Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
அவுட் பேஷன்ட் பாலிசி...
Page 1 of 1
அவுட் பேஷன்ட் பாலிசி...
மெடிக்ளைம் பாலிசியில் மருத்துவமனையில் 24 மணி நேரம் அட்மிட் ஆகியிருந்தால் மட்டுமே இழப்பீடு தரும் பாலிசிகள் இதுவரை இருந்தன. இப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல், வெளிநோயாளியாக (அவுட் பேஷன்ட்) இருப்பவர்களும் இழப்பீடு பெறும் பாலிசி அறிமுகமாகியுள்ளது. இந்த பாலிசியை எடுத்தவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் மருத்துவர் பரிந்துரைப்படி, மருத்துவம் செய்துகொண்டு அதற்குரிய ஆவணங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் தந்து இழப்பீட்டைப் பெறமுடியும்.
இந்த வகை அவுட் பேஷன்ட் பாலிசிகள் தனியாக கிடைக்காது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியோடு துணை பாலிசியாக இருக்கும். இந்தத் துணை பாலிசி பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் குறைவாகவே இருக்கிறது. மெடிக்ளைம் பாலிசி எடுப்பவர்களில் 10% பேர்கூட இந்தத் துணை பாலிசியில் ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள்.
யாருக்கு இந்தப் பாலிசி?
பொதுவாக, சிறியவர் முதல் பெரியவர் வரை தினசரி அன்றாட வாழ்வில் ஏற்படும் மருத்துவச் செலவுகளைக் குறைக்க இந்த பாலிசி உதவும். பொதுவாக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது வயது, பழக்க வழக்கம், ஏற்கெனவே இருக்கும் நோய்கள் ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல் பாலிசி பிரீமியம் இருக்கும். மருத்துவமனைக்கு வெளியே செய்யும் மருத்துவச் செலவுகளை இந்த பாலிசி மூலம் க்ளைம் செய்யலாம்.
எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்கும்?
நோய் கண்டறியும் சோதனைகள், ஸ்கேன்கள், மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவம் செய்துகொண்டு மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொள்வதை க்ளைம் செய்துகொள்ள முடியும். மேலும், பல் பரிசோதனைகள், சுத்தம் செய்தல், பல் மாற்றுவது போன்றவற்றுக்கும் இந்த பாலிசி பொருந்தும். கண்ணுக்கு கண்ணாடி அணிபவர்களில் மருத்துவர் ஆலோசனைப்படி மாற்றிக்கொள்பவர்களும் இந்த பாலிசியில் க்ளைம் பெற முடியும்.
மருத்துவரின் பரிந்துரைப்படி, ஒருவர் ஜிம்முக்குப் போக வேண்டும். யோகா கற்றுக்கொள்ள வேண்டுமெனில், அதற்குத் தேவையான ஆவணங்களை மருத்துவர் தந்தால், அந்த செலவுகளையும் இந்த அவுட் பேஷன்ட் பாலிசியில் க்ளைம் பெறமுடியும். மருத்துவர் ஆலோசனைப்படி, ஊட்டச் சத்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள்கூட இதில் க்ளைம் பெறமுடியும். தற்போது சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவத்துக்குக்கூடச் சரியான ஆவணங்கள் இருப்பின் க்ளைம் பெறமுடியும்.
எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது?
கண்ணுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி கண்ணாடி அணிபவர்களுக்கு, லென்ஸ்களுக்கு மட்டுமே க்ளைம் கிடைக்கும். அதை அணிந்துகொள்ளும் ஃபிரேம்கள் என்பது அவரவர் தகுதிற்கு ஏற்ப வாங்கிக்கொள்வதால், அதை க்ளைம் செய்ய முடியாது. மேலும், மருத்துவர் பரிந்துரை செய்தாலும் ஊட்டச்சத்து பானங்களுக்கான செலவை க்ளைம் பெறமுடியாது.
பிரீமியம் எவ்வளவு?
26 - 35 வயதில் உள்ள ஒருவர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு சுமார் ரூ.4,500 பீரிமியம் செலுத்துகிறார். இதன் மூலம் சுமார் ரூ.5 லட்சம் கவரேஜ் அவருக்குக் கிடைக்கும். இதுவே அவுட்பேஷன்ட் துணை பாலிசியோடு சேர்த்து எடுக்கும்போது பீரிமியம் சுமார் ரூ.8,500 வரை வரும். இந்த வயதினர் அவுட்பேஷன்ட் பாலிசியின் மூலம் சுமார் ரூ.5,000 க்ளைம் செய்துகொள்ள முடியும். பிற வயதுள்ளவர்கள் 2,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை க்ளைம் பெறமுடியும்.
வரிச் சலுகை!
இந்த பாலிசியை எடுப்பதன் மூலம் 80ஞி-ன்படி ரூ.15,000 வரை வரிச் சலுகை பெறமுடியும். இதுவே சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.20,000 வரை வரிச் சலுகை பெற முடியும்.
எந்த நிறுவனம் தருகிறது?
ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு ஜெனரல் இன்ஷூரன்ஸ் இந்த அவுட் பேஷன்ட் துணைப் பாலிசியை தருகிறது. மேலும் அப்போலோ முனீச் நிறுவனம் மேக்ஸிமா கம்ப்ளீட் ஹெல்த் பிளான் பாலிசியில் மருத்துவமனை செலவுகள் மற்றும் மருத்துமனைகளுக்கு வெளியே ஆகும் செலவுகளுக்கும் க்ளைம் தருகிறது. இதேபோல் பஜாஜ் அலையன்ஸ் டாக்ஸ் கெயின் பிளானிலும் மருத்துவமனை செலவுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளியே ஆகும் செலவுகளுக்கும் க்ளைம் தருகிறது.

ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» குரூப் பாலிசி To தனிநபர் பாலிசி...
» பழசுக்கும் உண்டு பாலிசி!
» யாருக்கு எந்த பாலிசி..?
» லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது?
» காலாவதியான பாலிசி... எப்படி புதுப்பிக்கலாம்..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum