Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வருமான வரி சேமிப்பு... முதலீட்டு திட்டங்களும் வருமானமும்!
Page 1 of 1

பிராவிடெண்ட் ஃபண்ட்!
சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகைக்கு வரி சலுகை உண்டு. இதற்கான முதலீட்டை பணி ஓய்வுக்காலம் வரை எடுக்காமல் இருப்பது நல்லது. இந்தத் தொகை யிலிருந்து இடையே கல்வி, மருத்துவம், திருமணச் செலவு, மனை, வீடு வாங்குவது போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தொகையைத் திரும்பக் கட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை.
வருமானம்: 8.75% (2014-15)
முதலீட்டுக் காலம்: பணிக் காலம் முழுவதும்
வருமானத்துக்கு வரி: இல்லை
வருமான வாய்ப்பு: முதிர்வுத் தொகை
முதலீட்டுச் செலவு: இல்லை
கவனிக்க..!
1. ரிஸ்க் தேவை இல்லை என்கிறவர்களுக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம்.
2. வருமானம், ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசின் பாண்ட் வருமானத்தைச் சார்ந்தது.
3. ஐந்தாண்டுக்குப் பிறகு கடன் பெறும் வசதி இருக்கிறது என்பது கூடுதல் வசதி. இதேபோல, விபிஎஃப் என்கிற விருப்ப பிராவிடெண்ட் ஃபண்ட் மூலம் பிஎஃப் தொகை அளவுக்குக் கூடுதலாக முதலீடு செய்யலாம். இந்தத் தொகைக்கும் வரி சலுகை இருக்கிறது. இந்தத் தொகை ஒருவரின் பிஎஃப் கணக்கில் சேர்ந்துவிடும்.
விபிஎஃப் மூலம் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால், நிதியாண்டின் ஆரம்பித்திலேயே பணிபுரியும் நிறுவனத்தில் சொல்லிவிட வேண்டும். ஏப்ரலில் பிடிக்க ஆரம்பித்தால், அந்த நிதியாண்டின் இடையில் நிறுத்த முடியாது.
பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட்!
சுயதொழில் செய்பவர்கள், அதிக ஓய்வூதியம் வேண்டும் என்கிறவர்கள், சம்பளத்தில் பிஎஃப் பிடிக்கப்படாதவர்கள் என பலரும் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்) திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். தபால் அலுவலகம், வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை: ரூ.500
வருமானம்: 8.7% (2014-15)
முதலீட்டுக் காலம்: 15 ஆண்டுகள்
வருமானத்துக்கு வரி: இல்லை
வருமான வாய்ப்பு: முதிர்வுத் தொகை
முதலீட்டுச் செலவு: இல்லை
கவனிக்க..!
1. ரிஸ்க் அதிகம் தேவை இல்லை என்கிறவர் களுக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம்.

3. பதினைந்து ஆண்டுத் திட்டம் என்பதைக் கவனத்தில் கொண்டு முதலீட்டை ஆரம்பிப்பது நல்லது.
4. ஆறாவது ஆண்டிலிருந்து கடன் பெறும் வசதி இருக்கிறது. இதற்கான வட்டி, முதலீட்டுக்கு அளிக்கப்படும் வட்டியைவிட 2% அதிகமாக இருக்கும்.
வங்கி எஃப்டி!
வங்கிகள் வழங்கும் ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி சலுகை இருக்கிறது.
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை: ரூ.100
வருமானம்: 8.5-9% (2014-15)
முதலீட்டுக் காலம்: 5 ஆண்டுகள்
வருமானத்துக்கு வரி: உண்டு
வருமான வாய்ப்பு: வட்டியுடன் முதிர்வுத் தொகை
முதலீட்டுச் செலவு: இல்லை
கவனிக்க...!
1. ரிஸ்க் வேண்டாம் என்கிறவர்களுக்கும் அடிப்படை வருமான வரம்பு 10.3%-ல் இருப்பவர்களுக்கும் ஏற்றது.
2. வட்டி முதிர்வுக் காலம் வரை மாறாது.
3. வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பது பாதக அம்சம். வட்டி வருமானம் ஓராண்டில் ரூ.10,000-க்கு மேல் செல்லும்போது டிடிஎஸ் பிடிக்கப்படும்.
4. மூத்த குடிமக்களுக்கு 0.25-0.5% கூடுதல் வட்டி உண்டு.
5. மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இந்த முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கலாம்.
தேசிய சேமிப்புப் பத்திரம்!
தபால் அலுவலகம் வழங்கும் ஐந்தாண்டு முதலீட்டுத் திட்டமான தேசிய சேமிப்புப் பத்திரத்தில் (என்எஸ்சி) செய்யப்படும் முதலீட்டுக்கு வரி சலுகை இருக்கிறது.
வருமானம்: 8.5% (2014-15)
முதலீட்டுக் காலம்: 5 ஆண்டுகள்
வருமானத்துக்கு வரி: உண்டு
வருமான வாய்ப்பு: முதிர்வுத் தொகை
முதலீட்டுச் செலவு: இல்லை
கவனிக்க..!
1. இது பாதுகாப்பான முதலீடு என்றாலும் வட்டிக்கு வரி உள்ளது.
2. அடிப்படை வருமான வரம்பு 10%-ல் இருப்பவர்களுக்கும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களுக்கும் ஏற்றது.
3. வட்டி முதிர்வுக் காலம் வரை மாறாது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்!
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரியை சேமிக்கும் திட்டம் இது. தபால் அலுவலகம், வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை: ரூ.1,000
வருமானம்: 9.2% ( 2014-15)
முதலீட்டுக் காலம்: 5 ஆண்டுகள்
வருமானத்துக்கு வரி: உண்டு
வருமான வாய்ப்பு: முதிர்வுத் தொகை
முதலீட்டுச் செலவு: இல்லை
கவனிக்க..!
1. ரிஸ்க் தேவை இல்லை என்கிறவர்களுக்கு ஏற்றது.
2. வட்டி முதிர்வு காலம் வரை மாறாது.
3. பதினைந்து லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம் என்றாலும், ரூ.1.5 லட்சத்துக்கு மட்டும்தான் நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை கிடைக்கும்.
நேஷனல் பென்ஷன் சிஸ்டம்!
ஓய்வூதிய சலுகை இல்லாத வர்கள், கூடுதலாக பென்ஷன் தேவை என்கிறவர்கள் மத்திய அரசின் இந்த ஓய்வூதியத் திட்டத் தில் சேரலாம். கடந்த 2014-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தில் தபால் அலுவலகம் மற்றும் முன்னணி வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை: ரூ.500 (ஓராண்டில் ரூ.6,000) வருமானம்: 8-11% (தற்போதைய நிலையில் ஆண்டுக்கு)முதலீட்டுக் காலம்: 60 வயது வரை
வருமானத்துக்கு வரி: உண்டு
வருமான வாய்பபு: ஓய்வூதியத் தொகை
முதலீட்டுச் செலவு: சுமார் ரூ.350 (ஆரம்ப முதலீட்டுக்கு)
கவனிக்க..!
1. 2016-17 வரையில் இந்தத் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.1,000, அதிகபட்சம் ரூ.12,000 முதலீடு செய்பவர்களுக்கு மத்திய அரசு அதன் பங்காக ரூ.1,000 முதலீடு செய்கிறது.
2. வருமானத்துக்கு வரி இருக்கிறது.
ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் (80 சிசிசி) மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் (80 சிசிடி) கொண்டுள்ள பென்ஷன் திட்டங்களின் முதலீட்டுக்கும் வரி சலுகை இருக்கிறது. இந்த பென்ஷன் திட்டங்கள் அனைத்திலுமான மொத்த முதலீடு, 80சி பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டு, நிபந்தனைக்கு உட்பட்டு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரையில் வரி சலுகை அளிக்கப்படும்.
வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள்!
பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் (இஎல்எஸ்எஸ்) மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு வரி சலுகை உண்டு. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை:
ரூ.500. (எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது)
வருமானம்: பங்குச் சந்தையைச் சார்ந்துள்ளது (கடந்த 3 ஆண்டுகளில் சராசரி வருமானம் 25%)
முதலீட்டுக் காலம்: 3 ஆண்டுகள்
வருமானத்துக்கு வரி: இல்லை
வருமான வாய்ப்பு: டிவிடெண்ட் மற்றும் குரோத்
முதலீட்டுச் செலவு: 2 - 2.5% ஆண்டுக்கு
கவனிக்க..!
1. வருமானம் முற்றிலும் பங்குச் சந்தையைச் சார்ந்தது.
2. சந்தையின் ரிஸ்க் இருக்கிறது என்பதால் சந்தையைப் பற்றி அறிந்தவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் முதலீடு செய்யலாம்.
3. நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படுவதால் நல்ல வருமானம் எதிர்பார்க்கலாம்.
4. இந்த முதலீட்டில் டிவிடெண்ட் ரீ இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷனைத் தவிர்ப்பது நல்லது.
5. ஏஜென்ட், விநியோகஸ்தர் தவிர்த்து, நேரடியாக முதலீடு (டைரக்ட் பிளான்) செய்தால் முதலீட்டு மீதான செலவு சற்று குறையும் (0.5 -1%).
6. மூன்றாண்டு லாக்-இன் முடியும் காலத்தில் ஃபண்ட் வருமானம் குறைவாக இருக்கும்பட்சத்தில், அந்த முதலீட்டை அப்படியே விட்டுவிட்டு சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது யூனிட்களை விற்றால் கூடுதல் லாபம் பெற முடியும். முதலீட்டை குறைந்தது 8-10 வருடங்களுக்காவது வைத்திருந்தால், நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலத்தில் இஎல் எஸ்எஸ் முதலீட்டைத் தொடர்வது நல்லது. டாப் இஎல்எஸ்எஸ் ஃபண்டுகள் 3 ஆண்டுகளில் தந்த வருமானம் இதோ:
ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் - 37.20%
ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர் ஃபண்ட் - 37.05%
பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலிஃப் 96 - 31.60%
பிரின்சிபல் டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் - 31.22%
பிள்ளைகளின் கல்விக் கட்டணம்..!
பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு வருமான வரி சலுகை இருக்கிறது. கல்விக் கட்டணத்துக்கு மட்டும்தான் வரி சலுகை உண்டு. தம்பதிகள் இருவரும் வேலை பார்க்கும்போது, இரண்டு பிள்ளைகள் எனில் ஒரு பிள்ளைக்கு தாயும், இன்னொரு பிள்ளைக்கு தந்தையும் வரி சலுகை பெறுவதன் மூலம் அதிகமான வரியைச் சேமிக்க முடியும்.
வீட்டுக் கடன் அசல்!
சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதால், அதை வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் அசல் தொகைக்கு வரி சலுகை இருக்கிறது. வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசலில் 1 லட்சம் ரூபாய் வரை நிபந்தனைக்கு உட்பட்டு வரி சலுகை கிடைக்கும்.
* மேலே குறிப்பிட்ட முதலீடுகள் மற்றும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் எல்லாம் சேர்ந்து ஒரு நிதியாண்டில் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சத்துக்கு வரி சலுகை கிடைக்கும்.
-ந.விகடன் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகைக்கு வரி சலுகை உண்டு. இதற்கான முதலீட்டை பணி ஓய்வுக்காலம் வரை எடுக்காமல் இருப்பது நல்லது. இந்தத் தொகை யிலிருந்து இடையே கல்வி, மருத்துவம், திருமணச் செலவு, மனை, வீடு வாங்குவது போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தொகையைத் திரும்பக் கட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிப்பு
» வெற்றிக்கு வழிகாட்டும் முதலீட்டு மந்திரங்கள்
» 10 சதவீத சேமிப்பு போதுமா?
» வரி சலுகை அதிகம் தரும் சூப்பரான முதலீட்டு திட்டங்கள்!!
» முதலீட்டு வருவாய் முதலீட்டாளரின் வருவாயிலிருந்து வேறுபடுவது ஏன் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum