Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வருமான வரி முதலீடு... கோடீஸ்வரர் ஆகலாம் !
Page 1 of 1

இன்றைக்கு வேலைக்குச் சேரும் இளைஞர்களில் பலர், முதல் ஆண்டிலேயே வருமான வரிக் கட்டும் அளவுக்கு அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள்; அல்லது வரிச் சேமிப்புக்காக வீட்டுக் கடனில் வீடு வாங்குகிறார்கள்; அல்லது வரிச் சலுகை அளிக்கும் முதலீட்டுத் திட்டங்கள் அனைத்திலும் முதலீடு செய்கிறார்கள். இந்த முதலீட்டை உடனே எடுத்துவிடாமல், அதை அப்படியே பணி ஓய்வுபெறும் வரை எடுக்காமல் இருந்தால் அவர் நிச்சயம் கோடீஸ்வரர்தான்.
அதற்கான திட்டம் என்ன என்று சென்னை யின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான சதீஷ்குமாரிடம் கேட்டோம். அந்த சூப்பர் பிளானை அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.
''தற்போதைய நிலையில் வருடத்திற்கு ரூபாய் 1 லட்சம் வரையில் ஆயுள் காப்பீடு, பிராவிடண்ட், என்.எஸ்.சி., 5 ஆண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், யூலிப் இவைகளில் கலந்து முதலீடு செய்யலாம்.
ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் பி.எஃப். மற்றும் எஃப்.டி., என்.எஸ்.சி. போன்ற முதலீட்டில் மட்டுமே வருமானத்துக்கு உத்தரவாதம் இருக்கிறது. மற்ற முதலீடுகளுக்குச் சொல்லப்படும் வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. யூலிப், வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை சார்ந்த பென்ஷன் திட்டங்கள் உள்ளிட்டவை பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்தது என்று அவர்களே குறிப்பிட்டிருப்பார்கள். ஒருவர் மாதம் 45,000 ரூபாய் சம்பளம் வாங்கினால், அவர் வாடகை வீட்டில் இருப்பதற்குப் பதில் ரூபாய் 20 லட்சத்திற்கு சிறிய ஃப்ளாட் அல்லது வீடு வாங்கினால் தோராயமாக மாதம் ரூபாய் 20,000 வரையில் கடனுக்கு மாதத் தவணையாகத் திரும்பச் செலுத்தவேண்டிவரும். இந்த ரூபாய் 20,000 வட்டியாகவும் அசல் கழிவாகவும் இருக்கும். கூடவே, வீட்டு வாடகை ஏறுமுகத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். மனை மற்றும் வீட்டின் மதிப்பும் விரைவில் இரட்டிப்பாகும்.
ஒருவருடைய மாத வருமானம் ரூபாய் 35,000 என்று வைத்துக்கொண்டால், அவர் சொந்த வீடு கடனில் வாங்குவது கடினம். அவர் குடும்பச் செலவிற்காக ரூபாய் 10,000, வீட்டு வாடகை ரூ.5000, கல்விக் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் ரூ.12,000, போக மீதமுள்ள ரூபாய் 8,000-ஐ பி.பி.எஃப்., என்.எஸ்.சி., வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் முறையே 8.8%, 8.5% மற்றும் 9% வருமானம் கிடைக்கும். இதை சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் தொடர்ந்தால் வரிச் சலுகை கிடைப்பதோடு கோடீஸ்வரனாகி விட முடியும்.
நாம் முதலீடு செய்யும் தொகையை லாக் இன் பீரியட் முடிந்து 5 வருடம் கழித்து திரும்ப எடுக்கும்போது அதை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், புளூசிப் நிறுவனப் பங்குகள் மற்றும் நிலத்திலோ முதலீடு செய்யலாம். இதன் மூலம் சீக்கிரமாக கோடீஸ்வரராக வாய்ப்பு இருக்கிறது.
ஒரு சின்ன கணக்கு, 80சி பிரிவின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இதில் ஒருவர் ஆண்டுக்கு 80,000 ரூபாய் வீதம் (மாதமொன்றுக்கு சுமார் 6,650 ரூபாய்) முப்பது ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். அதற்கு 8.5% வருமானம் கிடைத்தால், மொத்தத் தொகை
1 கோடியே 2 லட்சம் ரூபாயாக அதிகரித்து நிற்கும். அந்த வகையில் வரிச் சேமிப்பின் மூலமே ஒருவர் எப்படி கோடீஸ்வரர் ஆகமுடியும்?'' என்றார் சதீஷ்குமார்.
இனி என்ன... முதல் சம்பளத்தில் இருந்தே வரிச் சேமிப்பு முதலீட்டை ஆரம்பிக்க வேண்டியதுதானே?

ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வயதுக்கேற்ற வருமான வரி சேமிக்கும் முதலீடுகள்!
» எஸ்ஐபி முறையில் ஃபண்ட் முதலீடு... வருமான வரி கணக்கீடு எப்படி?
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?
» வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்!
» திட்டமிடுங்கள், வருமான வரியை சேமியுங்கள் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum