்குச் செய்யப்படும் இன்ஷூரன்ஸ் போன்றதே. நாம் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் திடீரெனத் தொலைந்து போனால், அதனால் ஏற்படும் இழப்பிலிருந்து நாம் பாதிப்படாமல் இருக்க, வாகன இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். வண்டி தொலைய வில்லை என்றால், நாம் பிரீமியமாகக் கட்டிய தொகை நமக்குத் திரும்பக் கிடைக்காது. ஆனால், வண்டி தொலைந்துவிட்டால், அதற்கான பணம் நமக்குக் கிடைத்துவிடும். அதைக் கொண்டு இன்னொரு வண்டியை நாம் வாங்கிக்கொள்ள முடியும்.
இதே ரீதியில்தான் டேர்ம் இன்ஷூரன்ஸும் செயல்படுகிறது. இதில் பிரீமியம் மற்றும் கவரேஜ் தொகை எப்படி இருக்கிறது என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். உதாரணத்துக்கு, 30 வயதுள்ள ஒருவர் ரூ. 50 லட்சத்துக்கு, 30 வருடத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், ஓர் ஆண்டுக்கு சுமாராக ரூ.10,000 பிரீமியம் செலுத்தினாலே போதுமானது. ஆனால், இதே 10,000 ரூபாய் ஆண்டு பிரீமியம் கட்டுகிற மாதிரி ஒரு எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்தால், வெறும் ரூ.2 லட்சத்துக்கு மட்டுமே கவரேஜ் கிடைக்கும்.
பாரம்பரிய இன்ஷூரன்ஸ்களான எண்டோவ்மென்ட் பாலிசி, மணி பேக் பாலிசி, சைல்டு இன்ஷூரன்ஸ் பாலிசி, ஓய்வூதிய பாலிசிகளில், நீங்கள் செலுத்தும் பிரீமியத் தொகையில் ஒரு பங்கு காப்பீட்டுக்காகவும்; மீதமுள்ள தொகை முதலீட்டுக்கும் செல்லும்.
இதுவரை நீங்கள் எடுத்துள்ள பாலிசியைத் தூசிதட்டிப் பாருங்கள். நீங்கள் எடுத்த பாலிசியின் காப்பீடோ அல்லது முதிர்வுத் தொகையோ ரூ.30 அல்லது ரூ.40 லட்சம் இருக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் 5 எண்டோவ்மென்ட் பாலிசி கள் வைத்திருந்தாலும் அவை தலா ரூ.2 லட்சம் கவரேஜ் கொண்ட பாலிசிகளாகவே இருக்கும். இதன்மூலம் கிடைக்கும் மொத்த கவரேஜ் ரூ.10 லட்சத்துக்குள் மட்டுமே இருக்கும்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. இந்தப் பழமொழி ஒவ்வொரு வருவாய் ஈட்டும் பெற்றோருக்கும் பொருந்தும். வருவாய் ஈட்டும் பெற்றோர் இல்லாதுபோகும் நிலையில் இந்த ரூ. 10 லட்சம் ரூபாயை வைத்து எத்தனை நாளைக்கு ஓட்ட முடியும்? இரண்டு குழந்தைகளின் படிப்புக்கும், திருமணத்துக்கும் இந்தப் பணம் போதுமா?
மூன்று வகை முதலீட்டாளர்கள்!
முதலீட்டுக்குத் திட்டமிடுபவர்களை எச்சரிக்கையான முதலீட்டாளர், விவேகமுள்ள முதலீட்டாளர் மற்றும் ஸ்மார்ட் முதலீட்டாளர் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் வருடத்துக்கு ரூ.1,00,000 சேமிக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம்.
எச்சரிக்கையான முதலீட்டாளர், ஒரு பிரபல இன்ஷூரன்ஸ் கம்பெனியின் குழந்தை இன்ஷூரன்ஸ் பாலிசியை ஒரு லட்சம் ரூபாய் பிரீமியத்தில் எடுக்கிறார். விவேகமுள்ள முதலீட்டாளர், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொண்டு, பிரீமியம் போக மீதித் தொகையை பிபிஎஃப்-ல் முதலீடு செய்கிறார்.
ஸ்மார்ட் முதலீட்டாளர், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொண்டு, பிரீமியம் போக மீதமுள்ள பணத்தை வருமான வரிச் சலுகை அளிக்கும் இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்.
இதில் எச்சரிக்கையான முதலீட் டாளருக்கு 5 வருடம் கழித்து ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அவரது குடும்பத்துக்கு உடனடியாக ரூ.32 லட்சம் கிடைக்கும். குழந்தைக்கு 18 வயது முதல் 22 வயது வரையில் மணி பேக் தொகையும் கிடைக்கும். ஆனால், இந்தத் தொகையை பணவீக்க மதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், குழந்தையின் படிப்பு செலவுக்குப் போதுமானதாக இருக்காது. அதேமாதிரி, பாலிசி முடியும் வரை அவர் உயிருடன் இருந்தால், அப்போது கிடைக்கும் முதிர்வு தொகைகூட குழந்தையின் படிப்புச் செலவுக்குப் போதாமலே இருக்கும்.
இதுவே விவேகமான முதலீட் டாளர், (ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்) டேர்ம் இன்ஷூரன்ஸை எடுத்துக்கொண்டதால், அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அவரின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.50 லட்சம் கிடைக்கும். தவிர, அவரின் பிபிஎஃப் தொகை வட்டியுடன்(8.75%) கிடைக்கும். இதுவே, அவர் 15 வருடம் உயிருடன் இருக்கும் தருவாயில் பிபிஎஃப் முதிர்வு தொகை ரூ.29 லட்சம் அவரின் கைக்கு வந்துசேரும். இதை வைத்து அவரது குழந்தையின் கல்லூரி படிப்புக்குச் செலவு செய்ய முடியும்.
ஆனால், புத்திசாலி முதலீட்டாளரான ஸ்மார்ட் முதலீட்டாளர் டேர்ம் பிளான் எடுத்துவிட்டு, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து வரிச் சேமிப்புக்கான மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ததால், 15 ஆண்டுகள் கழித்து 12% வருமானம் கிடைக்கும் என்று வைத்துக்கொண்டால்கூட ரூ.40 லட்சம் கிடைக்கும்.
12% வருமானம் கிடைக்குமா என்று நீங்கள் சந்தேகப்படலாம். கடந்த காலங்களில் மியூச்சுவல் ஃபண்ட் தந்த சராசரி வருமானம் 15 சதவிகிதத்துக்குமேல் இருக்கிறது. எனவே, நீங்கள் ஓர் எச்சரிக்கையான முதலீட்டாளராக இருப்பதைவிட, ஸ்மார்ட்டான முதலீட்டாளராக இருக்க விரும்புங்கள். இனி, யாரேனும் உங்களிடம் சைல்டு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொன்னால், வேண்டாம் என்று சொல்லத் தயங்கமாட்டீர்கள்தானே?
--விகடன்‘‘என்ன சார், உங்களுக்கு ரெண்டு குழந்தையா? அதுகளோட எதிர்காலத்துக்கு ஏதாவது சேர்த்து வச்சிருக்கீங்களா? நாளைக்கு உங்களுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா, அவங்களோட படிப்புக்கும் கல்யாணத்துக்கும் நீங்க என்ன செய்வீங்க? பேசாம, உங்க குழந்தைங்க பேர்ல இன்ஷூரன்ஸ் பாலிசி எடுங்க! உங்களுக்கு வரிச் சலுகையும் கிடைக்கும். உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் குழந்தைகளோட படிப்புக்கும் கல்யாணத்துக்குமான செலவுக்குப் பணமும் கிடைச்சுடும்! ’’

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» இன்ஷூரன்ஸ் பாலிசிகள்... பாதியில் நின்றுபோவது ஏன்?
» இன்ஷூரன்ஸ் பாலிசிகள்... க்ளைம் பெறும் சூட்சுமங்கள் !
» பெஸ்ட் பாலிசிகள்!
» ஏமாற்றி விற்கப்படும் பாலிசிகள்!
» பெண்களுக்கான ஸ்பெஷல் ஹெல்த் பாலிசிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum