வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


குறையும் பணவீக்கம், உயரும் தொழில் வளர்ச்சி: ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்குமா?

Go down

குறையும் பணவீக்கம், உயரும் தொழில் வளர்ச்சி: ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்குமா? Empty குறையும் பணவீக்கம், உயரும் தொழில் வளர்ச்சி: ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்குமா?

Post by தருண் Wed Nov 19, 2014 11:26 am

அமெரிக்காவின் பணவீக்கம் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடெரல் ரிசர்வின் இலக்குக்கு குறைவாக இருந்து வருகிறது. 12 மாதங்கள் முடிவடைந்த செப்டம்பர் மாதத்தில் (2014) வருடத்துக்கான பணவீக்கம் 1.7 சதவிதமாக இருக்கிறது என்று அமெரிக்க அரசாங்கம் 2014 ஆம் வருடம் அக்டோபர் மாதம் தெரிவித்திருக்கிறது.

மத்திய வங்கி எப்படி பணவீக்கம் அதிகரித்திருக்கும் பொழுது போராடுகிறதோ அப்படி அது குறைவாக இருக்கும் பொழுதும் போராட வேண்டும் அல்லது ஜப்பானையும் ஐரோப்பாவைவும் பாதித்திருக்கிற நீண்ட நாளைய மந்தமான வளர்ச்சியைத்தான் சந்திக்க வேண்டிருக்கும் என்று போஸ்டன் பகுதியை சார்ந்த ஃபெடெரல் ரிசர்வ் வங்கி தலைவர் எரிக் ரோசெங்க்றேன் எச்சரிக்கை செய்துள்ளார்.

அமெரிக்க மத்திய வங்கி தனது பணவீக்க சதவீத இலக்கை அடைய முடியும் என்று உறுதியாக தெரியும் வரை வட்டி விகிதங்களை அதிகரிப்பதில் பொறுமையை கடைப் பிடிக்க வேண்டும் என்று எரிக் கேட்டுக் கொள்கிறார்.

இந்தியாவில் உணவு மற்றும் எரிபொருள்களின் விலைகள் குறைந்ததின் காரணமாக அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டை (Consumer Price Index) அடிப்படையாக கொண்ட பணவீக்கம் 5.5 சதவிகித குறைந்திருப்பதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் (central statistics office) அண்மையில் அறிவித்திருக்கிறது. இது செப்டம்பர் மாதத்தில் 6.5 சதவிகிதமாக இருந்தது.

--விஆர் சீனிவாசன்

அதே சமயத்தில் மூலதன பொருட்களின் (capital goods) உற்பத்தி அதிகரித்ததின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் ஆண்டுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீடு (index of industrial production) 2.5 சதவிதமாக அதிகரித்திருக்கிறது. இது ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவிகிதமாக இருந்தது என்றும் மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்திருக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் 2.38 சதவிகிதமாக இருந்த மொத்த விலை குறியீட்டின் (wholesale price index) பணவீக்க சதவீதமும் அக்டோபர் மாதத்தில் 1.77 இறங்கியிருக்கிறது என்று பொருளாதார ஆலோசகர் அலுவலகம் (Office of The Economic Adviser) அண்மையில் அறிவித்திருக்கிறது.

மேலே குறிப்பிட்ட புள்ளி விவரங்களை ஆதாரமாக வைத்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் தொழில் அதிபர்களும் வரவிருக்கிற டிசம்பர் 2 ஆம் தேதி ரிசர்வ் வங்கி கடன் கொள்கை அறிவிப்பின் போது வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.

நுகர்வோர் விலை (Consumer Price) மற்றும் மொத்த விலை குறியீடு களின் (wholesale price) அதிகமான அடிப்படை விளைவுகளினாலும் (High Base Effect) பணவீக்கங்களில் சரிவு காணப்படுகிறது.

நவம்பர் மாதத்திலும் பணவீக்கம் சரிவடைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த நிலைமை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மாறி உயர வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு இதே மாதங்களில் குறைவான அடிப்படை விளைவுகள் தான் இருந்தது. மேலும் விவசாயத் துறை அமைச்சகம் தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் குறைந்த காரீப் பருவம் உற்பத்தி என்று கணித்திருக்கிறது.

பணவீக்கம் குறைந்ததின் பலன்களை தொழில் நிறுவனங்கள் நுகர்வோர்களுக்கு அளிப்பதில்லை. குறைந்ததின் பலனை தாங்களே எடுத்து கொள்ள தமது உற்பத்தியை குறைத்துகொள்கிறார்.

மத்திய வங்கி மேலும் அமெரிக்க பொருளாதாரம் நலிவடையாமல் இருக்க அதாவது குறைந்த பணவீக்கம் வட்டி விகிதங்கள் உயர்த்தினால் பண சுருக்கமாக மாறாமல் இருக்கும் என்பதை உறுதி செய்த பின்பு அவைகளை அதிகரிக்க வேண்டும் என்று பெடெரல் ரிசர்வ் வங்கி தலைவர் எரிக் ரோசெங்க்றேன் கூறியது போல் ரிசர்வ் வங்கியும் பொறுமைக்காத்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட காரணங்களினால் ரிசர்வ் வங்கி டிசம்பர் மாத 2 ஆம் தேதி கடன் கொள்கை அறிவிப்பின் பொழுது ரொக்க கையிருப்பு விகிதாசாரம் மற்றும் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதும் செய்யாமல் விட்டுவிடலாம் அல்லது அழுத்தங்கள் அதிக அளவில் இருந்தால் 0.25% குறைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

--ந.விகடன்
முக நூல்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கி கணக்கு துவக்க நிரந்தர முகவரி போதும்' - ரிசர்வ் வங்கி உத்தரவு!
» நாட்டின் தொழில்­துறை உற்­பத்தி19 மாதங்­களில் காணாத வளர்ச்சி
» வங்கி டெபாசிட் வளர்ச்சி குறைவுக்கு என்னதான் காரணம்?
» குறையும் வங்கி எஃப்டி வட்டி: கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மாறலாமா?
» வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum