வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


வயதுக்கேற்ற வருமான வரி சேமிக்கும் முதலீடுகள்!

Go down

வயதுக்கேற்ற வருமான வரி சேமிக்கும் முதலீடுகள்! Empty வயதுக்கேற்ற வருமான வரி சேமிக்கும் முதலீடுகள்!

Post by தருண் Mon Feb 02, 2015 2:38 pm

வயதுக்கேற்ற வருமான வரி சேமிக்கும் முதலீடுகள்!
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்
.


014-15ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 80சி பிரிவின் கீழ் கிடைக்கும் வரி சலுகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தினார். இது பலருக்கும் ஓர் அருமையான முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 80சி அல்லது அந்தப் பிரிவினைச் சார்ந்து உள்ள முதலீட்டு வாய்ப்புகளைக் கீழ்கண்ட வாறு பிரித்துக் கொள்ளலாம்.

1. இஎல்எஸ்எஸ் (ELSS – Equity Linked Savings Schemes) அல்லது டாக்ஸ் சேவர் மியூச்சுவல் ஃபண்டுகள்.

2. மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் ரிட்டையர்மென்ட் பெனிஃபிட் பென்ஷன் திட்டங்கள்.

3. என்பிஎஸ் (NPS – National Pension System)

4. இபிஎஃப் (EPF – Employee Provident Fund)

5. பிபிஎஃப் (PPF – Public Provident Fund)

6. வங்கி மற்றும் என்ஹெச்பி (NHB – National Housing Bank) டெபாசிட்டுகள்

7. ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்

a. யூலிப் திட்டங்கள்
b. எண்டோவ்மென்ட் திட்டங்கள்
c. பென்ஷன் திட்டங்கள்

8. அஞ்சலகச் சேமிப்புகள்

a. 5 வருட டைம் டெபாசிட்
b. சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்
c. என்எஸ்சி (NSC – National Savings Certificate)
மேற்கண்ட முதலீடுகளை ரிஸ்க்கின் அடிப்படையில் / வயதின் அடிப்படையில் / வருமான வளர்ச்சியின் அடிப்படையில் கீழ்க்கண்ட வாறு பிரிக்கலாம்.

வயதுக்கேற்ற வருமான வரி சேமிக்கும் முதலீடுகள்! Nav25a

நாம் மேலே உள்ள அட்டவணையைவைத்துப் பார்க்கும்போது, 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்வதற்கு, கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்களுக்கு நிறைய சாய்ஸ் இருப்பது தெரிகிறது. அதேசமயத்தில், அக்ரஸிவ் முதலீட்டாளர்களுக்கு இருப்பது இரண்டே சாய்ஸ்தான். ஒன்று டாக்ஸ் சேவர் ஃபண்டுகள்; மற்றொன்று யூலிப் திட்டங்கள். இன்ஷூரன்ஸை முதலீட்டோடு கலக்க விரும்பாதவர்களுக்கு, பெஸ்ட் சாய்ஸ் டாக்ஸ் சேவர் ஃபண்டுகள்தான். இவற்றில் ரிஸ்க் இருந்தாலும் நீண்ட காலத்தில் இதுவரை அதீத வருமானத்தைத் தந்துள்ளன.

இனி வரும் ஆண்டுகளிலும் உயரிய வருமானத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, நீங்கள் இளம் வயதினர் அல்லது ரிஸ்க் எடுக்க முடிந்தவர் என்றால், உங்களுடைய 80சி முதலீட்டு சாய்ஸ் டாக்ஸ் சேவர் மியூச்சுவல் ஃபண்டுகளாகத்தான் இருக்க வேண்டும். மற்றுமொரு பெரிய அட்வான்டேஜ் – டாக்ஸ் சேவர் ஃபண்ட் முதலீடுகள்தான், இருக்கும் டாக்ஸ் சேவர் முதலீடுகளிலேயே குறைந்த லாக்-இன் காலம் உள்ளவை. அதாவது, 36 மாதங்கள்தான். இந்த ஃபண்டுகளில் வரும் லாபத்துக்கு எந்தவிதமான வருமான வரியும் கட்ட வேண்டாம். மேலும், நீங்கள் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், கிடைக்கும் டிவிடெண்டுக்கு எந்தவிதமான வரியும் கட்ட வேண்டாம்.

வயதுக்கேற்ற வருமான வரி சேமிக்கும் முதலீடுகள்! Nav25c

மாடரேட் ரிஸ்க் எடுக்க விரும்புபவர்களுக்கு என்பிஎஸ் முதலீடு, மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் திட்டங்கள் சரியாகப் பொருந்தும். இவை மூன்றிலும் நாம் லைக் செய்வது மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் பென்ஷன் திட்டங்களையும், என்பிஎஸ் திட்டத்தையும்தான். மியூச்சுவல் ஃபண்டுகளில் டாக்ஸ் பெனிஃபிட்டோடு முதலீட்டு வாய்ப்பு கிடைப்பது இரண்டு திட்டங் களில்தான். அவை: ஃப்ராங்க்ளின் இந்தியா பென்ஷன் ஃபண்ட் மற்றும் யூடிஐ ரிட்டையர்மென்ட் பெனிஃபிட் பென்ஷன் ஃபண்ட். இவை இரண்டும் கிட்டத்தட்ட தனது போர்ட்ஃபோலியோவில் 40%-ஐ பங்கு சார்ந்த முதலீட்டிலும், எஞ்சியதை கடன் சார்ந்த முதலீட்டிலும் வைத்துள்ளன.

என்பிஎஸ் திட்டத்தில் அதிகபட்சமாக 50% வரைதான் பங்குசார்ந்த முதலீட்டில் ஒருவர் வைத்துக்கொள்ள முடியும். என்பிஎஸ் திட்டம் 80CCD (1) பிரிவின் கீழ் வந்தாலும், 80C, 80CCC, 80CCD ஆகிய மூன்றும் சேர்ந்து 80CCE பிரிவின் கீழ் வருகிறது. இந்தப் பிரிவின் கீழ் ஒருவர் வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.1,50,000 முதலீட்டுக்கு வரி சலுகையை க்ளெய்ம் செய்து கொள்ளலாம். இன்ஷூரன்ஸ் பென்ஷன் திட்டங்கள் 80CCC பிரிவின் கீழ் வருகின்றன.

கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்களுக்கு பல சாய்ஸ் உள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் பிடிக்கும் இபிஎஃப், விபிஎஃப் (VPF – Voluntary Provident Fund)-லிருந்து, பொதுமக்கள் முதலீடு செய்யும் பிபிஎஃப், அஞ்சலகச் சேமிப்புகள், வங்கி 5 வருட டெபாசிட்டுகள் என அனைத்தும் 80சி பிரிவின் கீழ் வருகின்றன. இவற்றில் பிபிஎஃப், இபிஎஃப், விபிஎஃப் போன்றவை இஇஇ (EEE – Exempt, Exempt, Exempt) அடிப்படையில் வரும். அதாவது, முதலீடு செய்யும்போது வரி சலுகை கிடைக்கும்; வரும் வருமானத்துக்கு வரி ஏதும் கட்ட வேண்டாம்.

அதேபோல், முதிர்வுத் தொகையை எடுக்கும்போதும் வரி ஏதும் கிடையாது; ஆனால், வங்கி மற்றும் அஞ்சலக டெபாசிட்டுகளில் இருந்து வரும் வட்டிக்கு உரிய வரியைச் செலுத்த வேண்டும். அசலை எந்தக் காலத்திலும் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இந்தத் திட்டங்கள் சரியாகப் பொருந்தும்.

உங்களுக்குச் சரியான திட்டம் எது என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள்தானே?

--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum