Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
குறையும் வங்கி எஃப்டி வட்டி: கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மாறலாமா?
Page 1 of 1

இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் அடையும் சூழ்நிலை மிகப் பிரகாசமாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை மட்டுமே கடந்த சில மாதங்களில் 20 டாலருக்கு மேல் குறைந்திருக்கிறது. இதனால், நம் நாட்டில் பணவீக்கமும் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்திருக்கிறது.
இந்தக் காரணங்களினால் மத்திய ரிசர்வ் வங்கியானது கூடியவிரைவில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி குறைக்கும்போது, வங்கி களும் வைப்பு நிதித் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கும்.
இது ஒருபக்கமிருக்க, சில வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டியை இப்போதே குறைக்கத் தொடங்கிவிட்டன. இதனால் புதிதாக வங்கி வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்தால் குறைந்த வருமானமே கிடைக்கும். வங்கி வைப்பு நிதித் திட்டத்தைவிட அதிகமாக, அதேசமயம் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்போல் அல்லாமல், நிலையான வருமானம் தரும் திட்டம் ஏதேனும் உள்ளதா என தற்போது பலரும் விசாரித்து வருகின்றனர்.
இதுமாதிரி விசாரிக்கிறவர் களின் கேள்விக்கு ஒரே பதில், உண்டு என்பதுதான். அவைதான், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் என்று அழைக்கப்படும் வைப்பு நிதித் திட்டங்கள். கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் என்பது இன்னும்கூட பலருக்கும் தெரியாத ஒருவகையான முதலீடாகவே இருக்கிறது. இதைப்பற்றி இப்போது கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.
கம்பெனி எஃப்டி - ஓர் அறிமுகம்:
ஒரு கம்பெனி தனது மூலதனத்தை உயர்த்த பொதுமக்களிடமிருந்து கடன் பெறும். இதற்கு ஈடாக வட்டியைத் தரும். இந்த வட்டி யானது வங்கியின் வைப்பு நிதித் திட்டங்களைவிட அதிகமாக இருக்கும். சில நேரங்களில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானமாகவும் இது அமையும்.
கம்பெனி வைப்பு நிதித் திட்டம் - பலன்கள்!
1. வங்கி வைப்பு நிதித் திட்டத்தைவிட அதிக வட்டி.
2. நிலையான வருமானம்.
3.பங்குச் சந்தையைவிட ரிஸ்க் குறைவு.
4. குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் - 6 மாதங்கள்.
கவனிக்க வேண்டியவை!
கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய வற்றை இனி பார்ப்போம்.
1. ஒரு நிறுவனம் அதிக வட்டி தருவதால் மட்டுமே நாம் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது. ஏனெனில், நாம் முதலீடு செய்யும் கம்பெனி வட்டியையோ (அ) அசலையோ தரவில்லை எனில் நமக்கு நஷ்டமே ஏற்படும்.
2. கிரிஸில் போன்ற ரேட்டிங் கம்பெனிகள், கம்பெனி டெபாசிட் திட்டத்தை தரம் பிரித்திருக்கும். ஏஏ (அ) அதற்கு மேல் ரேட்டிங் உள்ள கம்பெனிகள், நல்ல தரம் வாய்ந்த நீண்ட கால அனுபவம் உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்யலாம்.
3. நாம் முதலீடு செய்யும் கம்பெனியின் சொத்து மதிப்பு, லாப அளவு, கையிருப்புத் தொகை, கடன் அளவு ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
4. கம்பெனியின் ரேட்டிங்கைத் தொடர்ந்து கவனித்து வரவேண்டும்.
5. நாம் முதலீடு செய்யும் மொத்த பணத்தை யும் ஒரே கம்பெனியில் முதலீடு செய்யாமல் பல்வேறு துறைகளைச் சார்ந்த 2 அல்லது 3 கம்பெனிகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது.
6. வட்டி வருமானம் ரூ.5,000-க்கு மேல் இருந்தால், வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) செய்யப்படும். இதனைத் தவிர்க்க, ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் 15ஜி / 15ஹெச் படிவம் தரவேண்டும்.
7. முதலீட்டு ஆலோசகரின் வழிகாட்டு தலுடன் முதலீடு செய்வது நல்லது.
தவிர்க்க வேண்டியவை:
1. ஏ அல்லது அதைவிட குறைவான ரேட்டிங் உள்ள கம்பெனிகளில் முதலீட்டை தவிர்ப்பது நல்லது.
2. நஷ்டம் அடைந்த கம்பெனிகள்.
3. டிவிடெண்ட் தராத கம்பெனிகள்.
4. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட சுமார் 4 சதவிகிதத்துக்கும் மேலாக வட்டியைத் தரும் கம்பெனிகள் ஆகியவற்றிலும்
முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது.
யாருக்கு உகந்தது?
1. நிலையான வருமானம் எதிர்பார்ப்பவர்கள்.
2. வங்கி வைப்பு நிதித் திட்டத்தைவிட அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்கள்.
3. குறைந்த வருமான வரி வரம்பில் உள்ளவர்கள்.
4. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள்.
5. குறுகிய காலத்துக்கு (1-3 ஆண்டுகள்) முதலீடு செய்ய விரும்புவர்கள்.
யாருக்கு உகந்ததல்ல?
1. மிக அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்கள்.
2. நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய விரும்புவர்கள்.
3. அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள்.
வருமான வரியைப் பொறுத்தவரையில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கம்பெனி டெபாசிட்டுக்கு வேறுபாடு எதுவும் கிடையாது. அந்தவகையில், கம்பெனி நல்லதாக இருந்து, அதிக வட்டி வருமானம் கொடுத்தால் லாபம்தான்.
ந. விகடன் இந்தக் காரணங்களினால் மத்திய ரிசர்வ் வங்கியானது கூடியவிரைவில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி குறைக்கும்போது, வங்கி களும் வைப்பு நிதித் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கும்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» எஃப்டி வட்டி குறைவு: டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட் லாபமா?
» வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி
» வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» குறையும் பணவீக்கம், உயரும் தொழில் வளர்ச்சி: ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்குமா?
» வங்கி கணக்கு துவக்க நிரந்தர முகவரி போதும்' - ரிசர்வ் வங்கி உத்தரவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum