Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
எஃப்டி வட்டி குறைவு: டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட் லாபமா?
Page 1 of 1

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் அதிகம் விரும்புவது வங்கி டெபாசிட்டு களையே. இதற்கான வட்டி விகிதத்தை ஒருசில வங்கிகள் குறைத்துள்ளன. இந்த நிலையில், ரிஸ்க்கும் அதிகம் இருக்கக் கூடாது, எஃப்டி அளவுக்கு வருமானமும் கிடைக்க வேண்டும்; எதில் முதலீடு செய்யலாம் என்கிற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருப்பதுபோல, எந்த ஒரு பொருளாதார நடவடிக்கைக்கும் இரண்டு பக்கம் உண்டு. டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் குறையும்போது கடன் சார்ந்த டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் நல்ல முதலீட்டு வாய்ப்பு இருக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வருமானம் குறையும்போது நாம் டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். வட்டி குறையும்போது அதிக வட்டியில் வழங்கிய பாண்டுகளின் விலை அதிகரிக்கும். இந்த விலையேற்றத்தினால் டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கும் அதிக வருமானம் கிடைக்கும்.
டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டியவை:
1. கில்ட் ஃபண்ட்ஸ் (லாங் டேர்ம் மற்றும் ஷார்ட் டேர்ம்) வட்டி விகிதம் குறைக்கப்படும் காலகட்டத்தில் கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா பாண்ட்ஸ் ( கில்ட் ஃபண்டு கள்) அதிக வருமானம் தரக்கூடியவை களாகும்.
இந்தவகை ஃபண்டுகளில் குறைந்தது 2 - 3 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். வட்டி விகிதம் இனிமேல் குறைக்கப்படாது என்ற சூழ்நிலையில், இந்தவகை திட்டத்தி லிருந்து வெளியேற வேண்டும்.
வட்டி விகிதம் எதிர்பார்த்தபடி குறைக்கப்படவில்லை. பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம், பணவீக்கம் உயர்வு போன்ற நேரங்களில் இதில் வருமானம் குறையும். சில நேரங்களில் நஷ்டமும் ஏற்படும். அதனால் உங்கள் டெப்ட் ஃபண்ட் முதலீட்டில் 20% வரை மட்டுமே இந்தவகை கில்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
2 இன்கம் ஃபண்ட்
இந்தவகை முதலீட்டில் வெறும் அரசு பாண்ட் பத்திரம் மட்டும் அல்லாமல் தனியார் நிறுவனங்கள் வெளியிடும் டிபெஞ்சர், பாண்ட் ஆகியவற்றிலும் முதலீடு இருக்கும். இதில் முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைக்கும். அதேசமயம், வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானமும் தரக்கூடியது. குறைந்தது 1 - 2 ஆண்டுகள் முதலீடு செய்யலாம்.
3 வெளியேறும் கட்டணம்
டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்வதற்குமுன் அந்தத் திட்டத்திலிருந்து வெளியேறும்போது அதற்கு எவ்வளவு கட்டணம் இருக்கிறது என்பதைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.
4 டெப்ட் ஃபண்ட் வருமான வரி விதிப்பில் மாற்றம்
ஜூலை 11, 2014-லிருந்து டெப்ட் ஃபண்ட் வருமான வரி கணக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடன் ஃபண்டுகளில் மூன்று ஆண்டு களுக்குள் வெளியேறினால் வருமானம் முதலீட்டாளரின் இதர வருமானத்தோடு சேர்த்து, அவர் எந்த வருமான வரி விகிதத்தில் வருகிறாரோ, அதற்கு வரி செலுத்த வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் என்றால், மூலதன ஆதாய வரி 20% செலுத்த வேண்டும். இந்த மாற்றத்தினால் 3 ஆண்டுகளுக்குள் முதலீடு செய்யும் டெப்ட் ஃபண்ட் முதலீடும், வங்கி முதலீடும் வரி விதிப்பின்படி ஒன்றாகத்தான் கணக்கிடப்படும்.
ஆனால், வங்கி முதலீட்டில் ஒவ்வொரு வருடமும் வருமான வரி தாக்கல் செய்யும்போது வட்டிக்கான வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே, டெப்ட் ஃபண்ட் எனில், எப்போது வெளியேறுகிறோமோ அந்த வருடத்தில் கணக்கில் கொண்டு வந்தால் போதுமானது. வங்கி டெபாசிட்டைபோல, உத்தரவாதமான வருமானம் டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் கிடையாது.
நாம் மேலே கொடுத்திருக்கும் உதாரணத்தின்படி, எஃடியில் வரிக்குப் பிந்தைய வருமானம் என்பது, அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப 8.49%, 7.58%, மற்றும் 6.66% ஆக இருக்கிறது. இதுவே, கடன் ஃபண்டுகளில் 9% இருப்பதைக் காணலாம்.
--ந.விகடன் ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருப்பதுபோல, எந்த ஒரு பொருளாதார நடவடிக்கைக்கும் இரண்டு பக்கம் உண்டு. டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் குறையும்போது கடன் சார்ந்த டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் நல்ல முதலீட்டு வாய்ப்பு இருக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வருமானம் குறையும்போது நாம் டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். வட்டி குறையும்போது அதிக வட்டியில் வழங்கிய பாண்டுகளின் விலை அதிகரிக்கும். இந்த விலையேற்றத்தினால் டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கும் அதிக வருமானம் கிடைக்கும்.
டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டியவை:
1. கில்ட் ஃபண்ட்ஸ் (லாங் டேர்ம் மற்றும் ஷார்ட் டேர்ம்) வட்டி விகிதம் குறைக்கப்படும் காலகட்டத்தில் கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா பாண்ட்ஸ் ( கில்ட் ஃபண்டு கள்) அதிக வருமானம் தரக்கூடியவை களாகும்.
இந்தவகை ஃபண்டுகளில் குறைந்தது 2 - 3 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். வட்டி விகிதம் இனிமேல் குறைக்கப்படாது என்ற சூழ்நிலையில், இந்தவகை திட்டத்தி லிருந்து வெளியேற வேண்டும்.
வட்டி விகிதம் எதிர்பார்த்தபடி குறைக்கப்படவில்லை. பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம், பணவீக்கம் உயர்வு போன்ற நேரங்களில் இதில் வருமானம் குறையும். சில நேரங்களில் நஷ்டமும் ஏற்படும். அதனால் உங்கள் டெப்ட் ஃபண்ட் முதலீட்டில் 20% வரை மட்டுமே இந்தவகை கில்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
2 இன்கம் ஃபண்ட்
இந்தவகை முதலீட்டில் வெறும் அரசு பாண்ட் பத்திரம் மட்டும் அல்லாமல் தனியார் நிறுவனங்கள் வெளியிடும் டிபெஞ்சர், பாண்ட் ஆகியவற்றிலும் முதலீடு இருக்கும். இதில் முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைக்கும். அதேசமயம், வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானமும் தரக்கூடியது. குறைந்தது 1 - 2 ஆண்டுகள் முதலீடு செய்யலாம்.
3 வெளியேறும் கட்டணம்
டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்வதற்குமுன் அந்தத் திட்டத்திலிருந்து வெளியேறும்போது அதற்கு எவ்வளவு கட்டணம் இருக்கிறது என்பதைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.
4 டெப்ட் ஃபண்ட் வருமான வரி விதிப்பில் மாற்றம்
ஜூலை 11, 2014-லிருந்து டெப்ட் ஃபண்ட் வருமான வரி கணக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடன் ஃபண்டுகளில் மூன்று ஆண்டு களுக்குள் வெளியேறினால் வருமானம் முதலீட்டாளரின் இதர வருமானத்தோடு சேர்த்து, அவர் எந்த வருமான வரி விகிதத்தில் வருகிறாரோ, அதற்கு வரி செலுத்த வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் என்றால், மூலதன ஆதாய வரி 20% செலுத்த வேண்டும். இந்த மாற்றத்தினால் 3 ஆண்டுகளுக்குள் முதலீடு செய்யும் டெப்ட் ஃபண்ட் முதலீடும், வங்கி முதலீடும் வரி விதிப்பின்படி ஒன்றாகத்தான் கணக்கிடப்படும்.
ஆனால், வங்கி முதலீட்டில் ஒவ்வொரு வருடமும் வருமான வரி தாக்கல் செய்யும்போது வட்டிக்கான வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே, டெப்ட் ஃபண்ட் எனில், எப்போது வெளியேறுகிறோமோ அந்த வருடத்தில் கணக்கில் கொண்டு வந்தால் போதுமானது. வங்கி டெபாசிட்டைபோல, உத்தரவாதமான வருமானம் டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் கிடையாது.
நாம் மேலே கொடுத்திருக்கும் உதாரணத்தின்படி, எஃடியில் வரிக்குப் பிந்தைய வருமானம் என்பது, அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப 8.49%, 7.58%, மற்றும் 6.66% ஆக இருக்கிறது. இதுவே, கடன் ஃபண்டுகளில் 9% இருப்பதைக் காணலாம்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: இனி எஸ்.எம்.எஸ். போதும்!
» மியூச்சுவல் ஃபண்ட்... ஒரு சூப்பர் மார்க்கெட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum