வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


செல்வம்’ பெருக்கும் ‘திருப்புமுனை’ பங்குகள்!

Go down

செல்வம்’ பெருக்கும் ‘திருப்புமுனை’ பங்குகள்!  Empty செல்வம்’ பெருக்கும் ‘திருப்புமுனை’ பங்குகள்!

Post by தருண் Thu Dec 11, 2014 3:34 pm

பங்கு முதலீட்டாளர் ஒருவர் என்னிடம் ஒரு பட்டியலைத் தந்தார். அதில் மூன்று ஆண்டுகளுக்குமுன் அவர் வாங்கிய பங்குகளின் பெயர்கள், எண்ணிக்கை மற்றும் விலை ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. அந்தப் பங்குகளின் விலை மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருந்தது.

கூடவே, மூன்று கேள்விகளைக் கேட்டார். அந்தப் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா, விற்றுவிடலாமா அல்லது தற்போதைய குறைந்த விலையில் இன்னும் வாங்கி சராசரி விலையைக் குறைக்கலாமா என்பதே அந்தக் கேள்விகள்.

அவர் கேட்டவுடன், பங்குச் சந்தை குறித்த ஓர் ஆங்கில வாசகம்தான் என் நினைவுக்கு வந்தது. ‘‘பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, ஏற்றம் கண்ட பங்குகளின் விலைகள் குறைகின்றன. ஆனால், இறக்கம் கண்ட பங்குகளின் விலை மீண்டும் ஏறவேண்டும் என்று கட்டாயமில்லை!’’ அந்தப் பங்குகளின் கடந்த மூன்று ஆண்டு கால விலை நகர்வுகளை (Price Movement) சார்ட்டில் பார்த்தபோது, பல பங்குகளின் விலை சரிவுக்குப்பின் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

செல்வம்’ பெருக்கும் ‘திருப்புமுனை’ பங்குகள்!  Nav54a

ஏன் இறக்கம்?

பங்குகளின் விலை இறக்கத்துக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.
1. பொருளாதாரத்தில் ஏற்படும் மந்தநிலைகள்; குறிப்பிட்ட துறை சார்ந்த நிகழ்வுகள். உதாரணமாக, அரசு எடுக்கும் முடிவுகள்; மூலப்பொருட்களின் விலை மாற்றங்கள்.

2. நிறுவனம் சார்ந்த நிகழ்வுகள்.

அ) போட்டி மற்றும் புதுப்பொருள் / சேவைகள் வரவு காரணமாக விற்பனை மற்றும் வருவாய் குறைதல்.
ஆ) சரியும் நிர்வாகத் திறனால் தேவையற்ற வழக்குகளில் சிக்குவது, அதிகரிக்கும் செலவினங்கள் போன்ற காரணங்களால் தொடர்ந்து சரியும் லாப விகிதங்கள்.

இ) எதிர்கால வளர்ச்சி குறித்து தவறான கணிப்பால் அளவுக்கதிகமான விரிவாக்கங்களை மேற்கொள்ளுதல், முற்றிலும் அனுபவமில்லாத துறை களில் ஈடுபடுதல் போன்றவற்றால் அதிகரிக்கும் கடன் சுமைகள்.

ஈ) தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் நிதிநிலைகள்.

திருப்புமுனை’ பங்குகள்!

மேலே சொல்லப்பட்ட காரணங்களால் பங்கின் விலை தொடர்ந்து சரியும் அல்லது விலை நகர்வுகள் ஓர் எல்லைக்குள் இருக்கும். விலைச்சரிவு நின்றபின், ஒரு நேர்க்கோட்டில் சிலகாலம் பயணித்து விலை ஏறத் தொடங்கும்; அல்லது எல்லையைவிட்டு வெளியே வந்து மேலே செல்லத் துவங்கும். இந்தமாதிரி விலை நகர்வுகளைக் கொண்ட பங்குகளை நாம் ‘திருப்புமுனை’ பங்குகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்றால் கூடாது. ஏனென்றால், பல சமயங்களில் பங்குகளின் விலை ஏறின வேகத்தில் இறங்கவும் செய்யும்.

எப்படி அடையாளம் காண்பது?

அ) பொருளாதார மேம்பாடு.

ஆ) அரசு / ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள்.

இ) நலிவடைந்த அல்லது சிக்கலில் உள்ள ஒரு துறையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு.
எடுத்துக்காட்டாக, சமீபத்தில் ஏற்றுமதிக்கு அரசு மானியம் வழங்கும் என்ற எதிர்பார்ப்பினால் சர்க்கரை நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன.

ஈ) மூலப்பொருட்களில் ஏற்படும் விலை மாற்றங்கள். உதாரணம்: சர்வதேச சந்தையில் ரப்பரின் விலை சரிந்ததால், டயர் உற்பத்தி செய்யும் நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக ஏறின.
இந்தவகையான தகவல்களின் அடிப்படையில் ‘திருப்புமுனை’ பங்குகளை இனம் கண்டுகொள்வது எளிது.

தனிப்பட்ட நிறுவனங்கள்:

இவற்றை இரண்டு வகையாகப் பார்க்கலாம்.

நிறுவனம் சார்ந்த துறையிலுள்ள மற்ற நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டும், இந்த நிறுவன பங்கின் விலை மட்டும் ஏறாமலிருப்பது...எடுத்துக்காட்டாக, சன் பார்மா, லூபின் போன்ற இந்திய மருந்து உற்பத்தி நிறுவன பங்குகளின் விலை கடந்த நான்கு ஆண்டு களில் பன்மடங்கு பெருகியுள்ளது.

ஆனால், கெடிலா ஹெல்த்கேர் நிறுவனப் பங்கின் விலை மட்டும் ரூ.900-ஐ தாண்டாமல், ஓர் எல்லைக்குள்ளேயே நகர்வு கண்டது. காரணம், இந்த நிறுவனம் பல வழக்குகளில் சிக்கி உழன்றது. கடந்த ஆண்டு வழக்கிலிருந்து விடுபட்டபின், பங்கின் விலை கணிசமான ஏற்றத்தைக் கண்டுள்ளது.

அறிகுறிகள் (இண்டிகேட்டர்ஸ்)

விழுந்துகிடக்கும் ஒரு நிறுவனத்தில் ‘திருப்புமுனை’ நிகழப்போகிறது என்பதற்கான அறிகுறிகள்.

அ) மேலாண்மைக் குழுவில் மாற்றம் அல்லது நிறுவனத்துக்குள் பல மாற்றங்கள்.

ஆ) செலவுகளைக் கட்டுப்படுத்துதல்.
1) ஆட்குறைப்பு.

2) தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மூலம் உற்பத்திச் செலவை குறைத்து லாபங்களை அதிகரித்தல்.

3) நஷ்டத்தில் இயங்கும் யூனிட்களை விற்பது.

செல்வம்’ பெருக்கும் ‘திருப்புமுனை’ பங்குகள்!  Nav54c

இ) புதிய பொருட்கள் / சேவைகள் அறிமுகம் மூலமாக விற்பனை மற்றும் வருமானத்தைப் பெருக்குதல்  (விளம்பரங்களை அடிக்கடி பார்க்கலாம்).

ஈ) பங்கின் விலையில் ஏற்றமிருக்காது; ஆனால், வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும்.

எ) அந்த நிறுவனம் குறித்து ஆராய்ந்து தங்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்கும் அனலிஸ்ட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஏன் திருப்புமுனை பங்குகள்?

நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் காரணமாக, நிதிச் செயல்பாடு மோசமாகி பங்கின் விலை விழக்கூடும்; அல்லது பங்கின் விலை ஓர் எல்லைக்குள்ளேயே வர்த்தகமாகும். பிரச்னைகள் முடிவுக்கு வரும்போது பங்கின் விலை வேகமாகவும், கணிசமாகவும் உயரக்கூடும் என்று எதிர்பார்த்து நிறைய முதலீட்டாளர்கள் வாங்குகின்றனர்.
இது தவறு. பல சமயங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தாமல் போகலாம். அதனால் பங்கின் விலை மீண்டும் சரியக்கூடும். எனவே, எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் புறச்சூழ்நிலைகள் அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லுமா என்பதை உறுதிசெய்த பின்பே இத்தகைய பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் கவனிக்க வேண்டியவை..!

அந்த நிறுவனம் குறைந்தபட்சம் 15 / 20 ஆண்டுகள் இந்தத் தொழிலில் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
நிறுவனத்தின் கடன் சுமையைக் கவனிக்க வேண்டும். கடனைக் குறைப்பதற்கு மேலாண்மை குழு என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்று பார்க்க வேண்டும். தேவையற்ற சொத்துக்களை விற்பதன் மூலமா அல்லது வருவாயைப் பெருக்குவதன் மூலமா?  இதை எளிமையாகப் பார்ப்பதற்கு வட்டி கவரேஜ் விகிதத்தை (Interest Coverage Ratio) உபயோகிக்கலாம்.

வட்டி கவரேஜ் விகிதம் = வரி வட்டிக்கு முந்தைய வருவாய்/வட்டி (EBIT / Interest ). இந்த விகிதம் உயர ஆரம்பித்தால், நிறுவனத்தின் நிதி நிலைமை சீரடைய ஆரம்பித்திருக்கிறது என்று பொருள். இந்த விகிதம் 1.5 க்கு மேல் இருப்பது நல்லது. நீண்ட இடைவெளிக்குப்பின் டிவிடெண்ட் அறிவித்தல்.

மேற்கூறிய வகையில் 10 திருப்புமுனைப் பங்குகளை இலக்கு விலையுடன் (இலக்கு விலை ஓராண்டுக்கானது) பரிந்துரைத்திருக்கேன். முதலீட்டாளர்கள் அதிக கவனத்துடன் செயல்பட்டு தொடர்ந்து கவனித்து முதலீடு செய்யவும்.

செல்வம்’ பெருக்கும் ‘திருப்புமுனை’ பங்குகள்!  Nav58

செல்வம்’ பெருக்கும் ‘திருப்புமுனை’ பங்குகள்!  Nav59

செல்வம்’ பெருக்கும் ‘திருப்புமுனை’ பங்குகள்!  Nav60

செல்வம்’ பெருக்கும் ‘திருப்புமுனை’ பங்குகள்!  Nav61

--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum