வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பெண்களுக்கான ஸ்பெஷல் ஹெல்த் பாலிசிகள்

Go down

பெண்களுக்கான ஸ்பெஷல் ஹெல்த் பாலிசிகள் Empty பெண்களுக்கான ஸ்பெஷல் ஹெல்த் பாலிசிகள்

Post by தருண் Mon Nov 11, 2013 4:04 pm

அனைத்து துறைகளிலும் கால்பதித்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஓடிக் கொண்டிருக்கும் காலமிது. வீடுகளில் மட்டுமல்ல, நாட்டை ஆள்வதிலும் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். பல குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெண்களே உறுதுணையாக இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் பெரும்பாலான வர்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கவில்லை என்பதே இன்றைக்கு நிதர்சனமாக தெரியும் உண்மை.

வேலைக்குச் செல்லும் பெண்களில் 10% பேர்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளனர். பெண்களுக்கென பிரத்யேக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியும் நிலை இதுதான். பெண்களுக்கு என்னென்ன வகையில் சிறப்பு வகை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இருக்கின்றன என வெல்த் கிரியேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் நிதி ஆலோசகர் திருமுருகன் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''பெண்களின் ஆரோக்கியம், ஆண்களுடன் ஒப்பிடுகையில் அதிக ரிஸ்க் கொண்டது. ஓர் ஆண் 70 வயது வரை மருத்துவமனைக்குச் செல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால், ஒரு பெண்ணுக்கு  திருமணம் முடிந்த பிறகு நிச்சயம் குழந்தை பேறுக்காக மருத்துவமனைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை வரும்.

பெண்களைப் பாதிக்கும் நோய்கள்!


பொதுவாக, பெண்களுக்கு மகப்பேறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அதிகம் காணப்படும். கர்ப்பப்பை கட்டி, கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவை பெண்களை அதிகம் தாக்குகின்றன. இதனால் பெண்கள் இளம்வயதிலேயே ஹெல்த் பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது.
மேலும், பெரிய நிறுவனங்களில் குரூப் பாலிசியின் கவரேஜ் இருக்கும். ஆனால், பணியில் இருக்கும் வரைதான் இதன்மூலம் பலன் பெறமுடியும். அதனால் குரூப் பாலிசி இருந்தாலும், பெண்களுக்கு அதிக நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தனியாக ஹெல்த் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது.

தீவிர நோய்கள்! (Critical illness)

இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், சுமார் 25 நோய்களை தீவிர நோய்கள் என்று வரையறுத்துள்ளது. இதில் சுமார் 10 கொடிய நோய்களுக்கு மட்டுமே இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிகளை வைத்துள்ளன. புற்றுநோய், பக்கவாதம், இதய நோய் உள்ளிட்ட தீவிர நோய் பாதிப்புகளுக்கு கவரேஜ் இருக்கும் பாலிசிகள் இருக்கின்றன.

கவனிக்க வேண்டியவை!

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனிப்பட்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம். காரணம், ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கவரேஜ் அளிக்கும் ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கும்போது பெண்களுக்கான கவரேஜ் குறைவாக இருப்பதே..!

இந்த பாலிசிகளில் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கும் கவரேஜ் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

பெண்களுக்கென இருக்கும் பிரத்யேக நோய் பாதிப்புகளுக்கு நீங்கள் எடுக்கும் பாலிசியில் கவரேஜ் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்

என்னென்ன பாலிசிகள்?


அப்போலோ முனிச் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பாலிசியில் 34 வயதுள்ள பெண்ணுக்கு 3,00,000 ரூபாய் கவரேஜ் கொண்ட பாலிசியில், தீவிர நோய் பாதிப்புக்கு 1,50,000 ரூபாய் கவரேஜ் தரப்படுகிறது. ஆண்டு பிரீமியத் தொகை 4,796 ரூபாய். அதாவது, மாதம் 400 ரூபாய்.

பஜாஜ் அலையன்ஸ் சி.ஐ. ப்ளானில் மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய், தீக்காயங்கள், பிறவிக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்களுக்கு கவரேஜ் தரப்படுகிறது. 10 லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட சி.ஐ. ப்ளானில் 30 வயதுள்ள பெண்ணுக்கு ஆண்டு பிரீமியம் 5,500 ரூபாய். இந்த பாலிசியில் 45 வயது வரை மருத்துவப் பரிசோதனை தேவையில்லை. மேலும், பரம்பரை நோய்கள் ஏதாவது இருந்தால், அதற்கு கவரேஜ் பெற கூடுதலாக 20-25 சதவிகித பிரீமியம் செலுத்த வேண்டிவரும்.

சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஹெல்த் பாலிசியில் மருத்துவமனை சிகிச்சைகளுக்கும், தீவிர நோய் பாதிப்புக்கும் கவரேஜ் வழங்கு கின்றன. குறிப்பாக, பார்தி ஏ.எக்ஸ்.ஏ. மற்றும் டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மருத்துவமனை செலவுகளுக்கும், தீவிர நோய் பாதிப்புக்கும் கவரேஜ் வழங்குகின்றன.  

மகப்பேறு பலன்கள்!

மகப்பேறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு குரூப் பாலிசியில் கவரேஜ் இருக்கிறது. இதில் பிரசவ செலவுக்கு கவரேஜ் கிடைத்தாலும் குறைந்த தொகையே கிடைக்கும். அதிக கவரேஜ் வேண்டும் என நினைப்பவர்கள் தனியாக பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. மாக்ஸ் பூபா ஹார்ட்பீட் கோல்டு பாலிசியில் 10 லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட திட்டத்தில் 50,000 ரூபாய் மகப்பேறு செலவுகளுக்குத் தரப்படுகிறது. இதற்கான பிரீமியத் தொகை 19,042 ரூபாய்.  
எல்.ஐ.சி.-ன் ஜீவன் பார்தி, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், அவிவா லைஃப் உள்ளிட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பெண்களுக்கு சில சிறப்பு கவரேஜ்களை வழங்குகின்றன.

பெண்களுக்கான ஹெல்த் பாலிசி என்கிற போது, ஒவ்வொரு பாலிசியும் ஒவ்வொரு சிறப்பு அம்சத்தைக் கொண்டிருக்கும். அந்த வகையில், பிரீமியத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், உங்களின் தேவை என்ன என்பதைக் கவனித்து அதற்கு ஏற்ற பாலிசியைத் தேர்வு செய்வது அவசியம். இதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அலசி ஆராய்ந்து நல்ல முடிவெடுங்கள்'' என்று முடித்தார் திருமுருகன்.

குடும்பத்தைத் தாங்கும் பெண்கள் சில ஆயிரம் ரூபாய் செலவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதன் மூலம் பல லட்சங்களை மிச்சப்படுத்த முடியும்.

-நாணயம் விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum