Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மியூச்சுவல் ஃபண்ட்: குளோஸ்டு எண்டட் திட்டங்கள் சாதகமா, பாதகமா?
Page 1 of 1

இந்த ஆண்டு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்றம் சிறு முதலீட்டா ளர்களின் கவனத்தை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பக்கம் வெகுவாக ஈர்த்திருக்கிறது. இதனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிறைய புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக, லாக்-இன் பீரியட் கொண்ட குளோஸ்டு எண்டட் திட்டங் கள் அதிகமாக அறிமுகமாகி வருகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களை பொதுவாக ஓப்பன் மற்றும் குளோஸ்டு எண்டட் திட்டங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். பெருவாரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், ஓப்பன் எண்டட் வகையைச் சார்ந்தவை.
இவற்றில் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பணத்தைத் திரும்பப் பெறலாம். மாறாக, குளோஸ்டு எண்டட் திட்டங்கள், அறிமுக காலத்தில் முதலீடு செய்து, நிறைவு காலத்தில் திரும்பப் பெறக்கூடிய வெளியேற முடியாத (லாக்-இன்) திட்டங்களாகும்.
வெளியேற முடியாத இந்த குளோஸ்டு எண்டட் திட்டங்களில் சில சாதக, பாதக அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. முதலில் சாதகமான அம்சங்களைப் பார்ப்போம்.
நீண்ட கால முதலீடு!
பங்குச் சந்தையிலோ, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால் மட்டுமே நல்ல வருவாய் ஈட்ட முடியும். அந்த வகையில், குளோஸ்டு எண்டட் திட்டங்கள் (குறைந்தது 3 - 5 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் திரும்பப் பெற முடியாது என்பதால்), நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தைச் சமாளித்து நல்ல வருவாய் ஈட்ட, இந்த குளோஸ்டு எண்டட் திட்டங்கள் ஏற்றவை.
முதலீட்டில் ஒழுங்குமுறை!
பொதுவாகவே, முதலீட்டாளர் களின் மனோநிலை சந்தை ஏற்ற இறக்கத்தை ஒட்டி மாறுபடும். ஓப்பன் எண்டட் திட்டங்களில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது யூனிட்களை விற்றுவிட்டு வெளியேறத் தோன்றும்.
ஆனால், குளோஸ்டு எண்டட் திட்டங்களில் முதலீடு செய்தால் நீண்ட காலத்துக்கு இருக்க வேண்டும். அதுவே, முதலீட்டாளர்களுக்கு ஒரு கட்டுப்பாடான ஒழுங்குமுறையாக (Discipline) அமையும்.
இனி பாதகமான அம்சங்களைப் பார்ப்போம்.
லாக்-இன்!
திட்டக் காலம் முழுவதும் இருக்க வேண்டும் என்பது ஒரு பாதகம்தான். உதாரணத்துக்கு, ஒரு திட்டம் மூன்று ஆண்டுகளிலேயே வருமான இலக்கைத் தந்துவிட்டால் வெளியேறலாம். ஆனால், குளோஸ்டு எண்டட் திட்டத்தில் முழுவதுமாக இருந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. திட்ட முடிவில் சந்தையின் போக்கில் இறக்கம் ஏற்பட்டால், அப்போது யூனிட்டுகளை விற்றால் வருவாய் குறைய வாய்ப்புள்ளது.
திட்டத்துக்கு சரித்திரம் கிடையாது!
குளோஸ்டு எண்டட் திட்டங்களுக்கு எவ்விதமான செயல்பாட்டு சரித்திரமும்
(Performance Track Record) கிடையாது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தரத்தை வைத்துதான் திட்டத்தின் தரத்தை சரிபார்க்க முடியும். ஒரு ஃபண்டை தேர்ந்தெடுப்பதற்கு கடந்தகால செயல்பாட்டு சரித்திரமும் முக்கியமாகும்.
கூடுதல் திட்டக் கட்டணம்!
ஓப்பன் எண்டட் திட்டங்களைவிட குளோஸ்டு எண்டட் திட்டங்களில், திட்டக் கட்டணம் கூடுதலாக இருக்கும். நீண்ட கால அடிப்படையில் அது திட்ட வருமானத்தில் பிரதிபலிக்கும்.
எஸ்ஐபி முதலீடு கிடையாது!
மியூச்சுவல் ஃபண்டின் சிறப்பம்சமே எஸ்ஐபிதான். சிறு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சேமிக்க வழிவகை செய்யும் எஸ்ஐபி முறை குளோஸ்டு எண்டட் திட்டங்களுக்கு கிடையாது. ஒருமுறை மொத்தமாக முதலீடு செய்பவர்களுக்கு மட்டும்தான் குளோஸ்டு எண்டட் ஃபண்ட் ஏற்றது.
இடையில் சேர முடியாது!
குளோஸ்டு எண்டட் திட்டங்களில் அறிமுக காலத்தில் மட்டும்தான் முதலீடு செய்ய முடியும். இடையில் சந்தையில் இறக்கம் ஏற்பட்டால் திட்டத்தில் இருக்கும் முதலீட்டாளர்கள் கூடுதல் முதலீடும் செய்ய முடியாது. புதிய முதலீட்டாளர்களும் உள்ளே வர இயலாது.
என்றாலும், குளோஸ்டு எண்டட் திட்டங்கள் லாக்இன் முறையில் வந்தாலும், முதலீட்டாளர்கள் தங்களது யூனிட்களை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழிவகை செய்கின்றன. அந்த வகையில், முதலீட்டாளர்கள் வெளியேற விரும்பினால், பங்கு சந்தைகள் மூலமாக அதைச் செய்யலாம். அதற்கு டீமேட் கணக்கில் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் இருக்க வேண்டும்.
குளோஸ்ட் எண்டட் திட்டங்களில் முதலீடு செய்யும்முன் நமது தேவைகள், முதலீட்டு நோக்கம், முதலீட்டுக் காலம், ரிஸ்க் மற்றும் முதலீட்டு இலக்கை கருத்தில் கொண்டு முதலீடு செய்வதுதான் சரியான யுக்தியாக இருக்கும்.
- ந.விகடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களை பொதுவாக ஓப்பன் மற்றும் குளோஸ்டு எண்டட் திட்டங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். பெருவாரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், ஓப்பன் எண்டட் வகையைச் சார்ந்தவை.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரிப்பு
» மியூச்சுவல் ஃபண்ட்:: டிவிடெண்ட் கணக்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum