Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?
Page 1 of 1
கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?
என் உறவினர் ஒருவர், இன்ஷூரன்ஸ் குறித்து யாராவது பேசினால் உடனே ‘இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என் பாலிசி இல்லை’ என்று வசனம் பேசுவார். இவர் மட்டுமில்லை, இன்றும் தமிழகத்தில் பலரிடம் இருக்கும் ‘நாம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால், மரணமடைந்து விடுவோமா!’ என்கிற மனநிலையும், ஆதங்கமும்தான் இதற்குக் காரணம்.
அதிக கேன்சர் நோயாளிகள்!
ஆனால் நம் நாட்டைப் பொறுத்தவரை, கேன்சர் (புற்றுநோய்) நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 2020-ல் இந்தியாவில் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை 17.3 லட்சமாக அதிகரிக்கும் என்கிறது. இந்தியாவில் இப்போது 14 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிப்படைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆய்வின்படி, 70 முதல் 90% வரை அனைத்துவகையான கேன்சர் நோய்களுக்கும் காரணம், சுற்றுச்சூழல் காரணி களாக இருக்கும் என்று சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. உலக அளவில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக கேன்சர் நோயாளிகள் இருப்பதாகவும் பல்வேறு புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
ஒருவரின் கேன்சர் நிலை மற்றும் சிகிச்சை முறைகளைப் பொறுத்து, ஒரு சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். இவ்வளவு பணத்தை செலவழித்து, பணம் படைத்தவர்கள் எளிதில் சிகிச்சை மேற் கொள்ள முடியும். ஆனால், பணம் இல்லாத வர்களுக்கு ஒரே தீர்வு இன்ஷூரன்ஸ் மட்டுமே. எனவே, இந்த நோய் வந்தபின் பாலிசி எடுக்கவில்லையே என கவலைப்படுவதைவிட, முன்பே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு மருத்துவ சிகிச்சை செய்துகொள்வது நல்லது.
ஆனால், நம் நாட்டில் இன்ஷூரன்ஸ் குறித்து பொதுமக்களில் பெரும்பாலானோர், எந்தவொரு விழிப்பு உணர்வும் இல்லாமலே இருக்கின்றனர். கேன்சர் வருவதற்கு வாய்ப்பு இருப்பவர்கள் சிறப்பான பாலிசிகளைத் தேர்வு செய்துகொள்வது நல்லது. ஏனெனில் பலவிதமான கேன்சர் நோய்கள் உள்ளன. இதில் சிலவகை கேன்சரை சில லட்சம் ரூபாய் செலவுசெய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், ரத்தப் புற்று நோய் என்று சொல்லப்படுகிற பிளட் கேன்சர் நோயைக் குணப்படுத்த அதிக செலவாகும்.
இந்நிலையில், கேன்சர் நோய்க்கான இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்து இன்ஷூரன்ஸ் நிபுணர் மற்றும் வெல்த் லாடர் நிறுவனத்தின் நிதித் திட்டமிடல் பிரிவின் தலைவர் ஸ்ரீதரனிடம் பேசினோம். கேன்சர் இன்ஷூரன்ஸ் குறித்துப் பல தகவல்களை விளக்கமாகச் சொன்னார்.
கேன்சர் இன்ஷூரன்ஸ்!
‘‘நம் நாட்டில் ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஏகான் ஆகிய தனியார் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் கேன்சருக்கான பிரத்யேக பாலிசிகளை வழங்கி வருகின்றன.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
1. புற்றுநோயைக் குணப்படுத்த சுமார் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை செலவாகும்.
2. ஒரு குடும்பத்துக்கு உண்டான பாலிசியின் மொத்த குடும்பக் காப்பீடாக ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையே எடுக்க முடியும்.
3. ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு ரூ.3 லட்சம் கவர் செய்யும் ஃப்ளோட்டர் பாலிசிக்கு சுமாராக ரூ.10 ஆயிரம் வரை வருட பிரீமியம் ஆகும். இதுவே, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கவரேஜ் வேண்டும் என்றால் அதற்கு ஆகும் செலவுகள் அதிகமாகும்.
4. இதுவே 40 வயதுமிக்க ஒருவருக்கு ரூ.20 லட்சம் கவரேஜ் கொண்ட கேன்சர் பாலிசியின் பிரீமியம் சுமார் ரூ.3,500 ஆகும்.
5. ஒரு சில ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசிகளில், கேன்சர் வியாதிக்கான கிளெய்ம் நீக்கப்பட்டு இருக்கும்.
கேன்சர் பாலிசிகள்!
கேன்சர் வியாதியைப் பொறுத்தவரை, கார்சினோமா இன் சிடு (Carcinoma In Situ), ஆரம்ப நிலை, முற்றிய நிலை, நெருக்கடியான நிலை என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம். இதில் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள், முதல் 2 நிலையை ஒன்றாகவும், அடுத்து வருவதை ஒன்றாகவும் கிளெய்ம் செய்யும் விதத்தில் வகைப்படுத்தி உள்ளன.
கேன்சர் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த பாலிசியின் பலன்கள், கேன்சர் நிலைக்கேற்ற கிளெய்ம் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். மேலும், எந்தெந்த நிலைகளில் எந்த அளவு கிளெய்ம் கிடைக்கும், மொத்த பலன்கள் என்ன என்பதை அறிந்து முடிவெடுக்க எடுக்கவேண்டும். இவை தவிர, பணவீக்கத்துக்குத் தகுந்தவாறு பாலிசியின் காப்பீட்டு மதிப்பு மற்றும் கிளெய்ம் தொகை அதிகமாகக் கிடைக்கும் வகையிலும் சில பாலிசிகள் இருக்கின்றன. இந்த வகையான பாலிசிகளின் பிரீமியம் சற்று அதிகமாக இருந்தாலும், நாளுக்கு நாள் உயரும் மருத்துவ செலவுகளை சமாளிக்க இவை உதவியாக இருக்கும்.
ஒரு சில பாலிசிகள், கேன்சர் நோய் இருப்பதை மருத்துவ முறையில் கண்டறிந்துவிட்டாலே முதலில் ஒரு முதிர்வுத் தொகையும், பின்பு, பாலிசி முடியும் வரையில் மாதந்திர தொகையும் கிடைக்கச் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் அலசிப் பார்த்து ஒவ்வொருவருடைய தேவைக்கேற்ப, கேன்சர் பாலிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய பாலிசிகளில், பாலிசி எடுத்து 180 நாட்கள் காத்திருக்கவேண்டும். பாலிசி எடுத்து 180 நாட்களுக்குள் பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவர் கட்டிய பிரீமியம் தொகை மட்டுமே திரும்பிக் கொடுக்கப்படும். ஒரு சில பாலிசிகளில், ஒவ்வொரு நிலைக்குத் தகுந்தவாறு பாலிசியின் காப்பீட்டுத் தொகையைக் கொடுப்பார்கள். உதாரணத்துக்கு, ஏகான் பாலிசியில், முதல் நிலையில் கேன்சர் நோய் வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், காப்பீட்டுத் தொகையில் 25% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தந்துவிட்டு, பாலிசியின் பிரீமியம் தொகையினை ரத்து செய்து விடுவார்கள்.
மேலும், இரண்டாவது நிலையில், காப்பீட்டுத் தொகையின் 100 சதவிகிதத்தில் இருந்து முன்னதாக கொடுத்த தொகையைக் கழித்து விட்டு தருவார்கள். தவிர, கடைசி நிலையில் காப்பீட்டுத் தொகையின் 150 சதவிகிதத்திலிருந்து முன்னதாகக் கொடுத்த தொகையைக் கழித்துவிட்டு வழங்குவர். ஆகவே, அவரவரின் தேவைக்கேற்ப, கேன்சர் பாலிசியின் விவரங்களை அறிந்து பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று முடித்தார்.
கேன்சர் நோய் வந்தபின்பு இந்த பாலிசிகளை எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பிரிமீயம் அதிகமாக இருக்கும். எனவே, கேன்சர் நோய் வர வாய்ப்புள்ளவர்கள் முன்கூட்டியே இந்த பாலிசியை எடுத்துக் கொள்வது நல்லது!
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவையா?
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்? ஐந்து முக்கிய காரணங்கள்
» லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது?
» டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?
» மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய பாலிசி
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்? ஐந்து முக்கிய காரணங்கள்
» லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது?
» டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?
» மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய பாலிசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum