வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Go down

 மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் Empty மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Post by தருண் Fri Jun 24, 2016 2:21 pm

பங்குச் சந்தை உச்சத்தில் இருப்பதாலும், மத்தியில் நிலையான ஆட்சி அமைந்திருப்பது போன்ற காரணங்களினாலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடந்த ஓர் ஆண்டில் 50 சதவிகிதத்துக்குமேல் வருமானம் கொடுத்துள்ளது. இது பல முதலீட்டாளர்களை ஈர்க்கும் காரணியாக உள்ளது. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் அதிக அளவில் விளம்பரங்கள் மற்றும் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள், முதலீடு செய்வதற்குமுன் கடந்த ஓராண்டின் வருமானத்தை மட்டும் கருத்தில் கொள்ளலாமல் வேறு என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் ஆய்வாளர் சத்தியமூர்த்தி விளக்குகிறார்.

 மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் Mf(2)

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்குமுன், உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் தன்மை என்ன என்பதையும், எத்தனை வருடங்களுக்கு முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதையும் முடிவு செய்துகொள்வது நல்லது. மேலும், முதலீடு ஒரேமுறை முதலீடா அல்லது எஸ்ஐபி முறை முதலீடா என்பதையும் கவனிப்பது அவசியம். இதன் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்குமுன், ஏற்கெனவே என்னென்ன முதலீடு செய்துள்ளீர்கள். அதனுடைய நிலை என்ன? அவசரகாலத் தேவைகளுக்குத் தேவையான முதலீடு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில், நீண்ட காலத்துக்குத் திட்டமிட்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, அதை இடையில் எடுக்கும்போது எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.
என்ன தேவைக்காக முதலீடு செய்யப்போகிறீர்கள், அந்தத் தேவையை நிறைவேற்ற போதுமான தொகையை முதலீடு செய்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

முதலீடு செய்யும் ஃபண்டின் வருமானம் தொடர்ச்சியாக எப்படி உள்ளது என்பதைப் பார்ப்பது முக்கியம். குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளின் வருமானத்தையாவது கவனிப்பது நல்லது. குறிப்பிட்ட வருடத்தில் அதிக வருமானத்தையும், குறிப்பிட வருடம் மிகக் குறைவான வருமானத்தையும் கொடுத்திருந்தால் அந்த ஃபண்டை தவிர்ப்பது நல்லது. அதாவது, அந்த ஃபண்டின் பெஞ்ச்மார்க்குடன் ஓப்பிடும்போது ஃபண்டின் வருமானம் எப்படி உள்ளது என்பதையும், சந்தையின் ஏற்ற இறக்கத்தில் ஃபண்டின் வருமானம் எப்படி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

முதலீடு செய்யும் ஃபண்ட் நிறுவனத்தின் வரலாறு, அந்த ஃபண்டை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜரின் அனுபவம் எப்படி உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தும் ஃபண்ட் திட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அந்த ஃபண்டுக்கு கடந்த கால வரலாறு இருக்காது. மேலும், இனிவரும் காலத்தில் அதனுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதும் தெரியாது.

முதலீடு செய்யும் ஃபண்டின் நிர்வாகக் கட்டணம் எவ்வளவு என்பதைக் கவனிப்பது நல்லது. சில ஃபண்டுகளில் இது 2 சதவிகிதமாகவும், சில ஃபண்டுகளில் 1-1.5 சதவிகிதமாகவும் இருக்கும்.

உங்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பூர்த்திசெய்யும் வகையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபண்ட் உள்ளதா என்பதை உறுதி செய்வது நல்லது. கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது அந்த ஃபண்டின் முதலீடுகள் 'ஏஏஏ' ரேட்டிங் பாண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இதேபோல பிற ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போதும், அந்த ஃபண்ட் எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.

இரா.ரூபாவதி

ந.விகடன்
முகநூல்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட்... மொத்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
» மியூச்சுவல் ஃபண்ட் : அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
» இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய முதலீடு!
» தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்
» லேப்டாப் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum