வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய முதலீடு!

Go down

இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய முதலீடு! Empty இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய முதலீடு!

Post by தருண் Tue Feb 18, 2014 3:25 pm

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருவதால் பங்குச் சந்தையும் தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்தும் திட்டங்களும் குறைவான வருமானத்தையே தருகின்றன. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்தும் இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மட்டும் அதிக வருமானம் தருகின்றன.

இதற்கு என்ன காரணம்? இந்த நேரத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும்? இன்டர்நேஷனல் ஃபண்டுகளைப் பொறுத்தவரைக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது பற்றி ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காமின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மீனாட்சி யிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''அமெரிக்கா பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வளர்ச்சியை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்கிறது. இதனால் அமெரிக்காவில் செய்யப்பட்டுள்ள அனைத்து முதலீடுகளும் அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தந்து வருகின்றன. ஆசியாவின் சில நாடுகளிலும், சீனாவிலும் செய்யப்படும் முதலீடுகள்கூட நல்ல லாபம் தருகின்றன. இதனால் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்தும் இன்டர்நேஷனல் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்கள் நல்ல லாபம் தருகின்றன.

பெரும்பாலான இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்டர்நேஷனல் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களை வைத்திருக்கின்றன. இத்திட்டங் களின் மூலம் திரட்டப்படும் பணம் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருமானம் முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தரப்படுகிறது.

இன்றையச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் இன்டர்நேஷனல் ஈக்விட்டி ஃபண்டுகளை முதலீடு செய்வதற்கு தேர்வு செய்வது புத்திசாலித்தனம். என்றாலும், இந்த முதலீடு ஓராண்டுகளுக்குமேல் எப்படி இருக்கும் என கணிப்பது சிரமம். நீண்டகால அடிப்படையில் இந்த இன்டர்நேஷனல் ஈக்விட்டி ஃபண்டுகள் நல்ல வருமானம் தருமா என்பது சந்தேகமே. உலக அளவில் பல்வேறு விஷயங்களை அப்டேட் செய்துகொள்பவர்கள் இன்டர்நேஷனல் ஈக்விட்டி ஃபண்டுகளில் குறுகிய மற்றும் நடுத்தரகால அடிப்படையில் முதலீடு செய்யலாம். விவரம் தெரியாமல் களம் இறங்குபவர்கள் கொஞ்சம் கவனித்து முதலீட்டை மேற்கொள்வது நல்லது.

இந்த ஃபண்டுகள் 2010 மார்ச்-க்குப் பிறகு நல்ல வருமானம் தந்தன. ஆனால், மூன்று வருட வளர்ச்சிக்குப் பிறகும் ரிஸ்க் நிறைந்த முதலீடாக இருக்கிறது. அதனால் இன்றைய நிலையில் தங்கம் விலை ஏறி, இறங்கினாலும் அதில் தொடர்ந்து கொஞ்சம் முதலீடு செய்வதைப்போல இந்த இன்டர்நேஷனல் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்களையும் அணுக வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் இன்டர்நேஷனல் ஈக்விட்டி ஃபண்டை தங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் 10-20 சதவிகிதம் என்கிற அளவிலேயே வைத்துக்கொள்வது நல்லது. மற்ற முதலீடுகள் குறைவான வருமானத்தைத் தரும்போது, இந்த ஃபண்டுகள் அதிகமான லாபம் தந்தால் போர்ட்ஃபோலியோவில் அதிக பாதகம் ஏற்பட வழி இல்லை'' என்றவர், இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயங் களையும் சொன்னார்.

''இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு என்பது ஒரு குறிப்பிட்ட வரையறைக் குள்ளேயே இருக்கும். நவீன வர்த்தகங்கள், நவீன தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகள் என்றெல்லாம் இருக்காது.

ஆனால், இன்டர்நேஷனல் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது பெரிய அளவிலான நிறுவனங்கள், புதுமையான துறைகள் என முதலீடு செய்யும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். எனவே, கண்ணை மூடிக்கொண்டு வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணத்தைப் போடாமல் எந்தெந்த துறை அல்லது பங்குகளில் பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து முடிவு செய்வதே நல்லது'' என்று முடித்தார்

இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய முதலீடு! Nav58c

அதிக லாபம் தரும் முதலீட்டில் ஓரளவு ரிஸ்கும் இருக்கும் என்பது நிஜம்தானே!


ந.விகடன்
- செ.கார்த்திகேயன்.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட் : அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
»  மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» மியூச்சுவல் ஃபண்ட்... மொத்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
» 2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum