Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
திட்டமிடுங்கள், வருமான வரியை சேமியுங்கள் !
Page 1 of 1

நடப்பு 2014-15-ம் ஆண்டுக்கான வருமான வரி முதலீட்டை உங்களில் பலர் ஏற்கெனவே ஆரம்பித்திருப்பீர்கள். ஒருவரின் வருமானம் 2014-15ம் நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது அவர் வருமான வரி கட்ட வேண்டிவரும். அதேநேரத்தில், குறிப்பிட்ட முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு அளிக்கப்படும் வரி சலுகைகளைப் பயன்படுத்தி வருமான வரி கட்டுவதைத் தவிர்க்க முடியும்.
ஒருவரின் சம்பளத்தில் (அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப் படி சேர்ந்து) 12% பிராவிடெண்ட் ஃபண்ட் பிடிக்கப்படும். இந்தத் தொகைக்கு வரிவிலக்கு இருக்கிறது. அடுத்து தேவைப்பட்டால், இதே 12% தொகையை விருப்பத்தின் அடிப்படையில் (விபிஎஃப்) சம்பளத்தில் பிடிக்கச் சொல்லாம். இந்தத் தொகைக்கும் வரி சலுகை உண்டு.
அடுத்து, ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு வரி சலுகை இருக்கிறது. ஆயுள் காப்பீடு என்கிறபோது, காப்பீடு மட்டும் அளிக்கும் டேர்ம் பிளான் எடுப்பது நல்லது. இன்றைய நவீன வேகமான உலகில் யாருக்கும் எந்த நோயும் எப்போதும் வரலாம். அந்தவகையில் மருத்துவக் காப்பீடு அவசியம். இப்படி எடுக்கப்படும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீயத்துக்கு வரி சலுகை இருக்கிறது. இரண்டு பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு வரி சலுகை இருக்கிறது. வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதில் குடியிருந்தால் திரும்பக் கட்டும் வட்டி மற்றும் அசலுக்கு வரி சலுகை இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட முதலீடுகள் மற்றும் செலவுகளை, உங்களின் நிதியாண்டு வருமானம், முதலீட்டு மீதான வட்டி வருமானம், மூலதன ஆதாயம், வணிக வருமானம் போன்றவைகளைத் தோராயமாகக் கணித்தால் கிடைக்கும் தொகை யிலிருந்து கழித்ததுபோக உள்ள தொகை ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், ஒருவர் இஎல்எஸ்எஸ், பிபிஎஃப் உள்ளிட்ட இதர முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் இன்னும் வரி சலுகை பெற முடியும்.
இதுவே, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எனில், ரூ.3 லட்சம் வரை, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எனில், ரூ.5 லட்சம் வரை வருமான வரி கட்டத் தேவை இருக்காது. ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்பட்சத்தில் சிறப்பு வரி தள்ளுபடி ரூ.2,000 (ரூ.20,000 வருமானத்துக்கு) அளிக்கப்படுகிறது.
இந்த வரி தள்ளுபடிக்கான 20,000 வருமானத்தையும் கழித்ததுபோக உள்ள தொகை ரூ. 2.5 லட்சத்தைத் தாண்டும்பட்சத்தில் வரி சலுகைக்கான முதலீட்டை மேற்கொண்டால் போதும். மிகவும் அத்தியாவசியமான பிஎஃப் முதலீடு, லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டுதான் மற்ற வரி சேமிப்பு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த இதர முதலீட்டுக்கான திட்டங் களைத் தேர்வு செய்யும்முன் வருமானம், மூலதனம் மீதான பாதுகாப்பு, எளிதில் பணமாக்கும் தன்மை, வருமானம் மீதான வரி, முதலீட்டுக்கான செலவு போன்ற வற்றைக் கவனிப்பது அவசியம். இவை ஒருவரின் தேவையைப் பொறுத்து அமைவது நல்லது.
இதர முதலீட்டுத் திட்டங்களில் 5 ஆண்டு வங்கி டெபாசிட், 3 ஆண்டு வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட், தேசிய சேமிப்புப் பத்திரங்கள் போன்றவை இருக்கின்றன. இவற்றையும் வரி சேமிப்புக் காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவற்றைப் பற்றியான விரிவான கட்டுரைகளை பின்வரும் பக்கங்களில் பார்க்கலாம்.
பட்ஜெட் வரி சலுகைகள்!
2014-15 மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கூடவே, 80சி பிரிவில் முதலீட்டு வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர் கூடுதலாக ரூ.15,000 வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டிக்கு அளிக்கப்படும் வரி விலக்கு வரம்பு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக ரூ.15,000 வரியை சேமிக்க முடியும்.
ந.விகடன் ஒருவரின் சம்பளத்தில் (அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப் படி சேர்ந்து) 12% பிராவிடெண்ட் ஃபண்ட் பிடிக்கப்படும். இந்தத் தொகைக்கு வரிவிலக்கு இருக்கிறது. அடுத்து தேவைப்பட்டால், இதே 12% தொகையை விருப்பத்தின் அடிப்படையில் (விபிஎஃப்) சம்பளத்தில் பிடிக்கச் சொல்லாம். இந்தத் தொகைக்கும் வரி சலுகை உண்டு.
அடுத்து, ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு வரி சலுகை இருக்கிறது. ஆயுள் காப்பீடு என்கிறபோது, காப்பீடு மட்டும் அளிக்கும் டேர்ம் பிளான் எடுப்பது நல்லது. இன்றைய நவீன வேகமான உலகில் யாருக்கும் எந்த நோயும் எப்போதும் வரலாம். அந்தவகையில் மருத்துவக் காப்பீடு அவசியம். இப்படி எடுக்கப்படும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீயத்துக்கு வரி சலுகை இருக்கிறது. இரண்டு பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு வரி சலுகை இருக்கிறது. வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதில் குடியிருந்தால் திரும்பக் கட்டும் வட்டி மற்றும் அசலுக்கு வரி சலுகை இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட முதலீடுகள் மற்றும் செலவுகளை, உங்களின் நிதியாண்டு வருமானம், முதலீட்டு மீதான வட்டி வருமானம், மூலதன ஆதாயம், வணிக வருமானம் போன்றவைகளைத் தோராயமாகக் கணித்தால் கிடைக்கும் தொகை யிலிருந்து கழித்ததுபோக உள்ள தொகை ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், ஒருவர் இஎல்எஸ்எஸ், பிபிஎஃப் உள்ளிட்ட இதர முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் இன்னும் வரி சலுகை பெற முடியும்.
இதுவே, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எனில், ரூ.3 லட்சம் வரை, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எனில், ரூ.5 லட்சம் வரை வருமான வரி கட்டத் தேவை இருக்காது. ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்பட்சத்தில் சிறப்பு வரி தள்ளுபடி ரூ.2,000 (ரூ.20,000 வருமானத்துக்கு) அளிக்கப்படுகிறது.
இந்த வரி தள்ளுபடிக்கான 20,000 வருமானத்தையும் கழித்ததுபோக உள்ள தொகை ரூ. 2.5 லட்சத்தைத் தாண்டும்பட்சத்தில் வரி சலுகைக்கான முதலீட்டை மேற்கொண்டால் போதும். மிகவும் அத்தியாவசியமான பிஎஃப் முதலீடு, லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டுதான் மற்ற வரி சேமிப்பு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த இதர முதலீட்டுக்கான திட்டங் களைத் தேர்வு செய்யும்முன் வருமானம், மூலதனம் மீதான பாதுகாப்பு, எளிதில் பணமாக்கும் தன்மை, வருமானம் மீதான வரி, முதலீட்டுக்கான செலவு போன்ற வற்றைக் கவனிப்பது அவசியம். இவை ஒருவரின் தேவையைப் பொறுத்து அமைவது நல்லது.
இதர முதலீட்டுத் திட்டங்களில் 5 ஆண்டு வங்கி டெபாசிட், 3 ஆண்டு வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட், தேசிய சேமிப்புப் பத்திரங்கள் போன்றவை இருக்கின்றன. இவற்றையும் வரி சேமிப்புக் காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவற்றைப் பற்றியான விரிவான கட்டுரைகளை பின்வரும் பக்கங்களில் பார்க்கலாம்.
பட்ஜெட் வரி சலுகைகள்!
2014-15 மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கூடவே, 80சி பிரிவில் முதலீட்டு வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர் கூடுதலாக ரூ.15,000 வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டிக்கு அளிக்கப்படும் வரி விலக்கு வரம்பு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக ரூ.15,000 வரியை சேமிக்க முடியும்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வருமான வரி சேமிப்பு... முதலீட்டு திட்டங்களும் வருமானமும்!
» வயதுக்கேற்ற வருமான வரி சேமிக்கும் முதலீடுகள்!
» வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்!
» வருமான வரி முதலீடு... கோடீஸ்வரர் ஆகலாம் !
» வருமான வரி கணக்கு தாக்கல்... முழுமையான வழிகாட்டி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum