Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்!
Page 1 of 1

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட கால முதலீட்டுக்குத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் சென்ற ஆண்டில் (2016) மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல்பாடு எவ்வாறு இருந்தது என்பதை அலசினால், வரும் ஆண்டில் (2017) நமது முதலீட்டை எவ்வாறு அமைத்துக்கொள்ளலாம் என்பதைக் கணிக்க நமக்கு உதவியாக இருக்கும்.
கடந்த ஒரு வருடத்தில் பங்குச் சந்தை பெரிதாக உயரவில்லை. 22-12-2015-லிருந்து 22-12-2016 வரை நிஃப்டி 50-ஆனது 2.48% மட்டுமே உயர்ந்துள்ளது. எனவே, அதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் நாம் பெருவாரியாக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. இருந்தபோதும் அனைத்துவகையான ஃபண்டுகளும், நிஃப்டி 50 குறியீட்டைவிட சராசரியாக அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளன. (பார்க்க, அட்டவணை 1)
இந்த அட்டவணையிலிருந்து பெருவாரியான, ஆக்டிவ்வாகச் செயல்படும் ஃபண்டுகள், சந்தையை விட நன்றாகச் செயல்பட்டுள்ளதைப் பார்க்கலாம். உதாரணத்துக்கு, ஆக்டிவ்வாகச் செயல்படும் பத்து ஃபண்டுகளில் ஒன்பது லார்ஜ்கேப் ஃபண்டுகள் (89%), நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளன.
சென்ற ஆண்டில் பேலன்ஸ்டு மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள், பிற கேட்டகிரி ஃபண்டுகளை விட பொதுவாக நன்றாகச் செயல்பட்டுள்ளன. இதையும் நாம் இந்த அட்டவணைகளில் இருந்து பார்க்கலாம். பேலன்ஸ்டு ஃபண்டுகள் சராசரியாக 6.42% வருமானத்தையும், ஸ்மால்கேப் ஃபண்டுகள் 6.77% வருமானத்தையும் தந்துள்ளன. லார்ஜ்கேப், மல்ட்டிகேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகள் சற்று குறைவான வருமானத்தையே தந்துள்ளன.
பேலன்ஸ்டு ஃபண்டுகள் சற்று அதிக வருமானம் கொடுத்ததற்கு ஒரு முக்கிய காரணம், கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் குறைந்ததே. அதே போல, ஸ்மால் கேப் ஃபண்டுகளில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான முதலீடு, அந்த வகை ஃபண்டுகளின் நல்ல வருமானத்துக்கு ஒரு காரணம். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகபட்ச முதலீடு, லார்ஜ்கேப் பங்குகளில்தான் உள்ளது. எனவே, அவர்கள் விற்கும்போது லார்ஜ் கேப் பங்குகளின் வருமானம் குறையும். லார்ஜ் கேப் ஃபண்டுகளின் வருமானம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
கடந்த ஓராண்டில் சில பங்கு சார்ந்த ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட் வருமானத்தைவிட அதிகமான வருமானத்தைத் தந்துள்ளன. இன்னும் சில ஃபண்டுகள் குறைவான வருமானத்தைத் தந்துள்ளன.
மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து வரும் ஓராண்டு வருமானத்தை பிற முதலீடுகளோடு ஒப்பிடுவது தவறு. ஏனென்றால் நாம் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தேவைகளுக்குத்தான்! 5 வருட காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைவிட சிறப்பான வரியில்லா (Tax Free) வருமானத்தை தந்து உள்ளன. இனிவரும் காலங்களிலும் இது தொடரும்.
2016-ம் ஆண்டு, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு ஒரு சிறந்த காலகட்டமாக அமைந்தது. இதற்கு முக்கியக் காரணம், குறைந்து வரும் வட்டி விகிதமாகும் (பார்க்க, அட்டவணை 2). ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுடன் ஒப்பிடும்போது, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பரவலாக நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. அதிக ரிஸ்க் உடைய கில்ட் ஃபண்டுகள் 2016-ல் சராசரி யாக அபரிதமான வருமானத்தைத் தந்துள்ளன!
2017 எவ்வாறு இருக்கும்?
பங்குச் சந்தை பல்வேறு காரணங்களினால் தனது உச்சத்திலிருந்து குறைந்துள்ளது. இன்னும் சற்று குறையக்கூட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சமயங்களில், முதலீடு செய்யும்போது முதலீட்டாளர்களுக்கு அதே அளவு பணத்துக்கு, அதிக யூனிட்டுகள் கிடைக்கும்.
பங்குச் சந்தையின் குறுகிய காலச் செயல்பாட்டை நம்மால் சரிவரக் கணிக்க முடியாது. ஆனால், நீண்ட காலத்தில் வேறு எந்த முதலீடுகளையும்விட நல்ல வருமானத்தைத் தந்துள்ளதாக சந்தேகம் இல்லாமல் வரலாறு எடுத்துச் சொல்கிறது. இனிவரும் காலங்களிலும் இது தொடரும் என நம்பலாம். ஆகவே, எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள், தங்களது முதலீட்டை தொடர்வதுடன், எஸ்ஐபி தொகையை அதிகரிப்பதும் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். செலவுக்குப் போக பணத்தை மீதம் வைத்திருப்பவர்கள், ஐந்துக்கும் மேற்பட்ட வருடங்களுக்கு இந்தப் பணம் தேவையில்லை என நினைப்பவர்கள், அதை எஸ்டிபி (Systematic Transfer Plan) முறையில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
தற்சமயத்தில் மொத்த முதலீடு செய்பவர்கள் லார்ஜ் கேப் அல்லது மல்டி கேப் திட்டங்களை நாடலாம். காரணம், லார்ஜ் கேப் குறியீட்டின் வேல்யூவேஷன் கவர்ச்சிகரமாக உள்ளது (பார்க்க அட்டவணை 3).
2017-ம் ஆண்டிலும் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. ஆகவே, கடன் சார்ந்த திட்டங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் தர நல்ல வாய்ப்புள்ளது. ஈக்விட்டி ஃபண்டுகளில் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் மற்றும் அஸெட் அலோகேஷன் செய்ய விரும்புபவர்கள் கடன் சார்ந்த திட்டங்களில், குறிப்பாக கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம்.
2017-ல் கவனிக்க வேண்டிய ஃபண்டுகள்!
புதிதாக முதலீட்டை ஆரம்பிப்பவர்கள் அல்லது முதலீட்டை அதிகரிக்க விரும்புபவர்கள் மேலே அட்டவணையில் உள்ள ஃபண்டுகளை நாடலாம். இந்தத் திட்டங்கள் வேகமாகச் செயல்பட்டு வருகின்றன. 2017-லும் இந்தத் திட்டங்கள் நன்றாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய முதலீடு!
» மியூச்சுவல் ஃபண்ட்... மொத்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
» மியூச்சுவல் ஃபண்ட் : அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum