Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
இன்ஷூரன்ஸ் பாலிசிகள்... பாதியில் நின்றுபோவது ஏன்?
Page 1 of 1

இன்ஷூரன்ஸின் முக்கியத் துவம் குறித்த விழிப்பு உணர்வு நம் மக்களுக்கு இன்னும் முழுமையாகப் போய்ச் சேரவில்லை. இன்றும்கூட ஆயுள் காப்பீட்டு பாலிசி, விபத்துக் காப்பீட்டு பாலிசி இல்லாமலே பலரும் இருப்பது ஒருபக்கம்... இந்த நிலையில், சமீபகாலமாகத் தொடங்கப்பட்ட பல பாலிசிகள் பாதியிலேயே நின்றுபோவது அதிர்ச்சிகரமான தகவல்.
கடந்த 2012-2013-ம் ஆண்டில் எல்ஐசி-ன் பாலிசி காலாவதி விகிதம் 5.6 ஆகியுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 0.6% அதிக மாகும். இதேகாலத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களான பார்தி ஆக்ஸா, பிர்லா சன் லைஃப் நிறுவனங் களின் பாலிசி காலாவதி விகிதம் முறையே 42, 61 ஆகியுள்ளது.
இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஏன் இப்படி அதிக எண்ணிக்கையில் காலாவதியாகின்றன, வருடந்தோறும் இதன் விகிதம் அதிகரித்து வருவது ஏன் என்று எல்ஐசி-யில் ஏஜென்டாக பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த ஜானகிராமனிடம் கேட்டோம்.
''நான் கடந்த 10 ஆண்டுகளாக எல்ஐசியில் ஏஜென்டாகப் பணிபுரிந்து வருகிறேன். காப்பீட்டுத் துறை என்பது வளர்ந்துவரும் துறையாக இருந்தாலும், காலாவதியாகும் கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளன. இதற்குக் காரணம், சிலர் இன்ஷூரன்ஸை எதிர்கால வாழ்க்கைக்கான காப்பீடாகப் பார்க்காமல், லாபத்துக்கான முதலீடாகப் பார்ப்பதுதான். இந்த லாபம் அவர்கள் எதிர்பார்த்தபடி இல்லாதபோது, அந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை ரத்து செய்துவிடுகிறார்கள்.
இன்னும் சிலர், இன்ஷூரன்ஸ் பாலிசியை வருமான வரிச் சேமிப்பாக எடுக்கிறார்கள். சிலசமயங்களில் வரிச் சேமிப்புக்கான அவசியம் இல்லாத போது, இன்ஷூரன்ஸ் பாலிசியை மேற்கொண்டு தொடரவேண்டும் என்கிற அவசியம் இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் தங்கள் வருமான வரம்புக்கேற்ப இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காமல், ஒரேநேரத்தில் பல இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துவிட்டு, பிற்பாடுத் தொடர்ந்து பிரீமியம் கட்ட முடியாமல் நிறுத்திவிடுகின்றனர். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்கள் தாங்கள் எந்தத் திட்டத்தின் கீழ் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறோம், அதிலிருந்து அவர்கள் அடையப்போகும் பயன் என்ன என்பதை ஏஜென்ட்களிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு பிறகு பாலிசி எடுப்பது நல்லது. இவ்வாறு செய்தாலே பாதியிலேயே காலாவதியாகும் பாலிசிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிடலாம்' என்று கூறினார்.
பாதியிலேயே காலாவதியாகும் பாலிசிகளின் எண்ணிக்கைப் பெருகுவது ஏன் என்று பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸின் துணைத் தலைவர் ஜாஸ்லீன் கோஹ்லியிடம் கேட்டோம்.
''இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் பாலிசிதாரர்கள் தங்கள் தேவையை உணர்ந்து பாலிசி எடுக்கவேண்டும். தங்கள் வருமானம், குடும்பச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தங்கள் தேவைக்கேற்ப பாலிசி எடுக்க வேண்டும்.
சிலர் தங்கள் தேவைக்கு மீறியோ அல்லது அவர்கள் பாலிசி போடும்போது நல்ல சம்பளத்தில் இருந்து அதிகத் தொகைக்கு பாலிசி எடுத்துவிட்டு பின்னர் வருமானம் குறையும்போது பாலிசிக்கான பிரீமியத்தைக் கட்டமுடியாமல் அதைக் காலாவதியாகும் நிலைக்குத் தள்ளிவிடுகின்றனர்.
சிலர் ஏஜென்ட் அல்லது உறவினர் கட்டாயப்படுத்துகிறார் என்பதற்காக பாலிசி எடுக்கின்றனர். இதைத் தவிர்த்து, இந்த பாலிசி எனக்குத் தேவையில்லை என்று கறாராக சொல்லிவிட்டால், பின்னர் பிரச்னை வர வாய்ப்பேயில்லை. ஒரு பாலிசி எடுத்தால் அதை முழுமையாகக் கட்டி முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே அந்த பாலிசியை எடுப்பது நல்லது' என்றார்.
பாலிசிகள் காலாவதியாகாமல் இருக்க என்ன செய்யலாம் என்று இன்ஷூரன்ஸ் வட்டாரத்து அனுபவசாலிகளிடம் கேட்டோம். அவர்கள் தந்த டிப்ஸ் இனி:
இன்ஷூரன்ஸ் என்பது நீண்ட காலத் திட்டம். உங்களால் தொடர்ந்து கட்ட முடியும் என்கிற தொகைக்கேற்ற பாலிசியை வாங்குங்கள்.
உறவினர்கள்/நண்பர்கள் வற்புறுத்தினார்கள் என்று பாலிசி எடுக்காமல் உங்களுக்குத் தேவை என நினைத்தால் மட்டும் பாலிசி எடுங்கள்.
பிரீமியம் தொகையை ஏஜென்ட் வந்து வாங்கித்தான் கட்டவேண்டும் என்று எதிர்பார்க்காமல் நீங்களே சரியான தேதியில் கட்டிவிடுங்கள்.
பாலிசி அம்சங்களை ஒருமுறைக்கு பலமுறை நன்கு படித்துப்பார்த்துக் கையப்பமிடுங்கள்.
ஏஜென்ட்கள் கூறும் தகவல்கள் நீங்கள் பாலிசி எடுக்க போதுமானதாக இல்லையெனில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது அதன் இணையதளத்தை அணுகி தெளிவுபெற்ற பின்னர் பாலிசி எடுங்கள்.
இன்ஷூரன்ஸை முதலீடாகக் கருதாமல், அது குடும்பத்துக்கான பாதுகாப்புத் திட்டம் என்ற கோணத்தில் அணுக வேண்டும். குடும்பத் தலைவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படாமல் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்க உதவுவதே காப்பீட்டுத் திட்டங்களின் குறிக்கோள்.
இந்த டிப்ஸ்களை இனி நீங்கள் பின்பற்றினால் உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பாதியில் நின்றுபோவதற்கு எந்த வாய்ப்பும் இல்லையே!
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» குழந்தைகளுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசிகள்... சென்டிமென்ட்டில் சிக்காதீர்கள்!
» இன்ஷூரன்ஸ் பாலிசிகள்... க்ளைம் பெறும் சூட்சுமங்கள் !
» பெஸ்ட் பாலிசிகள்!
» ஏமாற்றி விற்கப்படும் பாலிசிகள்!
» பெண்களுக்கான ஸ்பெஷல் ஹெல்த் பாலிசிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum