வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


அடிப்படையில் வலுவான பங்குகள்: கண்டுபிடிக்க 10 கரெக்ட் வழிகள்!

Go down

அடிப்படையில் வலுவான பங்குகள்: கண்டுபிடிக்க 10 கரெக்ட் வழிகள்! Empty அடிப்படையில் வலுவான பங்குகள்: கண்டுபிடிக்க 10 கரெக்ட் வழிகள்!

Post by தருண் Thu Dec 11, 2014 3:00 pm

ஒரு பங்கினை அடிப்படை ஆய்வு (Fundamental Analysis) செய்வதன் மூலம் ஒரு கம்பெனியின் உள்ளார்ந்த மதிப்பை (intrinsic value) அறிந்துகொள்ள முடியும். ஒரு பங்கின் உள்ளார்ந்த மதிப்பை நாம் சரியாக அறிந்துகொண்டால்தான் தற்போதைய சந்தை மதிப்புடன் அதன் விலையை ஒப்பிட்டுப்பார்த்து அதில் முதலீடு செய்யலாமா, கூடாதா என்பதை முடிவெடுக்க முடியும். அடிப்படையில் வலுவான இந்தப் பங்குகளைக் கண்டுபிடிப்பது எப்படி? இதற்கு 10 வழிமுறை கள் உள்ளன.

அந்த வழிமுறைகள் இதோ: வருவாய் (Earnings)

நாம் முதலீடு செய்யும் பணத்தைக் கொண்டு ஒரு நிறுவனம் எவ்வளவு லாபம் ஈட்டுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் ஒரு கம்பெனியின் பங்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.10 இருக்கும்பட்சத்தில், அந்த ரூ.10 எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறது என்பதை மிக சுலபமாக கணக்கிடலாம். இதையே ஒரு பங்கின் வருவாய் (Earning per share- EPS) என்று குறிப்பிடுவார்கள்.

இந்த இபிஎஸ் தொடர்ந்து வளர்ச்சி அடைகிறதா, அந்த வளர்ச்சி எத்தனை சதவிகிதம் என்பது பங்கின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்கெனவே உள்ள வளர்ச்சியை வைத்து எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, பங்கின் விலை கூடுமா, குறையுமா என்று முடிவு செய்யலாம்.

அடிப்படையில் வலுவான பங்குகள்: கண்டுபிடிக்க 10 கரெக்ட் வழிகள்! Nav86a

லாப விகிதம் (Profit Margins)

பங்கின் வருமானத்தை மட்டும் வைத்து பங்கின் விலையைக் கணிக்க முடியாது. இதில் லாப விகிதம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். முதலீடு செய்யும் நிறுவனம் உற்பத்தி செலவை (Cost of production) சரியான முறையில் கட்டுக்குள் வைத்திருந்தால், அது நல்ல நிறுவனம்.

பங்கின் லாப விகிதத்தைக் கண்டுபிடித்து, அதே தொழிலை செய்யும் மற்ற நிறுவனங்களின் லாப விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். இதன் சூத்திரம்: நிகர லாப விகிதம் (Net Profit Margin) = நிகர லாபம் / வருவாய் (Net profit / Revenue)முதலீடு மீதான வருமானம் (Return on Equity)முதலீடு மீதான வருமானத்தை இரண்டு விதமாக கணக்கிடலாம். கம்பெனியின் மொத்த லாபத்தைக் கணக்கில் எடுத்து மொத்த முதலீட்டில் (Equity) எத்தனை சதவிகிதம் என்பது முதலீட்டின் மீதான வருமானம் ஆகும். அல்லது முக மதிப்பில் ஒரு பங்கு ஈட்டிய வருமானம் (EPS) எத்தனை சதவிகிதம் என்று கணக்கிட்டாலும், முதலீடு மீதான வருமானம் எவ்வளவு (ROE) என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம். முதலீடு மீதான வருமானம் முதலீடு செய்த தொகையைவிட எவ்வளவு மடங்கு அதிகம் என்பதைப் பார்க்க வேண்டும். இது அதிகமாக இருப்பது நல்லது.

பிஇ ரேஷியோ (P/E Ratio)

ஒரு பங்கு ஈட்டிய வருமானமானது முக மதிப்புடன் அதன் லாபத்தை ஒப்பிடுவதாகும். இதை இபிஎஸ் என்பார்கள். சந்தை மதிப்புடன் (Market value) கம்பெனியின் லாபத்தை ஒப்பிடுவது பிஇ விகிதம் ஆகும். இரண்டாம் நிலை சந்தையில் (Secondary market) பங்கு வாங்கும்போது மார்க்கெட் விலைதான் நம் முதலீடாக இருக்கும். எனவே, நிறுவனத்தின் லாபத்தை முக மதிப்புடன் ஒப்பிடுவதைவிட சந்தை விலையுடன் ஒப்பிடுவது நல்லது. இதன் பிறகு அந்தப் பங்கை வாங்கலாமா, வேண்டாமா என முடிவெடுக்கலாம்.

அதிக பிஇ என்பது மார்க்கெட் விலை அதிகம் என்பதையும், குறைந்த பிஇ என்பது மார்க்கெட் விலை குறைவு என்பதையும் குறிக்கும். பிஇ விகிதம் ஒவ்வொரு துறைக்கும் வித்தியாசப்படும். ஒரே தொழிலில் ஈடுபட்டுவரும் மற்ற நிறுவனங்களின் பிஇ விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

உதாரணமாக, வங்கிப் பங்குகளின் பிஇ சற்று குறைவு. ஆனால், எஃப்எம்சிஜி பங்குகளின் பிஇ விகிதம் அதிகம். எஸ்பிஐயின் பிஇ 19-ஆக உள்ளது. ஆனால், கோட்டக் வங்கியின் பிஇ 57 -ஆக உள்ளது. எனவே, இதில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

புத்தக மதிப்பு (Book value)புத்தக மதிப்பு என்பது முதலீடு செய்த தொகை, டிவிடெண்ட் கொடுத்தது போக இன்று கம்பெனியில் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணிப்பதாகும். இதை, கேப்பிட்டல் மற்றும் பேலன்ஸ்ஷீட்டில் கையிருப்பு மற்றும் கூடுதல் தொகை (Reserve and Surplus) என குறிப்பிட்டிருப்பார்கள். புத்தக மதிப்பு அதிகமாக இருந்தால், முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகள் தர வாய்ப்புண்டு. அப்படி தந்தால், பங்கின் சந்தை விலை உயரும்

பங்குதாரர்கள் பற்றிய தகவல்கள் (Shareholding Pattern)

பங்குதாரர்களின் விவரங்கள் நிறுவனத்தின் புரோமோட்டர், வங்கிகள், எஃப்ஐஐகள், என்ஆர்ஐகள், பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் எத்தனை சதவிகிதம் என்பதை தெரிந்துக்கொள்ள உதவும். இதைவைத்து அந்த நிறுவனம் குறித்த பல தகவல்களைப் புரிந்துகொள்ள முடியும்.

புரோமோட்டர்கள் தங்கள் பங்குகளை அடமானம் வைத்திருக்கிறார்களா என்பதைப் பார்ப்பது அவசியம். பங்குகளை அடமானம் வைத்திருந்தால், அந்தப் பங்குகளைத் தவிர்ப்பது நல்லது.

வங்கிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் (Bank and FII)

சிறு முதலீட்டாளர்கள் ஒரு கம்பெனியின் நிதிநிலையைக் கணிப்பதைவிட, வங்கிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அந்த வேலையை சிறப்பாகச் செய்ய முடியும். அவர்கள் அதிக அளவில் முதலீடு செய்வதால் நிறுவனம் தொடர்பான பல முக்கிய தகவல்களைப் பெற்று அந்த நிறுவனத்தின் நிதிநிலையை சிறப்பாக கணிக்க முடியும். ஒரு கம்பெனியில் வெளிநாட்டு முதலீடு அதிகளவு இருக்கும்பட்சத்தில் அந்த கம்பெனியில் முதலீடு செய்யலாம்.

கடன் - பங்கு விகிதம் (Debt - Equity Ratio)

ஒரு கம்பெனியின் முதலீட்டுடன், கடனை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். கடன் அதிகமாக இருக்கும்போது, அந்தப் பங்கை தவிர்ப்பது நல்லது. இந்தக் கடன் - பங்கு விகிதம் ஒவ்வொரு துறை பங்குக்கும் வித்தியாசப்படும்.
எனவே, அதே தொழிலில் ஈடுபட்டுவரும் மற்ற கம்பெனிகளுடன் ஒப்பிட்டு முடிவு எடுப்பதே சரியானதாக இருக்கும்.
கடன் விகிதம் 1:1 இருக்க வேண்டும். இதற்குமேல் இருந்தால் அதிக ரிஸ்க் உடையதாகும். எனவே, இதைத் தவிர்ப்பது நல்லது.

விதிவிலக்கான வருமானம் (Exceptional Income)

கம்பெனியின் லாபம் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் மட்டும் அதிகரித்திருந்தால், அதற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும். சில நேரங்களில் நிறுவனத்தின் சொத்தினை விற்பனை செய்ததன் மூலமாக அல்லது வேறு ஏதாவது முறையில் வருமானம் வந்திருக்கும். இந்த வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இந்த வருமானம் தொடர்ச்சியாக வரும் என்று எதிர்பார்க்க முடியாது. இதுமாதிரி லாபம் கண்ட பங்குகளைத் தவிர்ப்பது நல்லது.

பண வரத்து (Cash Flow)

மேலே குறிப்பிட்ட அத்தனை விஷயங்களும் சரியாக இருந்து, நிறுவனத்தின் பண வரத்து சரியாக இல்லையென்றால், அந்தப் பங்கை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

நிகர லாபம் அதிகமாக இருந்தால் மட்டும் போதாது. லாபமானது கையிருப்பில் அல்லது வங்கியில் இருப்பாக இருக்க வேண்டும். இந்த கையிருப்பு உயரும்போதுதான் பேலன்ஸ்ஷீட்டின் நம்பகத்தன்மை கூடும். இவற்றுடன், ஒரு நிறுவனம் பங்குதாரர் களுக்கு எந்தமாதிரி டிவிடெண்ட், போனஸ், உரிமை பங்குகள், ரிவார்டு தருகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum