Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்!
Page 1 of 1
வரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்!
வரிச் சுமையைக் குறைக்கும் வழிகள்!
என்.சத்தியமூர்த்தி, ஃபண்டஸ் இந்தியா டாட்காம்
மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்கள்? உங்கள் வருமான வரியைக் குறைக்க விரும்புகிறீர்களா?ஏற்கெனவே பல முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்துவிட்டேன். இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று அலுத்துக்கொள்கிறீர்களா?
கவலை வேண்டாம். இந்த ஆண்டு கூடுதலாக 50,000 ரூபாயை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் வரிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கலாம். ஆம், இதுவரை ஒரு லட்சம் வரை முதலீடு செய்து வரிவிலக்கைப் பெற்ற நீங்கள், இந்த வருடம் முதல் கூடுதலாக ரூ.50,000 வரை முதலீடு செய்து, 15,000 வரை வரியைச் சேமிக்க முடியும்.
எது சிறந்த முதலீடு?
வருமான வரியைச் சேமிக்க பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.முதலீட்டுத் திட்டங்கள் அல்லாத சில செலவினங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, வீட்டுக் கடனுக்கான அசலுக்கும், வட்டிக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அசல் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி-ல் வரிச் சலுகை பெறலாம்.
இதுபோக, நீங்கள் ஏதேனும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் எடுத்திருந்தால், அந்த பிரீமியத் தொகை மூலமும் வருமான வரியைச் சேமிக்கலாம். இங்கே உங்களுக்கு வலியுறுத்துவது என்னவென்றால், காப்பீடும், முதலீடும் கலந்த பாலிசிகளைத் தவிர்த்துவிடுவது சிறந்தது.
இந்தவகை பாலிசிகளில், உங்கள் பிரீமியத் தொகையில் பெரும்பகுதி செலவினங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால், இந்தவகை பாலிசிகள் குறைந்த லாபமே (4-6%) தருகின்றன. அதனால் முதலீடு சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களைவிட முதலீடு சேராத வெறும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (Pure Term life Insurance) மிகச் சிறந்தது. மிகக் குறைந்த பிரீமியம் மிகக் குறைந்த செலவுடன், வரிவிலக்கையும் அளிக்கக்கூடியது. இதன்மூலம் அதிக ஆயுள் காப்பீட்டையும், மீதமுள்ள தொகையினை, அதிக லாபம் ஈட்டும் திட்டங் களிலும் முதலீடு செய்யலாம்.
மற்ற வரிச் சேமிப்புத் திட்டங்களைவிட மியூச்சுவல் ஃபண்ட் வரிசேமிப்பு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது. குறைந்தபட்ச மாத முதலீடு (ரூ.500), மூன்று வருட குறைந்த முதலீட்டுக் காலம்; நீண்ட கால அடிப்படையில் அதிக லாபம் மற்றும் லாபத்துக்கு வரிவிலக்கு என இதன் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால், முதலீட்டாளர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மற்ற முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் ரிஸ்க் அதிகம். ஏனென்றால், உங்கள் பணம், பங்குச் சந்தையில் உள்ள சில முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. முதலீடு செய்யப்பட்ட பங்கு களின் வளர்ச்சியைப் பொறுத்து, உங்களுக்குக் கிடைக்கும் வருமானம் மாறுபடுகிறது. நீண்ட கால அடிப்படையில் இந்தவகை முதலீடுகள் அதிக லாபம் ஈட்டித்தரும் வகையில் அமைந்துள்ளது. இதனால், நீங்கள் செய்த முதலீடு விலைவாசி உயர்வை மிஞ்சி வளரும்.
உதாரணத்துக்கு, நீங்கள் வங்கி வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து 9% வட்டி வருமானம் பெறுவதாக வைத்துக்கொள்வோம். இந்த வருடத்தில் விலைவாசி உயர்வு 8% என்று வைத்துக்கொண்டால்; நீங்கள் பெறும் நிகர வட்டி வருமானம் வெறும் 1% மட்டும்தான். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்கள் தரும் லாபம், விலைவாசி உயர்வை வெகுவாக மிஞ்சியிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
எப்படி முதலீடு செய்யலாம்?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு இருவழிகள் உள்ளன. ஒன்று, மொத்தமாக ஒரேதவணையில் முதலீடு செய்வது. மற்றொன்று, முறை படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்களின் (SIP) வாயிலாக முதலீடு செய்வது. வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பெரும்பாலானோர் முதல் முறையையே பின்பற்றுகிறார்கள்.
இந்த முதலீட்டை மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் திரும்பப் பெற முடியும். பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து உங்களுக்குக் கிடைக்கும் லாபம் மாறுபடலாம். தகுந்த லாபம் இருந்தால் முதலீட்டை அதற்குரிய லாபத்துடன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இன்னும் சிறிது காலத்துக்கு அதே ஃபண்டில் முதலீட்டை தொடரலாம். தகுந்த லாபம் வரும்போது முதலீட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எஸ்ஐபி முறையில் ஒரே ஃபண்டிலேயே எல்லா மாதங்களிலும் முதலீடு செய்வதால் சந்தை அபாயம் (Market risk) குறைகிறது. நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் பெறும் வாய்ப்பும் உள்ளது. எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல வரிச் சேமிப்பு திட்ட எஸ்ஐபி முடிந்த வுடன் மொத்த முதலீட்டையும் திரும்பப் பெற இயலாது. ஒவ்வொரு தவணையும் 36 மாதங்கள் முடிந்தவுடன் மட்டுமே வெளியே எடுக்க முடியும். இதனால் சிலர் வரிச் சேமிப்பு ஃபண்டுகளில் எஸ்பிஐ முறையில் முதலீடு செய்வதில்லை. மொத்தமாக, ஒரு வருடத்துக்கு ஒரே முதலீடாகச் செய்கின்றனர். இந்த வருடத்துக்கான வரிச் சேமிப்புத் திட்டங்களை நீங்கள் ஓரிரு தடவையாகச் செய்வது சிறந்தது. ஏனென்றால், எஸ்ஐபி முறையில் தொடங்கினால் ஐந்து மாதங்களே இருக்கும்பட்சத்தில் நீங்கள் முழுமையாக முதலீடு செய்ய முடியாமல் போகலாம்.
அடுத்த நிதி ஆண்டு முதல், ஆரம்பத்தி லிருந்தே நீங்கள் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ரூ.60,000 ஒரு வருடத்துக்கு முதலீடு செய்ய விரும்பினால், ரூ.5,000 வீதம் 12 மாதங்களுக்கு முதலீடு செய்யலாம்.
எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?
எங்கள் ஆய்வின்படி எதிர்பக்கத்தில் மேலே அட்டவணைபடுத்தியுள்ள வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு மிகுந்த லாபம் ஈட்டி தந்துள்ளன. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்து உங்கள் வருமான வரியைச் சேமித்து அதிக லாபம் பெறுங்கள்.
-- ந.விகடன் என்.சத்தியமூர்த்தி, ஃபண்டஸ் இந்தியா டாட்காம்

எவ்வளவு முதலீடு செய்யலாம்?
இந்த வருடம் ரூ.1,50,000 வரை 80சி பிரிவில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஏற்கெனவே முதலீடு செய்த திட்டங் களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மீதித் தொகை யினை வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக லாபம் பெறுங்கள்.எப்படி முதலீடு செய்யலாம்?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு இருவழிகள் உள்ளன. ஒன்று, மொத்தமாக ஒரேதவணையில் முதலீடு செய்வது. மற்றொன்று, முறை படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்களின் (SIP) வாயிலாக முதலீடு செய்வது. வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பெரும்பாலானோர் முதல் முறையையே பின்பற்றுகிறார்கள்.
இந்த முதலீட்டை மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் திரும்பப் பெற முடியும். பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து உங்களுக்குக் கிடைக்கும் லாபம் மாறுபடலாம். தகுந்த லாபம் இருந்தால் முதலீட்டை அதற்குரிய லாபத்துடன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இன்னும் சிறிது காலத்துக்கு அதே ஃபண்டில் முதலீட்டை தொடரலாம். தகுந்த லாபம் வரும்போது முதலீட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எஸ்ஐபி முறையில் ஒரே ஃபண்டிலேயே எல்லா மாதங்களிலும் முதலீடு செய்வதால் சந்தை அபாயம் (Market risk) குறைகிறது. நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் பெறும் வாய்ப்பும் உள்ளது. எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல வரிச் சேமிப்பு திட்ட எஸ்ஐபி முடிந்த வுடன் மொத்த முதலீட்டையும் திரும்பப் பெற இயலாது. ஒவ்வொரு தவணையும் 36 மாதங்கள் முடிந்தவுடன் மட்டுமே வெளியே எடுக்க முடியும். இதனால் சிலர் வரிச் சேமிப்பு ஃபண்டுகளில் எஸ்பிஐ முறையில் முதலீடு செய்வதில்லை. மொத்தமாக, ஒரு வருடத்துக்கு ஒரே முதலீடாகச் செய்கின்றனர். இந்த வருடத்துக்கான வரிச் சேமிப்புத் திட்டங்களை நீங்கள் ஓரிரு தடவையாகச் செய்வது சிறந்தது. ஏனென்றால், எஸ்ஐபி முறையில் தொடங்கினால் ஐந்து மாதங்களே இருக்கும்பட்சத்தில் நீங்கள் முழுமையாக முதலீடு செய்ய முடியாமல் போகலாம்.
அடுத்த நிதி ஆண்டு முதல், ஆரம்பத்தி லிருந்தே நீங்கள் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ரூ.60,000 ஒரு வருடத்துக்கு முதலீடு செய்ய விரும்பினால், ரூ.5,000 வீதம் 12 மாதங்களுக்கு முதலீடு செய்யலாம்.
எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?
எங்கள் ஆய்வின்படி எதிர்பக்கத்தில் மேலே அட்டவணைபடுத்தியுள்ள வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு மிகுந்த லாபம் ஈட்டி தந்துள்ளன. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்து உங்கள் வருமான வரியைச் சேமித்து அதிக லாபம் பெறுங்கள்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பட்ஜெட் 2014 : வரிச் சலுகைகளை லாபகரமாக மாற்றிக்கொள்ளும் சூட்சுமங்கள்!
» வரிச் சேமிப்புக்கான முதலீடு...
» வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்!
» வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்
» என்னென்ன வரிச் சலுகை? -வீட்டுக் கடன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum